என்னைக் காதலி…

என்னைக் காதலித்த
மனைவியே!?…


உண்மையை உரை.,
நான் உனக்கு தகுதியானவன் தானா?


எனக்காக
உன் வாழ்விடத்தை
மாற்றிக் கொண்டாய்!,
தூக்க நேரத்தை
மாற்றிக் கொண்டாய்!.,


எச்சில் உணவையும்
சந்தோசமாய் கொண்டாய்!.,
நான் கேட்டதற்காக
மூன்றாவது சூல் கொண்டாய்!.,


குழந்தைகளுக்கு மேலும்
என்னையே கண் கொண்டாய்!.,
மனவிரிசலிலும் எனக்கான உணவை
மறுக்காமல் தயாரித்தாய்!.,


ஒவ்வொரு கணத்தையும்
எனக்காகவே செலவழித்தாய்.,
காதலில் துடித்த போதெல்லாம்
எனக்காக கனிந்தே இருந்தாய்!.,


உடலில் வலுவிருந்த வரை,
உன்னை நான், பொருட் -
படுத்தியது இல்லை.
ஆனால் நிறைய துன்ப -
படுத்தியே இருக்கிறேன்!.


அன்பே,
நான் உன்னை
உணராத காலத்திலெல்லாம்,
நான் உன்னை
உதாசீனப்படுத்திய காலத்திலெல்லாம்,
என்னுடனே இருந்தாய்!


ஆனால்.,
உதாசீனத்தின் கொடுமையை,
மருமகனிடம் நான் உணர்ந்த போது.,
கழிவறைக்கு போவதானாலும்
துணை வேண்டும் போது.,
உனக்கு நான் செய்த கொடுமைகளை
எண்ணி மனம் திருந்திய போது.,
உன்னை நான் என்
தாயாகவே உணர்ந்த போது.,

ஓர் இரவிலே
என்னை விட்டுப் போனாயே.
உடல் துடிக்க முடியாத நிலையிலும்
உள்ளம் துடி துடிக்குதே.


அய்யோ…
இனி நீயின்றி நானிருக்க முடியாது,
இனி நீயின்றி நான் இருக்கும்,
ஒவ்வொரு நொடித்துளியும்
உடல் தளர்ந்த எனக்கு,
பாடமல்ல,
தண்டனையே…


27 comments:

சி தயாளன் said...

:-((
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...அதுதான் ஞாபகம் வந்தது

நிகழ்காலத்தில்... said...

கை தட்டல்களுடன்...

வாழ்த்துக்கள்..

Suresh said...

//எச்சில் உணவையும்
சந்தோசமாய் கொண்டாய்!.,
நான் கேட்டதற்காக
மூன்றாவது சூல் கொண்டாய்!.,//

அருமை

மச்சான் சிறந்த கவி அழ்ந்த கருத்துகள்

Suresh said...

//உடலில் வலுவிருந்த வரை,
உன்னை நான், பொருட் -
படுத்தியது இல்லை.
ஆனால் நிறைய துன்ப -
படுத்தியே இருக்கிறேன்!./

உணமை

Suresh said...

நிறைய பேரு இப்படி தான்

Suresh said...

//உதாசீனத்தின் கொடுமையை,
மருமகனிடம் நான் உணர்ந்த போது.,//

அச்சோ என்ன கொடுமை

/கழிவறைக்கு போவதானாலும்
துணை வேண்டும் போது.,//

மனது அப்போது தான் துனையின் அருமையை சொல்லும்

//உனக்கு நான் செய்த கொடுமைகளை
எண்ணி மனம் திருந்திய போது.,
உன்னை நான் என்
தாயாகவே உணர்ந்த போது.,//

உனக்கு என் மனமாந்த பாரட்டுகள் கைதட்டல்கள்

சும்மா ஆளை உறுக்குதுயா உன் கவி

//ஓர் இரவிலே
என்னை விட்டுப் போனாயே.
உடல் துடிக்க முடியாத நிலையிலும்
உள்ளம் துடி துடிக்குதே.//

கைமேக்ஸ் நச்

திருந்துங்க மக்கானு ..

மச்சான் வோட்டு போட்டாச்சு

பழமைபேசி said...

படைப்பு நல்லா இருக்கு!

கனவான்களே,

தம்பி அவர்கள், தங்காள்களின் ஒட்டு மொத்த வாக்கையும் விஜயகாந்த் அவர்களுக்குத் திருப்பப் பார்க்கிறார். இஃகிஃகி!!

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால்.,
உதாசீனத்தின் கொடுமையை,
மருமகனிடம் நான் உணர்ந்த போது.,
கழிவறைக்கு போவதானாலும்
துணை வேண்டும் போது.,
உனக்கு நான் செய்த கொடுமைகளை
எண்ணி மனம் திருந்திய போது.,
உன்னை நான் என்
தாயாகவே உணர்ந்த போது.,//


நன்றாக இருக்கு.....

அன்புடன் அருணா said...

:((
anbudan aruNa

தீப்பெட்டி said...

நன்றாக உள்ளது.

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்குங்க!

அப்பாவி முரு said...

// ’டொன்’ லீ said...
:-((
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...அதுதான் ஞாபகம் வந்தது//

அதேதான் லீ...

===================================

// அறிவே தெய்வம் said...
கை தட்டல்களுடன்...

வாழ்த்துக்கள்..//

நன்றி அறிவு...

==================================
////ஓர் இரவிலே
என்னை விட்டுப் போனாயே.
உடல் துடிக்க முடியாத நிலையிலும்
உள்ளம் துடி துடிக்குதே.//

கைமேக்ஸ் நச்

திருந்துங்க மக்கானு ..//

கிளைமேக்ஸ் நல்லா இருக்கா???

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

==================================

// பழமைபேசி said...
படைப்பு நல்லா இருக்கு!

கனவான்களே,

தம்பி அவர்கள், தங்காள்களின் ஒட்டு மொத்த வாக்கையும் விஜயகாந்த் அவர்களுக்குத் திருப்பப் பார்க்கிறார். இஃகிஃகி!!//

கூட்டத்துல கட்டுச்சோறை அவுக்காதீங்க பழமை...

==================================

// ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு....//

நன்றி ஞானசேகரன் அண்ணா...

==================================
// அன்புடன் அருணா said...
:((
anbudan aruNa//

வாங்க அருணா...

நீங்க மேஜர் சுந்தர்ராஜன் ரசிகையா...

தமிழ்ல சொன்னதை,

ஆங்கிலத்துல ஒரு தடவை சொல்லீருக்கீங்களே...

அதான் கேட்டேன்.

ஆனாலும், முதல் வருகை. நன்றி..

priyamudanprabu said...

சூப்பரப்பூ

நல்லாயிருக்கு

ஓட்டு போட்டாச்சு

Anonymous said...

Kalakkal lines...superb thala

வேடிக்கை மனிதன் said...

நல்ல முயற்சி

அப்பாவி முரு said...

// தீப்பெட்டி said...
நன்றாக உள்ளது.//

நன்றிங்க., தீப்பெட்டி.

===================================

// நிஜமா நல்லவன் said...
நல்லா இருக்குங்க!//

உண்மையிலே நீங்க நல்லவன் தாங்க.

===================================

// பிரியமுடன் பிரபு said...
சூப்பரப்பூ

நல்லாயிருக்கு

ஓட்டு போட்டாச்சு//

உண்மையிலே சூப்பர் தானா??

நன்றி பிரபு.

==================================
// Sriram said...
Kalakkal lines...superb thala//

நன்றிங்க ஸ்ரீராம்.

==================================

நான் தகுதியானவனா? said...

நல்ல முயற்சி

நன்றி தகுதியானவரே...

RAMYA said...

முரு ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

படிச்சுட்டு மனது மிகவும் பாரமா இருந்தது.

இளமையில் ஆரம்பித்து முதுமையின் சோகத்தில் முடித்திருக்கிறீர்கள்.

என்ன சொல்லுவது, உங்களுக்கு நல்ல சிந்தனைத் திறன் இருக்கின்றது.

வாழ்த்துக்கள் !!

RAMYA said...

//
ஆனால்.,
உதாசீனத்தின் கொடுமையை,
மருமகனிடம் நான் உணர்ந்த போது.,
கழிவறைக்கு போவதானாலும்
துணை வேண்டும் போது.,
உனக்கு நான் செய்த கொடுமைகளை
எண்ணி மனம் திருந்திய போது.,
உன்னை நான் என்
தாயாகவே உணர்ந்த போது.,
//

என்னை வேதனையடையச் செய்தது
இந்த உண்மையான உண்மைகள்தான்!!

RAMYA said...

//
உடலில் வலுவிருந்த வரை,
உன்னை நான், பொருட் -
படுத்தியது இல்லை.
ஆனால் நிறைய துன்ப -
படுத்தியே இருக்கிறேன்!.
//

தவறுகள் தாமதமாகத்தான் தெரிகின்றது.

இராகவன் நைஜிரியா said...

தம்பி முரு

ஒரே வார்த்தைதான் இந்த கவிதைக்கு சொல்ல முடியும்

“கிழிச்சிட்டீங்க”

என்ன ஒரு வார்த்தை ப்ரயோகங்கள். என்னே ஒரு சொல்லாட்சி..

கோவி.கண்ணன் said...

நன்றாக வந்திருக்கிறது கவிதை.

Suresh said...

Machan

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

Rajeswari said...

உண்மையை உணர்த்தும் கவிதை ..அருமை ..பெண்மையை போற்றுவோம்.

அப்பாவி முரு said...

// RAMYA said...
முரு ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

படிச்சுட்டு மனது மிகவும் பாரமா இருந்தது.

இளமையில் ஆரம்பித்து முதுமையின் சோகத்தில் முடித்திருக்கிறீர்கள்.

என்ன சொல்லுவது, உங்களுக்கு நல்ல சிந்தனைத் திறன் இருக்கின்றது.

வாழ்த்துக்கள் !!//

நன்றி ரம்யா...

==================================

// இராகவன் நைஜிரியா said...
தம்பி முரு

ஒரே வார்த்தைதான் இந்த கவிதைக்கு சொல்ல முடியும்

“கிழிச்சிட்டீங்க”

என்ன ஒரு வார்த்தை ப்ரயோகங்கள். என்னே ஒரு சொல்லாட்சி..//

அண்ணே என்ன இதெல்லாம்...

வேண்டாம்ண்ணே சின்னப்பையன் பாவம், விட்டுடுங்க முருவை

==================================


// கோவி.கண்ணன் said...
நன்றாக வந்திருக்கிறது கவிதை.//

நன்றி அண்ணா...

==================================


// Rajeswari said...
உண்மையை உணர்த்தும் கவிதை ..அருமை ..பெண்மையை போற்றுவோம்.//

நன்றி ராஜேஸ்வரி.

வேத்தியன் said...

அருமை
அருமை
அருமை

அவசரத்துக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை...

வேத்தியன் said...

கலக்கலான வரிகள் அப்பாவி...
சூப்பர்...ரொம்ப ரசிச்சேன்...

பட்டாம்பூச்சி said...

அருமை.நன்றாக உள்ளது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB