புதுசு + சுவாரசியம்புது டெம்ப்ளேட் மாற்றியாயிற்று. பதிவெழுத ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குப் பின் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளேன். கலர்ஃபுல்லாக ஆகவேண்டும் என்பதற்காகவே சட்டையை மாற்றியுள்ளேன். ஆனால், முகத்தை மாற்ற மாட்டேன்(காரணம் அடுத்து வருகிறது) . நான் யார்?, என் அடையாளம் என்பது தெள்ளத்தெளிவாக எனது நண்பர்களிடம் பதிந்துவிட்டது. மாற்றமாட்டேன். மாற்றமுடியாது.

டெம்ப்ளேட் மாற்றத்தில் வருகைப் பதிவை (ஹிட்ஸ் கவுண்ட்) எடுத்துவிட்டேன். ஏதாவது ஒரு பெரிய தலைப்பைத் தொட்டு எழுதும் போதும், இரு சாரரும் கடைசியாக “நீ ஹிட்ஸ்க்காக எழுதுகிறாய்” என மட்டமான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லாததால் எனது பதிவில் இருந்த ஹிட்ஸ் கவுண்டரைத் தூக்கிவிட்டேன். (இப்ப மனசுக்கு சரின்னு பட்டதை எந்த தயக்கமும் இல்லாம எழுதுவோம்ல)

********************

இன்றய வலைச்சர தொகுப்பில் அண்ணன் ஞானசேகரன், எனது வலைப்பூவை மிக உயர்வாக எழுதியுள்ளார்.

“இவர் தமிழ் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட நண்பர், சிங்கபூரில் வேலை செய்கின்றார். இவரை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் எழுத்துகளில் தமிழ்பால் கொண்ட அன்பும் மதிப்பும் தெரிகின்றது. அவர்தான் அப்பாவி முருகேசன், இவரின் தளம் அப்பாவி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...

1.புறடையாளங்கள் !
2.கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!
3.கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்!!
4.பிரபாகரனை கொன்னது சரிதானா?


இதுவரை சமூகம் பற்றிய இடுகைகளையே எழுதி வந்துள்ளேன். நான் வந்த பாதை சரிதான் என்பதற்கான சான்றிதழாலவே அண்ணன் ஞானசேகரின் வார்த்தைகளை பார்க்கிறேன். ஆக, பாதை மாறாமலேயே பயணிக்கலாம்….


*******************************

பதிவுலகில் இருக்கும் நுண்ணரசியலுக்கு மத்தியில், பதிவுலகை சாந்தம் பண்ணும் விதமாக விருதுகளை பெற்று பகிர்ந்து கொள்ளும் விளையாட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தமான விளையாட்டு ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.

இந்த சுவாரசிய பதிவர் விளையாட்டில் இரண்டு பேர் என்னைத் தொட்டு சுவாரசிய பதிவர் எனும் விருதைக் கொடுத்துள்ளனர். தம்பி சுரேஸ் குமார் (எழுவது எல்லாம் எழுத்தல்ல) , அவர்கள் மட்டுமல்லாது, எதிர்பாராவிதமாக அண்ணன் அறிவிலி (கிறுக்கித் தள்ளு) அவர்களும் கொடுத்துள்ளார்.


இதை நான் ஆறு பதிவுலக நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். சட்டதிட்டங்களை மீறாமல் எனக்குத் தெரிந்த, எனக்கு சுவாரசியமான அறுவரை தொடுக்கிறேன்…
1) பழமைபேசி
2) வால்பையன்
3) தீப்பெட்டி
4) சோம்பேறி
5) வாழ்க்கை பயணம்
6) வேடிக்கை மனிதன்

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமானவர்களைத் தொகுத்துவிட்டேன். அவர்களும் சுவாரசியம் குன்றாமல் தொகுப்பார்கள் எனவே நம்புகிறேன்.

13 comments:

அவிய்ங்க ராசா said...

super anney

அறிவிலி said...

அடடே... இன்னொருத்த்ரும் குடுத்துருக்காரா? வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

பெற்றுக் கொடுத்துவருக்கும், பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் தாங்கள் வழங்கியவருக்கும்

வாழ்த்துகள்!

பழமைபேசி said...

கலக்கலா இருக்கு...

ஆ.ஞானசேகரன் said...

//இதுவரை சமூகம் பற்றிய இடுகைகளையே எழுதி வந்துள்ளேன். நான் வந்த பாதை சரிதான் என்பதற்கான சான்றிதழாலவே அண்ணன் ஞானசேகரின் வார்த்தைகளை பார்க்கிறேன். ஆக, பாதை மாறாமலேயே பயணிக்கலாம்….//

உங்களின் பயணம் இனிதாக என்றும் வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணே என்னையும் டெரர் அக்கினதுக்கு டெங்ஸ் :)

வால்பையன் said...

விருதுக்கு நன்றி தல!


டெம்ப்ளெட் நல்லாயிருக்கு!

RAMYA said...

விருது பெற்றவருக்கும், உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

RAMYA said...

அப்புறம் இன்னொரு விஷயம் உங்க டெம்ப்ளெட் சூப்பர்!!

எம்.எம்.அப்துல்லா said...

தாமிராவின் இடுகையில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தில் சொன்ன டெண்டுல்கர் உதாரணத்தை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கின்றேன். சமீபத்தில் நான் படித்த பின்னூட்டங்களில் மிகச்சிறந்த டைமிங் பின்னூட்டம் அது. பாராட்டுகள் :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அப்பாவியின் பதிவுகளைப் படித்துவிடுகிறேன்.

♫சோம்பேறி♫ said...

விருதுக்கு ரொம்ப நன்றி அப்பாவி முரு.

உங்களைப் போன்ற அறிமுகமில்லாத நண்பர் கொடுக்கையில், நிஜமாகவே நமக்கு விருது வாங்கும் தகுதி இருக்கிறதென்றே புரிகிறது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB