வாழ்க ஜனநாயகம்...


இன்று (ஏப்ரல் 23) தமிழ்கத்தில் ஆளும் கட்சியான தி.மு.க-வின் அழைப்பின் பேரில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளும், சில பல அமைப்புகளும் இந்த மாபெரும் பொது வேலை நிறுத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதோ இன்னும் சில நிமிடங்களில் வேலை நிறுத்தம் ஆரம்பமாகப் போகின்றது.



பொது வேலை நிறுத்தத்திற்கான காரணம், அழைப்பு விடுத்தவர் யார்? எப்படிப் பட்டவர்?, தமிழக தமிழர்க்காகவும், ஈழ தமிழ்ர்க்காவும் அவர் என்ன என்ன செய்துள்ளார் என்ற ஆராய்ச்சி ஒரு புறமிருந்தாலும், இன்றைய பொது வேலை நிறுத்தத்தால் அவர் யாரை துன்புறுத்தப் போகிறார்?





இலங்கை சிங்கள இனவாத அரசையா? இல்லை உள்குத்து காங்கிரஸ் மத்திய அரசையா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை...



இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்களின் ஒரு வேலைநாளை முடக்கவே இந்த ஏற்ப்பாடு. நானும் ரவுடிதான் என காண்பிக்க வடிவேல் காவல் வாகனத்தில் ஏறியது போல், நானும் ஈழ்த்தமிழார் ஆதரவாளர்தான் என காட்டத்தான் இந்த ஆளும் கட்சியின் முட்டாள்தனம்.



ஏன் இந்த கோவம்? அதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக?



அய்யா கனவான்களே, நீங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் உள்ள கையறு மக்கள் விதி!, எல்லாம் அவன் செயல்!, என மனதுக்குள் முனங்கி ஊர் மூலையில் முடங்கிக்கொள்வர். ஆளும்கட்சிக்கு எதிராக சாதாரண மக்களால் வேறு என்ன செய்ய முடியும்?.



ஆனால், வெளிநாடுகளிலிருந்து இன்று பகல் பொழுதில் (அதாவது ஆளும்கட்சியின் பொது வேலைநிருத்தன்று), சென்னையிலோ, திருச்சியிலோ கோவையிலோ விமானம் மூலம் வந்திருக்கும் மக்களின் கதி என்ன?



சுற்றுலாவுக்காக வந்திருந்ததால் கூட பகல் பொழுதை அந்தந்த விமான நிலையங்களிலேயே கழித்திடலாம்!, ஆனால் உறவினரின் மரணத்தின் பின்னான இறுதி உர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்ததால்? இல்லை வெளிநாட்டில் இருந்து வெறுப்பவர் தான் கொள்ளி வைக்க வேண்டியவராக இருந்தால் அவரின் மன நிலை எப்படி இருக்கும்?



தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலைசெய்வர்களுக்கு இது தான் நீங்கள் கொடுக்கம் ஆதரவா?



இன்று பேருந்து, ஆட்டோக்கள் ஓடும் என்று தமிழ்க தலைமை செயலர் அறிவித்துள்ளதை காரணம் காட்டி சப்பை கட்டு கட்ட வேண்டாம், பேருந்துகளை ஓட்டப் போவதில்லை என தொ.மு.ச. அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும் மக்களே.



டிஸ்கி.


சிங்கையில் உடன் தங்கியிருந்த நண்பரின் தந்தை கடந்த திங்கள் இரவு காலமாகிவிட்டார். நண்பருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்து செவ்வாய் காலை 9 மணிக்கு வினானத்தில் இந்தியா சென்று இறுதி சடங்கில் கலந்து கொண்டார். தமிழ்க அரசியல் சூழ்நிலையையும் தாண்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் அவர் புண்ணியவான் ஆகிவிட்டார்?



இதேபோல் ஏதாவது ஒரு துரதிஸ்ட்டசாலி, புதனிரவு தகவல் கிடைத்து வியாழன் காலை கிளம்பி இந்தியா வந்தால், அவரின் நிலை? மனநிலை?????????????

8 comments:

பழமைபேசி said...

சமுதாயச் சிந்தனைக்கு ஒரு சபாசு!

வால்பையன் said...

இவங்க எதெல்லாம் இயங்கும்னு சொன்னாங்களே அதை தவிர மற்றதெல்லாம் ஒழுங்க இயங்குது!

இன்னோன்னு தெரியுமா!

இன்னைக்கு சன் டீவீயில நாடகம் கிடையாது, படங்கள் தான்.

நாங்க தான் பந்த்ல கூட காசு பாப்ப்போம்ல!

எங்க தாத்தா யாரு காத்துலயே வெண்ணைய் எடுக்குறவரு!

தீப்பெட்டி said...

///இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்களின் ஒரு வேலைநாளை முடக்கவே இந்த ஏற்ப்பாடு.///

இந்த கருத்துதான் எனக்கும். அவசியமான பதிவு.

கோவி.கண்ணன் said...

//எங்க தாத்தா யாரு காத்துலயே வெண்ணைய் எடுக்குறவரு!//

:) நல்ல வேளை காத்து என்று தெளிவாக சொல்லிட்டிங்க

நிஜமா நல்லவன் said...

வாழ்க ஜனநாயகம்!

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் பிரம்மை.. இவங்களைத் திருத்தவே முடியாதுப்பா..

Anonymous said...

அதை விட சென்னை போன்ற பேரு நகரங்களில் வசிக்கும் பேச்சிலர்ஸ் நிலைமை ரொம்ப மோசம்...எல்லா உணவகங்களும் மூடப்பட்டு விட்டதால் டீ குடிக்க கூட வழியில்லாமல் பட்டினியுடன் பொழுதை கழித்தவர்கள் ஏராளம்.

வயிர் எரியுதுங்க....அன்னிக்கு சாப்பிடாம இருந்ததாலும், ஈழத்தில் மக்கள் சாவதாலும்.

ஆனா அன்னிக்கு டாஸ்மாக் மட்டும் திறந்து வெச்சிருந்தாங்க...இதை எல்லாம் என்னனு சொல்ல?

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலைசெய்வர்களுக்கு இது தான் நீங்கள் கொடுக்கம் ஆதரவா? //

என்ன பன்னுரது இப்படிதான் பொழப்பு ஓடுது.... நாமும் திருந்தல அரசிலும் திருந்தல...

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB