ஆயாக்களின் உலகம்

”கண்ணா, சூதாடலைன்னா சீனன் செத்துடுவான்,பேசலைன்னா தமிழன் செத்துடுவான்” என்றே ஒரு வரி புழக்கம் திரையில் கேட்டதாக ஞாபகம். அதில் தமிழனைப்பற்றிய வரி மிகச்சரி எனபதற்க்கு மிகப்பெரும் உதாரணம் பலஉண்டு. அதில் எனக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் சீனனைப் பற்றிய வரியை சமீபத்தில் தான் கண்டுணர்ந்தேன், பல லச்சங்களின் செலவில்.
பணியினினடிப்பையில் மலேயா தலைநகரத்தில் ஒரு வாரம் டாப் அடிக்கவேண்டியிருந்தது. சனிக்கிழமை வரை வேலைப் பார்த்தாயிற்று. ஞாயிறு வேலைகொடுப்பவர் வேலைக்கு வரமாட்டேன் என்றதும், சனியிரவு – ஞாயிறு எனும் பெரும்பொழுதை மன சஞ்சரங்களில்லாமல் கழிக்க வேண்டுமே. என்ன தான் நவீன நகரங்களில் ஒன்றாகயிருந்தாலும், சென்னை தோற்கும், நெரிசலில். அதைக்காரணமாக்கி உடனிருக்கும் அதிகாரிகள் ஊருக்குள் உலாவர பயங்கொண்டு, ஊருக்கு வெளியே குறைந்த தூரத்தில் எங்காவது போய்வரலாம், நம்மிடம் தான் கார் இருக்கிறதே என்றது எங்கள் கூட்டத்தின் பெரும் தலை.


மாலையைத் தாண்டிவிட்டதால், உணவெடுத்ததும் மலையேருவோம், ஒரு மணிநேரப்பயணம் தான் என திட்டம் தீட்டப்பட்டது. எண்ணம் போல் நால்வரும் ஆறுமணிக்குக் கூடி உணவுக்காக ஒரு கொரியன் (”ன்” தானே, இல்லை மரியாதைக்காக ”ர்” வேண்டுமா?) உணவுக்கூடத்தில் கூடி சுட்டுத்தின்னும் கறிவகைகளை பட்டியலிட்டு வாங்கி பல்வேறு சுவைகளை ஒன்றாக மென்று முடித்து ஒன்பதுக்கெல்லாம் கார் கிளம்பியது மலையை நோக்கி. இது, கோலாலம்பூரில் அருள் பாலிக்கும் பத்து மலை முருகன் கோவிலை நோக்கியல்ல, பண வசூலில் திருப்பதிக்கே லட்டு அல்லது அல்வா அல்லது பஞ்சாமிர்தம் தரத்தகுதி வாய்ந்த பெருங்கடவுள். நாளுக்கு ஐய்யாயிரத்திற்கும் மேலான மக்கள் மலையேறி தரிசிக்கும் ஆலயம். அது தான் ”கேசினோ டி ஜெண்டிங்”.


சராசரி நிலபரப்பில் இருக்கும் கோலாலம்பூருக்கு மிக சமீபத்திலேயே இருந்தாலும், பாதி தூரத்துலேயே கண்ணை மறைக்கும் இருட்டு. சாலையில் இருமறுகிலும் விளக்குகள் இருந்தபோதும், வெளிச்சம் போதவில்லை. வாகனத்தை செலுத்தும் நண்பரிடம் பேச்சுக்கொடுத்ததில் தான் தெரிந்தது, சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் ரிஃப்ளெக்டரின் வரிசையை மட்டும் நம்பி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆகா, என்ன நம்பிக்கை. மலையேறிக் கொண்டிருக்கும் போதே பேச்சில் வெற்றிபெரும் பெரும் நம்பிக்கைகள் சகுனத்தின் வாயிலாக வெளிப்பட ஆரம்பித்தன. பின்னே இருக்காதா? இரண்டு நிமிட பயணதூரத்தில் 2222, 3333, 4444 என ஒரே எண்களால் பதிவு செய்யப்பட்ட காடிகளைக் கண்ட பின் மனது முழுக்க கெவுளி கத்தத்தானே செய்யும்!


இரவு 10.30க்கெல்லாம், சம்பிரதாயங்களை முடித்து சூதாட்ட மைதானத்தில் ஆளுக்கொரு பக்கம் களம்புகுந்தோம், ஒன்றாக சூதாடினால் சரிவராது என்ற சூதாட்டவிதியின் படி. சீட்டுகட்டினை வைத்தும், தாயக் கட்டைகளை வைத்தும், நவீன தொழில்நுட்டத்தின் படியினால வீடியோ கேம்கள் என ம்ம்ம்ம் எத்துனை வகையான ஆட்டங்கள். அதுவும் மிகக்குறைந்த தொகைலிருந்து, மிகப்பெரும் தொகைவரை.


சுற்றிச்சுற்றி வந்து சூதாட்டத்தின் ஆரம்ப பாடங்களை படித்ததும், மூணு சீட்டு போக்கரின் விதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் எளிதாக இருப்பதினாலும், நான் துப்புபார்த்த மேசைல் பலர் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்த்தாலும், ஏழுபேர் வரை ஆடும் மேசையில் ஒரு இடம் காலியானதாலும் பல லச்சங்களை அள்ளும் ஆவலில் பாய்ந்து இடத்தைப் பிடித்தேன். அடுத்த ஆட்டம் ஆரம்ப்பிப்பதற்குள் 200 ரிங்கிட் (மலேசிய பணம்) கொடுத்ததும், இருப்பத்திஐந்து ரிங்கிட் மதிப்புள்ள வில்லைகள் எட்டினைக் கொடுத்தார்கள். பணத்தை வாங்கி புற ஊதா(அட்ரா வைலட்) விளக்கினை வைத்து சரி பார்ப்பதும், சரியாக இருக்கும் பணத்தினை மேசையிலேயே இருக்கும் மிக்சிறிய நீளமான ஓட்டையின் வழியாக உள்ளே தள்ளும் போதே மனதுக்குள் எதிர் கெவுளி கத்தியது.


ஆனால், சூதாட்ட வில்லைகளை கையில் வைத்து நிமிந்து உட்கார்ந்து “கேசினோ ராயல்ஸ்”- ல் ஆடிய ஆட்டக்காரர்களில் தோரணையில் முகத்தை வைத்துக்கொண்டு நானும் இரண்டு வில்லைகளை வைத்து பெட்டிங்கை ஆரம்பித்தேன். எனக்கு வந்த சீட்டில் 7, 8, Q இருந்தது. ஒரு ஜோடி இருந்தால் வாய்ப்பதிகம், அடுத்ததாக பெரிய மதிப்புள்ள சீட்டிருந்தால் வெல்லும் வாய்ப்புள்ளதால் துணிந்து மேலும் ஒரு வில்லை வைத்து பேங்கரை ஆட அழைத்தேன். ஆடிய எழுவரில் இரண்டுபேர் சீட்டு சரியில்லாததால் ஆடவிருப்பமில்லாமல் சீட்டை வைத்ததும் பேங்கர் மொத்த வில்லைகளையும் எடுத்துக்கொண்டார். ஆனால், என்னிடம் தான் Queen இருக்கிறதே என தைரியமாக இருந்தேன். ஆட்டத்தை தொடர விரும்பும் எல்லோரும் வில்லைகளை வைத்து பேங்கரை ஆட அழைத்ததும், பேங்கர் தனது சீட்டினை திருப்புனார். 6, 2, 9 என மூன்றும் தனித்தனி சீட்டுகள். அப்பாடா, தோல்வி இல்லை ஆனாலும் வெற்றியும் இல்லை. நம்முடைய வில்லையை அப்படியே திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

அப்படி ஆரம்பித்த ஆட்டம் மெல்ல, மெல்ல சூடுபிடித்து வெற்றியும், தோல்வியும், கைகாசுமாக அரைமணிநேர ஆட்டத்திற்குப் பின் கையிலிருந்த வில்லையை எண்ணிப் பார்த்தால் 350 மலேசிய பணமாக இருந்தது. அரைகுறை ஆட்ட நுணுக்கத்திலேயே 150 ரிங்கிட் லாபம் பார்த்துவிட்டோமெனும் மிதக்கமும் நானும் ஒரு கேம்ளர் (சூதாடி) எனும் பெருமையும் மெதுவாய் தலைக்கேற, ஆட்ட முறையை தற்காப்பு ஆட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டமாக மாற்றி விளையாட ஆரம்பித்தேன். அப்பப்போ பிளாஃப் ஆட்டமுமாக முரட்டுத்தனமாக ஆடிய அரை மணிநேரத்திலேயே கையிலிருந்த 300 ரிங்கிட்டும் போச்சு. ஆவ்வ்வ்வ், மீதமிருக்கும் 50 ரிங்கிட் வில்லையை வைத்து ஆடமுடியாததால், கடந்த ஒரு மணிநேரமாக உடனிருந்த இருக்கையை பிரிய மனமில்லாமல் இருந்தாலும், அதற்கும் மேல் அங்கிருக்க மனமும், மானமும் இடங்கொடுக்காத்தால், மெல்ல நகர்ந்து அப்பெருங் கூடத்தை சுற்ற பார்க்கலானேன்.


மனதின் மயக்கங்கள் கலைந்து போனதாலும், போனது இனி வாராதென்பதாலும் மெல்ல மனதை ஆறுதலடைய ஆரம்பித்தது. இனி கவனத்தை வேறுபக்கமாக்கினால் ஒழிய நேரத்தை கடத்த முடியாது. ஏனெனில் மீண்டும் நண்பர்கள் கூடும் நேரம் காலை மூணோ, நாலோவாகத்தானிருக்கும். அப்பெருமுகலகில் மெல்ல சுற்றிவரும் போதுதான் கவனித்தேன். ஆடும், சூதாடிகளில் பாதிக்கும் சற்றுமேலானோர் பெண்களே. அதுவும், அறுபதுக்கும் மேற்பட்டோரே அதிகம். ஆவல் தூண்ட கவணத்தை முழுக்க முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட ஆயாக்களின் மேலே வைக்கலானேன். கைநிறைய வில்லைகளோ, அல்லது மலேசிய பணத்தோடோ ஓடி, ஓடி தேவையான மேசைகளை நிறைத்து பேங்கரோடு சவால்விட்டு ஆடலாகினர். சில ஆட்டங்களில் துணைவிதிகளின் படி, நம் கையிலிருக்கும் சீட்டும், பேங்கரின் சீட்டும் ஒரே பூ, ஒரே நம்பராக இருந்தால் நம் பெட்டிங் பணத்தைவிட பத்து மடங்கு அல்லது இருபது மடங்கோ கிடைக்கும் என்பது போன்ற சூழ்நிலையில், தன் கையிலிருக்கும் சீட்டையே பேங்கரும் திருப்பும் படி பெருங்குரலெடுத்து கத்துவதோடு, அப்படியே வந்துவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டமே கொள்கிறார்கள்.

பணம் போன துக்கத்தில், தூக்கம் தொலைந்தே போனது. கையிருக்கும் குறைந்த காசுக்கும் தேநீர் வாங்கிக் குடித்து பொழுதைப் போக்கி நாலுமணிக்கு நண்பர்களை தேடிப் பார்த்தால் எல்லோரும் தொங்கிய தலையோடே வெளியேற எத்தனித்தனர். என்ன ஆனதென்ற கேள்விக்கு துக்கமே பதிலானது. ஆழமான விசாரனையின் முடியில், முடிவேதுமில்லாமல் மலையில் அடியை நோக்கி கரும் இருளில் காரில் பாய ஆரம்பித்தோம். சீன நண்பரிடம் ஆயாக்களைப் பற்றி கேட்டதும், பெரும்பாலான ஆயாக்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் மாதாந்திர செலவுக்கான பணத்தில் மிச்சத்தை இப்படித்தான் ஆடி விடுவார்கள் என்றார். அடப்பாவி பணத்தை விடுவதற்க்காக மட்டுமே மலையேறுவீர்களோ? வரும் போது பெரும் நம்பிக்கையோடு இருந்தீர்களே என வினவியதில், நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற பதில் மட்டும் கிடைத்தது. மேலே ஏதும் பேச விரும்பாமல் அமைதியானேன்.

19 comments:

Raju said...

நீங்கதான் பாஸு சூதாடி சித்தன்.

vasu balaji said...

ராஜு ♠ said...

/நீங்கதான் பாஸு சூதாடி சித்தன்./

நல்லா வைக்கிறாங்கப்பா பேரு:))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பொழுது நல்லாப் போச்சுல்ல ,அதுக்கு விலைதான் அது.

இராகவன் நைஜிரியா said...

பணம் போகும் அப்படின்னு தெரிஞ்சுதானே போனீங்க...

இதில் இருந்து அறியும் பாடம்..

டிபன்சிவ் கேம்தான் என்னிக்குமே சரி..

அதுசரி கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் தெரியும் டிபன்சிவ் கேம் பற்றி..

அன்புடன் நான் said...

அனுபவம் அருமைங்க... அப்படியே தொடர் வண்டி எடுத்து (எம் ஆர் டி )
கிராஞ்சி யில இறங்கி .....(குதிரை பந்தயம்) அதையும் ஒரு கை பார்த்து தெளிவா எழுத முடியுமான்னு பாருங்க.
ஏன்னா உங்க அனுபவம்... மற்றவர்களுக்கு உதவியா இருக்குமுங்க.

அறிவிலி said...

அங்க ஜெயிக்கறது கேசினோ நடத்தறவன் மட்டுந்தான்.

பூங்குன்றன்.வே said...

//நீங்கதான் பாஸு சூதாடி சித்தன்//

ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...........

hayyram said...

//நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற பதில் மட்டும் கிடைத்தது// ஆஹா அங்கே தானே ஆரம்பிக்கும் தத்துவம்.

நிஜமா நல்லவன் said...

//நீங்கதான் பாஸு சூதாடி சித்தன்//

ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...........

உங்கள் ராட் மாதவ் said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் பகிர்வு சூப்பர்...

அப்பாவி முரு said...

@ ♠ ராஜு ♠

புதுப் பேருக்கு டேங்க்ஸ் ராஜீ...

@ வானம்பாடிகள்

ஆமாம் நைநா, அந்தப் பையன் என்ன டீஸ் பண்ணுறான். என்னன்னு கேளுங்க....

@ஸ்ரீ

ரூமில் இருந்தாலும் நல்லா பொழுதை போக்கியிருந்திருப்பேன். காஸ்ட்லி பொழுது பொக்கோ!!!

@ இராகவன் நைஜிரியா

இல்லீண்ணா, அப்பன்ஸ் ஆடிட்டு பின்னாளில் டிபன்ஸ் ஆடணுமா? இல்லை ஆரம்பத்திலிருந்தே டிபன்ஸ் மட்டுமே ஆடணுமா?

@ சி. கருணாகரசு

ஓ, வலையுலக நலனுக்காக நான் பல லச்சங்கள் செலவழிச்சு சூதாடணுமா???

ஆவ்வ்வ்வ்வ்

@ அறிவிலி

ஆமாண்ணே, இப்ப தான் சொன்னாங்க

House Never Lose - ன்னு.

@ பூங்குன்றன் வேதநாயகம்

ஏன் சார், நீங்க அருமையான பேரு வச்சுக்குவீங்க. நான் மட்டும்...

@ hayyram

ஆமாண்ணே...

@ நிஜமா நல்லவன்

உர்ர்ர்ர்ர்ர்(கோவம்)

@ RAD MADHAV

கண்டிப்பாய் கலந்துக்குவோம்.

@ ஆ.ஞானசேகரன்

நன்றிண்ணா...

தத்துபித்து said...

//டிபன்சிவ் கேம்தான் என்னிக்குமே சரி..

அதுசரி கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் தெரியும் டிபன்சிவ் கேம் பற்றி..//

ராகவன் அண்ணே எதாவது உள்குத்து இருக்கா?

பித்தனின் வாக்கு said...

ஹா புள்ள சூது எல்லாம் ஆடுது, இன்னாம்மா இதுக்கு யாரு அப்பாவின்னு பேரு வைச்சா படுபாவின்னு இல்ல பேரு வைக்கேனும். சரி விடு கழுதை காசை விட்டுட்டு வந்து நிக்குது, பாவம் அப்பாவின்னு ஒத்துக்கலாம். நன்றி.

ISR Selvakumar said...

நன்றாக இருந்தது.

பழமைபேசி said...

Genting Highland... ரைட்டு!

நிஜமா நல்லவன் said...

/அப்பாவி முரு said...உர்ர்ர்ர்ர்ர்(கோவம்)/


ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...........

VIKNESHWARAN ADAKKALAM said...

nice post boss

thiyaa said...

சூப்பர்..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB