அறை நண்பர்களுடன் சாதாரணமாய்
பேசும் போதும் விவாதிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
சாப்பிடும் போதொல்லாம்
குறை சொல்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
வீட்டில், வேலையிடத்தில் யாருடனும்
சிரித்து பேசமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
எனக்கு பிடிக்காவன், நல்லது
செய்தாலும் சண்டை போடுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
என்மேல் குற்றம் சாட்டினால்,
அழகாய் சமாளிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
என்சுய விருப்பு-வெறுப்புகளையும் தாண்டி
என் இமேஜுக்காக பேசுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
திரைப்படம் பார்க்கையில் தேடி
தப்புகளை பெரிதாக்குவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
ஒவ்வொரு வார்த்தை(வரியின்), உட்கருத்தின்
உட்கருத்தையும் கண்டுணர்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ
இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்
இருக்க விடமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
41 comments:
கலக்கல்..இப்ப தெரியுதா, பிளாக்கரா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு..)))
எதை படிச்சாலும் பின்னூட்டம் போடணும்ன்னு தோணுது ஏனென்றால் நானொரு பிளாக்கர்
//அவிய்ங்க ராசா said...
கலக்கல்..இப்ப தெரியுதா, பிளாக்கரா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு..)))
//
யாரோ அவிங்க ராசா பெயர பயன்படுத்தி பின்னூட்டம் போட்டுடாங்க -:)
ரசித்தேன்...!
ம் ப்ளாக்கர் பற்றி சொல்லிட்டிங்க, வெள்ளையர் ?
:)
ஓட்டும் போட்டு பின்னூட்டமும் போட்டேன். ஏனெனில் நானும் ஒரு ப்ளாக்கர்.:))
ஆமாம் நானும் ஓட்டும் பின்னூட்டமும் போட்டுட்டேன் ஏனென்றால் நானும் ஒரு ப்ளாக்கர்... (அப்படின்னு சொல்லிக்க வேண்டியதுதான்... நானும் ஒரு ரவுடின்னு சொல்வதில்லையா.. அது மாதிரி நானும் ஒரு ப்ளாக்கர்..)
மூன்றாவது தவிர மற்ற அனைத்தும் ஏற்புடையது, முரு... அருமை.
:)
:-)
Just fantastic! New wave !
Keep it up.
நானும் ஒரு பிளாக்கர்!
(என் நிறத்த சொன்னேங்க..!!)
நீங்க அப்பாவி இல்ல..அடப்பாவி வகை!
இந்த எழவுக்குத்தான் எனக்கு பிளாக் போடும் என்னமே வரவில்லை நீங்கள் விலையாட்டாக சொன்னாலும் அதில் நிறைய உண்மையிருக்கிறது
அச்சச்சோ.........இதென்ன கலாட்டா????
//பிரியமுடன்...வசந்த் said...
எதை படிச்சாலும் பின்னூட்டம் போடணும்ன்னு தோணுது ஏனென்றால் நானொரு பிளாக்கர்//
ரிப்பீட்டு.
.
.
.
.
.
.
.
.
.
.
னு சொல்வேன், ஏனென்றால் நானொரு பிளாக்கர்
ஒன்னும் சொல்ல முடியாது.... ஏன்னா, நானும் ஒரு ப்ளாக்கர்!
பேனைப் பெருமாள்
ஆக்கத் தெரியவில்லை;
சொல்லி வைத்து ஓட்டிவிடும்
கலையும் தெரிந்திருக்கவில்லை!
Because I am not a Blogger!!
மனைவியிடத்தில் பேசிச்சரியாக
சமாளிக்கத் தெரியவில்லை
Because I am not a Blogger!
வெளிவராத பல மெய்கள்
அறிந்திருக்க இயலவில்லை;
வெளிவந்த புரட்டுகளை
நம்பாமல் இருக்க முடியவில்லை!
Because I am not a Blogger!!
உன்னைப் போல் ஒருவனைப் பற்றி
சிந்திக்கத் தெரியவில்லை;
எழுத்தாளரெல்லாம் ஒளிவட்டக்காரர்
என்றே நினைத்திருக்க முடிகிறது!
Because I am not a Blogger!!
எதிர்வினையெல்லாம் தாங்காதண்ணா...
ரைட்டு...
எல்லாரும் உருப்படியா யோசிக்க நான்
மட்டும் கையில் பீருடன் குண்டக்க மண்டக்க
யோசிப்பேன் ஏன் என்றால் நான் ஒரு பிளாக்கர்.
உருப்படியா இருந்தாலும் உருப்படியில்லாம யோசிப்பேன்
என்னதான் சக்கரையா இருந்தாலும் பின்னூட்டம் வேப்பிலையடிப்போம்.
நம்மளா குருப்பு சேர்ந்து ஒருத்தர் முதுக ஒருத்தர் சொறிவம்.
இத்தனையும் தெரிஞ்சு செய்வம் ஏன்னா நம்ம பிளாக்கர்.
ஆமா நானும் நிம்மதியா இல்ல!
அப்பாவின்னு பெயர வச்சுகிட்டு தப்பு பண்ண தோணுது. ஏன்னா நான் ஒரு பிளாக்கர்
எதிர் வீட்டுக்காரியோட நான் ஓட போறேன் . ஏன்னா நான் ஒரு பிளாக்கர்
//ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ
இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்
இருக்க விடமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!//
சூப்பரப்பு :-))))))))))))
இதுல நுண்ணரசியல்னு என்னவோ ஒண்ணு இருக்காம்னு சொல்லுவேன். நான் ஒரு ப்ளாக்கர்.
அவிய்ங்க ராசா said...
கலக்கல்..இப்ப தெரியுதா, பிளாக்கரா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு..))
// ரிப்பீட்டு.!
எங்கய்யா.... ரூம் போடறிங்க இது போல யோசிக்க. கொஞ்சம் கத்துக் கொடுங்கையா.
ஏன் இந்தக் கொலை வெறி?
இந்த "தில்" தான் உங்ககிட்ட பிடிச்சது.
//
அறை நண்பர்களுடன் சாதாரணமாய்
பேசும் போதும் விவாதிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
இதுக்கு போய் பிளாக்கரா இருக்கனுமா என்ன? நம்பதான் சும்மாவே விவாதிப்போமே. விவாதம் என்றால் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல் அல்லவா ? :-)
//
சாப்பிடும் போதொல்லாம்
குறை சொல்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
அது சரி! மிளகாய் பொடியை எடுத்து தூவினால் எல்லாம் சரியாகிவிடும். ஏன்னெனில் நானும் ஒரு பிளாக்கர் :-)
//
வீட்டில், வேலையிடத்தில் யாருடனும்
சிரித்து பேசமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
ஐயோ பாவம், உங்களுக்கு பேசத் தெரியாதுன்னுதான் நினைப்பாங்க நீங்க ஒரு பிளாக்கர்னு நினைச்சு சும்மா இருக்க மாட்டாங்க:)
//
எனக்கு பிடிக்காவன், நல்லது
செய்தாலும் சண்டை போடுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
சண்டை போடா கூடவா இந்த பிளாக்கர் பெயர் உபயோகப் படுத்தனும்? நல்ல
ஐடியாவா இருக்கே :) உபயோகப்படுத்திப் பார்க்கலாமா? :-)))
//
என்மேல் குற்றம் சாட்டினால்,
அழகாய் சமாளிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
அப்படியா?? சமாளிக்கக் கூட இந்த பெயரை உபயோகப் படுத்திக்கலாமா :-)
//
என்சுய விருப்பு-வெறுப்புகளையும் தாண்டி
என் இமேஜுக்காக பேசுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
ஓ இதெல்லாம் வேறேயா? ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை :)
//
திரைப்படம் பார்க்கையில் தேடி
தப்புகளை பெரிதாக்குவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
அங்கேயே பின்னிடுவாங்க, பார்த்துப்பா :)
//
ஒவ்வொரு வார்த்தை(வரியின்), உட்கருத்தின்
உட்கருத்தையும் கண்டுணர்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
இதுவும் சரிதான், நீங்க அப்படி கேட்கக் கூடிய ஆளுதான். என்ன செய்ய சந்தேகம்னு வந்தவுடன் கேள்விகள் கேக்கவேடியது கடமைன்னு எடுத்துக்கறேன் :)
//
ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ
இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்
இருக்க விடமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
உங்க நிம்மதி முக்கியம், உங்க நண்பர்கள் நிம்மதி எங்கோ தொலைந்து விட்டதாம். செய்த்தித் தாளில் வெளியாகி உள்ளது. உங்களைதான் தேடிகிட்டு இருக்காங்களாம்.
இவ்வளவு அலும்பு பண்ற ஆளை இதுவரை பார்த்ததே இல்லையாம். அதுனாலே எல்லாரும் ரொம்ப ஆவலாய் இருக்கும் அப்பாவியாய் நடிக்கும் உங்கள் முரு இதோ இந்தி
வலையில் இருக்கிறார் :)
அப்பா போட்டு கொடுத்தாச்சு ஏன்னா நானும் ஒரு பிளாக்கர் :-))
//
சாப்பிடும் போதொல்லாம்
குறை சொல்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!
//
அது சரி! மிளகாய் பொடியை எடுத்து தூவினால் எல்லாம் சரியாகிவிடும். ஏன்னெனில் நானும் ஒரு பிளாக்கர் :-)//
ரம்யா, ஏனிந்த கொலைவெறி?
டியர் மிஸ்டர் பிளாகர்,
அடுத்த பிளாக் எப்போ?
எப்படிங்க இப்படியெல்லாம்.
ஏன்னா நான் ஒரு பிளாக்கர்னு சொல்லிடாதீங்க. :)
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.