முத்துக்குமரன்களுக்கோர் எச்சரிக்கை?

முத்துக் குமரா...

தமிழ்த்தாய்-மகுடத்தின்

நன்முத்தே,

குமரா...


பெற்ற தாயின் கனவை கருக்கினாய்,

வளர்த்த (தமிழ்)தாய்க்கான

கடமையை கருக்கலாமா?

உணர்ச்சி வயப்பட லாகுமா?

உன் கடமையின் முன்

உணர்ச்சி வயப்பட லாகுமா?

எதிரிகளிடம்,

தாயும்-தமக்கையிருக்கும்நேரத்தில் தான்,

உணர்ச்சி வயப்பட லாகுமா?

எதிரி யாரென்று தெரியும்.

எதிரியின் பின்னாலிருப்பது யாரென்று தெரியுமா?

அது,

பாம்பா? பன்னியா?

கழுகா? கழுதையா?

இல்லை

இத்தனை நாள்நாம் போற்றி வணங்கிய

நம் தர்மத்தாய்-தானா?

யாரந்த நிழல்?

உலகம் உருகவில்லை,

உதவி செய்ய ஆளில்லை,

உடன்பிறப்பு நீயும் போனால்

கடைசியில்

தாயைக் காக்கவும்

நாட்டை காக்கவும்,

மானம் காக்கவும்

யாரிருப்பார்?

மரிக்கக் கூடாத

நம் (தமிழ்)தாய் மரித்தால்,

பிணத்தை புதைக்கவோ

எரிக்கவோ நீயோ நானோ

இருக்க வேண்டாமா,

பாதையில் உன்போல் எல்லோரும்

உணர்ச்சி வயப்பட்டால்

பிணம் என்னாகும்?

(தமிழ்)தாயின் பிணத்தை

கழுகு கிழிக்கலாம்,

நரி திங்கலாம்,

ஆனால்,

காமுகன் கையில் சிக்கினால்...

அய்யகோ,

அதை தடுக்க நீயோ

நானோ இருக்க வேண்டாமா...

உணர்ச்சியை குறை,

கடமையை செய்...

வாழ்வோ! தாழ்வோ!

காலத்தின் கட்டளைக்கு

கட்டுப் படுவோம்.

- முரு

என்ன கொடுமை சார் இது?

சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக, நண்பரை சந்திக்க திண்டுக்கலுக்கு சென்று அவருடன் பள்ளிவாசல் (SCHOOL) அருகிலுள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டே பழைய விசயங்களை பேசிக்கொண்டிருக்கயில், நண்பர் என்னை அவருடய வண்டியை கவனிக்கச் சொன்னார்.

அவருடயது, SPLENDER BIKE, அது நின்றுகொண்டிருந்த இடத்தில் வாகனங்களுக்கிடையே, மூன்று பள்ளி சிறுவர்கள் (பள்ளி சீருடையில்), கோலி விளையாடியபடி இருந்தனர். நண்பர் அவர்களை கவனிப்பத்தைப் பார்த்ததும்,

நான் “என்ன சார், இந்த வெயிலுல அதுவும் இந்த வண்டி நெருக்கடியில இந்த பசங்க கோலி வெளையாடுறாங்க?”

”இருங்க முரு, அந்த பசங்களை கண்டுக்காத மாதிரி கவனிங்க”

பொய்யாக பேசிக்கொண்டே அந்த சிறுவர்களை கவனித்தேன்.(எத்தனை க்ரைம் நாவல் படிச்சிருப்போம், நமக்கா தெரியாது?) பசங்க விளையாடுவது போல் ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் கையைவிட்டு ஏதோ செய்தார்கள்.

“என்னங்க சார், காத்தை புடுங்கி விடுறாங்களா?, அடுத்து நம்ம வண்டிதான்!”

“இருங்க முரு, பசங்க நம்ம வண்டியையும் தொடட்டும்?”

{என்னா தைரியம்?, பசங்க வண்டியில ஏதோ செய்ய்றானுங்க, இவரு அதை சும்மா பாக்க சொல்லுறாரே! என்று மனதுக்குள் குழம்பியபடி இருக்கயில்} எங்கள் முறை வந்தது, நான் கூர்ந்து கவனித்தேன்,

சிறுவர்களில் ஒருவன் கோலி விளையாடுவது போல் மெதுவாக வண்டியின் செயின் கவரில், லூப் ஆயில் விடுவதற்க்கு இருக்கும் ஒட்டையை அடைத்து இருக்கும் ரப்பர் கப்னை கழட்டி எடுத்து சட்டை பையில் போட்டுக் கொண்டனர். நான் உடனே அருகில் இருந்த வாகனங்களை கவனித்தேன், அனைத்து வாகனத்திலும் அந்த ரப்பர் கப் மிஸ்ஸிங். எல்லாம் இந்த சிறுவர்களின் கைங்கரியம்.

நமது நண்பர் சாதாரணமாக சிறுவர் கூட்டத்திலிருந்து அவரின் வண்டியில் ரப்பர் கப்பை எடுத்த சிறுவனை அழைத்தார், அச்சிறுவன் என்ன என்று கேட்பதுக்குள் மற்றவர்கள் மெதுவாக நழவினர். அருகில் வந்த சிறுவனை கடைக்கு அழைத்துவந்து ஏன் இப்படி அந்த ரப்பர் கப்களை கழட்டி எடுக்கிறீர்கள்? என்று கேட்டதும், ஆரம்பத்தில் பதில் சொல்ல மறுத்தவன் அடுத்து அதிர்ச்சியும்-ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் விசயத்தை சொன்னான். அது,

இப்படி ஒவ்வொரு வண்டியிலிருந்தும் எடுக்கும் ரப்பர் கப்களை நான்கைந்து சேர்ந்ததும், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஏதெனும் ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்தால் ஒவ்வொரு கப்புக்கும் தலா இரண்டு ரூபாய்கள் தருவாராம். அதனால் தான் இப்படி விளையாட்டாக இந்த ரப்பர் கப்புகளை எடுப்பதாக சொன்னான்.

ஏன் மெக்கானிக் இந்த கப்களை இரண்டு ரூபாய் கொடுத்து வாங்குகிறார்? என்ற கேள்விக்கு அந்த சிறுவனிடம் பதில் இல்லை. ஆனால் நண்பரிடம் இருந்து பதில் வந்தது. அது

”வண்டியை ஏதாவது வேலைக்காக மெக்கானிக்கிடம் கொண்டுசெல்லும் போதெல்லாம், வேலையோடு வேலையாக இந்த ரப்பர் கப் புதிதாய் போட(போடவில்லை என்றால் செயினில் மண் படிந்து செயின் வீணாகும்) ஐந்து ரூபாய் வாங்கிவிடுகிறார். மெக்கானிக் போடும் அந்த ரப்பர் கப் இந்த மாதிரியான சிறுவர்களிடம் இரண்டு ரூபாய்க்கு வாங்கியதாகத்தானிருக்கும்” என்றவர்.

இப்படி மெக்கானிக்கிடம் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிய ரப்பர் கப், இந்த மாதிரியான சிறுவர்களின் மூலமாக இரண்டு ரூபாய்க்கு மீண்டும் மெக்கானிக்கின் கைக்குப் போய் மீண்டும் ஐந்து ரூபாய்க்கு நம்மிடம் வந்து கொண்டே இருக்கும்.

செயினை பாதுகாக்க போடும் ரப்பர் கப், ஐந்தும்-இரண்டுமாக நம்மிடம் செயின் போல சுத்திக்கொண்டே இருக்கும்” முடித்தார்.

அவர் விளக்கிய பின்னார், இருசக்கர வாகனங்களை பார்க்கும் போதெல்லாம் அந்த ரப்பர் கப் இருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. பார்த்ததில் பெரும்பாலும் ப்ளாஸ்டிக் கப் மிஸ்ஸிங்.

என்ன கொடுமை சார் இது…

குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல!? பழக்கமிருக்கும், அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் (A REAL HERO), சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய் சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?

அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா”(ஒசந்த அதிகாரி ஹி... ஹி... ) என்பது தெரிகிறது.

தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.

தற்ப்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?

இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வே சுத்தமா இல்லை. என்னதான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது. மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.

அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்?

அடுத்த கேள்வி, இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?

அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.

ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான “challenging job, thrilling life” எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.

அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,
பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.

தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.

இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கனும்.

அடுத்த முக்கிய கேள்வி, மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?

நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது

“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”

எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?

உண்மையா?

பின்குறிப்பு:-

சந்திப்பில் உடனிருந்த நண்பன், அவரது ஐந்து மாத மகனை பொறியியல் படிக்க வைத்து, ராணுவத்திற்க்கு அணுப்புவதாக சபதம் எடுத்திருக்கிறார்.

நண்பர் மனம் மாறாமல் இருப்பாரா?

சமூக பொருளாதார வளர்ச்சியும், அதன் மறைமுக விளைவுகளும்
நமது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட சிறப்பு தரிசனத்தின் ஒரு பகுதியாக, மதுரை-தேனி மாவட்டங்களுக்கிடையே சுற்றுப்பயணத்தில் ஒரு குடும்ப நண்பர் cum சொந்தக்காரர் வீட்டிற்க்கு, நமது உடன்பிறந்த அன்பு தம்பியுடன் சென்றிருந்தோம்.

நமது குடும்பநண்பர், ஓய்வுபெற்ற காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (Rtd ASP), அவரது மகன் வழக்குரைஞராக பயிற்சி செய்கிறார். வீட்டிற்க்கு சென்றதும் வழக்குரைஞர் எங்களை வரவேற்று உபசரித்தார். அப்பா பின் தோட்டத்தில் இருப்பது தெரிந்ததும், தம்பி அவரை சந்திக்க உள்ளே சென்று விட்டான்.

நானும், வழக்குரைஞரும் வழக்கமான குசல விசாரிப்புகளை பகிர்ந்து கொண்டபின், என்ன பேசுவது என்ற குழப்பத்திற்க்குப் பின், வழக்குரைஞருக்கு முதல் கேள்வியை நான் கேட்டேன்,


“இப்ப நாட்டுல, சமூக நடவடிக்கை, சமூக அமைப்பு எப்படி இருக்கு?”


"எதைப் பத்தி கேக்குறீங்க?”


“இல்ல, பொதுவா மக்களோட நடவடிக்கைல இருக்குற மாற்றங்கள் பத்தி சொல்லுங்க”


“அதுவந்து, பொதுவா வீட்டுக்கு வெளியில ஒருத்தன, ஒருத்தன் எப்படி ஏமாத்துறது? அதுல நாமக்கு ஏதாவது கொஞ்சம் கெடக்குமா? அதுக்காக பொய் பேசவும் தயங்குறது இல்லை. அதே வீட்டுக்குள்ள பாத்தோம்னா, அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடிகூட காதல்ங்கிறதும், ஜாதி விட்டு ஜாதி காதல்ங்கிறதும் தப்பா இருந்தது, இன்னக்கி பெரிய தப்பா தெரியலை, புருசன் – பொண்டாட்டி ஒறவுல கொஞ்சம் பிடிப்பு கொறஞ்சிருக்கு, அதாலயா என்னனு தெரியல, கள்ளக்காதல் பெருகிக்கிட்டு இருக்கு. யாராவது தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டா, கேள்வி கேக்குறவுங்ககிட்ட- ஏன், என்னை மட்டும் கேக்குறீங்க, அடுத்த தெருவுல - இந்த வீட்டுல, நடந்தப்ப ஒன்னும் சொல்ல- ஒன்னும் செய்யல, அப்புறம் என்னை மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்கன்னு- எதிர் கேக்குறாங்க”
“தப்பு செஞ்சுட்டு அதுக்கு அவுங்க தெருவுலயே இல்ல அவுங்க ஊருலயே இல்ல அவுங்க சொந்தக்காரங்களேயே ஒரு முன்னுதாரணமா காட்டிடுறாங்க. அதாவது இது போல கெட்ட விசயங்களுக்கு முன்னுதாரணங்கள் ரெம்ப ஈசியா கெடைக்குது”

இந்த 498A அப்பிடின்னு ஒரு சட்டத்தை சொல்லுறாங்களே, அதை எப்படி பயன்படுத்துறங்க?

பொதுவா, அதை புருசனை- அவுங்க குடும்ப ஆளுகளை மிரட்டுரதுக்கு கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துறாங்க.
நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி, குடும்ப நல கோர்ட்க்கு வந்த ஆம்பளை ஆளுகளை கோர்ட் வாசல பாத்தாக் கூட, குடும்ப நல கோர்ட்க்கு வந்ததை காமிச்சுக்காம, சும்மா அப்படியே ப்ரண்டு கூட வந்தேன், இல்லயினா ஒரு ஜாமீனுக்கு வந்தேன்னு சொல்லுவாங்க. அவுங்க மழுப்புறதுல இருந்து வக்கில் நமக்கு தெரியாதா, சரி குடும்ப்த்துக்குள்ள ஏதோ பிரச்சனை போலன்னு நாமல நினைச்சுக்க வேண்டியது தான்.

ஆனா இப்பயெல்லாம், லேடிஸ் நல்லா மேக்கப் பண்ணிக்கிட்டு ஏதோ பொருள்காட்சிக்கு வந்தது போல வற்றாங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி காலைல 11 மணிக்கே குடும்ப நல கோர்ட்ல எல்லா வேலையும் முடிஞ்சுடும், ஆனா இப்ப,
சாயந்திரம் ஆறுமணி வரைக்கும் கோர்டும், ஜட்சும் வேலை செய்யுராங்க.

அதுலயும் ஒரு கொடுமய கேளுங்க, ஒரு விவாவரத்து கேசுல,
ஆறு வயசுல பையனிருக்குர புருசன் – பொண்டாட்டி விவாகரத்து கேஸ் நடந்துகிட்டு இருந்தது. அப்ப, குழந்த பயன் அம்மாகிட்ட இருக்கு, வாய்தா அன்னைக்கு மட்டும் தான் அந்தம்மா புருசன் குழந்தையைப் பாக்க முடியும். இந்தம்மா வாய்தாவுக்கு வரும்போதெல்லாம் கூடவே ஒரு ஆளும் குழந்தையை தூக்கிக்கிட்டு வந்து அவுங்கப்பாகிட்ட குழந்தையை காமிப்பாரு. நான் கூட அந்தாளு, அந்தம்மாவோட அண்ணன் தம்பியா இருக்குமுனு நினைச்சேன். அப்புறமாதான் தெரிஞ்சது, விவாகரத்துக்கு அப்புறம் அந்தம்மா அந்த குழந்தயை தூக்கிக்கிட்டு வர்ர ஆளைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போகுதாம்.

அதாவது புயூச்சர் அப்பா குழந்தய எக்ஸ் அப்பாகிட்ட காமிச்சுக்கிட்டு இருக்காரு. இதுமாதிரி பல வித்யாசமான கேஸுக்கள், ரொம்ப சாதாரணமான காரணத்துக்காகவெல்லாம்
விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு தாராளமா படியேறி வர்ராங்க.

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் முத்தாய்ப்பாய் ஒரு வாக்கியம் சொன்னார்

“முன்னெல்லாம் (சட்ட)வசதி, அறிவு இல்லாம கஷ்ட்டப்பட்டு குடும்பத்தை ஓட்டுனாங்க. ஆனா இப்ப, (சட்ட)வசதி இருப்பதனால ரொம்ப ஈசியா குடும்பத்தை ஒடைக்கிறாங்க”

ஒரு வழக்கறிஞர் தன் தொழிலைத்தாண்டி, அந்த வசதியை மக்கள் எப்படி தவறாக பயன்படுத்தி நம் சமூக கட்டமைப்பின்
கண்ணுக்குத்தெரியாத கட்டுக்களை- தங்களுக்குத் தெரியாமலே இளக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்று வருந்தியதால் வந்த வார்த்தைகள். இதன் வலியை உணரமுடியாத அளவு நாகரீக போதையில் இருக்கிறார்கள். ஆனால், அந்த போதை தெளியும் போது உதவி செய்ய உறவு என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சணம்.

சாவோஸ் தியரியும், மாட்டு பொங்கலும்.

இந்த மாட்டு பொங்கலை(15.01.2009) நீண்ட நாட்களுக்குப் பின் வெகு சிறப்பாக, வெகு விமர்சயாக கொண்டாவது என்று முடிவெடுத்து, நமது அத்தையின் தோட்ட வீட்டிற்க்கு சென்றுவிட்டேன். (இம்ம்… நம்ம வீட்டும் ஒரு காலத்துல மாடு, கன்னு-னு இருந்த வீடுதான். நாம வளர.. வளர., வீட்டுக்கு ஒரு மாடு போதும்., அதை ஒழுங்கா வளத்தா போதும்முனு, வெல போகாத நம்மள வச்சுகிட்டு, நல்ல வெல போற நாலு காலு மாட்ட வித்துட்டாங்க. அதுல இருந்து மாட்டு பொங்கலுக்கு இப்பிடி அத்தை… மாமா வீடுன்னு போகவேண்டியதா போச்சு…)


மதியம் அம்மா கையில (ரொம்ப நாள் கழிச்சு) நல்லா சாப்பிட்டு, சும்மா நடக்க முடியாம, நலுக்… நெலுக்குனு மெதுவா ஒசக்க(மாடிக்கு) போயி அப்பிடியே புத்தகம் படிச்சுக்கிட்டே தூங்கி, மூணுமணிக்கி எந்திரிச்சு கெளம்பி வண்டியில டுர்ர்ருன்னு ரோட்டை (NH 47) தாண்டி தோட்டத்துல இருக்குற அத்தை வீட்டுல போயி, அத்தை, மாமா மற்றும் நம் உறவினர்கள் முன்னாடி, ஆஜர்

ரெண்டு வருசம் கழிச்சு பாக்குறதால, எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.
நல வெசாரிப்புல ஆரம்பிச்சு, அப்படியே ரெண்டு வருசத்துல யாரெல்லாம் செத்தாங்க, யாரு, யாரு என்னென்ன பேசுனானுங்க, என்னேன்ன செஞ்ஞாங்க, இப்ப எல்லாரும் என்ன செய்யுராகன்னு பேசிமுடிக்கவே மணி
நாலைத்தாண்டிருச்சு. பேச்சுக்கு யெடயில கொஞ்ஞம் சாப்பாடு, அப்பறம் காபி தண்ணினு வாயும் அடங்கல, வகுறும் கொறயல்ல. ஆனா, பேச்சுக்கு யெடயிலயே அத்தையும், மாமாவும் அவுக மயனும் (நிச்சயம் முடிந்து, கலயாணத்திற்க்கு காத்திருக்கும் மாப்பிள்ளை)


அத்தை, பொங்க வக்கிறதுக்கான பாத்திரத்தை அலசி, பொங்க சாமான் எல்லாத்தையும் எடுத்து தயாரா வச்சிக்கிட்டு இருந்துச்சு, மாமா, மாட்டை குளுப்பாட்டி, பல வண்ணத்துல பொட்டு வச்சு, கொம்புக்கு சாய பூசுறதும்னும், அம்ம புது மாப்பிள்ளை,அவுகம்மா கேட்ட சாமான வாங்க கடைக்கி ஓடுறதும், ஒடியாறதும்மா பின்ன தென்ன மரத்துல ஏறி தேங்கா புடுங்குறதுமா என்கூட பேசிக்கிட்டே, அவுகவுக வேலைகளை செஞ்ஞுக்கிட்டே இருந்தாக. நாம தான் பெரிய மனுசனாட்டம், பின்னாடி கையை கட்டிக்கிட்டு, அவுக சொல்லுறதுக்கெல்லாம் வெட்டி நாயம் சொல்லிக்கிட்டுருந்தோம்.

மணி ஆறாகவும், அத்தை, கூட்டி சுத்தம் பண்ணி, கோலம் போட்டு வச்சிருந்த்த மாடு கட்டுற கொட்டத்துல, வெளக்கி வைச்சிருந்த பொங்க பானையை அடுப்புல வச்சாங்க. பானை சரியான மட்டத்துல இருக்குறத சரி பாத்துட்டு, அடுப்புல நாலஞ்சு சூலத்தை வச்சு, நல்லா சத்தமா சாமியை கூப்பிட்டு கும்பிட்டு, சூடத்தை கொளுத்தி பின்ன வரிசயாய் விறகு குச்சிகளை அடுப்புல வச்சிச்சு, அத்தை.

அடுப்பை பத்த வக்கிறதுக்கு முன்னயே, சாமி கும்புடுர இடத்துல ஒரு வாழ யெலய போட்டு அதுல, சாணில புடிச்ச புள்ளயாரு-அருகம்புல்லு கொண்டயோடயும், மஞ்சள்ள புடிச்ச மாரியம்மன்–மாயெலை கொண்டயோடயும், பக்கதுல பூசைக்கு தேவயான பூ,தேங்காய்-பழம், சூடம்-பத்தியெல்லாம் எடுத்து வச்சுட்டாங்க.

வடக்க யிருந்து காத்து நல்லா வழுவா அடிச்சிக்கிட்டேயிருந்த்தாலும், இப்பயெல்லாம் தோட்டத்தில கூட கேசு அடுப்புல தான் சமக்கிறதால, வெறகடுப்பு அனுபவம் கொறஞ்சுட்டதாலயும், பொங்க பான தண்ணி பொங்கி வர்ரதுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாவே எடுத்துச்சு. அந்த கேப்புல மாமா, மாட்டுக்கு எச்சி தெளிக்கத்தேவயான அஞ்சுபாத்திரம், அஞ்சு வகை திரவம் (பசும்பால், பசு கோமியம், சுண்ணாம்பு தண்ணி, அவுங்க நிலத்துமண் கலந்த தண்ணீ அடுத்து பொங்க ஒலை தண்ணி) அடுத்து அதை எடுத்து தெளிக்க மூணுவகை எலை (மா, வேப்ப மேலும் மூங்கில் இலைகள்) எல்லாத்தையும் எடுத்துவச்சிக்கிட்டு இருந்தாரு.

சுமார் ஆறரை மணிக்கு, பொங்க பானை பொங்கவும், பானையில பச்சரிசி, வெல்லம், முந்தரி- கிஸ்மிஸ் (உலர் திராச்சை), நெய், பசும்பால் எல்லாம் சரியான நேரத்துல, சரியான விகிதத்துல கலந்து பொங்கலை மணக்க, மணக்க தயாரிச்சுகிட்டுருந்தாங்க அத்தை. அவுங்க போட்டதுல ஒன்னை குறிப்பா கவ்னிச்சேன், அதென்னனா, உப்பு. போனவருசம் சிங்கப்பூருல, பொங்கலன்னைக்கி M.C எடுத்து இன்னைக்கி பசங்களுக்கெல்லாம் பொங்கல் செஞ்சுகுடுத்து அசத்திறனும்முனு தனியா பொங்கல் செஞ்சு சாப்பிடுபாத்தா, ஏதோ கொறயிது, ஒரு சுவையாவே வல்லயேன்ற கவலையிலயே பொங்கலுக்கு எடுத்த M.C வீணாபோச்சு. சாயந்திரம் வேல விட்டு வந்த கார்த்தி, ”நீ, பொங்கல் செய்றப்ப உப்பு போட்டிருக்க மாட்ட, அதான் சருயில்ல”ன்னான். நாம எவ்வளோ பெரிய சமயல்காரன், நமக்கு தெரியாதா. ”போடா, எங்க வீட்டுல பொங்கல் செய்றப்ப உப்பெல்லாம் போடமாட்டாங்க”-ன்னு பெரிய உதார் விட்டது ஞாபகத்துக்கு வந்தது.

பொங்கல் மற்றும் இதர பூசை சாமானெல்லாம் தயாரானதும், மாட்டயெல்லாம் வரிசயாய் கட்டி,மாடுகளுக்கு எச்சி தெளிப்பு (திருஸ்டி கழிப்பு) ஆரம்பமாயிட்ரு., மாமா சொல்ல, சொல்ல நான், மாப்பிள்ளை மற்றும் இருவர் மாமாவின் பாட்டுக்கு பின் பின் பாட்டு பாடினோம்.,

பால் பொங்க,

பட்டி பெருக,

பாத்திரம் வெடிக்க,

நோயிம், பிணியும்

தெருவோட போக


இதே பாட்டை திரும்ப திரும்ப மூணு தடவை சொல்லனும்.
சொல்றப்ப., அந்த அஞ்சு வகை திரவத்தை., மூணுவகை இலையில தொட்டு மாடுகள் மேல தெளிக்கணும். இந்த பாட்டு எனக்கு சின்ன வயசுலயே
அத்துபடி.

அடுத்து, மாடுகளை அவுத்து ஒரு சுத்து வரணும். (வீடு ஊருக்குள்ள இருந்தா, ஊரை சுத்தி வரலாம், ஒத்தை தோட்டம்கிறதால அங்கனையே ஒரு சின்ன சுத்து). நான் ஒரு பசு மாட்டை அவுத்து கயில புடிச்சு சுத்திவந்து கட்டிட்டுடேன். ஆருன பொங்க சோத்தை எடுத்து ஒரு கன்னுகுட்டிக்கு குடுத்தா, அது பயந்துகிட்டு சாப்பிடல. ஆம விடுவோமா? கன்னுக்குட்டி வாய தொறந்து நல்லா நாக்குல படுறமாதிரி வக்கவும், கன்னுக்குட்டிக்கு இனிப்பு பிடிச்சுபோயி அடுத்து அதே நக்கி சாப்பிட்டுச்சு. கன்னுக்குட்டியோட சொர, சொரன்ன நாக்கு கயில படவும் ஒருமாதிரி சந்தோசமா இருந்தது.

சரி மாட்டுக்கு எல்லாம் சரியா செஞ்சதும், அடுத்து நமக்கு தான. கையை கழுவிட்டு, நமக்கு பக்தியுடன் பரிமாறப்பட்ட பிரசாதங்களை சாப்பிட்டு, பார்சல் கட்டி, வண்டியை கிளப்பியதும், மாமாவும், அத்தையும் கோரசாக
“யப்பா, ரோட்டை மெதுவா, ரெண்டு பக்கமும் பாத்து சூதானமா தாண்டிப் போகனுப்பா”(தங்க நாற்கரம் திட்டத்தில் NH-7-னை, நான்கு வழிச்சாலையாக்க மொத்த பாதையையும் கொத்தி, குதறி போட்டிருந்தனர்)-ன்னு சொன்னதும், நமக்கு மனசுக்குள், “ரோடு சுமாராக இருந்த எழுவருடங்களுக்கு முன், NH-7-ல் ஒருமுறை புதையல் எடுத்து, எழும்பு முறிவு டாக்டருக்கு இரண்டுமுறை பங்கு கொடுத்து ஞாபகத்துக்கு வந்தது”.


எப்படியோ ஐந்து வருடஙளுக்குப் பின், நம்முடைய இடத்தில் பொங்கல், அதுவும் நமக்கு பிடித்த விவசாய நண்பன்-மாடுகளுடன் கொண்டாடியதில் ஒரு ஆத்ம சந்தோசத்தை தருகிறது.

சாவோஸ் தியரிபடி,

இந்த சந்தோசத்தை தந்த பொருளாதார நெருக்கடிக்கும் ஒரு சிறப்பு நன்றி.
மொதல்ல சிவப்பு...

அடுத்து கருப்புன்னு நினைசீங்க்களா., இல்லை பச்சை!

அவரு வேலை செய்வாரு, இவரு பஞ்சாயத்து பண்ணுவாரு!மரத்து மேல கல்யாண மாப்பிள்ளை
பொண்ணுக்கு ஒரு கிலோ போடுறாங்களாம்!?அத்தை அடுப்பு பத்தவிக்கிறாங்க,
பொங்க பானை பொங்கீருசு...நம்ம போன் காமெராவுக்கு மாலைக்கண் நோய் இருப்பதால் இதற்குமேல் படமெடுக்க முடியவில்லை.
பின்குறிப்பு:-
என்னுடைய கிராமத்தில் இணையத்தள இணைப்பு பழுதடைந்து இருப்பதால், மதுரை வந்து இப்பத்திவை இணைக்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.


எது தமிழ் புத்தாண்டு?எனக்குள் தமிழ் புத்தாண்டு எது?, என்ற கேள்வி பல நாட்களாகவே என் மனதை அரித்துக் கொண்டிந்தது. நம் தாத்தா அவர்பாட்டுக்கு தைஒன்றை தான் பொங்கல் + தமிழ் புத்தாண்டு என்று உத்தரவே போட்டுவிட்டார். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் தீரவில்லை.
இதற்க்கு விடை காணவேண்டும் என்ற் வேட்கையுடன் பல ஆதாரங்களை அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கயில், நண்பர் ஒருவர் தனக்கு வந்த மின் மடலினை எனக்கு காட்டினார். அதிலிருந்த கருத்துவிளக்கப் படம் என்னுடைய கேள்விக்கு பதில் தருவதாக இருக்கிறது.


எனவே அந்த விளக்கத்தை சரி பார்க்கவும், என் போலவே தமிழ் புத்தாண்டு பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு விளக்கவும் இந்த விளக்கப படத்தினை உங்களுக்காக இணைக்கிறேன்.


இந்த விளக்கம் சரி என்று நினைப்பவர்கள், இந்த விளக்கப் படத்தினை நம் தமிழ் தாத்தாவின் பார்வையில் படுமாறு செய்தால் புண்ணியம்.


- இந்த விளக்கத்தை வரைந்த ஜானகி ராமன் அவர்களுக்கு நன்றி.அதெல்லாம் இருக்கட்டும்.,
நாம விவசாயத்தை தான மறந்துட்டோம், ஆனால் விவசாயி, மற்றும் விவசாய துணை ஜீவன்களான ஆடு, மாடு போன்றவற்றை நினைவுபடுத்தும், நன்றி கூறும் , நன் நாளான பொங்கல் வாழ்த்துக்கள்!
ஆங்.. வீட்டுல பொங்க வைக்கிறவுகளுக்கு வீட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
அமக்கெல்லாம், மாட்டு பொங்க தாம்ப்பா...
புளி காய்ச்சல்

புளி என்றால் உயிரெனக்கு,

முன்னொரு காலத்தில்

புளி என்றால் உயிரெனக்கு,சாம்பாரிலும் புளி,

காலை சாதத்திலும் புளி,

மாங்காவிலும் புளி,

மத்திய தயிரும் புளி,புளி, புளி என்றிருந்த

என்வாழ்வில் வந்ததோர் புயல்

கூடுதல் புளி குடுபத்திர்காகாது, என

என்வனவாசத்தின் பலனை,

என் ஆசை தேன்கூட்டை,

நான் கட்டிய கோட்டையை,

கலைத்தான் மத்திய வைத்தியன்.வைத்தியன் கொடுத்தது கசப்பு

மருந்தெனினும்,காலப் போக்கில்

உடலுக்கு நல்ல சொகுசை தான் தருகிறது !பழுத்தப் புளி மட்டுமா இனிக்கும்?

புளி இல்லாத என் வாழ்வும்,

எனக்கு இனிக்கத்தான் செய்கிறது.
முல்லை வீழ்ந்ததும்,

கிள்ளை வீழ்ந்ததும்,

மந்தமான என் காதுகளில்

மெதுவாகத்தான் விழுகிறது.பெண்ணை கற்பழிப்பதும்,

பிணத்தை புணர்வதும்,

பார்வை மங்கிய என்கண்களில்

மந்தமாய் தான் தெரிகிறது.வயதாவதும் கூட வசதியாய் தான் இருக்கிறது...

யாருக்கும், எந்த கேள்விக்கும் பதிலளிக்கத் தேவையில்லாததால்,

எனக்கு வயதாவதும் கூட வசதியாய் தான் இருக்கிறது...


-தமிழ் தாத்தா

ஜப்பானியரின் தொழில் நுட்பத்தை பாருங்கள்.

ஜப்பானிலுள்ள ஒரு பல் பொருள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஊற்று காட்டும் வித்தையை பாருங்கள் நண்பர்களே,
ஜப்பானியர் தொழில் நுட்பத்தில் மிக உயரத்திற்க்கு சென்றாலும், பொருள்களின் தரத்தில் சிறு பிழையும் விடுவதில்லை
என்னுடைய சிங்கை அனுபத்தில் நான் ஜப்பானியரிடம் வேலை செய்ததில்லை, ஆனால் என் உற்பத்தி பொருள்களில் சில ஜப்பானுக்கு செல்லும்.


ஒரு முறை, என்னுடைய உற்பத்தி பொருளில் சிறு காயம் (Cosmetic Defect) பட்டுவிட்டது, நான் என்னுடய மாதிரி அளவீடுகளை வைத்து பார்த்தபின்னும் எனக்கு சரியாக படவில்லை. எனவே, நான் எனது தரகட்டுப்பாட்டு பொரியாளரை அழைத்து சந்தேகம் கேட்டதும், அவர் அந்த காயத்தை பார்த்து சிறு குழப்பத்திற்க்கு பின், இது ஜப்பானுக்குப் போகிண்ட்றது என்றால் வேண்டாம், மாறாக இது ஜப்பானுக்கு இல்லை எனில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்.


அந்த சிறு காயத்தைப் பற்றிய ஜப்பானியரின் கவலை தான், இன்று அவர்களை மற்றவர்களிடமிருந்து மிக உயரத்திற்க்கு இட்டுச்சென்றுள்ளது.

தாத்தா--- சொல்ல மறந்த க(வி)தை...

என் வாழ்வில்
வரக்கூடாத துன்பம்
வந்ததே…


வராது என்றிருந்த
இருள் என்னை
சூழ்ந்தே…


அய்யகோ…
என் மனத்துயரை, யாரிடம்...
எப்படி வெளிப்படுத்துவேன்…


என் கையை கேட்டால்
கொடுத்திருப்பேன்…
என் கண்ணைக் கேட்டாலும்
கொடுத்திருப்பேன்…
ஆனால்


நீங்கள் கேட்டது,
மேடையாயிருந்தால் நான் வந்திருப்பேன்…
அரசியலாய் இருந்தால் இளயவனையோ…
முறன்-களமாயிருந்தால் மூத்தவனையாவது
முன்னிருத்திருப்பேனே...


அது
எனக்கும் தெரியாது…
என் மக்களுக்கும் தெரியாது…

தெரியாதது என் குற்றமா?
என் வழி குற்றமா…
அறவழி மட்டுமே என்
அண்ணணிடம் பயின்றேனே…
வந்ததடா ஆபத்து…


ஆனாலும் அசரமாட்டேன்..
போர் மேகத்திற்க்கும் மயங்கமாட்டேன்...
என்னையும், என்மக்களயும் ஈன்றுத்தவள் தான்,
என் தம்பிகளையும் ஈன்றுடுத்தாள்,


முன்களத்திற்க்கு அஞ்சாதவன்,
என் தம்பி
முன்களத்திற்க்கு அஞ்சாதவன்.


முன் நில்லடா தம்பி
உன் பின்....னால் நானிருக்கிறேன்,
என் மக்கள் இருக்கிறார்கள்.
என் இதயம் உன்னத்தான்
சுற்றிவரும்,


உன் நிலை கண்டு
என் மக்கள் குழைந்தாலும்,
அழுதாலும்,
கலங்காமல்
நானிருப்பேன்


களத்தை நீ பார்த்துக்கொள்,
மரணத்தை கண்டு
கவலை படதே தம்பி,
நானிருப்பேன் உனக்கு
இறங்கர்பா... பாட

(அரசனாக) நானிருந்தால் தான்,
நீ இறந்தாலும்,
உ(எ)ன் வரலாறு
காக்க முடியும்,
என்பதால் தான்
என் அரசை
காத்துக்கொண்டிருக்கிறேன்,
நான்
காத்துக்கொண்டிருக்கிறேன்.

---தமிழ் தாத்தா---

பரபரப்புடன் முடிந்த சிங்கை பதிவர் சந்திப்பு....


டோன்லீ-அவர்கள் சிங்கை பதிவர் கூட்டத்திற்கு விடுத்த திறந்த அழைப்பை, சிங்கையில் இருப்பதாலும், நாமும் பதிவர் தான் என்ற நம்பிக்கையிலும் முழு மனதுடன் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு செல்வது என்ற முடிவெடுத்தேன்.

பொங்க்கோல் பார்க் கூட்டம் நடப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட இடம், நண்பர் டோன்லீ அழைப்பிலே விபரங்கள் கொடுத்திருந்தாலும், பின்னுட்டத்தில் பார்க் வருவதற்கான நாலாபுற வழிகளையும், வழி தடங்களையும் மிகத்தெளிவாக தெரிவித்திருந்தனர். கூட்டத்திற்கு போவதற்கு முடிவெடுத்தாயிற்று., வழித் தடங்களும் மிகதெளிவாக தெரிந்தாயிற்று., உடன் வர ஒரு நண்பரையும் தேர்ந்துடுத்தாயிற்று., அப்புறமென்ன...நண்பர் சகிதமாய், ஜனவரி 3, மாலை மணி 3.30 க்கு பொங்கோல் பார்க்கை வந்தடைதாயிற்று. ஆகா...நல்ல பெரிய பார்க், மரங்களின் நடுவே சிறுகுளம். நடப்பதற்கு, மிதிவண்டி பயிற்சி, உடற்பயிற்சிக்கு தோதாக மரங்களின் நடுவே சிமெண்ட் பாதை, என கண்களுக்கு குளிர்ச்சியான இடம்(எல்லா வயதினர்க்கும்) தான், இடத்தை தேர்ந்தெடுத்தற்கு மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு மொத்த பூங்காவையும் சுற்றிவர ஆரம்பித்தோம். முதலில் குளத்தங்கரையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பொழுது போக்கு + சுவாரசியத்திற்கு, தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறுவர் சிறுமிகளை பார்த்தாலே அழகு, அதிலும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருக்கையில் அவர்களின் முக மொழியும், உடல் மொழியும் கொள்ளை அழகு., ஆஹா ஆரம்பமே அமர்க்களம்.


குறிப்பிட்ட நேரத்திற்கும் 15 நிமிடங்கள் முன்னமே வந்து, குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நண்பருடான பேச்சு குழந்தை பருவத்திற்கு திரும்பியது. "அண்ணே, சின்ன வயசுல என்னன்ன வெளையாட்டு விளையாடி இருக்கீங்க?" இது நான்., " என்ன வெளயாடுவோம், எல்லாரையும் போலத்தான், குண்டு(கோலி), பம்பரம், கிட்டி, புளியங்கொட்டை வச்சு செதறு கல்லு, ஏறி பந்து வெளையாடுவோம், இப்பிடி வெளையாடுற இடத்துக்கு எல்லாருக்கும் முன்னாடி வந்துட்டோம்முனா, குழி தோண்டி முள்ளை போட்டு பேப்பேர் வச்சு மேலாக்க மண்ணை தூவி விட்டுருவோம், லேட்டா வர்றவன் எவனாச்சும் அதுல அகழி வசி முள்ளு கித்தி அழுவான்"- என்று சொல்லி முடித்தார் நண்பர்." அண்ணே, நீங்களும் என்னைய மாதிரி தானா?" என்று சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தோம்...


சுமார் நான்கு மணிப்போல் ஒரு தமிழ் நண்பர் பச்சை நிற T-Shirt அணிந்து கையில் காமெரா போனுடன் சூழ்நிலையை படமேடுத்தப் படியே கடந்து போனார். கூட்டத்திற்கு வந்தவாராயிருக்கும் என்று மனதுக்குள் நினைத்தபடி உடன் வந்த நண்பருடன் பேச எத்தனிக்கையில், நண்பருக்கு ஊரிலிருக்கும் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு., நண்பர் தன் தாயுடன் பேச ஆரம்பித்ததால் எனக்கு வாய்ப்பூட்டு! கண்களை மேய விட்டதில் தூரத்தில் பச்சை டி-சட்டை நண்பர், உடனொரு நண்பருடன் சூழ்நிலையை வளைத்து, வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார், பாண்பு போல!


ஐந்து மணியை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், நண்பர் அதிரை ஜமால் மூன்று பேருடன் வந்தினைந்தார், எங்களோடு. உடனே அனைவரும் அலைபேசியில் அடுத்தடுத்து மக்களை தொடர்பு கொண்ட கன நேரத்தில் பூங்காவின் மறுபுறத்திலிருந்து நாம் முதலில் கண்ட பச்சை டி- சட்டை நண்பர் உடன் நான்கு பேருடன்(நண்பர் ஒருவர் கையில் கூடையுடன் வந்திருந்தார், அனேகமாக அல்வாவாக இருக்கலாம்) வந்து கூட்டத்தை கூ...ட்டினர்.
அறிமுக படலம் ஆரம்பமானது.... நான் அப்பாவி முரு...நீங்க...டோன்லீ ( பச்சை டி- சட்டை ), ஜோதிபாரதி...ஜெகதீசன்...ராம்...ஜமால்...சரவணன்...அப்துல்லா... அறிமுக படலம் நடக்கயிலே கோவி.கண்ணன்., ரொம்ப நல்லவன் போன்றோர் வரும் வழியில் இருப்பதாக தகவல் வரவும், கூட்டம் மொத்தமும் காத்திருப்பதில் உள்ள சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்து.
காத்திருந்த போது அனுபவித்த சுகங்கள்:- அன்பர் ஜெகதீஷ், கூட்ட திட்டப்படி பாட்டில்களை திறக்க ஆரம்பித்தார். ஷ்.. ஷ்..ஆமாம் பொங்கிவிட்டது வாங்கி வந்த .....
காமிரா காதலர்கள், வந்தவர்களிடம் " படமெடுக்குற மாதிரி எதையும் காணமே" என்று கவலைப் பட்டுகொண்டிருந்த நேரத்தில் ஒரு சூப்பர் சிட்டு கண்ணில் பட்டு அவர்களின் காதலில் விழுந்தது...
ஒரு சிறு கும்பல், நண்பர் ஜோதி பாரதி தள்ளி வந்த கூடையில் அனேகமாக என்ன இருக்கும் என்ற விவாதத்தில் ஈடுபட்டது...


மொத்த கூட்டத்தின் இடையே ஒரு குரல், ஹே, அண்ணன் வந்துட்டாரு.. அண்ணன் வந்துட்டாரு.... அட அமாம், மொத்த கூட்டமும் எதிர் பார்த்த அண்ணன் கோவி. கண்ணன், ரொம்ப நல்லவனுடன் வந்தினைந்தார்.. கூட்டம் கொளத்தன்கரையில் ஆரம்பமானது. அண்ணன் ஜோசப் பால்ராஜ் எழுந்து "இன்றைய நமது பதிவர் கூட்டமும் கூடி இருப்பதற்கான காரணம்... "அண்ணே வடை ஆறிடப் போகுது..."பின்னிருந்து ஒரு குரல். ஆமா., ஆமாம்... எல்லோரும் பின் குரலை ஆமோதித்தனர். பின் குரல் வாழ்க...உடனே நண்பர் ஜோதிபாரதி தள்ளி வந்த கூடையிலிருந்து பொட்டலங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன...பின் பேப்பேர் தட்டுகளில் சக்கரை பொங்கல்., உளுந்த வடை., அல்வா வைத்து எல்லோருக்கும் பரிமாற ஆரம்பித்தனர் சங்கத்தின் மூத்த பதிவர்கள் கோவி.., ஜோசப். பால்ராஜ்., ஜோதி பாரதி (சிற்றுண்டி தயாரிப்பாளர்) .


"யப்பா, எல்லோரும் சாப்பிட்டசுல இனிமேலயாவது பேசலாமுல" என்று முன் அனுமதியுடன் கூட்டம் ஆரம்பித்து. புதிய பதிவர்களின் தங்களிப் பற்றிய சுய அறிமுகம்.( தங்களின் பெயர், இந்தியாவில் ஊர், ப்ளோக்கின் பெயர், ப்ளோக்கின் பெயர் காரணம், தாங்கள் எழுதும் தலைப்பு, தாங்கள் விரும்பி படிக்கும் ப்ளோக்குகள், அதற்கான காரணம் போன்றவற்றை பற்றிய சுய விளக்கம்) புதிய பதிவர்கள், அதிரை ஜமால் ஆரம்பித்து, அப்பாவி முரு வழியாக ., ரொம்ப நல்லவனிடம் முடிந்தது சுய விளக்க படலம்.
அனைவருக்கும் முழு அறிமுகம் கிடைத்த பின் சங்கம் தன் கடமையை செய்ய ஆரம்பித்தது. முதலில் சில குறிப்பிட்ட பதிவர்களை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன, கார சாரமான விவாதங்கள், அனல் பறக்கும் விளக்கங்கள் என்று மொத்த கூட்டமும் மெதுவாக சூடாக ஆரம்பித்தது.இதை இதற்கும் மேல் எழுத வேண்டாமென நினைக்கிறேன்.
மொத்தக் கூட்டமும் முழு சூட்டை அடைந்ததும், அன்பர் அடுத்த விவாதத்தை ஆரம்பித்தார், அது, இன்று நாம் சாப்பிட்டது கேரட் அல்வாவா? பரங்கிக்காய் அல்வாவா?. எனக்கு இப்ப விளக்கம் கிடச்சாகனும், ஆமா!. அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கையில், கூட்டத்தில் ஒரு குரல் "இது பீட்ரூட் அல்வா கிடையாது, என்னா, அது ரொம்ப செவப்பா இருக்கும்" சூட்டை குறைக்கும் விதமாக மொத்த சிற்றுண்டியும் செய்து (பின் குறிப்பு அவரே செய்து) கொண்டுவந்த அண்ணன் ஜோதி பாரதி -இல்லை இல்லை இது பப்பாளி அல்வா என்று சுய விளக்கம் கொடுத்ததும், கூட்டம் அடுத்த பரபரப்புக்கு போனது. அது
"ஏம்பா, இந்த 'கழுகு கண்' பேருல பின்னுட்டம் போடுறது யாரு, நான் எதை எழுதினாலும் அதை எதுத்து பின்னுட்டம் போடுறான், இந்தக் கூட்டத்துல இருந்தா குத்தத்தை ஒத்துக்க", என்று ஒருவர் ஆரம்பிக்கவும்,
"ஆமண்ணே, எம்ப்லோக்குல ஒருத்தன் 'பெருச்சாளி'-ன்னு தொந்தரவு தர்றான்' எம்ப்லோக்குல, "நான் தான் அவன்" -ன்னு ஒருத்தன் வர்ரான்,
மொத்த கும்பலும் ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணோடு பார்த்து கொண்டு எழுகையில், ஜோதி பாரதி அண்ணன், " ஏம்பா, வடைக்கு சட்னி கொண்டுவந்தேன் அதை எடுக்காம விட்டுடோமே" என்கையில் கூட்டம்

நிகழ்ச்சி நிரலின் கடைசிக்காக தேதண்ணி குடிக்க கடையை நோக்கி நகர்ந்த நேரம் முன்னிரவு மணி எட்டு.


விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
 
©2009 அப்பாவி | by TNB