உணர்ச்சிப்பூர்வச் சிக்கலில், வாழ்வாதாரச் சிக்கலை மறக்காதீர் தமிழர்களே!!!




பேரன்பு கொண்ட தாய்மார்களே., பெரு மதிப்பு கொண்ட பெரியோர்களே., தேர்தல் தோறும் மறக்காமல் வாக்களித்ததும், வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளைத் தானே மறந்திடும் உண்மையான குடிமக்களே., எல்லோருக்கும் இந்த அப்பாவியின் வணக்கம்.

தொன்னுற்று ஆறு சட்டமன்றத் தேர்தலை, மக்கள் எந்தளவு ஆவலோடு எதிர்பார்த்தார்களோ, அதைவிட இருமடங்கு ஆவலோடு இன்றைய நாடாளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு முக்கிய காரணம்., இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் தமிழின அழிவு.

இயற்கையாகவே தமிழ்நாட்டிற்கு ஒரு கை போல் அமைந்திருக்கும் இலங்கையில் நடக்கும் போரால், இடது கையில் ஏற்பட்ட வலி, மிகுந்து (தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும்) மாரடைப்பாக மாறுமா? இல்லை, இது சாதாரண வலி தானா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல்.

ஈழத்தில் நடக்கும் அநியாயத்தை கண்டிக்கும் பொறுப்பில் இருக்கும் நாம், அதை வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறோமா!?, இல்லை மறைமுகமாக தமிழின எதிரியை வலுவாக்கினோமா(!?) என்பதெல்லாம் தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியில் தான் உள்ளது.

மறுக்க முடியாத கவலை, மற்றும் காரணங்கள் இருந்தாலும், கவனமாய் இருக்க வேண்டிய காலம் தமிழகத்துக்கு. உணர்ச்சியைத் தூண்டி அரைமயக்கத்திலே வைத்திருக்கும் ஈழப் பிரச்சனையையும் தாண்டி, தமிழகத்தை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பிரச்சனைகளை நினைவுபடுத்த வேண்டிய நேரமிது…

1) காவிரி நதி நீர் பங்கீடு.


கடந்த இருபது வருடங்களாக அரசியல், சமூக, சட்டம், நீதி என உச்ச நீதி மன்றத்தாலும் தீர்க்க முடியாதப் பிரச்சனை. மாநில முதல்வர் உண்ணாவிரதமிருந்தாலும் உள்ளூர் அரசியலைத் தாண்டி மக்கள், தேசிய அளவில் யோசித்ததும் இல்லை. மக்களை தேசிய அரசுகள் காத்ததும் இல்லை…

இந்த தேர்தல், தேசியத்திற்கான தேர்தல். வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது மக்களவையில் தமிழகத்தின் நியாயத்தை விருப்பு, வெறுப்பில்லாமல் எடுத்துக்கூறி, தமிழகத்திற்கு உரிய அருள்பாகத்தை பெற்றாகவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.

இதற்கு மேலும் காவிரியை இழந்தால், தமிழகத்தை கடவுள் – தேவன் – அல்லா என யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் காவிரியின் தாக்கத்தால் வறண்டிருக்கும் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் அழியாத தழும்புகள் பல உள்ளன.

2) முல்லைப் பெரியாறு அணை

கிழக்கிந்திய கம்பெனிக்கும் – திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குமான 999 வருட ஒப்பந்தம்., கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது, சூரியன் மறையாத ஆங்கிலப் பேரரசு செலவைத் தாங்க முடியாமல் ஒதுங்கிய போதும்., இதனால் கிடைக்கப் போகும் பலனை உணர்ந்து பின்வாங்காமல், இங்கிலாந்திலுள்ள தன்மொத்த சொத்தினைத்தையும் விற்ற பென்னி குயிக் எனும் ஆங்கிலேயப் பொறியாளரால் கட்டப்பட்ட அணை.

மத்திய தமிழகத்தின் உயிர்நாடி, நான்கு மாவட்ட மக்களுக்குள்ள ஒரே நதி அல்லது ஆறு அல்லது கால்வாய். இந்த ஆறு வற்றும் போதெல்லாம் மறக்காமல் தலைதூக்கும் அதிசயம் தான், சாதிக் கலவரம். இது என்ன தொடர்பு என்பது, வைகையில் குளித்து மேலேறும் மக்களுக்கே புரியாத அதிசயம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அணையில் 142 அடிக்கு நீர் தேக்கலாம். ஆனால், கடந்த பல்லாண்டுகளாகவே 136 அடியிலேயே நிற்கிறோம். கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர், லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும் பகுதி கேரளாவிற்கே போகிறது., நெல் விளையும் தமிழ்நாட்டிலும் சரி, நெல்லே விளையாத கேரளாவிலும் சரி, ஒரே விலைக்கு விற்கப்படும் அரிசி!?.

என, பல சாதகங்களையும் தாண்டி, தமிழகத்தின் மேலும், தமிழர்களின் மேலும் கேரளா காட்டும் வெறுப்பு + பிடிவாத்திற்கு மருந்தாகும்? என, இந்த தேர்தலையே நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுர மாவட்ட மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம்???

3) ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

திடீரென வெடித்து, உக்கிரத்தைத் தொட்டு, கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக சட்டென பின்வாங்கிய பிரச்சனை. ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஒக்கேனக்கல் என்ற ஒரு ஊர் இருக்கிறதா?, இருந்தால், ஒக்கேனக்கலில் மக்கள் இருக்கிறார்களா?, அதற்கும் மேல் சுகாதாரமான தண்ணீரைத் தான் குடிக்கிறார்களா? என்பது அந்த கட்டுப்பாடுகளற்ற கருணாமூர்த்திக்கே வெளிச்சம்.


நதிக்கரைகளின் ஓரத்தில் தான் நாகரீகங்கள் தோன்றின., கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, நதிகள் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தமிழ் நாகரீகத்தை காப்பாற்றவும்.,

கடந்த அறுபத்தி ஓராண்டுகளாக, இந்தியா., இந்தியன், என்பதில் பெற்ற பெருமைகளை மேலும் தக்கவைத்துக் கொள்ளவும்.,

தமிழர்களான நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையான எதிர்காலத்தை, சரியாக நிர்ணயிக்கவேண்டிய தருணத்திலிருக்கும் நாம் செய்யவேண்டிய கடமையான வாக்களிப்பை சரியாக செய்யவும்,

எதிர் வரும் இந்தியாவிற்கு, தமிழனின் தார்மீக உரிமையை எடுத்து காட்டி நிலைநாட்டக் கூடிய திறமையானவர்களை, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலிருக்கும் நாம்.,

ஈழதமிழர் பிரச்சனையில் அரசியல்வாதிகளின் மேல் எதிர்ப்பை காட்டும் நேரத்தில், தமிழகத்தின் வற்றாத நதிகளால் ஏற்பட்டிருக்கும், வற்றாத பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

மறக்கமுடியுமா இல்லை மறுக்கமுடியுமா?

12 comments:

சி தயாளன் said...

தமிழ் நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினை உந்த நதி நீர் பங்கீடுகள் தான்.அரசியல் தவிர்த்து அணுக வேண்டிய பிரச்சினை இது...எனென்றால் இது வாழ்வாதார பிரச்சினை

ஆ.ஞானசேகரன் said...

பிரச்சனைகளுக்கு மத்தியில் வாக்குகள் காசாக்க பார்க்கின்றனர்..

பழமைபேசி said...

சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும், துபாயிலும் இருந்து கொண்டு இடுகைகள் இட்டு, சுழலுக்குள் சுழலாய் சுழலும் இடுகைகளால் ஆவதென்ன நண்பர்காள்! வெகுசன மக்களைச் சென்றடைய வேறேதும் வழி இருப்பின் பகருவீர்!!!

தீப்பெட்டி said...

///எதிர் வரும் இந்தியாவிற்கு, தமிழனின் தார்மீக உரிமையை எடுத்து காட்டி நிலைநாட்டக் கூடிய திறமையானவர்களை, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலிருக்கும் நாம்.,///

ரொம்ப சரியாய் சொன்னீங்க. அரசியல்வாதிகளும் மக்களும் இலங்கை பிரசச்சனையை தவிர்த்து நம்ம பிரச்சச்சனையும் கொஞ்சம் கவனிக்க வேணும். இன்னும் 5 ஆண்டு காலம் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு நம்ம தமிழ் நாட்டில் பெரிய பிரச்சனைகள் காத்துகிட்டு இருக்கு. இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை என்பதையும் எண்ணி பார்க்க வேணும்


///ஈழதமிழர் பிரச்சனையில் அரசியல்வாதிகளின் மேல் எதிர்ப்பை காட்டும் நேரத்தில், தமிழகத்தின் வற்றாத நதிகளால் ஏற்பட்டிருக்கும், வற்றாத பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்///

ஊடகவியலாளர்களுக்கு இதை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எடுத்து செல்லும் சமூக கடமை இருக்கிறது. இலங்கை பிரச்சனையை கொண்டு வேடிக்கை காட்டி நாளை நமது அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை மறக்கடிக்கும் முயற்சிக்கு பலியாக கூடாது. சுவர் இருந்தால்தான் சித்திரம். இன்று உணர்ச்சி வேகத்தில் மறந்தால் வருங்காலம் கடினமாய் இருக்க கூடும்.

priyamudanprabu said...

நெல் விளையும் தமிழ்நாட்டிலும் சரி, நெல்லே விளையாத கேரளாவிலும் சரி, ஒரே விலைக்கு விற்கப்படும் அரிசி!?.
/////

என்ன கொடுமை

அப்பாவி முரு said...

வாங்க ’டொன்’ லீ.,

தமிழ் நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினை உந்த நதி நீர் பங்கீடுகள் தான்.அரசியல் தவிர்த்து அணுக வேண்டிய பிரச்சினை இது...எனென்றால் இது வாழ்வாதார பிரச்சினை//

ஆமாம் லீ., அதை அரசியல், மொழி, இனம், கலாச்சாரமெல்லாம் தாண்டி மனிதனாக மட்டும் இருந்து தீர்க்க வேண்டிய பிரச்சனை.

===================================

ஆ.ஞானசேகரன் said...
பிரச்சனைகளுக்கு மத்தியில் வாக்குகள் காசாக்க பார்க்கின்றனர்..

வாங்க ஆ. ஞானசேகரன்.,
பிரச்சனைகளை மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களிலும் வாக்குகள் + காசாக்கவே பார்க்கிறார்கள்.

===================================

பழமைபேசி said...
சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும், துபாயிலும் இருந்து கொண்டு இடுகைகள் இட்டு, சுழலுக்குள் சுழலாய் சுழலும் இடுகைகளால் ஆவதென்ன நண்பர்காள்! வெகுசன மக்களைச் சென்றடைய வேறேதும் வழி இருப்பின் பகருவீர்!!!

வாங்கண்ணா.,

பத்து பதிவுகளை படித்த ஓட்டுபோடும் ஒருத்தரையாவது தெளிவு படுத்த வேண்டு்மென்றே எழுதிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் கோரிக்கைபோல் வேறு வழிகளையும் தேடிக்கொண்டிதானிருக்கிறேன்.

அதுவரை பதிவுகள் தான்.

அப்பாவி முரு said...

// தீப்பெட்டி said...

ஊடகவியலாளர்களுக்கு இதை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எடுத்து செல்லும் சமூக கடமை இருக்கிறது. இலங்கை பிரச்சனையை கொண்டு வேடிக்கை காட்டி நாளை நமது அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை மறக்கடிக்கும் முயற்சிக்கு பலியாக கூடாது. சுவர் இருந்தால்தான் சித்திரம். இன்று உணர்ச்சி வேகத்தில் மறந்தால் வருங்காலம் கடினமாய் இருக்க கூடும்.


வாங்க தீப்பெட்டி, கருத்துக்கு நன்றி

==================================


பிரியமுடன் பிரபு said...
நெல் விளையும் தமிழ்நாட்டிலும் சரி, நெல்லே விளையாத கேரளாவிலும் சரி, ஒரே விலைக்கு விற்கப்படும் அரிசி!?.
/////

என்ன கொடுமை??//

அதானே என்ன கொடுமை பிரபு இது??

பழமைபேசி said...

//வாங்கண்ணா.,

பத்து பதிவுகளை படித்த ஓட்டுபோடும் ஒருத்தரையாவது தெளிவு படுத்த வேண்டு்மென்றே எழுதிக்கொண்டிருக்கிறோம்.//

ஆமாம்... நிறைவான கருத்து!

Rajeswari said...

முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றான நதிநீர் பங்கீட்டை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டுமே...

பதிவு நன்று..

Renga said...

மற்ற ஒப்பாரிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு தமிழ்நாட்டையும், இந்திய பிரச்சனைகளையும் அலசியிருக்கிறீர்கள் அதற்க்கு நன்றி...

இன்னும் சில பிரச்சனைகளையும் அலசியிருக்கலாம்!!!

அப்பாவி முரு said...

// Rajeswari said...
முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றான நதிநீர் பங்கீட்டை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டுமே...

பதிவு நன்று..//

வாங்க ராஜி...

===================================



Renga said...
மற்ற ஒப்பாரிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு தமிழ்நாட்டையும், இந்திய பிரச்சனைகளையும் அலசியிருக்கிறீர்கள் அதற்க்கு நன்றி...

இன்னும் சில பிரச்சனைகளையும் அலசியிருக்கலாம்!!

வாங்க ரெங்கா.,

அலசலாம்,நதிகள் தான் முக்கியம் என நினைக்கிறேன்

Suresh said...

அருமை தலைவா ... மறக்கும் குணம் உள்ள நம் மக்களை ... என்னவென்று சொல்லுவது

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB