ஜாதி, ஜாதி என்கிறார்களே, இந்த ஜாதி – என்னுடைய ஜாதி, எனக்குத் தெரிந்து தான் என்னுள் புகுந்ததா? இல்லை எனக்குத் தெரியாமலே என்னுள் புகுந்ததா?. இந்த கேள்விக்கான விடையை தேடி தனியே பின்னோக்கிய எனக்குள்ளான பயணத்தில், நான்கைந்து சம்பவங்களை வரிசைப் படுத்தியதும் கிடைத்தது பதில். ஆனால் அந்த விடையினால் நான் அடைந்தது உயர் மின்சாரத்தின் அதிர்ச்சி மட்டுமே.
ஐந்தாம் வகுப்பை உயர்தரமாக முடித்து, வெற்றிகரமாக வெளியேறும் போது, தலைமையாசிரியர் தனிப்பட்ட முறையில் தந்தையின் காதைக்கடித்து “இவனை முடிந்தால், சைனிக்(இராணுவ) பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுங்கள். அவர்களாவது இவனது வாலை நறுக்குகிறார்களா? எனப் பார்ப்போம்” என கூறியது மட்டுமில்லாது, வழக்கமான முடுக்கத்தில் தலையில் குட்டியது வழக்கம் போல் மூளைவரை வலித்தது. அடுத்து, மாற்றுச் சான்றிதழில் (T. C ) ஜாதிப் பெயரை எழுதும் முன் கனமான கோபுர முத்திரை கொண்ட பழுப்பேறிய புத்தகத்தை பக்கம் பக்கமாய் புரட்டி, இந்த மாவட்டத்தில் எனது ஜாதி பிற்படுத்தப்பட்ட பிரிவா? இல்லை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருகிறதா என துல்லியமாய் ஆராய்ந்து, கவனமாக எழுத்து பிழையில்லாமல் எழுதிக்கொடுத்தது மட்டுமில்லாது, அடுத்த பள்ளிக்கூடத்தில் கேட்டால் எப்படிச் சொல்வது என எனக்கு சொல்லிக்கொடுத்தது தான், என்வாழ்வில் முதல் நிகழ்ச்சி.
வாழ்வின் முக்கிய தருணங்களில் அதிமுக்கியமானது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து வரும் விடுமுறை. நல்லமுறையில் தேர்வு எழுதி நுழைவுத்தேர்வுக்கு தயாரானவர்களும், வெற்றியைப் பற்றி கவலையில்லாமல் காலை, மாலை வெவ்வேறு வகையான பயிற்சிகளில், உடலை வளர்த்தவர்களும், ஒருங்கே கூடி முடிவெடுத்து போன இடம், கிராம நிர்வாக அலுவலகம், ஜாதி சான்றிதழ் வாங்க.
நான்கு பக்கத்திற்கு அச்சிட்ட மனுவில் ”கட்டம் காலிவிடாமல்” நிரப்பியது மட்டுமல்லாது, இரண்டு பெரிய மனிதர்கள், நான் இந்த ஜாதிதான் மற்றும் இந்த முகவரியில் தான் வசிக்கிறார்’ என சான்றளித்துள்ளதை வாங்கி உறுதிப்படுத்திய அலுவலர், கையெழுத்திட்டு சொன்ன வார்த்தை, “தம்பி, தாலுகா ஆபீஸில் கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்குறப்ப, ஜாதிப்பேரை ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் இல்லாம எழுதியிருக்கான்னு பாத்து வாங்கிகங்க, இல்லன்னா ரொம்ப சிரமப்படணும்” என மிரட்டி என் ஜாதியை எழுத்துப்பிழை இல்லாமல் இருக்க என்னுள் ஊட்டியது தான், என்வாழ்வின் இரண்டாம் நிகழ்ச்சி.
காலம் காலமாக கனியாத பழம், தானாகக் கனிந்து வாசம் வீசியதை உணர்ந்தவுடன், தவற விட மனமில்லாமல் ஆட்(டு)களோடு ஆட்(டு)களாக, நானும் தமிழ்நாடு பொது தேர்வு கழக, நான்காம் நிலைக்கு தேர்வுக்கு மனுப்போட்டேன். வரைவோலை அனுப்பி காத்திருந்த நேரத்தில், பெயர் பொறித்த ஓலை வந்தது. கடிதத்தின் கனத்தினையும், அதிலிருந்த கத்தையான காதிதங்களைக் கண்டதும், ஆகா, நம் திறமையை தெரிந்து தேர்வில்லாமல் நேரடியாகவே தேர்ந்தெடுத்தார்களோ? என மனப்பாலை சப்பி, சப்பி குடித்தபடியே கடிதத்தைத் திறந்து பார்த்தேன்.
மனப்பாலைக் குடித்ததாலோ என்னவோ, மயக்கமே வந்தது. காரணம் வழக்கம் போல்., ஜாதிதான்….
நிரப்பி அனுப்பவேண்டியது இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு தாள் மட்டும் தான். மீதமிருந்த்த கத்தையான காகிதங்களெல்லாம், குப்பையில்லை. தமிழ்நாட்டிலிருக்கும் ஜாதிகளும், அதற்கான விளக்கங்கள்,.. விளக்கங்கள்.., விளக்கங்கள் மட்டுமே. பொதுப் பிரிவில் வரும் ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஜாதிகள் / சீர் மரபினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் / மலைஜாதியினர் என நான்கு பிரிவுகளில் தலைப்பிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள். அடேயப்பா… சில ஜாதிகளைத் தாண்டி, மற்ற அனைத்து ஜாதிகளும், அன்று தான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன்.
என் தமிழ் மக்களை, இந்த சின்னஞ்சிறிய தமிழ்நாட்டிற்குள்ளேயே எத்தனை, எத்தனை பிரிவாக பிரித்துவைத்துள்ளார்கள் என்ற வருத்தம், என்னுள் மின்னலாக மின்னியது. ஆனால், அந்த மின்னல் அழகாக இல்லை.
சில ஜாதிகள் இரண்டு பிரிவுகளிலும் இருந்த்து. நாகபதனி – நாகப்பதனி (நன்றி, 23ம் புலிகேசி) போல ”ப்பன்னா” வித்தியாசமோ என்று பார்த்தால், நான் இரண்டிலும் பார்த்த ஜாதிக்கு ”ப்பன்னாவே” இல்லை. என்ன கொடுமை சரவணா???
என உற்று நோக்கினால், நோக்கியா இல்லாமலே வித்தியாசம் ஒன்று தெரிந்த்தது. ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் திருநெல்வேலியில் வாழ்ந்தால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்றால், அதே ஜாதியைச் சேர்ந்தவர் விழுப்புரத்தில் வாழ்ந்தால் பிற்படுத்தவர் மட்டுமே. இந்தவகையில் பல ஜாதிகள் பல பக்கங்களை அலங்கரித்து கொண்டிருந்தது.
மயக்கம் தெளிந்து, எனது ஜாதி, எனது மாவட்டத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சரியாக பார்த்து, எழுத்துப்பிழை இல்லாமல், மனுவில் சரியாக எழுதி முடித்தும், இரண்டு நாட்கள் உறக்கமில்லாமல், புரண்டு, புரண்டு படுக்கவேண்டி இருந்தது. ஏனென்றால்.,
ஜாதிகள், இரண்டொழிய வேறில்லை, என பாடப் புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வளர்ந்தாலும், அரசாங்கத்தின் பெரும்பாலான விண்ணப்பங்களில் என்ன ஜாதி? என்ற கேள்விகளும், ஜாதியை தவறாக எழுதினால் கடுமையான தண்டனை என்ற எச்சரிக்கையும்!,
இவையனைத்தும் இருக்கும் காலம் வரை ஜாதிகள் இருக்கும்!!! ஜாதி வன்கொடுமைகளும் இருக்கும்!!!
என்றே நான் கருதுகிறேன்.
இதில் மாற்று கருத்து ஏதும் உண்டா?

21 comments:
நல்ல பதிவு, நல்ல பகிர்வு,
இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்க்காகவே சிலர் அவர்கள் வகுப்பினரால் கீழானது என்று சொல்லும் ஜாதி பெயரில் சான்றிதழ் வாங்கியதும் உண்டு. முன்பு ஒரு நிதிபதி பெயர் அந்தவகையில் அடிபட்டது. அரசாங்க கெடுபிடிகள் இல்லை என்றால் பலரும் தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்ததாக சான்றிதழ் வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
நல்ல பதிவு, நல்ல பகிர்வு,//
நன்றி அண்ணா.,
//இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்க்காகவே சிலர் அவர்கள் வகுப்பினரால் கீழானது என்று சொல்லும் ஜாதி பெயரில் சான்றிதழ் வாங்கியதும் உண்டு. முன்பு ஒரு நிதிபதி பெயர் அந்தவகையில் அடிபட்டது. அரசாங்க கெடுபிடிகள் இல்லை என்றால் பலரும் தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்ததாக சான்றிதழ் வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள்//
அதைத்தான் நானும் சொல்கிறேன்., மககள் பலன் கிடைக்குமானால் எந்த நிலைக்கும் இறங்க தயாராகத்தான் இருக்கிறார்கள்.
அரசாங்கம் அதை முறைப்படுத்தி., மக்களை ஜாதியெனும் மாயையிலிருந்து வெளிப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம்.
நல்ல ஆதங்கப் பதிவு!
//ஜாதி, ஜாதி எனது ஜாதி//
தலைப்பைப் பார்த்தேன்!
என் பேரு கொம்பில்லாம இருக்கே என்ன காரணம்னுட்டு வந்தேன்.
ஜாதிக்கு கொம்பில்லாம இருந்தா நல்லாத்தான் இருக்கு!
அருமை!
நல்ல ஆதங்கப் பதிவு!//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
+++++++++++++++++++++++++++++
ஜோதிபாரதி said...
//ஜாதி, ஜாதி எனது ஜாதி//
தலைப்பைப் பார்த்தேன்!
என் பேரு கொம்பில்லாம இருக்கே என்ன காரணம்னுட்டு வந்தேன்.
ஜாதிக்கு கொம்பில்லாம இருந்தா நல்லாத்தான் இருக்கு!
அருமை!
இல்லை..
ஜாதிக்கு ரெட்டை கொம்பு போட்டு ஜோதியாக்குவோம்.
ஏனென்றால், ஜாதியில் தான் வித்யாசங்கள்.
ஜோதியில் இல்லை...
நன்னா சொல்லியிருக்கேள்.
இட ஒதுக்கீடு என்பது பொதுப்பிரிவு அல்லது முன்னேறிய பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினர் ஆகிய இந்த 4 பிரிவுகளின் அடிப்படையிலத் தானே வருது.
அப்போ முதல்வன் படத்துல சொல்லியிருக்க மாதிரி இந்த 4 பிரிவ மட்டும் வைச்சுக்கிட்டு மிச்சத்த எல்லாம் தூக்கியெறிஞ்சுடலாம்ல?
நன்னா தான் சொல்லியிருக்கேள்.
வாழ்த்துக்கள்.
மூக்குல உள்ள சளிய ஒன்னும் பண்ண முடியாது.
அப்பப்ப வெளியேற்றினாலும் திரும்பவும் வந்து கொண்டே தானிருக்கும்.
உருப்படியான பதிவு முரு...
ஜாதி - இது நிச்சியம் அழியும்
நாம் இருப்பமா பார்க்க என்று தெரியாது.
ஜாதியில ஜோதி வச்சாலும் அழியாது
அதைக்கொண்டு நம்மள அழிக்காம பார்த்துக்க வேண்டியது தான்.
நன்னா சொல்லியிருக்கேள்.
இட ஒதுக்கீடு என்பது பொதுப்பிரிவு அல்லது முன்னேறிய பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினர் ஆகிய இந்த 4 பிரிவுகளின் அடிப்படையிலத் தானே வருது.
அப்போ முதல்வன் படத்துல சொல்லியிருக்க மாதிரி இந்த 4 பிரிவ மட்டும் வைச்சுக்கிட்டு மிச்சத்த எல்லாம் தூக்கியெறிஞ்சுடலாம்ல?
நன்னா தான் சொல்லியிருக்கேள்.
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி. படத்துல சொல்லிக்கூட 10 வருசத்துக்கு மேல ஆச்சு, ஆனா யாருக்கும் புரியலையே.
மூக்குல உள்ள சளிய ஒன்னும் பண்ண முடியாது.
அப்பப்ப வெளியேற்றினாலும் திரும்பவும் வந்து கொண்டே தானிருக்கும்.
உருப்படியான பதிவு முரு...//
வாங்க செய்யது....
_____________________________
//நட்புடன் ஜமால் said...
ஜாதியில ஜோதி வச்சாலும் அழியாது
அதைக்கொண்டு நம்மள அழிக்காம பார்த்துக்க வேண்டியது தான்.//
வாங்க ஜமால்.
உங்கள் ஆதங்கம் நியாமானது...அதனை தீர்க்க வேண்டியவர்களில் அதில் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள்...
உங்கள் ஆதங்கம் நியாமானது...அதனை தீர்க்க வேண்டியவர்களில் அதில் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள்...//
வாங்க லீ...
ஏன் இந்தியால, சூடு கம்மியா...
நல்லா எழுதுறீங்க. நல்ல கருத்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்க..
//Seemachu said...
நல்லா எழுதுறீங்க. நல்ல கருத்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்க..
//
அண்ணாச்சி சொன்னதேதான்...
ஜாதி இல்லையேல் இன்றைக்கு அரசியல் செய்ய இயலாது. வேட்பாளர் தேர்வுக்கு கூட ஜாதிதான் முதலில் பார்க்கப் படுகின்றது, பின்னர்தான் அவரின் மற்ற தகுதிகள்.
நண்பர் ஜமால் அவர்கள் சொல்லியிருப்பது மாதிரி, ஜாதி நிச்சயம் ஒழியும், ஆனால் அதைப் பார்ப்பதற்கு நாம் இருப்போமா என்றுதான் தெரியாது.
நல்லா எழுதுறீங்க. நல்ல கருத்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்க..//
நன்றி சீமச்சு., முதல் வருகை.
+++++++++++++++++++++++++++++++++++
பழமைபேசி said...
//Seemachu said...
நல்லா எழுதுறீங்க. நல்ல கருத்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்க..
//
அண்ணாச்சி சொன்னதேதான்...//
நன்றி பழமைபேசி.,
+++++++++++++++++++++++++++++++++++
இராகவன் நைஜிரியா said...
ஜாதி இல்லையேல் இன்றைக்கு அரசியல் செய்ய இயலாது. வேட்பாளர் தேர்வுக்கு கூட ஜாதிதான் முதலில் பார்க்கப் படுகின்றது, பின்னர்தான் அவரின் மற்ற தகுதிகள்.
நண்பர் ஜமால் அவர்கள் சொல்லியிருப்பது மாதிரி, ஜாதி நிச்சயம் ஒழியும், ஆனால் அதைப் பார்ப்பதற்கு நாம் இருப்போமா என்றுதான் தெரியாது.
வாங்கண்ணே.,
உணமை தான் மக்கள் ஜாதவெறியில் ஒரு அடி எடுத்து வைத்தால், அரசியல் கட்சிகள் ஜாதிவெறியில் நூறு அடி எடுத்து வைக்கின்றன.
யார்., யாரை திருத்துவது....
தன் மேல் நம்பிக்கையற்ற தன் குழந்தைகள் நோகாமல் நோம்பு கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தம்மை தாழ்த்தப்பட்டவராக சான்றிதழ் வாங்கி கொள்வார்கள்!
மனிதரில் எதற்கு சாதிகள்?
அவைகளை கட்டி காப்பாற்றுவது யார்!
இந்த கேள்விகளை நான் பல பேரிடம் கேட்டிருகிறேன்!
அவர்களது பதிலில் தெரிந்தது!
தம்மை உயர்குடி என்று நினைப்பவர்கள் சாதி வேண்டும் என்றும் அதனால் தான் பிற்படுத்த பட்டவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்கிறார்கள்!
உண்மையில் பிற்படுத்தப்பட்டவர்கள் சாதியே வேண்டாம் என்கிறார்கள்!
உயர்சாதி என்று தம்மை நினைத்து கொள்பவர்கள் வசதி குறைவாக இருந்தாலும் தான் உயர்ந்த சாதி என்னும் திமிரில் மற்ற சாதிகளை இருக்க வேண்டும் என்கிறான்.
மேலும் இன்றைய அரசியல் சாதி இல்லாமல் நடக்காது!
சாதி கட்சிகள் ஒழிந்தால் நாடு உருப்படும்!
நல்ல பதிவு, நல்ல சிந்தனை
முக்கியமான பிரச்சனை ஆரோக்கியமான
முறையில் ஆராந்து,
அதன் தாக்கம் உணர்ந்து எழுதப்பட்ட பதிவு முரு.
ரொம்ப நல்ல முறையில் உங்கள் எழுத்து அரங்கேற்றம் ஆகி இருக்கின்றது.
பெரிய விஷயங்கள் கூட மிகச் சுலபமாக எல்லாருக்கும் புரியும்படி கூறி இருக்கின்றீர்கள்.
தவறான முறையில் செய்யும் எந்த செயலும் தவறுதான்.
கொடுக்கும் தண்டனையும் சரியானதுதான்.
இது எனது கருத்து.
ஒரு வேலை கிடைக்கின்றது என்பதினால், தன்னுடைய அசலில்
எந்த மாற்றங்கள் செய்தாலும் தவறு தவறுதான்.
எனக்கு தெரிந்த் ஒரு நிகழ்வும் உண்டு.
செய்து கொண்டிருந்த வேலையும் போயி, வேறெங்கும் வேலைகள் செய்ய முடியாத படி நடந்து விட்டது.
சாதிகள் இல்லை இல்லை என்று இன்னும் எவ்வளவு பேர்
எவ்வளவு நாட்கள் கூற வேண்டும்.
என்றுதான் விடிவுகாலம் வரும் என்றும் தெரியவில்லை.
நன்றி வால்பையன்...
++++++++++++++++++++++++++++++++++
// RAMYA said...
சாதிகள் இல்லை இல்லை என்று இன்னும் எவ்வளவு பேர்
எவ்வளவு நாட்கள் கூற வேண்டும்.
என்றுதான் விடிவுகாலம் வரும் என்றும் தெரியவில்லை.//
நன்றி ரம்யா...
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.