சிங்கை போக்குவரத்து சட்டம் ஓர் அறிமுகம்

அன்பு நண்பர்களே, சிங்கையில் உள்ள போக்குவரத்து காவல் துறையின் தண்டனை பட்டியலில் ஒரு பகுதியை உங்களின் பார்வைக்காக...

அதிக வேகம்

( ஒவ்வொரு வகை வாகனத்திற்கும் அதன் பயன்பாடு, பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து அந்த வாகனத்திலேயே அதன் அதிகப் பட்ச வேகம் குறிக்கப் பட்டிருக்கும். லாரி 60km/h, வேன்-70km/h, கார்-90km/h. )

(ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 24 புள்ளிகள் வழங்கப்படும் .சிறு தவறுகளுக்காக மாட்டி புள்ளிகளை இழந்தவர், அடுத்து புள்ளிகள் கிடைக்கும் வரை வாகனம் ஓட்டக்கூடாது.)

குறிப்பிட்ட அளவைவிட 1-20km/h அதிக வேகம் = S$ 130 + 4 புள்ளிகள் வெட்டு


குறிப்பிட்ட அளவைவிட 21-30km/h அதிக வேகம் = S$ 150 + 6 புள்ளிகள் வெட்டு



குறிப்பிட்ட அளவைவிட 31-40km/h அதிக வேகம் = S$ 180 + 8 புள்ளிகள் வெட்டு



குறிப்பிட்ட அளவைவிட 41-50km /h அதிக வேகம் => S$ 200 + 12 புள்ளிகள் வெட்டு + நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும்



குறிப்பிட்ட அளவைவிட 51-60km /h அதிக வேகம் = >S$ 200 + 18 புள்ளிகள் வெட்டு + நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும்



குறிப்பிட்ட அளவைவிட >60km /h அதிக வேகம் = S$ 130 + 24 புள்ளிகள் வெட்டு + நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும்

பொறுப்பற்று வாகனம் செலுத்தினால் -S$150 + 6 புள்ளிகள் வெட்டு

பிறரை பற்றி கவலையில்லாமல் அலட்சியமாக வாகனம் செலுத்தினால்- S$170 + 9 புள்ளிகள் வெட்டு + நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும்

அபாயகரமாக வாகனம் செலுத்தினால்= >S$200 + 24 புள்ளிகள் வெட்டு + நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும் + வாகனம் சிலநாட்களுக்கு முடக்கப்படும்

சட்டத்திற்கு புறம்பாக பந்தயம் = >S$200 + வாகனம் பறிமுதல் +நீதி மன்றத்திர்க்கும் செல்ல வேண்டும்

இருக்கை பட்டை அணியாமருந்தால் = S$130 + 3 புள்ளிகள் வெட்டு

கைபேசியுடன் வாகனம் செலுத்தினால் = S$200 + 12 புள்ளிகள் வெட்டு + கைபேசி பறிமுதல்

( வாகனம் செலுத்தும் போது loudspeaker, hands free, bluetooth உபயோகித்து பேசலாம் ஆனால் கைபேசி வாகனம் செலுத்துபவர் கையிளிறுக்கூடாது, இருந்தால் மேற்கூறிய முழு தண்டனை)

பாதையில் போதை

குடிபோதையில்( உடம்பில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக alcohol இருந்து) வாகனம் செலுத்தினால்

முதல் முறை = S$5000 அல்லது சிறை என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும் + ஓட்டுனர் உரிமம் முடக்கம்

இரண்டாம் முறை = சிறை +S$ 5000 + ஓட்டுனர் ஒரிமம் பறிமுதல்

என் தகடு ( Number Plate)

என் தகடு இல்லாமலிருந்தால் = S$ 70

என் தகடு மறைந்திருந்தாலும் =S$ 70

என் தகடு எழுத்துக்கள் அனுமதிக்கப் பட்ட முறையின்றி வேறுமுறையிலிருந்தால் = S$ 70


லஞ்சம்

எதுக்குடா எவ்வளவு பைன் கட்டனும், வெற்றிக்கொடி கட்டு வடிவேலு மாதிரி, யோவ் இந்த அம்பது டாலர லஞ்சமா வச்சுக்கன்னு எல்லாம் யாருட்டயும் கொடுக்க முடியாது.

சிங்கையில் லஞ்சத்தின் முளையை எப்படி கருக்குகிறார்கள் என்றால், ஒருவர் அரசு அதிகாரியிடம் லஞ்சம் குடுத்தால் உடனே அந்த அதிகாரி அதை தன் மேலிடத்திற்கு தெரிவிப்பார். அதனால் நீங்கள் குடுத்த தொகைக்கு பத்து மடங்கு தொகை உடனடி பரிசு, வழக்கம் போல் அப்ரைசல் பாயிண்ட்... கொடுத்தவர்க்கு கோர்ட் சிறை தண்டனை...

any one want to test?

0 comments:

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB