இது இயக்குனர் பாலச்சந்தரின் படத்தின் தலைப்பு மட்டுமல்ல… தமிழ்நாட்டின் முப்பதாண்டு காலமாகத் தணியாத தவிப்பின் ஒரு பகுதி மட்டுமே,
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பிறந்த இந்த குழந்தை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, போன்ற வறட்சியான மாவட்டங்களில் வளர்ந்து, காவிரி துள்ளிக் குதித்து ஓடிவரும் ஒக்கேனக்கல் வரை, அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் தூசிக் காற்றைப் போல் தமிழகம் முழுதும் வியாபித்துள்ளது.
பாலச்சந்தரின் இந்த தண்ணீர்… தண்ணீர்… திரைப்படம் 1981 –ம் ஆண்டு, சரிகா, வீராச்சாமி, வாத்தியார் இராமன், இராதாரவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது.
குடிதண்ணீரை கூட பக்கத்து கிராமத்திலிருந்து தலைச்சுமையாக எடுத்துவந்து குடிக்கும், தண்ணீர் தரித்திரம் பிடித்த கிராமம், தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைசெய்யும் சிறுவர் – சிறுமியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கூடம், பேராசைக்கார கோவில் பூசாரி, இரட்டைக் கொலை செய்துவிட்டு, இந்த கிராமத்தில் தஞ்சம்புகும் போலீஸால் தேடப்படும் குற்றவாளி என பல வித்தியாசமான பாத்திரங்களும் படம் முழுவதும் குடிதண்ணீரையே சுற்றிவருகிறது.
மழையை எதிர்பார்த்து மக்கள் அன்னாந்து பார்த்தே நாட்களைக் கடத்துகையில், சுகந்திர வாழ்வின் அடையாளமாக, ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் திருவிழாவாக, தேர்தல் - தேவையில்லாமல் அந்த அப்பாவி கிராமத்துக்கு வினையாய் வருகிறது.
இந்திய தேர்தலின் சம்பிரதாயப்படி, தொகுதியில் பெரும்பான்மையான மக்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நமது கிராமத்தில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே. எனவே சாதியின் பெருசுகளில் ஒன்று வாக்கு சேகரிக்க கிராமத்துக்குள் புகுந்ததில் ஆரம்பிக்கும் வினை!
தாங்கள் சார்ந்த சாதிக்காரனுக்கு வாக்களித்தால், ஊருக்குள் எல்லா வளத்தையும் கொண்டுவருவதாக சாதி பெருசு கூறவும், எல்லா வளமும் வேண்டாம், குடிக்க தண்ணீர் மட்டும் குழாயில் கொடுக்க வேண்டுமென கேட்கிறது மொத்த கூட்டமும். அதற்க்கு பெருசின் வாக்குறுதியோ “இதோ ஆறாவது ஐந்தாண்டு திட்டம் வரப்போகிறது, அதில் முக்கிய திட்டமே கங்கை – காவிரி இணைப்பின் மூலம் தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் குடி தண்ணீர் கொடுப்பது தான், அதன்படி நம்ம கிராமத்துக்கும் குடிதண்ணீர் வரும். அதுக்கு நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டு போடுங்க”.
உடனே, வாத்தியார் (ராமன்) “போதும், இப்பிடியே கங்கையையும் – காவிரியையும் இணைக்கிறேன், இணைக்கிறேன்னு சொல்லியே அந்த ஆறுகளின் மேலான மரியாதையை குறைச்சுட்டீங்க, தயவு செஞ்சு விட்டுடுங்க” என்பார்.
அதற்கு, சாதி பெருசு. “டேய், எதிர் சாதியை சேர்ந்த இந்த ஒத்தை வாத்தியார் சொல்லுறத கேட்டு ஓட்டை, அந்த ஜாதிக்கு போட்டீங்க, உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது, நம்மாளுக்கு போட்டீங்கன்னா, நாளைக்கு நம்ம சாதிக்காரங்களுக்கு ஏதாச்சும் வேலையாச்சும் வாங்கித்தர முடியும்” என எச்சரித்தும், மக்கள் சாதி பெருசை அவமானப்படுத்தி அனுப்பியதோடு மட்டுமல்லாது, தேர்தலை ’பாய்காட்’ செய்ய மொத்த ஊர் மக்களும் முடிவு செய்கின்றனர்.
தேர்தலன்று காலை பத்துமணிக்கு ஊர் மொத்தமும், வாக்குச்சாவடி முன் கூடி நிற்கிறது. ஆனால், யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. வாக்குசாவடி அதிகாரி மக்களிடம் கெஞ்சி கூப்பிட்டதும், ஒரு ஆள் மட்டும் தைரியமாக ஊர் கட்டுப்படை மீறி வாக்குசாவடிக்குள் போகிறார். உள்ளே ராஜ வரவேற்ப்புடன் வாக்காளர் பட்டியலில் கையெழுத்து கேட்டதும், அந்த கிராமத்து ஆள் “ சார், கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கட்டா?” எனக்கேட்டு, பானையில் வைத்திருக்கும் குடிதண்ணீரை ஆசையோடு மூணு செம்பு குடித்துவிட்டு, பெருமையோடு வாகுச்சாவடியை விட்டு வெளியேறுவார். ஊர்கூடி அடிக்கவரும் மக்களிடம், “உள்ளே போய் நல்ல தண்ணீரை வயிறு நிறைய குடித்துவிட்டு, வாக்களிக்காமல் வந்ததை” பயம் கலந்த பெருமையோடு மக்களிடம் சொல்வார்.
கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து சொந்த சாதிக்காரரை தோற்கடித்த ஆத்திரத்தில் கிராமத்திற்க்கு குடிதண்ணீர் வரும் மாட்டு வண்டியை அடித்து உடைப்பது,
குடிதண்ணீருக்காக பக்கத்து மலையை உடைக்க முற்படும் ஆளுக்கு (இரட்டைக் கொலைகாரன்) கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து கொடுக்கும் பெரிய மரியாதையான பழைய பட்டு துண்டு,
மலையை உடைப்பதை தடுக்கும் அரசு இயந்திரம், கட்டுப்படாத மக்களை சுட்டு தள்ளிய கணவனோடு(போலீஸ்) சேர மறுத்து வாழாவெட்டியாகும் சரிகா,
குடிக்க தண்ணீர் கிடைக்கும் வரை போலீஸ் கையில் சிக்காமலிருக்க தப்பித்து ஓடும் போது, கிராமத்துக்கே தண்ணீர் கொடுக்க முனைந்தவன் விக்கலெடுத்து தண்ணீரின்றி சாவது,
கொடுமைக்ளை பொறுக்க முடியாமல் நக்சலாகும் ஒருவர்,
என அதிகார வர்கத்தை எதிர்த்தால் சொந்த சாதிக்காரன் ஆனாலும் என்ன நடக்கும் எனபதை எதார்த்தமாக முடித்திருப்பார் பாலசந்தர்.
தேர்தல் நேர்த்தில் இந்த படத்தை பதிவுக்கு உதாரணமாக எடுக்க காரணம், இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அவலங்கள் இன்னும் மாறாமல் இருப்பதை சுட்டிக் காட்டவே.
அவற்றில் சில…
தேர்தல் நேர்த்தில் இந்த படத்தை பதிவுக்கு உதாரணமாக எடுக்க காரணம், இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அவலங்கள் இன்னும் மாறாமல் இருப்பதை சுட்டிக் காட்டவே.
அவற்றில் சில…
ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் தீட்டப்பட்ட கங்கை – காவிரி இணைப்பு திட்டம், நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்டத்திலுல் தொடங்கப்படாமல் இருப்பது,
இன்றய படித்தவரகளின் வீதம் அதிகமான நவீன காலகட்டத்திலும், தொகுதியில் இருக்கும் மக்களில், பெரும்பான்மையானோர் சார்ந்த சாதியை சேர்ந்த வேட்ப்பாளரையே அனைத்து கட்சிகளும் முன்னிருத்துவது மட்டுமின்றி சில இடங்களில் நேரடியாகவே சாதியைச் சொல்லி வாக்குகேட்பது,
இன்றய படித்தவரகளின் வீதம் அதிகமான நவீன காலகட்டத்திலும், தொகுதியில் இருக்கும் மக்களில், பெரும்பான்மையானோர் சார்ந்த சாதியை சேர்ந்த வேட்ப்பாளரையே அனைத்து கட்சிகளும் முன்னிருத்துவது மட்டுமின்றி சில இடங்களில் நேரடியாகவே சாதியைச் சொல்லி வாக்குகேட்பது,
போன்ற அவலங்களை இனியும் நாம் அனுமதித்தாலோ, அனுசரித்தாலோ., திரைப்படத்தில் கிராமத்திற்க்கு நேர்ந்த நிலைதான நாளை ஒட்டு மொத்த இந்தியாவிற்க்கும் நேரும் என்பது திண்ணம்.
என்ன செய்யப் போகிறோம்???
16 comments:
Me the first..
இன்னும் படிக்கவில்லை..
படிச்சுட்டு வந்துடறேன்...
ஒரு உண்மையான இந்தியனின் ஆதங்கம் தெரிகின்றது.
சாதி அரசியல் இருக்கும் வரை எதுவும் நடக்காது.
அரசியல்வா(வியா)திகள், அரசியலை வியாபார கண்ணோட்டத்தில் இருந்து மாற்றினாலே ஒழிய, இந்த நிலை மாறப்போவதில்லை.
இது அடுத்த வாரம் வர வேண்டிய இடுகை...
Good Post Boss...
ஆனா வேற தண்ணி கெடைக்க அரசு ஏற்பாடு செஞ்சுருக்கே இது போதாதா மக்களே?
ஒருவரை மற்றவர் குறை சொல்லவே அரசியல்வாதிகளுக்கு...
சரி ராகவன் அண்ணன் சொல்ற மாதிரி வியாதிகளுக்கு நேரமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவர்களுக்கு எங்கே நேரம்.
ஒரு உண்மையான இந்தியனின் ஆதங்கம் தெரிகின்றது.
சாதி அரசியல் இருக்கும் வரை எதுவும் நடக்காது.
அரசியல்வா(வியா)திகள், அரசியலை வியாபார கண்ணோட்டத்தில் இருந்து மாற்றினாலே ஒழிய, இந்த நிலை மாறப்போவதில்லை.//
மக்கள், அரசியலை வியாபாரமாக பார்ப்பது ஒழிந்தாலே, இந்நிலை மாறிவிடும்.
==================================
// பழமைபேசி said...
இது அடுத்த வாரம் வர வேண்டிய இடுகை...//
அடுத்தவாரம் வேற பிர்ச்சனைகளை பற்றி எழுதிடலாம்
===================================
// Sriram said...
Good Post Boss...
Sriram said...
ஆனா வேற தண்ணி கெடைக்க அரசு ஏற்பாடு செஞ்சுருக்கே இது போதாதா மக்களே?//
அட ஆமாம் ஸ்ரீராம், வைகையும், காவிரியும் ஓடி செழித்த தமிழகம், இன்று பீர், விஸ்க்கி... ஆறுகள் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
==================================
// எட்வின் said...
ஒருவரை மற்றவர் குறை சொல்லவே அரசியல்வாதிகளுக்கு...
சரி ராகவன் அண்ணன் சொல்ற மாதிரி வியாதிகளுக்கு நேரமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவர்களுக்கு எங்கே நேரம்.//
வாங்க எட்வின்...
விரிவான நல்ல பதிவு.
சம்பளத்திருந்து முப்பது சதவிகிதம் வரியாக தவறமால் கழிக்க தெரிந்த அரசாங்கம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர மறுப்பது ஏன்?
அரசியல்வாதிகளின்,சுயநலமற்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலமே நிலைமை மாறும்.அதுவரை நாம் புலம்பிக்கொண்டுதான் இருக்க வேண்டும்
அரசியல் வாதிகளின் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைச் சொல்லி சொல்லி தேர்தலில் தண்ணிக் காட்டுகிறார்கள். மறக்காமல் இருக்கிறார்களே என்று நாம பாரட்டனும்.
வெறும் அருமையான பதிவுன்னு மட்டும் சொல்லிட்டு போக இஷ்டமில்ல... என்ன பண்றதுன்னு யோசிக்க வெச்சிருக்கு.. நன்றி பதிவுக்கு.. :))))
விரிவான நல்ல பதிவு.
சம்பளத்திருந்து முப்பது சதவிகிதம் வரியாக தவறமால் கழிக்க தெரிந்த அரசாங்கம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர மறுப்பது ஏன்?//
ஏன்னா., நம்மாளுகளுக்கு சரியா கேக்கத் தெரியலை. அவ்வளவுதான்.
=================================
// Rajeswari said...
அரசியல்வாதிகளின்,சுயநலமற்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலமே நிலைமை மாறும்.அதுவரை நாம் புலம்பிக்கொண்டுதான் இருக்க வேண்டும்//
ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் மனதிலும் அரசியல்வாதிகளின் மேல் வெறுப்பு வந்துவிட்டது.
=================================
// கோவி.கண்ணன் said...
அரசியல் வாதிகளின் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைச் சொல்லி சொல்லி தேர்தலில் தண்ணிக் காட்டுகிறார்கள். மறக்காமல் இருக்கிறார்களே என்று நாம பாரட்டனும்.
அட ஆமாம்.
==================================
// ஸ்ரீமதி said...
வெறும் அருமையான பதிவுன்னு மட்டும் சொல்லிட்டு போக இஷ்டமில்ல... என்ன பண்றதுன்னு யோசிக்க வெச்சிருக்கு.. நன்றி பதிவுக்கு.. :))))//
யோசிக்கிறதுக்கு நன்றிங்க.
=================================
// பட்டாம்பூச்சி said...
Good post.//
நன்றிங்க பட்டாம்பூச்சி
காலத்துக்கேற்ற பதிவு..இதெயெல்லா யார் கவலைப்படுறாஙக...?
நல்ல பகிர்வு.... இன்றுவரை தீர்க்கபடாத.. திட்டம் இதில் அரசியல்தான் இருக்கின்றதே தவிற யாரும் நடைமுறைப்படுத்த வருவதில்லை... சுவிஸ் பேங்கில் இருக்கும் கருப்பு பணத்தை எடுத்தாலே இந்த திட்டம் சிற்ப்பாக முடிக்கலாம்..
மிக சிறந்த அலசல்.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.