சன் டீ. வி பிறந்தநாள் (தமிழ் புத்தாண்டு) வாழ்த்துகள்




யப்பா, ஊரு உலகத்துல நாம்பேசுற அதே தமிழ பேசுற எல்லாருக்கும் அன்பு, மரியாத, பயங் கலந்த வணக்க(ம்). இன்னுங் கொஞ்ச நேரத்துல பங்குனி (முரசொலிக்கு மட்டும் சித்திரை) மாசம் முடிஞ்சி, சித்திரை (மன்னிச்சிக்கிங்க, முரசொலிக்கு என்னன்னு தெரியல, நாளக்கி இங்க போயி பாத்துக்கங்க) மாசம் பொறக்கப் போகுது.


சித்திர பொறப்பை எங்க ஊருல (சிங்கை) தமிழ் புதுவருச பொறப்புன்னு சொல்லி, ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே ரேடியாவுலையும், டீ.வி. லையும் வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க. இன்னிக்கி ராத்திரி விடிய, விடிய தமிழ்லயே எதையாச்சும் பேசி நம்மள குசி பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நாமளும் இதுவரைக்கும் கேக்காத வார்தைகளையும் கேக்குறதுக்கு, அப்பப்ப வாய்ப்பு கிடைக்கும், நாமளும் அத விடாம கேட்டுக்க வேண்டியது தான். ஆத்தா, அப்பன் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காக போலிருக்கு, இப்பிடி தமிழ ஒழுங்கா கேக்குறதுக்கு.


ஆக, இதுல இருந்து உங்களுக்கு சொல்லிக்கிறது என்னான்னா, இன்னிக்கி ராத்திரி எங்களுக்கு தமிழ் வருச பொறப்பு!. எப்பிடியும் ராத்திரி பதினொன்ரை மணிக்கி ஆரம்பிச்சு, விடிய விடிய பாசக்கார பயலுக ஃபார்வேர்டு எஸ்ஸமச அனுப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. நமக்கும் வேறென்ன சந்தோசம், வந்ததை ஆளமாத்தி அனுப்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.



ஆனா, கவனமா இருக்கணும். அனுப்புற மெஸ்ஸேசுல எதையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பீர முடியாது. அனுப்புனா, அரசாங்கத்தை எதுத்த மாதிரியாகிப் போகும். ஊருவழி போறன்னைக்கி ஆட்டோ வச்சி தூக்கிருவாய்ங்க. ஆத்தி, அம்மளால முடியாது. நமக்கு வேணாம் ஊர் வம்பு.



ஆனாலும், வந்த மெஸ்ஸேசை பார்வேர்டு பண்ணி தமிழ் வருச பொறப்ப கொண்டாடாதவைங்கள வம்பிழுக்கணும், அடுத்து நாம சந்தோசமா இருக்குறத காட்டணுமேன்னு யோசிச்சதும்., பளிச்சுன்னு வந்து விழுந்த யோசனை தான் அம்ம சன் டீ. வி யோட பொறந்த நாளு. அதச் சொல்லியாவது அம்ம மக்களோட சந்தோசத்த பகுந்துக்க வேண்டியது தான்.



அதனால தமிழ்நாட்டுல இருக்குற நீங்க, தமிழ் வருசப் பொறப்ப கொண்டாடுற எங்களுக்கு, தமிழ் வருச பொறப்பு எஸ்ஸமச அனுப்புங்க., ஊர் வழியில திரியிற நாங்க, தமிழ் நாட்டுல இருக்குற உங்களுக்கு, சன் டீ.வி பொறந்த நாள் வாழ்த்து எஸ்ஸமச அனுப்புறோம்.




மாமன் – மச்சானான நமக்குள்ள ஏதோ பொறந்த நாள் கொண்டாடுன சந்தோசம், ஆனா தமிழ் வருச பொறப்ப கொண்டாடுற நான் நாளைக்கி வழக்கம் போல எந்திரிச்சி வேலைக்கி போகணும். ஆனா சன் டீ. வி பொறந்த நாள கொண்டாடுற உங்களுக்கு நாளைக்கி அரசாங்க லீவுடியேய்.

சந்தோசமா இருங்கடி மாப்பிள்ளைகளா…

15 comments:

சி தயாளன் said...

:-)

என்ன ஒரு நுண்ணரசியல்....:-)))

ஜோசப் பால்ராஜ் said...

ஆரிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

podhigai thendral said...

தங்களுக்கு என்னோட சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் ! மறந்திடாம சன் டி வி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவறாமல் பாருங்க!தமிழ் நாட்டிற்கு கொடுத்த அல்வா போக மீதி இருந்தால் கொடுப்பார்கள்....1

இராகவன் நைஜிரியா said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துககள்.

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து நலங்களையும், வளங்களையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

(நாம் இருவரும் வெளி நாட்டில் இருப்பதால் சொல்லிக் கொள்ளலாம்)

தமிழகத்தில் இருக்கும் அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் சன் டிவி பிறந்த நாள் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// இன்னுங் கொஞ்ச நேரத்துல பங்குனி (முரசொலிக்கு மட்டும் சித்திரை) மாசம் முடிஞ்சி, சித்திரை (மன்னிச்சிக்கிங்க, முரசொலிக்கு என்னன்னு தெரியல, நாளக்கி இங்க போயி பாத்துக்கங்க) மாசம் பொறக்கப் போகுது.//

முரசொலிக்கு மட்டும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி - இந்த மாதங்களில் எதாவது ஒரு மாதமாக இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// ஆத்தா, அப்பன் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காக போலிருக்கு, இப்பிடி தமிழ ஒழுங்கா கேக்குறதுக்கு. //

ஆமாம் ... ஆத்தா, அப்பன் செஞ்ச புண்ணியம் தாங்க ..

Rajeswari said...

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் (தமிழ்கடவுள் பெயருள்ள)முருவுக்கு...
நல்லா என்ஜாய் பண்ணுங்க....

வால்பையன் said...

லீவு உண்டு அதுவரைக்கும் சந்தோசம்!

தீப்பெட்டி said...

நல்லவேளை சொன்னீங்க. இல்லாட்டி நான் தமிழ் புத்தாண்டு கொண்டாடி இருப்பேன். இறையாண்மைக்கு எதிர செயல்பட்டதா கூறி உள்ள போட்டு இருப்பாங்க.
சன் டிவி பிறந்த நாளை நாளைக்கு கொண்டாடிருறேன் பாஸ்

Suresh said...

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸாரி ஹீ ஹீ சன் டிவி பொறந்தநாள் வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

வாங்க ’டொன்’ லீ.,

வாங்க ஜோசப் பால்ராஜ்

வாங்க podhigai thendral.,

வாங்க இராகவன் நைஜிரியா.,

வாங்க Rajeswari.,

வாங்க வால்பையன்.,

வாங்க தீப்பெட்டி.,

வாங்க Suresh.,

வாங்க பழமைபேசி.,

வாங்க நிஜமா நல்லவன்.,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

கோவி.கண்ணன் said...

//அதனால தமிழ்நாட்டுல இருக்குற நீங்க, தமிழ் வருசப் பொறப்ப கொண்டாடுற எங்களுக்கு, தமிழ் வருச பொறப்பு எஸ்ஸமச அனுப்புங்க., ஊர் வழியில திரியிற நாங்க, தமிழ் நாட்டுல இருக்குற உங்களுக்கு, சன் டீ.வி பொறந்த நாள் வாழ்த்து எஸ்ஸமச அனுப்புறோம்.
//


தம்பி, இப்ப நான் உனக்கு எப்படி வாழ்த்து சொல்வது ?

சன் டீ.வி பொறந்த நாள் வாழ்த்து ?

தமிழ் வருச பொறப்பு வாழ்த்து ?

அல்லது 2 மே சொல்லிடவா ? 2 மே வேண்டாமா ?

கோவி.கண்ணன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
ஆரிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//

ஐயங்கார், பேஷாக கொண்டடுங்க, வேப்பம்பூ ரசம், வேப்பம்பூ பச்சடி வைத்தால் கொஞ்சம் எடுத்து வையுங்க

நட்புடன் ஜமால் said...

டொன் லீயே சொல்லும் அளவுக்கு

நுண்ணரசியல்

யப்பா தம்பி எங்கையோ போய்ட்ட போ

பழமைபேசி said...

//வாங்க பழமைபேசி.,//

வந்தாச்சு... இன்ன தர்றீங்க??

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB