கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி, சங்கம் வைத்து தமிழை வளர்த்த குடி, இன்று தமிழை வளர்த்த அரசர்களையும், அவர்கள் ஆசையாய் வைத்த ஊர் பெயர்களையும், இன்றய அரசாவணங்களில் நாம் வைத்திருக்கும் நிலையை பாரீர்.
வெள்ளைக்காரன் வரவில்லை என்பதர்க்காக வைத்தியிராப்பை - வார்ட்ராப் (Watrap) என்றான். ஆனால் வெள்ளையன் வெளியேறி அரைநூற்றாண்டுகளுக்குப் பின்னும் நாம் சோழனை - சோழா என்றும், தூத்துக்குடியை - டுடிகொரின் என்றும் அழைக்கலாமா? சிந்திப்பீர். அரசு(சை) மாற்றுவதர்க்கு முன் நாம் மாறுவோம் வாருங்கள்!
சில உதாரணங்கள்,
சோழன் - Chola
சேரன் - Chera
பாண்டியன் - Pandiya
தூத்துக்குடி- Tuticorin
வத்தியிராப்பு- Watrap
வத்தலகுண்டு- Bathalakundu
சேலம்- Salem
திண்டுக்கல் - Dindigul
பாண்டிசேரி - Pondy
சேப்பாக்கம் - Chepauk
எழும்பூர் - Egmore
சேத்துப்பட்டு - Chetput
திருவல்லிகேணி - Triplicane
ஆரணி - Arni
கிண்டி - Guindy
கீழ்பாக்கம் - Kilpauk
ஏற்காடு - yercaud
சீர்காழி - Sirkali
குற்றாலம் - Courtallam
சிவகங்கை - Sivaganga
தக்களை - Thuckalay
பின்குறிப்பு:-
மற்றவையெல்லாம் இருக்கட்டும், இந்த சேலத்தை ஏன் சலெம்(Salem) என்றழைக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 week ago
10 comments:
நல்லா இருக்கு!
நம்ம தரங்கம் பாடி, நாகப்பட்டினத்தையும் சேத்துக்குங்க~
நல்லா இருக்கு!
நம்ம தரங்கம் பாடி, நாகப்பட்டினத்தையும் சேத்துக்குங்க~///
வாங்கண்ணே,
பட்டியலில் விடுபட்டுப்போன ஊர் பெயர்கள் தெரிந்தவ்ர்கள் அனுப்பலாம்.
அப்பாவி,
சுகமா?
உங்க கருத்தில் இருந்து நான் மாறுபடறேன்.
முதல்ல நாம பார்க்கவேண்டியது தமிழில இந்த ஊர் பெயர்கள மாத்தியிருக்காங்களான்ங்கறது தான். ஆங்கிலத்தில எப்படி உச்சரிக்கறாங்க, எப்படி எழுதறாங்கங்கறது நாம கவலபடக்கூடாத விஷயம்ன்னு நினைக்கிறேன்.
அழகிய அமுதான நம்ம தமிழும் தமிழ்ல பெயர்களும் இருக்கையில ஏன் தேவையில்லாம உங்கள போட்டு வருத்திக்கறீங்க?
ஒண்ணு சொல்றேன், நாம இப்படி சின்ன சின்ன விஷயங்கள பேசிப் பேசி அதனோட மதிப்ப நாமளே கூட்டிடறோம்.
Trichy,Vellore,Tanjore,Egmore
Actually salem before it was "cylam" day by day it is changed as salem
/// விஜயசாரதி கூறியது...
அப்பாவி,
சுகமா?
உங்க கருத்தில் இருந்து நான் மாறுபடறேன்.
முதல்ல நாம பார்க்கவேண்டியது தமிழில இந்த ஊர் பெயர்கள மாத்தியிருக்காங்களான்ங்கறது தான். ஆங்கிலத்தில எப்படி உச்சரிக்கறாங்க, எப்படி எழுதறாங்கங்கறது நாம கவலபடக்கூடாத விஷயம்ன்னு நினைக்கிறேன். ///
என்ன சொல்றீங்க.,
இப்ப நம்மாளுங்கல்ல பெரும்பாலான பேர் எழும்பூரை - எக்மோர்-ன்னும், திருவல்லிகேணியை - டிரிபிளிகேன்னும்., வேலூரை - வெல்லூர்-ன்னும் தான் சொல்கிறார்கள். அதை மாற்றவேண்டுமானால் முறையான ஆங்கில எழுத்துடன் உச்சரிப்பை உருவாக்கவேண்டுமெனவே கேட்கிறேன்.
வெள்ளையன் வாயில் வராத்தால் மாற்றியதை, நம் அருமை தமிழர்களும் ஸ்டைலுக்காக பின்தொடரகின்றனர் அதை தான் மாற்றவிரும்புகிறேன்.
சின்ன சின்ன விசயங்களே நம்மை அழிக்கும் விசமாகும்.
நாம் இனி ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் போது
முழுமையாக எழுதுவோம்
வேலூர் - vellore (வெல்லூர்)
இதையும் சேர்த்துக்கோங்க...
அவ்வ்வ்வ்வ்வ்.... எங்க ஊர் இல்லை...இருங்க எங்க மாமனக் கூட்டியாறேன்...
நல்ல பதிவு.திரு அனந்த புரம் trivandrum ஆகிவிட்டது,திருவிதாங்கூர் taravancore,திருச்சிராப்பள்ளி trichy.தூத்துக்குடி tutucorin,கோழிக்கோடு calicut,என எல்லா ஊர்ப் பெய்ர்களையும் வெள்ளையர்கள் திரித்து விட்டார்கள்.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். நாம் ஏன் ஆங்கிலப்படுத்தி அழைக்க வேண்டும்?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.