கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!!

லாங் லாங் அகோ., சோ லாங் அகோ கடவுள் ஒரு அழகிய சாயந்திர வேளையில், நாமளும் வேலையில்லாம சும்மாதான இருக்கோம், இந்த பூமியும் சும்மாதான் இருக்கு. இதை இப்பிடியே விடக்கூடாது, சில பல உசுருகளைப் படைச்சு பூமியில விட்டா, எல்லாருக்கும் போரடிக்காம சுறுசுறுப்பா இருக்கும்ன்னு அதிரடியா முடிவெடுத்து வரிசையா எல்லாத்தையும் படைச்சுக்கிடே வந்தார்.


அமீபா, நண்டு, நரி, யானை, மரம், செடி – கொடி என படைச்சுக்கிட்டு வந்தவரு அடுத்ததா கழுதையைக் கூப்பிட்டு, “கழுதை, கழுதை, நீயும் எத்தினி நாளாத்தான் இங்க என்னைய உதைச்சுக்கிட்டே இருப்ப, நீ போயி பூமிலையும் கொஞ்ச நாளைக்கி இரு. அங்க உனக்கு வேலை என்னன்னா? பொதி சொமக்குறது தான் உனக்கு அங்க வேலை. உனக்கு 60 வருசம் ஆயுள். அதை முடிச்சுட்டு நீயி இங்க வந்து சேர்ந்துக்கலாம். அதனால கெளம்பு, கெளம்புன்னு கெளப்பி விட்டாரு கடவுள்.

அதைக்கேட்ட கழுதை “சாமி, சாமி என்னால 60 வருசமெல்லாம் இருக்க முடியாது. பயங்கரமா போரடிக்கும். அதனால எனக்கு 30 வருச ஆயுளே போதும்” அப்படின்னுச்சு.

உடனே சாமியும் “அப்பிடியா, சரி நீ 30 வருசத்திலையே திரும்பிரு”ன்னு சொல்லீட்டு, அடுத்தா நாயைக் கூப்பிட்டார் கடவுள்.

“நாயி, நாயி. நீ ரொம்ப நல்லவன், என்னோட காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்காம, நீ கொஞ்ச நாளைக்கி பூமியில போய் இரு. அங்க மனிசன்னு ஒருத்தன் வருவான். அவங்கூட ப்ரண்டா இருந்து அவனோட வீட்டைக் காவல் காத்து பொழச்சுக்க. உனக்கு 40 வருச ஆயிசு” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக் கேட்ட நாயி, “சாமி, என்னால மனிசன் கூடயெல்லாம் 40 வருசம் குப்பை கொட்ட முடியாது. அதனால எனக்கு 20 வருசம் போதும்” அப்பிடின்னுச்சு.

அதைக்கேட்ட சாமி “அட, நீ சொல்றதும் சரிதான். மனிசன் ரொம்ப மோசமானவன், உனக்கு 40 வருமெல்லாம் சோறு போடமாட்டான், அதனால நீ 20 வருசம் மட்டும் இருந்துட்டு வந்திரு” வாழ்த்தி அனுப்புனாரு கடவுள்.

அடுத்து குரங்கை கூப்பிட்டு, “குரங்கு, குரங்கு, என்னால உன்னைய வச்சு சமாளிக்க முடியலை. அதனால நீ பூமிக்கு போயி 20 வருசம் வாழ்ந்திட்டு வா” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக்கேட்டு ஷாக்கான குரங்கு, “சாமி, சாமி என்னால 20 வருமெல்லாம் உங்களை விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஏதோ நீங்க சொன்னதால பூமிக்கு போறேன், ஆனா 10 வருசம் போதும் எனக்கு” அப்பிடின்னுச்சு குரங்கு.

அதைகேட்ட கடவுள், “ஆமாம், குரங்கு. என்னாலையும் உன்னை பார்க்காம இருக்க முடியாது. அதனால நீ சீக்கிரமே 10 வருசத்துல வந்திடு” சொல்லி கண்கலங்குன படியே அனுப்பி வச்சாரு கடவுள்.

அடுத்து மனிசனைக் கூப்பிட்டு, “மனிசா, மனிசா. நீ ரொம்ப புத்திசாலி. அதனால பூமிக்குப் போயி இந்த எல்லா மிருகத்தையும் விட நல்லா, சுகமா 20 வருசம் வாழ்ந்திட்டு வந்திடு” அப்பிடின்னார் கடவுள்.

உடனே மனிசன், “சாமி, சாமி. ரொம்ப அழகா இருக்குற பூமியை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. நான் அங்க அதிக நாள் வாழணும்ன்னு ஆசைப்படுறேன். அதனால, கழுதை வேண்டாமுன்னு சொன்ன 30 வருசத்தையும், நாயி வேணாமுன்னு சொன்ன 20 வருசத்தையும், குரங்கு வேணாமுன்னு சொன்ன 10 வருசத்தையும் எனக்கே குடுங்க. நான் அதை வச்சு 75 வருசம் ஜாலியா இருந்துட்டு வர்றேன்” அப்பிடின்னான்.

அதைக் கேட்டதும் கடவுளுக்கு சிரிப்பு வந்திருச்சு. சிரிச்சுக்கிட்டே, “சரி, அப்பிடியே எடுத்துக்க” –ன்னு சொல்லீட்டு, ”முதல் 20 வருசம் எந்தக் கவலையும் இல்லாம, குழந்தையாட்டம் சந்தோசமா இரு, அடுத்த 30 வருசம் உன் குடும்பத்துக்காக கழுதை மாதிரி வேலை செய். அதுக்கடுத்த 20 வருசம் நாய் மாதிரி உன் வீட்டைக் காவல் காக்கப்ப, உன்னோட கடைசி பத்து வருசத்துக்கு உன்னோட குழந்தைகளால, குரங்கு மாதிரி இங்கேயும் – அங்கேயும் மாறிக்கிட்டே இருப்ப. போயி அனுபவிச்சுட்டு வா” சொல்லி சந்தோசமா அனுப்பி வச்சாரு.

இதுதான் மனிசனோட வாழ்க்கை. (எங்கேயோ படிச்சது)
.

14 comments:

Anonymous said...

Super Story Boss..

ப்ரியமுடன் வசந்த் said...

பழசு ஆனாலும்

உண்மைதான்

வால்பையன் said...

புனைவு தானே
கூடவே சிங்கம்,புலி, நரி எல்லாம் சேர்த்திருக்கலாமே!

priyamudanprabu said...

அட இம்புட்டு விசயம் இருக்கா இதுல?!?!?!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கர்பனையான கதை.. இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு

தீப்பெட்டி said...

கத நல்லாயிருக்கே..

முனைவர் இரா.குணசீலன் said...

தெரிந்த கதையாக இருந்தாலும் சொல்லியவிதம் அழகு....

iniyavan said...

நல்லா இருக்கு

அறிவிலி said...

இப்பிடியெல்லாம் சுத்தி வளச்சு திட்ட வேணாம். நேரடியாவே சொல்லிருங்க. ஆவறது ஆவட்டும்.

RAMYA said...

நல்லா இருக்கு முரு.

கற்பனையானாலும் உண்மைதான்
யோசித்தால் நீங்கள் எழுதி இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியான கற்பனைதான்!

அப்பாவி முரு said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

Anonymous said...

நானும் வாசித்திருக்கிறேன் இதை. ஆனாலும் அப்பப்ப இதை நினைவு படுத்திபார்ப்பது நல்லது தான்.

cheena (சீனா) said...

ஹாய் - நீ அப்பாவியா - கழுத நாயி குரங்குன்னு திட்டிப்புட்டு ....... ம்ம்ம்ம்

இப்ப நான் யாரு ?

அப்பாவி முரு said...

// cheena (சீனா) said...
ஹாய் - நீ அப்பாவியா - கழுத நாயி குரங்குன்னு திட்டிப்புட்டு ....... ம்ம்ம்ம்

இப்ப நான் யாரு ?//

முழு மனிதன்!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB