மீடியா மெஸ்மரைஸம்...

வணக்கம் நண்பர்களே, இன்னைய தேதியில் மனிதனோட எதிரிகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்து மட்டுமல்லாது, முதலிடத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறிவருவதாக நான் நினைப்பது தகவல் தொழில்நுட்பம் தான் (IT இல்லீங்கோவ் ), நான் சொல்ல வந்தது மீடியா ( தொலைக்காட்சி, வானொலி, இணையம் போன்றவை)



கொஞ்ச காலத்துக்கு முன்னயெல்லாம் ( ரொம்ப நாள் இல்லீங்க 25- 30 வருசத்துக்கு முன்னாடி) தகவல்கள் மக்களுக்கு கிடைக்க ரெண்டு, மூணு வழிகள் தான் இருந்தது. கடிதாசியும்,தினசரி, வானொலி அதுல முக்கிய மானது. ஊருல ஒலகத்துல எது நடந்தாலும் ரெண்டு மூணு நாளைக்குப் பின்னாடிதான் மக்களுக்கு தெரிவவரும்.





எத்தனையோ சாவுகளில் சொந்தக்காரங்களுக்கு தகவல் போயிசேராம காரியத்தை நடத்தி பின் அவர்களோட உரிமையான சண்டைகள்ள தலை கவுந்து நிக்குருக்காக. அங்க பாசம் வளந்தது.



எங்க சித்தப்பா ஒருத்தருக்கு பொண்ணு பாக்க தேனீ பக்கம் போயிருந்தாங்க, பொண்ணு பாக்க போனவுன்ங்க ரெண்டு மூணு நாலா ஆளைக்காணோம். வந்தபின்ன என்னடான்னு கேட்டா, பொண்ணு பாக்க போன ஊருள்ள எதோ கலவ்ரமுன்னு பஸ் ஏதும் ஓடல்லன்னு பொண்ணு வீட்டிலே ரெண்டு நாளும் தங்கிவேண்டியதாப் போச்சி. தங்குனவுங்க நிச்சயத்துக்கு முன்னாடி எப்படி கையை கழுவுறதுன்னு , அதுக்கு முன்னாடியே பொண்ணை நிச்சயமும் பண்ணிட்டே வந்துட்டாங்க சொந்த ஊருள்ள யாருக்கும் தகவல் சொல்லாமலே.





இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், ராஜிவ் காந்தி இறந்தது கூட அடுத்த நாள் வானொலிள்ள சொன்னத்துக்கப் புறம் தான் மக்கள் நம்புன்னங்க. அதுவும் காலை 6.45 மாநில செய்தியில சொன்னத முழுசா நம்பாம காலை 7.15 மத்திய செய்தி டெல்லி ஒலிபரப்புல சொன்னதுக்கு அப்புறமா தான் மக்கள் நம்புன்னாக. அதாவது ஒரு செய்தியை உறுதிபடுத்த ரெண்டு மூணு தரம் சரி பாத்துக்கிட்டாங்க. ( ஏன்னா அவுங்கல்லாம் படிக்காதவங்க பாருங்க )



அப்புறம் பாருங்க ஒருதடவ ஊரு ஊரா ரத்தக் காட்டேரி வருது, எதுக்க வர்ற எல்லாரையும் அடிச்சு கொன்னுகிட்டே வருது, இல்லை இல்லை தலை இல்லாத முண்டம் வருது அது எல்லா வீடுக்குள்ளடும் புகுந்து ஆளை கொள்ளுதுன்னு ஊருக்குள்ள பரபரபா பேசிக்கிட்டாங்க. ஊருக்குள்ள தான் பேசிக்கிட்டாங்களே ஒழிஞ்சு யாருக்கு அடுத்த ஊருள்ள என்ன சங்கதின்னு தெரியல்லை. வீட்டு வீட்டுக்கு வேப்பில்லை சொருகி வச்சதுதான் மிச்சம்.



இதுக்கெல்லாம் மேல பாருங்க ஒரு தடவ வானத்துள்ள இருந்து ஏதோ ஒன்னு வந்து விழுகப்போதாம் மனுசங்க எல்லாம் அழிஞ்சு சாகப்போறோம்ன்னு ஆளாளுக்கு பேசிக்கிட்டாங்க. ( அமெரிக்காவின் செயற்கை கொள் ஒன்று வானில் கெட்டுப்போய் பூமியில் விழுந்தது. மொதல்ல இந்தியாவில் தான் விழப் போகிறது என்றும், அப்புறம் தமிழ் நாட்டில் நான் விழப் போகிறது என்றும் பின் அது இந்திய பெருங்கடலில் விழுந்தது.) உண்மையான தகவல் தெரியாத தாள சரி சாகுறது தான் சாகுறோம் நல்லா தின்னுட்டு சாவோம்முனு, வீட்டுல இருந்த ஆடு, மாடு, கோழி, பண்ணின்னு அவுங்கவுங்க வசதிக்கி இருக்குறதா அடிச்சு தின்னங்க. ரெண்டு நாள் கழிச்சி எதுவும் விழுகவில்லையேன்னு வானத்தப் பாத்து ஒக்காந்தவங்கட்ட இல்ல அது கடல்ல விழுந்திருச்சுன்னு சொன்னதும் ( போக்கிரி வடிவேலு ஸ்டைலில் ) அட பண்ணி போச்சே-ன்னு கவலை பட்டாங்க.



ஊருல ஒலகத்துல எது நடந்தாலும் ரெண்டு மூணு நாளைக்குப் பின்னாடிதான் மக்களுக்கு தெரிய வரும். சரி முடிஞ்ச விசயத்துக்கு ரெம்ப கவலை படக்கூடாதுன்னு, கொஞ்சமா அனுதாபப் பட்டுட்டு, அவுங்கவுங்க வேலை, பொண்டாட்டி-பிள்ளைனு போயிட்டாங்க.



இந்த நேரத்துல தான் இந்தியாவில் தூர்தர்சன் தன் ஒளிபரப்பை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம், ரெண்டு மணிநேரம்ம்னு ஒளிபரப்பு இருந்தது, பின் நேரடி ஒளிபரப்பாக இந்திரா காந்தி அவர்களின் இறுதி சடங்கு காண்பிக்கப் பட்டது. பின் எம்.ஜி.ஆர்-அவர்களின் இறுதி சடங்கு , பின் விளையாட்டுப் போட்டிகள், பின் எது எதுக்கோவென இருந்த நேரடி ஒளிபரப்பு இன்று ஜாதி சண்டைகள், தீவிரவாதிகள் தாக்குதல், இப்போ புதிதாய் கருணைக் கொலையா- தற்கொலையா என்று தெரியவில்லை எல்லாம் நேரடி ஒளிபரப்பு. வாழ்க ஜனநாயகம். வளர்க விஞ்ஞானம்!

முன்பெல்லாம் தந்தி வந்தால் பதறுவார்கள். பயத்தினால் அல்ல, நம்முடைய சொந்தக்காரர்கள் யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதே என்ற எண்ணத்தில்.

காட்டெருமை கூட்டத்தை சிங்கங்கள் விரட்டும் பொது அனைத்தும் தலை தெறிக்க ஓடும். சிங்கம் ஒரு எருமையை பிடித்து அடித்து சாப்பிடும் போது, மற்ற எருமைகள் மிக சாதாரணமாக சிங்கத்தின் அருகில்கூட சென்று மேயும். அதாவது தனக்கு பிரச்சனை எல்லாத போது அதுதது பாட்டுக்க இருக்கும். இன்று நமக்கும் அதே நிலைமை தான். நாம நாமாக இருப்பதை மற்ற முடியாது. ஆனால் நமக்கு சம்மந்தம் இல்லாத, நேரடி சம்மந்தம் இல்லாத, நம்மால் தடுக்க முடியாத எல்லாவற்றையும் இப்படி நேரடி ஒளிபரப்பாக பார்க்கும் போது பார்ப்பவர் மனநிலையிம் தப்பித்த காட்டெருமை நிலையும் ஒன்றாக்கப்படுகிறோம். நம்முடைய மனநிலையை நமக்கு தெரியாமலே காயப்படுத்துகிறார்கள்.
இல்லை நமக்கெல்லாம் எதையும் தாங்கும்விதத்தில் (கல்)மனது வேண்டும் எனென்றால் நாம் வெறும் பார்வையாளர் மட்டும் தான் என்கிறார்கள். அப்போ நாளை நமது கண்முன்னே ஒரு குழந்தை அடிபட்டால் கூட நாம் அங்கே வெறும் பார்வையாளர் மட்டும் என ஆகிவிடமாட்டோமா?

விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனின் மனநிலையை மிருகத்தின் மனநிலைக்கு இட்டு செல்கிறது என்றால் மிகையல்ல.

2 comments:

அப்பாவி முரு said...

மீடியாவின் பாதிப்பை பற்றி நான் எழுதாமல் விட்டதை பின்னுட்டத்தில் எழுதுங்கள்

Anonymous said...

neengal solvathu nootrukku nooru sari

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB