இருக்கும், எங்காவது...




வேலைக்குப் போகும்


வேளையெல்லாம்,


அக்குளத்தைக் கடப்பேன்.



அவ்வேளையில் மறக்காமல்


அவ்விரு நீர்


உடும்புகளைத் தேடுவேன்



கருப்பாய், நீளமாய்


கரையில் படுத்தோ., அல்லது


நீரில் நீந்திக் கொண்டிருக்கும்.



ஆனால், இரண்டையும்


ஒன்றாக பார்த்ததில்லை.


சேர்வதில்லை போலும்,



ஆணும், ஆணுமோ. இல்லை


பெண்ணும், பெண்ணுமோ.


கூடா நட்பல்லவா.



ஆனாலும், இணையிருக்கும்


இடுக்கிலோ., அல்லது


பக்கத்து காட்டிலோ.



இல்லாமல், இவையே


இருந்திருக்காதே. இருக்கும்


எங்காவது...

20 comments:

வானம்பாடிகள் said...

அது இணையுதோ இல்லையோ, நீங்க திரட்டில இணைங்கப்பு. ஓட்டு போட வேணாமா:)). நல்லாருக்கு.

நட்புடன் ஜமால் said...

ராஸா ராஸா ... (இதுக்கு மேல எல்லோரும் பில் பன்னிக்கோங்கோ ...)

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! லேபிலில் மேட்டரெல்லாம் போட்டாச்சா ...

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னும் ரெண்டு மாசம் தல... பொறுமை..:-)))

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் ரெண்டு மாசம் தல... பொறுமை..:-)))//

பொறுமை கடலினும் பெரிது..

Madurai Saravanan said...

இருக்கும் ...இருக்கும் . ஆராய்ச்சி பலமா இருக்கே...!

அப்பாவி முரு said...

//இராகவன் நைஜிரியா said...
// இன்னும் ரெண்டு மாசம் தல... பொறுமை..:-)))//

பொறுமை கடலினும் பெரிது..//



புத்தி சொல்றது எளிது.,

கடைபிடிப்பதுதான் கடினம்...

அப்பாவி முரு said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அன்பர்களே...

கோவி.கண்ணன் said...

என்ன ராசா.....விரக தாப கவிதையா ?

:)

பித்தனின் வாக்கு said...

சரி சரி புரியுது என்ன பண்ண? இன்னும் கொஞ்ச நாள் பொறு தலைவா. ஒரு வஞ்சிக். இதுக்கு மேல பாட்டு உங்களுக்கே தெரியும்.

அறிவிலி said...

இதெல்லாம் சகஜம்தான்... புரியுது.

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி - என்னப்பா வூட்ல சொல்லணுமா - முன்னாலேயே வைக்கச் சொல்லலாமா - மாப்ளைக்கு பொறுமை இல்லையாம்னு பொன்ணு வூட்டுக்குச் சொல்லி அனுப்பட்டா - ம்ம்ம்ம் - வெயிட் பிளீஸ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுமார் கவிதை. :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

என்ன ராசா.....விரக தாப கவிதையா ?

:)//

அவ்வ்வ்வ்!
:)

அஹமது இர்ஷாத் said...

கண்டிப்பா எங்காவது இருக்கும்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

padma said...

கிண்டல்ஸ் apart எத்தனை ஒரு நல்ல கவிதை ! ரொம்ப அருமையாய் இருக்குங்க

நரசிம்மரின் நாலாயிரம் said...

Nice

thanks

அரசன் said...

nice

பழமைபேசி said...

வணக்கம்; வணக்கம்!!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB