எனக்குப் பிடிக்காதவர்கள்

அண்ணன் பித்தனின் வாக்கு சுதாகர் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். கடந்த நான்கு நாட்களாகவே கடுமையான பணி, இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நெருக்கடி நீடிக்கலாமென வானி(பணி)லை ஆராய்ச்சி கூறுகிறது. சொந்த இடுகை எழுதவும் குறிப்பாய் பெரியோர்களின் இடுகைகளை படிக்கவுமே நேரமில்லை. ஆனால் இந்த தொடர் இடுகையினை எழுதுவது மிகசுலபமாதலால்(ஆமாம், கால காலமாக பிடிக்காதவங்களை சொல்ல என்ன சிரமம்?)உடனடி தொடர் இடுகை.

போவோமா ஊர்கோலம்!!!

1) அரசியல்

பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்

பிடிக்காதவர் :- ஜெயலலிதா

2)எழுத்தாளர்

பிடித்தவர் : - பாலகுமாரன்,

பிடிக்காதவர் :- சாரு நிவேதிதா

3)திரைப்பட இயக்குநர்

பிடித்தவர்கள் :- மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கமல்

பிடிக்காதவர்கள் : - ஷங்கர்

4) நடிகர்

பிடித்தவர் :- பிரகாஷ்ராஜ், கமல்

பிடிக்காதவர் :- விவேக்

5) பாடலாசிரியர்

பிடித்தவர்கள் :- கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், என்பதுகளில் எழுதிய பலர்

பிடிக்காதவர் :- பேரரசு (ஐய்யொ, ஐய்யோ)

6) திரைப்பட தயாரிப்பாளர்

பிடித்தவர்கள் :- ஷங்கர், பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் :- ஏ.வி.எம்

7) நடிகைகள்

பிடித்தவர் :- யாருமில்லை

பிடிக்காதவர் :- நயன்தாரா

8) காவல்துறை

பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்

பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்

9) ஆட்சியாளர்கள்

பிடித்தவர் :- நரேஷ் குப்தா

பிடிக்காதவர்கள் :- ஏகப்பட்ட”பேர்”கள்

10) பிடித்த திரைப்படங்கள்

பிடித்த படங்கள்:- கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும், அன்பேசிவம், விருமாண்டி, அஞ்சாதே, அலைபாயுதே, வசீகரா.


போதும், அவ்வளவுதான். தொடர் சங்கிலி இடுகையை எனக்குத் தெரிந்த அனைவரும் ஏற்கனவே கோர்த்துவிட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.(அண்ணன் மாதவராஜின் ஆசை இங்கே நிறைவேறியிருக்கலாம்)

26 comments:

அப்பாவி முரு said...

ஓக்கே ஸ்டார்ட்.,

கும்முபவர்கள் கும்மலாம்.

இராகவன் நைஜிரியா said...

// ஓக்கே ஸ்டார்ட்.,

கும்முபவர்கள் கும்மலாம்.//

நீங்க சொன்னா நான் கும்மனுமா... முடியாது..

அறிவிலி said...

//7) நடிகைகள்

பிடித்தவர் :- யாருமில்லை

பிடிக்காதவர் :- நயன்தாரா//

கல்யாணம் நிச்சயமாயிடுச்சா???

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு போட்டாச்சுங்க

இராகவன் நைஜிரியா said...

// (இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) //

இப்படியெல்லாம் வேற இருக்கா என்ன?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

8) காவல்துறை

பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்

பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்

9) ஆட்சியாளர்கள்

பிடித்தவர் :- நரேஷ் குப்தா

பிடிக்காதவர்கள் :- ஏகப்பட்ட”பேர்”கள்
//
இது நன்று!

vasu balaji said...

நல்ல ரசனைங்க முரு.

cheena (சீனா) said...

mmmmm ப்படியும் இடுகை இடலாமா அப்பாவி முரு

பதில்கள் இயல்பாக இருக்கின்றன

நல்வாழ்த்துகள்

RAMYA said...

நடிகைகள்ளே யாருமே புடிக்காதா??

இந்த பத்தில்லே உங்க நேர்மையை கண்டிப்பா பாராட்டியே தீரனும்:)

RAMYA said...

//
3)திரைப்பட இயக்குநர்

பிடித்தவர்கள் :- மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கமல்

பிடிக்காதவர்கள் : - ஷங்கர்
//

இந்த பதில் எனக்கு ரொம்ப பிடிச்சுது :)

RAMYA said...

//
8) காவல்துறை

பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்

பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்
//

ம்ம்ம்ம்.... நல்லா சொல்லி இருக்கீங்க
நல்லா இருக்கு முரு :)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ரசனைகள்

பித்தனின் வாக்கு said...

எப்படி இப்படி எல்லாம்.

// நடிகைகள்ளே யாருமே புடிக்காதா??

இந்த பத்தில்லே உங்க நேர்மையை கண்டிப்பா பாராட்டியே தீரனும்:) //
ரம்யா இதுல உள்குத்து எதுவும் இல்லை என்று நினைக்கின்றேன். நன்றி.

வால்பையன் said...

சன் குழமத்தை விட ஏ.வி.எம் உங்களை எந்த வகையில் பாதித்தது என தெரிந்து கொள்ளலாமா!?

தத்துபித்து said...

//சன் குழமத்தை விட ஏ.வி.எம் உங்களை எந்த வகையில் பாதித்தது என தெரிந்து கொள்ளலாமா!?//

அதானே ...

அப்பாவி முரு said...

@ இராகவன் நைஜிரியா said...


நீங்க சொன்னா நான் கும்மனுமா... முடியாது..//

யார் சொன்னா நீங்க கும்முவீங்கன்னு எனக்குத் தெரியும்.

:)

***********************************

//அறிவிலி said...

கல்யாணம் நிச்சயமாயிடுச்சா???//

மையமா தைலையாட்டுபதை தவிர வேற் வழியில்லை.

:)

**************************************

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றி வெளிச்ச பதிவர். (நேரில் பார்த்த மங்களா இருக்கீங்க, புகைப் படங்களில் பார்த்த பளிச்சுன்னு இருக்கீங்களே எப்பிடி?)

அப்பாவி முரு said...

//வானம்பாடிகள் said...
நல்ல ரசனைங்க முரு.//

நன்றி ஐய்யா/ நைனா!!!

*****************************************

//cheena (சீனா) said...

நன்றி ஐய்யா.

****************************************

//RAMYA said... //

நன்றி ரம்யா

***************************************

நன்றி ஞானி அண்ணா...

ரோஸ்விக் said...

//பிடித்தவர் :- யாருமில்லை

பிடிக்காதவர் :- நயன்தாரா//


இப்புடி அப்பாவியா பதில் சொல்லி இருக்கீங்களே....உண்மை தானா?

வால் கேட்ட கேள்விய நானும் கேக்குறேன் நண்பா. :-)

அப்பாவி முரு said...

//பித்தனின் வாக்கு said...

நன்றி சுதாகர் அண்ணன்.

***************************************

//வால்பையன் said...
சன் குழமத்தை விட ஏ.வி.எம் உங்களை எந்த வகையில் பாதித்தது என தெரிந்து கொள்ளலாமா!?//

அவர் அப்பா, இவர் பிள்ளை...(எஞ்சோட்டு பையன்)

பையன் ஏன் இப்பிடி இருக்கான்னா, அப்பா அப்பிடி. அவ்வளவுதான்.

*************************************

தத்துபித்து

மேலே சொன்ன அதேதான்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதில்கள்.நடிகைகள் யாரையுமே பிடிக்காதாம்ல,அதுதான் நம்புறதுக்கு கஷ்டமாயிருக்கு.

Thamira said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கு பிடிக்காதங்க இருக்கலாம். உங்களைப் பிடிக்காதவங்க யாரும் இருப்பாங்களா :))

அப்பாவி முரு said...

//ஸ்ரீ said...
நல்ல பதில்கள்.நடிகைகள் யாரையுமே பிடிக்காதாம்ல,அதுதான் நம்புறதுக்கு கஷ்டமாயிருக்கு.//

நம்பணும் ஸ்ரீ நம்பணும்.

*****************************

//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.//

என்னோட பங்கை மிகச்சரியாக பிரித்து எடுத்துக் கொண்டேன். (நானும் டெண்டுல்கர் தான்)

***********************************

//எம்.எம்.அப்துல்லா said...
உங்களுக்கு பிடிக்காதங்க இருக்கலாம். உங்களைப் பிடிக்காதவங்க யாரும் இருப்பாங்களா :))//

ஆவ்வ்வ்வ்வ்

பழமைபேசி said...

//அரசியல்

பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்

பிடிக்காதவர் :- ஜெயலலிதா//

பின்னதும் இறந்த காலத்திய ஒன்றுதானே?! இஃகி!

அப்பாவி முரு said...

//பழமைபேசி said...
//அரசியல்

பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்

பிடிக்காதவர் :- ஜெயலலிதா//

பின்னதும் இறந்த காலத்திய ஒன்றுதானே?! இஃகி!//

பின்னது நிரந்தரம் (ஊறிய காய், ஊறுகாய், ஊறும் காய் மாதிரி, கர்ணனின் செய் பலனெல்லாம் தானமாக கேட்டதைப் போல் முக்காலத்திற்கும் ஒரே சொல்)

அன்புடன் நான் said...

எண்ண வெளிச்சம் ... மின்னுகிறது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB