மணி, மணியாய் இருவரைப் பெற்று
கொள்ளை விபத்திற்கு ஒருவனையும்.,
கொள்கை மானத்திற்கு ஒருவனையும்.,
தூக்கிக்கொடுத்து அனாதையாக
நிற்கும் அப்பன் நானடா...
மகனே, இருபத்தியோராம் நூற்றாண்டு தமிழனின்
இரு கைகள், பெட்ரோலுக்கொன்றும்,
தீப்பட்டிக்கு ஒன்றுமாய் இல்லை.
வாயையும், _____தையும் பொத்திக்கொள்ளத் தானென்று
உன் இழ(ற)ப்பிற்கு பின் புரிந்துகொண்டேனடா...
சிறப்பாகப் பாடம் பயின்றாய், பதக்கங்கள் பெற்றாய்.,
புத்தகங்கள் பல படித்தாய்., ஒய்வில்லாமல் எழுதினாய்.,
எந்த புத்தகத்தைப்பார்த்து அப்பனுக்கு முன்,
உனக்கு நீயே கொள்ளி வைத்துக்கொண்டாய்?
உடல்வேதனையாக இருந்தால்
வெந்நீரால் போக்குவேன்.,
மனவேதனையாக இருப்பதை
எந்நீரால் போக்குவேன்???
உன் தகனமேடையில் சூளுரைத்தவனெல்லாம்
திசைக்கொருவனாய் சிதறி விட்டார்கள்.,
அவர்கள் ஓடி சேர்ந்ததெல்லாம்
எதிரியின் கூடாரம்., உன் எதிரியின் கூடாரம்...
”என் பிணத்தை புதைக்காமல்,
துருப்புச்சீட்டாக வைத்திருந்து,
போராட்டத்தை கூர்மைபடுத்த” – கேட்டாய்,
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
புத்திசாலிக்கூட்டம் என்பதை, உன் இறப்பை
ஒட்டிய போராட்டத்தை ஒடுக்கி, நிரூபித்தார்கள்
அரசியல்வாதிகளும், ஆளும் கூட்டத்தாரும்.
மகனே நீயில்லாமல்
வாழவும் வழியில்லை.,
உன் கடைசி ஆசையை
நிறைவேற்றவும் முடியவில்லை.,
கையறு நிலையிலிருக்கும்
நான் என்னசெய்வேன்?
என் கையை அறுத்தவர்களை
நான் என்னசெய்வேன்???
அவசரப்பட்டுவிட்டாய் மகனே,
போலித் தலைவர்களையும்.,
போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,
தலைவர்கள் உன்னை ஏமாற்றலாம்!?,
தமிழர்களும் உன்னை ஏமாற்றலாமா?
உன்னை இழந்து அனாதையானது,
நான் மட்டுமல்ல, உன் ஆசைகளும் தான்.
தேர்தல் சூதாட்டத்தில் உன்னையும், உன் ஆசைகளையும்,
தன் சூளுரைகளையும் மறந்தவர்களுக்கு
பாடம்புகட்டுபவர்கள் யார், யார்?
பாடம் படிக்கப்போவது யார்? யார்?
உன்னைப் போன்ற கொள்கை தற்கொலையால்
நாட்டை திருத்துபவனா?
இல்லை, கடைசி நேர சூழ்ச்சி கூட்டணியால் தேர்தலில்
வெல்லும் அரசியல்வாதிகளா?
இந்த தேர்தலில்
பாடம் படிக்கப்போவது யார்?
33 comments:
// அவசரப்பட்டுவிட்டாய் மகனே,
போலித் தலைவர்களையும்.,
போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,
தலைவர்கள் உன்னை ஏமாற்றலாம்!?,
தமிழர்களும் உன்னை ஏமாற்றலாமா?//
சரியான சூடு.. அரசியல்வா(வியா)திகளௌக்கு. சூடு, சுரணை இருப்பவர்களும் உரைக்கும்.
சரியான கவிதை சரியான நேரத்தில் முருகு நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
// மணி, மணியாய் இருவரைப் பெற்று
கொள்ளைக்கு ஒருவனையும்.,
கொள்கைக்கு ஒருவனையும்.,
தூக்கிக்கொடுத்து அனாதையாக
நிற்கும் அப்பன் நானடா...//
ஒரு தந்தையின் வேதனை இந்த வரிகளில் புரிகின்றது.
//போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,//
சரி அவர் கொஞ்ம் புத்திசாலியாய் இருந்து மக்களை எமாற்றி தான் நல்லதே செய்யவ்வேண்டும்
இதுவரை நான் அழததில்லை அவருக்காக
இதோ இப்போ!
எல்லாம் போச்சே!
பெறும் சத்தம் கொடுத்து அழுகிறேன்
can u send mail to me, i need ur mail id my friend u have nice thoughts
suresh.sci@gmail.com thanks sakkarai suresh
உள்ளம் கண்டு நெகிழ்ந்தேன் இனமானக் கண்ணே!
என் கண்கள் கலங்கியது ஆனால் அழவில்லை இந்த நிலை க்கெடட அரசியல் மணிதரை பார்த்து....
நான் உங்களை கட்டி தழுவ வேண்டும்
மக்கா நீ என்னோட வாடா
இந்த நாட்டை மாற்றுவோம்
///பாடம் படிக்கப்போவது யார்? யார்?
உன்னைப் போன்ற கொள்கை தற்கொலையால்
நாட்டை திருத்துபவனா?
இல்லை, கடைசி நேர சூழ்ச்சி கூட்டணியால் தேர்தலில்
வெல்லும் அரசியல்வாதிகளா?
இந்த தேர்தலில்
பாடம் படிக்கப்போவது யார்?
\\\\
நிச்சயம் அரசியல்வாதிகள் இல்லை.
நாம் ?
அதுவும் நிச்சயம் இல்லை.
முத்துகுமார் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவன் நான்...
பேடிகள் என்ன செய்வார்கல் என்று நான் கவலைபடுவதைவிட ..
இவர்கள் பேருந்து நிலயத்தில் மாமா வேலை பாக்கலாம்!
//போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,//
உண்மைதான்... மீண்டும் ஒரு முத்துகுமாரை காணவேண்டாம்..போலி அரசியலுக்கு பகடையாய் ஆகவும் வேண்டாம்.. இன்னும் காலம் இருக்கு 49ஓ வை பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் இருக்கு...
நிச்சயமாக எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது...
உண்மை.. உண்மை.
முத்துக்குமாரின் மரணத்தின்போது சூளுரைத்த சபதங்களை, இன்றைக்கு புதைக்குழியில் அவர்களே புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்..!
ரொம்ப சூடான சூளுரை.
உணர்ச்சி பெருக்காய் எழுதியிருக்கிறீர்கள்.
சம்மந்தப்பட்டவர்களுக்கு எப்போது உறைக்கும் என்றுதான் தெரியவில்லை.
நாம் தமிழர்கள் எப்பொழுதும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதொடு சரி, அடுத்த நிகழ்வு புதியதாக வரும்போது பழையதை பாரபட்சமின்றி மறப்பவர்கள். இன்று முத்துக்குமாரைப்பற்றி பேசும்பொழுது அவருடைய தியாகங்கள் பற்றியும் அதை ஓட்டுப்பிச்சை எடுக்க பாத்திரமாக பயன்படுத்தும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவோம். இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் முத்துக்குமாரைத் தொடர்ந்து வேறு சிலரும் தீக்குளித்து உயிர் துறந்தனர் ஈழத்தமிழர்களுக்காக. அவர்களைப்பற்றியோ அவர்கள் குடும்பதினரைப் பற்றியோ யாராவது பேசியதுண்டா. தமிழர்களுக்கு உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்றால் கூட அதை தெரியப்படுத்த வேண்டிய விதத்தில் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. அப்பொழுதுதான் நமக்குள் இருக்கும் ஈரம் சற்றே எட்டிப்பார்க்கும். இனியாவது இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கட்டும்.
இந்த அரசியல்வாதிகளை நம்பி இனி யாரும் ஏமாற வேண்டாம்
//அவர்கள் ஓடி சேர்ந்ததெல்லாம்
எதிரியின் கூடாரம்., உன் எதிரியின் கூடாரம்...//
ரொம்ப வருத்தமாக உள்ளது.,
முத்துக்குமார் தான் தன்னோட அறிக்கையிலயே சொல்லிட்டாரே முரு, ஈழத்தமிழர்களுக்கு வாய்த்தது போல் சரியான தலைமை நம் தமிழக தமிழர்களுக்கு வாய்க்கவில்லை என்று.
இன்று தலைவனின்றி தவிக்கும் தமிழ் இனம் என்ன செய்யும் முரு?
யாருக்கு ஓட்டுப் போடுவது? எல்லாரும் எதிரிகள் தான்.
யாருக்கும் ஓட்டுப்போடாமல் இருந்தாலும் ஜெயிப்பது இவர்களுள் ஒருவர் தான்.
என்ன செய்வது?
தேவையின்றி இங்கு ஒர் நல்ல உயிர் போனதுதான் மிச்சம். அங்கு போகும் உயிர்களை தவிர்க்க இங்கு தன் உயிரைக் கொடுத்து தடுக்கலாம் என்று எண்ணிய அந்த முத்துக்குமாரை என்ன சொல்வது?
கையறு நிலையில் உண்மைத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது மட்டுமே உண்மை.
ஓட்டு போட்டுட்டேன் (உங்க பதிவுக்கு)
//உன் தகனமேடையில் சூளுரைத்தவனெல்லாம்
திசைக்கொருவனாய் சிதறி விட்டார்கள்.,//
இது தான் நிதர்சனம்.
வழக்கம் போல கவிதையில் அனல் பறக்கிறது.
ஆனால் ஏனோ மனம் கனக்கிறது.
ம்ம்ம்......என்னத்தை சொல்லியழ.
நன்றி Suresh.,
நன்றி நட்புடன் ஜமால்.,
நன்றி பழமைபேசி.,
நன்றி தத்துபித்து.,
நன்றி ttpian.,
நன்றி ஆ.ஞானசேகரன்.,
நன்றி VIKNESHWARAN.,
நன்றி உண்மைத் தமிழன்(15270788164745573644.,
நன்றி வெங்கிராஜா.,
நன்றி Syed Ahamed Navasudeen.,
நன்றி இளமாயா.,
நன்றி ஜோசப் பால்ராஜ்.,
நன்றி பிரியமுடன் பிரபு.,
நன்றி அ.மு.செய்யது .,
நன்றி சாத்திரி...
வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பரகளே...
அருமையாய் சொல்லி இருக்கீங்க.
நாம் தான் வீணாய் இருக்கிறோம்.
கைகளில் பலமற்று நெஞ்சினில் துணிவற்று
தலைவனை தேடாதீர்கள் தலைவனாய் உருவாகுங்கள்
இன்று கண்ணீரில்லை எனக்கு.....
தமிழ் சமுதாயம் சுயநல சமுதாயம்
மிகச்சில முத்து குமாரன்களை தவிர ......
நாமெல்லாம் வருந்துவதோடு நின்று விட்ட மனித ஜென்மங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நம் மனசாட்சிக்கு (இருந்தால்?) ஞாபகப் படுத்தும் இடுகை இது...
Me the 25th
^^^^^^^^^^^
/ அவசரப்பட்டுவிட்டாய் மகனே,
போலித் தலைவர்களையும்.,
போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,
தலைவர்கள் உன்னை ஏமாற்றலாம்!?,
தமிழர்களும் உன்னை ஏமாற்றலாமா?//
///
ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்! நாம்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்!!
நன்றி Sriram said...
Me the 25th.,
அடப்பாவி ஸ்ரீராம்., இவ்வ்ளோ கலவரத்திலையும் மீ த 25ன்னு கிளுகிளுப்பு கேக்குதா...?
இஃகி., இஃகி
நன்றி pukalini.,
நன்றி thevanmayam.,
வருகைக்கும்., கருத்துக்கும் நன்றி நண்பர்களே...
முத்து குமார உன்னால் கிடைத்த வெளிச்சத்தை வைத்து அரசியல் வாதிமட்டும் பிழைக்க வில்லை இங்கே அனைவரும் தான்
மச்சான் என்ன இருக்கியா ? கடைப்பக்கம் காணோம்
அரசியல் சுயநலத்துக்காக தன் கூடவே
இருக்கும் உண்மையான தொண்டர்களையே கொலை செய்யும் இந்த அரசியல் தலைவர்களிடம் உன் தியாகம் செல்லுபடியாகும் என்று நம்பலாமா முத்துக்குமரா?
மகனை இழந்த வேதனை ஒருபக்கம் என்றாலும்,தன் மகனின் மரணம் துச்சமாக கருதப்பட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.
அந்த தகப்பனுக்காக வருத்தம் மட்டுமே படமுடிகிறது
ஒரு கொள்கையாளனின் கனவின் மீதேறி ஓநாய்கள் அரசியல் இலாபம் தேடுகிறது. போலிகள் மீது முத்துக்குமாரனுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் களவு போயிற்று.
மன்னித்துக் கொள் முத்துக்குமாரா. நாங்கள் உனது கொடையை இன்றும் என்றும் மதிக்கிறோம்.
சாந்தி
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.