தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்.


இந்த வார்த்தைகளைச் சொல்லி மனிதன் தன் சக மனிதனைச் கேலிபேசும் போதெல்லாம், எனக்கு கடுமையான கோபம் வருகிறது. எங்கெல்லாம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள? யார், யாரெல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்?, என பார்த்தால் உணர்ச்சியுள்ளவர் எவருக்கும் கோபம் வரத்தான் செய்யும்!

வாடகைக்கு வீடு தேடும்போது., வீட்டுக்காரன் கேட்ட வாடகையை விட சிறிது அதிகமாக கொடுத்து வாடகைக்கு வீடெடுத்தவன் – சொல்லும் போதும்,

அவசரத்திற்க்கான கடைசி நேர தொடர் வண்டி பயணத்தில், முன்பதிவற்றவர்களுக்கான பெட்டியில், முதல் ஆளாக ஏறி (அல்லது சுமைதூக்கும் தொழிலாளிக்கு கொடுத்த கையூட்டின் பலன்) பொதி வைக்கும் பலகையில் உரிமையோடு கால் நீட்டி படுத்துக்கொள்பவன் – சொல்லும் போதும்,

நிரந்தரமான குண்டு, குழியுடைய சாலையின் வலதுபக்கம் முழுவதும் வாய்பிளந்து கிடக்கையில், எதிர்வரிசையில் வண்டியோட்டி வந்து, சாலையின் வலப்புறத்தில்(நமது இடப்புற பாதி(தை)யில்) நாம் வருவதற்கு முன் அதிரடியாக புகுந்து வெளியேறியவன் – சொல்லும் போதும்,

மாநகராட்சி முதல், கிராம நிர்வாக அலுவலகம் வரை, மின்சார துறை முதல், வேலைவாய்ப்பு அலுவலகம் வரை, வரிசையிலிருக்கும் மக்களைத் தாண்டி, உள்ளே புகுந்து காரியம் நிறைவேற்றி வெளியேறும் கரை வேட்டி கட்டிய நரிகள் – சொல்லும் போதும்,

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆளும் கூட்டணியிலிருந்து பதவிகளின் முழூ……. (எழுத்து பிழை அல்ல) பலாபலனையும் ஒட்டுண்ணியாய் உறிஞ்சி கொழுத்து, கடைசி நேரத்தில் சப்பையான காரணங்களை கூறி எதிர் கூட்டணிக்கு தாவுபவன் – சொல்லும் போதும்,

இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,




இந்த மாதிரியான ஆட்கள் அந்த கேவலமான வேலையை செய்தது மட்டுமல்லாது, வரிசையிலிருந்தும், வாக்களித்தும் ஏமாந்த அப்பாவியிடம் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என, கேலிபேசும் போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் தான் வருகிறது.

ஆடு, மாடு, மனிதன், குரங்கு, சிங்கம், புலி, கழுகு, பன்னி, மலைப்பாம்பு என வெவ்வேறு வகை குணங்கொண்ட எல்லாவகை உயிரினமும் ஒட்டுமொத்தமாய் கூடி கும்மியடித்த அடர்ந்த கானகத்தில் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” - “தனியா சிக்குனா வயித்தில் கிடக்கும்” என்ற வாசகங்கள். அங்கே வாழத்தான் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியான தற்பாதுகாப்பு குணாதிசயம் வேண்டும். இல்லையெனில் அடுத்த இனத்தின் பசிக்கு மட்டுமல்லாது, சில நேரங்களில் தன் இனத்தின் பசிக்கும் – ருசியாகி, மண்டையோடாக காலமெல்லாம் பல் இளித்து கிடக்க, கடவது தான்.


ஆனால், புவியில் வாழ்ந்த அநேக உயிர்களில் சிலவற்றை அடியோடும், சிலவற்றை வேரடி மண்ணோடும் அழித்துவிட்டோம். இனி மீதமிருப்பது மனிதன் மட்டுமே என்றிருந்த வேளையில், இல்லை இல்லை நாங்கெல்லாம் மனிதன், மனிதன், மனிதன், மனிதன் என எங்களுக்குள் பல வேற்றுமைகள் உண்டு என்றும்,

உடன் விளையாட மிருங்களற்ற சூழ்நிலையில், திறமையை வளர்க்கவும், உயிர் வாழும் தகுதியை இழக்காமலிருக்கவும், மனிதர்களுக்குள்ளே பல விசித்திரங்ளைப் புகுத்தியது மட்டுமல்லாது, சந்ததியை கூட மதிக்காத வினோதங்களை அமல்படுத்துகிறவனும் கூட, அலுக்காமல் சொல்லும் வார்த்தையாகிப் போனது இந்த வாசகம்.


அன்னையிடம் உடலைப் பெற்று, காட்டில் வாழும் ஆண்சிங்கம், புலி, காட்டெருமை, பன்னி, நரி போன்றவற்றிடம் குணத்தைப் பெற்று, நாட்டுக்குள்ளே - காட்டை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது, சராசரி மனிதனிடம் கூசாமல் கூறும் வெறிநாய்களே, எச்சத்தின் மிச்சத்தை உண்ணும் நரிகளே, உங்களுக்குத் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என்ற பழமொழி,


எங்களிடம் அமல்படுத்த முனைந்தால், இனி உங்களின் நிலை?

வட்டத்துக்குள் பெண்!?




கோலத்தில் பெண் அழகு., பெண்ணுக்கு
இந்த கோலம் தான் அழகு.

அன்பெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
பாசமெனும் வட்டமே அழகு.,

இரக்கமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
இயறக்கையின் இந்த வட்டமே அழகு.,

கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,

காதலெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
கணவனுடன் காதல் எனும் வட்டமே அழகு.,

செல்வமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குழந்தைச் செல்வ வட்டமே அழகு.,

தாய்மையெனும் வட்டம் அழகு., பெண்ணை
அம்மா என அழைப்பதே அழகு.,

குடும்பமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குதூகலம் தருமிந்த வட்டமே அழகு.,

பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!

- அப்பாவி முரு






(நேற்று இந்தக்கோலத்தை வாசலில்போடும்போது பெண்ணுருவத்தைமட்டும் முதலில் போட்டுவண்ணப்பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்துவிடுவார்களோ என பெண்ணைச்சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகாபோல! இந்தக்கோடு அதாவது பெண்வட்டம்பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்.) ---ஷைலஜா




அழகான கோலம் போட்டது மட்டுமில்லாமல், அதில் கருவெடுத்து, வட்டத்துக்குள் பெண் கவிதை படைத்த அக்கா ஷைலஜா அவர்கள், கவிதை எழுதியது மட்டுமில்லாமல் அடுத்து மூன்று ஆணகளையும் இதே தலைப்பில் கவிதை தொடர் எழுத அழைத்ததின் பாதிப்பாய் தொடர் என்னிடமும் வந்தது.

என்னால் முடிந்த்ததை, எனக்கு சரியென் பட்டதை எழுதியிருக்கிறேன்.





முதல் வட்டம் - ஷைலஜா அக்கா


இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா


மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh


நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி


ஐந்தாம் வளையம் கோர்ப்பவர் - அப்பாவி முரு,


அடுத்த வளையம் கோர்க்க நான் அழைப்பது - நான் தகுதியானவனா?


என ஒரே கவிதை மட்டும் எழுதி பதிவேற்றிவிட்டு, ஒதுங்கி நம்மை வேடிக்கை மட்டும் பார்க்கும் எனது நண்பர் சரவணனை எனக்கடுத்து தொடர் பதிவு சங்கிலிக்கு ஒரு வளையம் கோர்க்க அழைக்கிறேன்.

முரு என்ற நான்...



ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்தூங்கிட்டோம்ல,

டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்,




@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^, அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா, நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு. சபாஷுடாமுரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு, இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.


க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான்செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு, என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க. டேய் யாருடா நீங்க, எங்கடா தூக்கிட்டுப் போறீங்க என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை, அவிங்கபாட்டுக்கு போயிகிட்டே இருக்கணுங்க. அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே,

அடேய், தூக்கிட்டு போங்க, ஆனா எங்கன்னு சொல்லீட்டு தூக்கிட்டு போங்க. மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன், அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?

எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடாமுருகொர்கொர்

தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது. அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே, டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே, சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே. சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.

அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன். அப்புறம் தம்பி, நீங்க ஏதோபிளாக்எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க. நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம், எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு. நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது. அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாருஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.

சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன். ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். ஏன்னா, மொத்த பிரச்சனைக்கும் நடுவுல வந்து மாட்டிகிட்டோம். ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும். எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல. யாரை எதுக்கு போடலாம்?

நிதித்துறை - ராகவன், நைஜீரியா பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.

தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.


டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.

வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.

உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,

பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.

விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?

பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.

கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!

தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).

உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)

இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும்.

மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி!

துறை இல்லாதவர்கள் :- .மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.

தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.

இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பிபோலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க

போலாம், போலாம், வாழ்க்கையில முக்கியமான விசயம், என்ன பெத்தவுங்க, பிரண்டு, சக அமைச்சர்- ன்னு யாருமில்லாம பத்வி ஏற்க்குறது தான் மனசுக்கு கஷ்ட்டமாயிருக்குன்னு நினைச்சு முடிக்குமுன்னேயே மேடையும், நாம உக்காருறதுக்கு சேரும் வந்திருச்சு. முன்னாடி கூட்டத்த பாத்தா, ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது. நாம தான் மருதைக்காரனாச்சே, இதுக்கெல்லாம் பயப்புடுவோமா. எல்லத்துக்கும் பொதுவா ஒரு வணக்கத்தை போட்டுட்டு சேருல உக்காறப் போறதுக்குள்ள, கவர்னரு வந்திட்டாரு. அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு. கிட்ட போனது, “நான் சொல்லுறத, அப்படியே திரும்ப சொல்லுங்க தம்பின்னு சொல்லீட்டு, பேப்பர பாத்துகிட்டே,

முரு என்ற நான்ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாகமுரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க, டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,




திரும்பவும்முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!


கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு.

ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.




கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?

 
©2009 அப்பாவி | by TNB