கவலை தரும் கட்டற்ற சுதந்திரம்!!!

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீதான தாக்குதல் வழக்கம் போல், இணையம், தொலைபேசி, அலைபேசி, செய்தித்தாள், மற்றும் பல வழிகளில் தாத்தா, பாட்டி, அப்பா – அம்மா, அத்தை, மற்றும் பக்கத்து வீட்டு அக்காவின் கருவிலிருக்கும் குழந்தைவரை வந்து சேர்ந்துவிட்டது.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாலோ., கேட்டதாலோ யாருக்கும் எந்த லாபமும் இருந்திருக்காது, ஆனால் கணக்கில்லாமல் காலம் விரயமாகி இருக்கும் நமக்கு. அந்த விரயத்தை பணமாக்கியிருப்பார்கள்., மீடியா முதலைகள். மக்களின் அவசரத்தை ஆதாயமாக்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன் (வேற என்ன பண்ணமுடியும்).

இந்த சம்பவத்தால் மானம் போனதாகவும், மரியாதை குறைந்துவிட்டதாகவும் குய்யோ முய்யோ என்று கும்பலாக குதிக்கிறார்கள். செய்த பாவமும், தேர்தல்கால பயமும், கண்முன் நிழலாடுகிறது. வினை விதைத்தவன், வினை அறுக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க முடியாவிட்டாலும், கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று. பாதி கேணி தாண்டிய சந்தோசத்தில் பரிசு பணமெல்லாம் அறிவித்தார்கள்.
இது பழைய சம்பவங்களுக்கு முடிவாகுமா…. இல்லை இது புது சம்பவங்களுக்கோர் பிள்ளையார் சுழியா?… இந்திராகாந்திக்கும், குருநானக்கிற்கும் அடுத்த தலைமுறைக்குமே வெளிச்சம்!

பலபேர் அலசி காயப்போட்ட, இந்த சம்பவத்தை வெவ்வேறு ஆட்கள் மீண்டும், மீண்டும் அலசுவதால் அழுக்கு போகுமோ இல்லையோ கிழிந்து நார், நாராகத் தொங்கப்போவது நிச்சயம். பாவம், பலவண்ணங்களைக் கொண்டும், பல்வேறு வகையான நூல்களைக் கொண்டும், சில இடங்களில் பளபளப்பும், பல இடங்களில் வண்ணம் மங்கியும், கண்ணுக்குத் தெரியாத சிறு பொத்தல்களையும், கிழிசலையும் கொண்ட நீளமான சேலை அது. வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும், வயதாகிவிட்டதால் கையாளுகையில் கவனம் சிறிது குறைந்தாலும், துண்டு, துண்டாக் கிழிவதற்கு முழு காரணமும் நாமாகிவிடும் அபாயமிருக்கிறது. எச்சரிக்கை எல்லோருக்கும் வேண்டும்!

ஈராக்கில், அமெரிக்க அதிபருக்கு எதிராக கையாளப்பட்ட நூதன அவமானப்படுத்தல், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும் அடி(!?)யெடுத்து வைத்துள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் காட்டிய வேதனையில் துளிக்கூட அமைச்சரின் முகத்தில் இல்லை. அவமானகரமான சூழ்நிலையிலும் அமைதியாய் இருந்தது ஆச்சரியகரமானது. அவமானப்படுத்த நினைத்தவனை, ஆன் த ஸ்பாட்டில் மன்னித்து அழிவில்லாப் புகழ் பெற்றார் அமைச்சர்.

அரசியல்வாதிகளைப் பொது இடத்தில் எல்லோர் முன் அவமானப்படுத்தும் தந்திரம் இதுவென நினைத்த அப்பாவி பொதுஜனமோ, அமைச்சரின் நடவடிக்கையால் மனமுடைந்து போவான். ஏனெனில் இந்திய அரசியல்வாதிகள் பயின்ற பாடங்கள் அப்படி. கட்சி கூட்டங்களிலும், சொந்தத் தொகுதிலும் அடிபட்டாலும், மிதிபட்டாலும் வலியை முகத்தில் காட்டாமல் புன்னைகைத்தவர்கள் தானே!!

ஆனால், நடந்த சம்பவங்களையும், நடக்கும் சம்பவங்களையும் நேரடி ஒளிபரப்பில் தொடங்கி, மறு ஒளிபரப்பு வழியாக பார்க்காதவனுக்கு, செய்திகளின் ஊடே ஸ்லோமோசனில் மீண்டும், மீண்டும் காட்டப்படும் காட்சிகளால், தவறுகளைப் பிரித்து ஒதுக்கும் பாமரனுக்கு குழப்பத்தை உண்டாக்கி, தவறான நடவடிக்கைகளைச் சரியென ஆக்கும் வேலையை மிகச்சரியாக ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.

அண்டை நாட்டில் நடக்கும் கொடுமையை, களத்தில் பலியான வீர மறத்தாயை, காமுகன் ஆடை களைவதை பார்த்ததும் மார்பு புடைக்க, ரத்தம் கொதிக்க, கைகால்கள் வெடவெடத்து, ஏதும் செய்ய முடியாத கையறு நிலையால், கண்ணில் நீர் வற்றும் வரை அழுத நான், அடுத்து, தலையில்லாத பிஞ்சுகளைப் பார்த்தாலும் சிறு மன இறுக்கத்தோடு அடுத்த வேலைக்கு போகும் படி ஆகிவிட்டது. கண்ணீர்த் துளி கூட இல்லை.

நான் ஏன் மாறிப்போனேன்?, ஏன் என் மனம் மரத்துப் போனது, என எண்ணிப் பார்க்கையில், நான் உணர்ந்த காரணம் தான் என்ன?

இது போன்ற படங்களை, ஊடகங்கள் வழியாக நாள் தோறும் பார்த்ததினால் வந்த பாதிப்பு. ஆனால், மோசமான பாதிப்பு. பிஞ்சுகள் கூட தமிழன் என்ற காரணத்திற்காக பலியாவதை கண்டும், காணாமல் போகுமளவுக்கு என்னுள் வறட்சியை ஏற்படுத்தியுள்ளன இந்த ஊடகங்கள்.

என்னை, என் இயல்பை என் கண்முன்னே மாற்றிவிட்டனர் இந்த ஊடகவியலாளர்கள்.

தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,

தப்பான கலாச்சாரத்தைப் பயிற்றுவித்ததால், எல்லா விதத்திலும் லாபம் என்னவோ ஊடகங்களுக்கு மட்டுமே!

உண்மையை அறிவீர்!.,

உணர்ச்சிகளை சரியாக, சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்!!

மனிதனாக வாழ்வீர்!!!

பின்குறிப்பு:-

தொலைத்தொடர்பு வளர்சியினால் நாமடைந்த துன்பங்களைப் பற்றி படைக்கு எனது முந்தைய பதிவுக்கு வழிச்சுட்டி---->மீடியா மெஸ்மரைஸம்...

35 comments:

நட்புடன் ஜமால் said...

\\கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று\\

தெளிவா தான் இருக்கீங்க தம்பி.

அவ(னுங்களுக்கு)மானமா

Suresh said...

arumai thozha nalla karuthukal summa நச்சுனு இருக்கு

Suresh said...

//வினை விதைத்தவன், வினை அறுக்கிறான்./

வினை விதைததவன் கட்சியே அற்க்கிறது

நட்புடன் ஜமால் said...

வினை விதைத்தவன் வினை

அறுக்கிறான்.

ஹையோ ஹையோ

மறுபடியும் விதைப்பானே

வால்பையன் said...

மீடியாவுக்கு அதே நேரத்தில் சானியாவின் புதிய குட்டை பாவாடை பிரச்சனை கிடைத்திருந்தால் அதற்கு ஓடியிறுக்கும்!

மேலும் ஒரு நிகழவை நாம் மறப்பதை விட புதிய பரபரப்பை ஏற்படுத்தி மீடியாக்களே மறக்க வைக்ககின்றன!

Suresh said...

namma pathiva unga follower list parka mudiyala ;)

தீப்பெட்டி said...

///தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,///

நிதர்சனமான உண்மை.

vasu balaji said...

யாரு எப்படிப்போனா என்னா? ரேட்டிங் வரோணும். காசு பார்க்கோணும்.

தத்துபித்து said...

//// நட்புடன் ஜமால் said...
மறுபடியும் விதைப்பானே ///
அப்ப மறுபடியும் அறுப்பான்

Suresh said...

மீடியாவுக்கு அதே நேரத்தில் சானியாவின் புதிய குட்டை பாவாடை பிரச்சனை கிடைத்திருந்தால் அதற்கு ஓடியிறுக்கும்//

செருப்பு படி தலை

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
\\கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று\\

தெளிவா தான் இருக்கீங்க தம்பி.

அவ(னுங்களுக்கு)மானமா?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால்...

//அவ(னுங்களுக்கு)மானமா//

நல்ல வார்த்தை விளையாட்டு

________________________________

// Suresh said...
//வினை விதைத்தவன், வினை அறுக்கிறான்./

வினை விதைததவன் கட்சியே அறுக்கிறது//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஸ்.,

அறுக்கப்போகிறது... எதிர்காலம்!

_________________________________

// வால்பையன் said...
மீடியாவுக்கு அதே நேரத்தில் சானியாவின் புதிய குட்டை பாவாடை பிரச்சனை கிடைத்திருந்தால் அதற்கு ஓடியிறுக்கும்!

மேலும் ஒரு நிகழவை நாம் மறப்பதை விட புதிய பரபரப்பை ஏற்படுத்தி மீடியாக்களே மறக்க வைக்ககின்றன!//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வால்பையன்...

அந்த வாலைத்தான் வெட்ட வேண்டுமென கேட்கிறேன்..

ஐய்யோ உங்களை(வால்பையன்) இல்லை!!

அப்பாவி முரு said...

// தீப்பெட்டி said...
///தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,///

நிதர்சனமான உண்மை.//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தீப்பெட்டி...

________________________________

// பாலா... said...
யாரு எப்படிப்போனா என்னா? ரேட்டிங் வரோணும். காசு பார்க்கோணும்//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலா...

புது வருகையாளர்...சிறப்பு வரவேற்ப்பு உண்டு.

_________________________________

// தத்துபித்து said...
//// நட்புடன் ஜமால் said...
மறுபடியும் விதைப்பானே ///
அப்ப மறுபடியும் அறுப்பான்//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தத்துபித்து..

Rajeswari said...

அமெரிக்க அதிபருக்கு எதிராக கையாளப்பட்ட நூதன அவமானப்படுத்தல், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும் அடி(!?)யெடுத்து வைத்துள்ளது. //

அசிங்கமாக உள்ளது...அவமானப்படுத்திதான் கோரிக்கைகளை உணர்த்த வேண்டுமா?...இதை மீடியா தனக்கு தீனியாக்கி கொண்டதுதான் பெருத்த அவமானம்...

podhigai thendral said...

//தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,
//
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!//

podhigai thendral said...

தத்துபித்து said...
//// நட்புடன் ஜமால் said...
மறுபடியும் விதைப்பானே ///
அப்ப மறுபடியும் அறுப்பான்//

// அப்பம் மறுபடியும் செருப்பால அடிப்போம்//

கார்க்கிபவா said...

ஒரு மாதிரி போறிங்க. ஆனா நல்ல வழி. வாழ்த்துகள் சகா..

தத்துபித்து said...

podhigai thendral said...
// அப்பம் மறுபடியும் செருப்பால அடிப்போம்//

அப்ப மறுபடியும் அப்பாவி பதிவு போடுவார்.

தத்துபித்து said...

///Rajeswari said...
அவமானப்படுத்திதான் கோரிக்கைகளை உணர்த்த வேண்டுமா?.//

அவமானப்படுத்தினாலும் கோரிக்கைகளை உணர மாட்டார்கள்.
என்ன செய்யலாம்.....?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கவலை தரும் கட்டற்ற சுதந்திரம்!!!//

அதனால்தான் சுதந்திர தினத்தன்று பிரதமர் கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று கொண்டு பேசுகிறார்.
:)

கண்ணாடிக் கூண்டுக்குள் பெரும்பாலும் பொம்மையும் பிணமும் தான் இருக்கும்!
:P

Thekkikattan|தெகா said...

நல்ல பதிவு!

அமெரிக்க அதிருபருக்கு நடந்த பொழுது அதன் உக்கிரத்தை தனது உடல் மொழியில் தெரிவித்து விட்டார். அது மரத்து போகாத மனிதனுக்கு உள்ள இயல்பு.... ஆனால், நீங்கள் கூறியபடி நம்மூர் அரசியல்'வியாதிக்கு...

//ஆனால் அமெரிக்க அதிபர் காட்டிய வேதனையில் துளிக்கூட அமைச்சரின் முகத்தில் இல்லை. அவமானகரமான சூழ்நிலையிலும் அமைதியாய் இருந்தது ஆச்சரியகரமானது. //

பதிலும் நீங்களே...

//ஏனெனில் இந்திய அரசியல்வாதிகள் பயின்ற பாடங்கள் அப்படி.//

ஏன் முகத்தில் புன்னகை, இந்த கோணத்திலயே ஒரு பதிவிடலாமென்று இருந்தேன்... நீங்கள் தொட்டுவிட்டீர்கள் - இந்த மரத்து, இத்துப் போன மனிதர்களையும், மீடியாக்களையும் பற்றி... எங்கோ செல்கிறோம்.

இராகவன் நைஜிரியா said...

மீடியா என்பதே இன்றுள்ள சூழ்நிலை. அவர்களுக்கு பணம் எப்படி பண்ணுவது என்பதுதான் குறிக்கோள்.

அரசியல்வாதிகளுக்கு அவமானம் என்று ஒன்று இருக்கின்றதா என்ன?

பழமைபேசி said...

பிறழ்ந்தும், திரிந்தும், ஏற்றியும் தருவதே ஊடகம்.... அது விளைவு! வினை, சாமான்யர்களிடத்து இருக்கிறது தம்பி! ஆம, எகிறிக் குதித்துச் சென்று பார்ப்பதும், படிப்பதும், அவர்களை மேலும் ஊக்குவிக்கின்ற செயல்.....

மாந்தனுக்கு நீங்கள் இட்ட தலைப்பு பொருந்தும். கட்டற்ற சுதந்திரம்... அதன் விளைவே எல்லாமும்... இதைச் சொன்னால், கலாச்சாரக் காவலர்கள் என்று பின்னிப் படல் எடுக்கும் காலம்... நமக்கு வேண்டாம் அது! இஃகிஃகி!!

வனம் said...

வணக்கம்

\\உணர்ச்சிகளை சரியாக, சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்!!\\

ஆமாம் சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் -- நாம் அப்படியா

\\தலையில்லாத பிஞ்சுகளைப் பார்த்தாலும் சிறு மன இறுக்கத்தோடு அடுத்த வேலைக்கு போகும் படி ஆகிவிட்டது. கண்ணீர்த் துளி கூட இல்லை.\\

என்னைப் பொருத்தவரையில் வெளிப்படுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டு வெளிப்படுத்தாமலே இருக்கின்றோம்.

பிறகு

\\கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று\\
உடன்படுகின்றேன், என்னதான் முகத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் குத்தி இருக்குமில்லையா

நன்றி
இராஜராஜன்

அப்பாவி முரு said...

வாங்க ராஜேஸ்வரி..

எனக்கும் மீடியா மேல வருத்தம் தான்...

----------------------------------

// podhigai thendral said...
//தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,
//
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!//

வருகௌக்கும், கருத்துக்கும் நன்றி பொதிகை தென்றல்.,

ஆனா, சாதாரணமா எடுத்துக்குற மாதிரி ஆக்கிட்டாங்க எனபது தான் என்னோட கவலை.

----------------------------------

// கார்க்கி said...
ஒரு மாதிரி போறிங்க. ஆனா நல்ல வழி. வாழ்த்துகள் சகா..//

வாங்க கார்க்கி..

எனக்கே தெரியும். ஆனா, இப்ப இருக்குற சூழ்நிலையில் மணடை வேற யோசிக்க மாட்டேன்குது.

----------------------------------

ஜோதிபாரதி said...
//கவலை தரும் கட்டற்ற சுதந்திரம்!!!//

அதனால்தான் சுதந்திர தினத்தன்று பிரதமர் கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று கொண்டு பேசுகிறார்.
:)

கண்ணாடிக் கூண்டுக்குள் பெரும்பாலும் பொம்மையும் பிணமும் தான் இருக்கும்!
:P//

வாங்கண்ணே...

நிறைய வருத்தமாத்தான் இருக்கு

----------------------------------
// Thekkikattan|தெகா said...
நல்ல பதிவு!

அமெரிக்க அதிருபருக்கு நடந்த பொழுது அதன் உக்கிரத்தை தனது உடல் மொழியில் தெரிவித்து விட்டார். அது மரத்து போகாத மனிதனுக்கு உள்ள இயல்பு.... ஆனால், நீங்கள் கூறியபடி நம்மூர் அரசியல்'வியாதிக்கு...//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தெகா...

தவறுதலாய் நானே 25 வது பின்னூட்டம் போட்டுடேன்.

--------------------------------

// இராகவன் நைஜிரியா said...
மீடியா என்பதே இன்றுள்ள சூழ்நிலை. அவர்களுக்கு பணம் எப்படி பண்ணுவது என்பதுதான் குறிக்கோள்.

அரசியல்வாதிகளுக்கு அவமானம் என்று ஒன்று இருக்கின்றதா என்ன?//

வாங்கண்ணா...

இல்லை தான்...

----------------------------------
// பழமைபேசி said...
பிறழ்ந்தும், திரிந்தும், ஏற்றியும் தருவதே ஊடகம்.... அது விளைவு! வினை, சாமான்யர்களிடத்து இருக்கிறது தம்பி! ஆம, எகிறிக் குதித்துச் சென்று பார்ப்பதும், படிப்பதும், அவர்களை மேலும் ஊக்குவிக்கின்ற செயல்.....

மாந்தனுக்கு நீங்கள் இட்ட தலைப்பு பொருந்தும். கட்டற்ற சுதந்திரம்... அதன் விளைவே எல்லாமும்... இதைச் சொன்னால், கலாச்சாரக் காவலர்கள் என்று பின்னிப் படல் எடுக்கும் காலம்... நமக்கு வேண்டாம் அது! இஃகிஃகி!!//

வாங்கண்ணே....

நாம தான் கலாச்சாரகாவலர்கள்.

-----------------------------------
// வனம் said...
வணக்கம்

\\உணர்ச்சிகளை சரியாக, சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்!!\\

ஆமாம் சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் -- நாம் அப்படியா

\\தலையில்லாத பிஞ்சுகளைப் பார்த்தாலும் சிறு மன இறுக்கத்தோடு அடுத்த வேலைக்கு போகும் படி ஆகிவிட்டது. கண்ணீர்த் துளி கூட இல்லை.\\

என்னைப் பொருத்தவரையில் வெளிப்படுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டு வெளிப்படுத்தாமலே இருக்கின்றோம்.

பிறகு

\\கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று\\
உடன்படுகின்றேன், என்னதான் முகத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் குத்தி இருக்குமில்லையா

நன்றி
இராஜராஜன்//

வாங்க இராஜராஜன்...

வேடிக்கை மனிதன் said...

"நான் ஏன் மாறிப்போனேன்?, ஏன் என் மனம் மரத்துப் போனது, என எண்ணிப் பார்க்கையில், நான் உணர்ந்த காரணம் தான் என்ன?

இது போன்ற படங்களை, ஊடகங்கள் வழியாக நாள் தோறும் பார்த்ததினால் வந்த பாதிப்பு. ஆனால், மோசமான பாதிப்பு. பிஞ்சுகள் கூட தமிழன் என்ற காரணத்திற்காக பலியாவதை கண்டும், காணாமல் போகுமளவுக்கு என்னுள் வறட்சியை ஏற்படுத்தியுள்ளன இந்த ஊடகங்கள்."

ஊடகங்கள் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை காட்டுவதால் உங்கள் மனம் மறத்துப் போகவில்லை,
இதுபோன்ற நிகழ்வுகள் அனுதினமும் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதாலும்,
நடக்கும் அக்கிரமங்களுக்கு உங்களாள் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கமுடியாத காரணத்தாலும் உங்களுக்கு இந்த நிலை என்று கருதுகிறேன்.

ஊடகங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை
அடிக்கடி காட்டுவதால் அவர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் என்றாலும்
அடிக்கடி காட்டுவதால் மட்டுமே
ஆட்சியில் இருக்கும் சிலருக்கு உரைக்கிறது

மாறாக ஊடகங்கள் ஆபாச நிகழ்சிகளை காட்டுவதுதான் தவறு

கடைக்குட்டி said...

மீடீயாக்கள் மீதான கோபம் நியாயமானது!!!

பதிவில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் நச்..
நச்..
நச்...

கும்மாச்சி said...

உங்களின் கோபம், நியாயமானதே. இதில் மீட்யாகள் மற்றும் குறை இல்லை நண்பரே, நமது சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானத்தை இழந்து வருகிறது.

தேவன் மாயம் said...

அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாலோ., கேட்டதாலோ யாருக்கும் எந்த லாபமும் இருந்திருக்காது, ஆனால் கணக்கில்லாமல் காலம் விரயமாகி இருக்கும் நமக்கு. அந்த விரயத்தை பணமாக்கியிருப்பார்கள்., மீடியா முதலைகள். மக்களின் அவசரத்தை ஆதாயமாக்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன் (வேற என்ன பண்ணமுடியும்).///
மீடியா அப்படித்தானே!!அவங்க தொழில் என்ன செய்வது!!

தேவன் மாயம் said...

//தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,///

ஆமா! பொழைக்கத்தெரிந்தவன் தப்பித்து விடுவான்!

priyamudanprabu said...

தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,

தப்பான கலாச்சாரத்தைப் பயிற்றுவித்ததால், எல்லா விதத்திலும் லாபம் என்னவோ ஊடகங்களுக்கு மட்டுமே!
///

சரியான வரிகள்

priyamudanprabu said...

வினை விதைத்தவன் வினை

அறுக்கிறான்.

ஹையோ ஹையோ

மறுபடியும் விதைப்பானே
???

அப்பாவி முரு said...

// நான் தகுதியானவனா? said...

ஊடகங்கள் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை காட்டுவதால் உங்கள் மனம் மறத்துப் போகவில்லை,
இதுபோன்ற நிகழ்வுகள் அனுதினமும் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதாலும்,
நடக்கும் அக்கிரமங்களுக்கு உங்களாள் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கமுடியாத காரணத்தாலும் உங்களுக்கு இந்த நிலை என்று கருதுகிறேன்.

ஊடகங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை
அடிக்கடி காட்டுவதால் அவர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் என்றாலும்
அடிக்கடி காட்டுவதால் மட்டுமே
ஆட்சியில் இருக்கும் சிலருக்கு உரைக்கிறது

மாறாக ஊடகங்கள் ஆபாச நிகழ்சிகளை காட்டுவதுதான் தவறு//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி., தகுதியானவனா??

-----------------------------------

// கடைக்குட்டி said...
மீடீயாக்கள் மீதான கோபம் நியாயமானது!!!

பதிவில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் நச்..
நச்..
நச்...//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
கடைகுட்டி

----------------------------------

கும்மாச்சி said...
உங்களின் கோபம், நியாயமானதே. இதில் மீட்யாகள் மற்றும் குறை இல்லை நண்பரே, நமது சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானத்தை இழந்து வருகிறது.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
கும்மாச்சி.,

---------------------------------

// thevanmayam said...

மீடியா அப்படித்தானே!!அவங்க தொழில் என்ன செய்வது!!//

//ஆமா! பொழைக்கத்தெரிந்தவன் தப்பித்து விடுவான்//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவன்மயம்.

----------------------------------

// பிரியமுடன் பிரபு said...

சரியான வரிகள்//

/வினை விதைத்தவன் வினை

அறுக்கிறான்.

ஹையோ ஹையோ

மறுபடியும் விதைப்பானே
???/

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரபு.

ஆ.ஞானசேகரன் said...

மாறுப்பட்ட அலசல் பாராட்டுகள்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

©2009 அப்பாவி | by TNB