இலங்கைப் போரை நிறுத்திய கலைஞர் வாழ்க!!!

நன்றி...நன்றி...நன்றி...


இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்த ராஜபக்‌ஷே அவர்களுக்கு முழு மனதான அப்பாவி தமிழர்களின் நன்றி.


போர் நிறுத்ததிர்க்காக பாடுபட்ட மற்றவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி..

தமழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக குரல் கொடுத்தவர்கள்





பழ. நெடுமாறன்.,

தா. பாண்டியன்.,

விஜயகாந்த்,

சீமான்.,

அமீர்.,

வை.கோ.,


ராம்தாஸ்.,

திருமாவளவன்.,

வரதராஜன்.,

ஜே. ஜெயலலிதா.,

கவிஞர் தாமரை...


தமிழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக உயிரைக் கொடுத்தவர்கள்

முத்துக்குமாரன்,

பள்ளபட்டி ரவி.,

ஸ்டீவன் ஜெகதீசன்.,

போன்றவர்களுக்கு மீண்டும் நன்றி....







கடந்த ஆறுமாத காலமாக பலரும் குய்யோ முய்யோ என கத்தியும், தீக்குளித்து தற்கொலை செய்து செத்தும் முடிக்க முடியாத பிரச்சனையை அரைநாள் உண்ணாவிரத்தால் முடித்த தமிழின தலைவர் டாக்டர் . மு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு பெரும் நன்றி...


ஆதாரம் தினமலர் http://dinamalar.com/fpnnews.asp?News_id=3635&cls=row3

14 comments:

வே. தர்மா said...

மக்களை மீட்பது என்ற போர்வையில் போர் தொடரும். கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாதாம். போர் நிறுத்தம் அறிவித்த சில மணித்துளிகளில் விமானத்தாக்குதல் நடந்தது.

பழமைபேசி said...

இந்த உண்ணாவிரதமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஆனால், கடந்த ஜூ.வீ இதழிலேயே கலைஞர் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கவும், காங்கிரசைக் கை கழுவவும் தயாராகிவிட்டார் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

“மத்தியில் ஆளும் காங்கிரஸை மிக கடுமையாக இலங்கைக்கு எதிராக ஏதாவது காய் நகர்த்தச் சொல் லுங்கள். இல்லையேல், காங்கிரஸ் வேட் பாளர் தொகுதிகளில் தி.மு.க-வினர் ஆதரவுப் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்றுகூட அறிவியுங்கள். அதுவேகூட மக்கள் மனதில் பெரிய மாற்றம் தரும்' என்று காங்கிரஸ் உறவுக்கே க்ளைமாக்ஸ் சோதனை வைப்பது போன்ற 'ஷாக்' யோசனை சொன்னார்களாம்!''

''ரியாக்ஷன் என்ன வந்ததாம்?''

''அப்போதைக்குப் பதிலே இல்லாமல் புருவத்தை மட்டும் சுளித்ததாகக் கேள்வி. ஆனால் வியாழக்கிழமை இரவு 'ஏன் அப்படியும் யோசிக்கக் கூடாது?' என்று அவசர ஆலோசனை நடந்ததாம். இதன் எதிரொலியாக தமிழக காங்கிரஸின் முக்கிய பிரமுகர் ஒருவர் டெல்லிக்குப் பறந்து, கட்சித் தலைமையின் காதில் தி.மு.க-வின் 'திடுக்' சிந்தனை பற்றி போட்டு வைத்தாராம்.”

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Selva said...

இந்திய ஊடகங்கள் தான் போர்நிறுத்தம் என்று சொல்கின்றதே தவிர வேறெந்த ஊடகங்களிணும் இல்லை. மீண்டும் ஒரு நாடகம் அப்பட்டமாக படுதோண்வி அடைந்துள்ளது. உல்மையிலேயே ஒருகணம் சந்தோசப்பட்டேன் ஆனாண் அதை பொய்யாக்கி விட்டார் கருணாநிதி. இந்திய ஊடகங்கள் எப்பொழுது தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவதிலிருந்து வெளிவரப்போகுதோ தெரியவில்லை.

இராகவன் நைஜிரியா said...

என்னமோ நடக்குது மர்மா இருக்குது

supersubra said...

visit this link to know the real situtation

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29193

Anonymous said...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பது தவறான தகவல். போர் உக்கிரமாக முன்னெடுக்கப்படுகிறது. நான் இலங்கையின் வவுனியா நகரிலிருந்து இதை உங்களுக்குச் சொல்கிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்சமாக அறிவித்த போர் நிறுத்தத்தை நல்ல 'ஜோக்' என்று இலங்கை அரசு இன்று அதிகாலை அறிவித்தது.

இந்தியாவில் ஒரு சில ஊடகங்களில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

மக்கள் தொலைக்காட்சி பாருங்கள் உண்மை ஒருளவாவது தெரியும்.

கோவி.கண்ணன் said...

//கடந்த ஆறுமாத காலமாக பலரும் குய்யோ முய்யோ என கத்தியும், தீக்குளித்து தற்கொலை செய்து செத்தும் முடிக்க முடியாத பிரச்சனையை அரைநாள் உண்ணாவிரத்தால் முடித்த தமிழின தலைவர் டாக்டர் . மு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு பெரும் நன்றி...
//

ஒரு வேளை சாவு எண்ணிக்கை உண்ணாவிரதத்திற்கு மரியாதை செலுத்தும் அளவுக்கு இல்லை என்று இவ்வளவு நாள் காத்திருந்தார்களா ?

தமிழ் நாடன் said...

உங்கள் பேர்தான் அப்பாவி என்று நினைத்தேன். ஆனால் தமிழன் எவ்வளவு பெரிய ஏமாளி என்பதற்கு நீங்கள் ஒரு சான்றாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை. சிறீலங்கா அறிவித்திருப்பது போர் நிறுத்தம் அல்ல கலைஞர் மற்றும் சோனியா இயக்கத்தில் வெளியான பம்மாத்து நாடகம். கனரக ஆயுதங்களை உபயோகிக்க மாட்டார்களாம். வேறு என்ன கழி வைத்தா சண்டை போடப்போகிறார்கள்.
ஐயகோ உம்மையெல்லாம் யார் காப்பாற்றுவது?!!!

Suresh said...

மச்சான் இது நிறுத்தம் இல்லை,

"கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு"

இது எல்லாம் நாடகம், காங்கிரஸ் அல்லாத அரசு வந்தால் இல்ங்கையில் போர் நிறுத்தம் வந்தாலும் வரும் ஆதலால் தேர்தல் வரை தமிழகத்தில் வேறு இந்த எதிர்பு அலை இருக்கு, எனவே நிறுத்துர மாதிரி நிறுத்துங்க ...

இது எல்லாம் Pre Planned machan

Suresh said...

அப்பாவி முரு நிங்க நிஜமாலுமே அப்பாவி தான் போல

தீப்பெட்டி said...

நிஜமாவே ஒண்ணுமே புரியல :-((

சி தயாளன் said...

அவசரப்படாதீங்கோ......இது அடிக்கிற மாதிரி அடி...அழுற மாதிரி அழு விளையாட்டு...பார்ப்பம்...என்ன நடக்கப் போகுது என்று...?

வால்பையன் said...

அப்படியா!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB