தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்.


இந்த வார்த்தைகளைச் சொல்லி மனிதன் தன் சக மனிதனைச் கேலிபேசும் போதெல்லாம், எனக்கு கடுமையான கோபம் வருகிறது. எங்கெல்லாம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள? யார், யாரெல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்?, என பார்த்தால் உணர்ச்சியுள்ளவர் எவருக்கும் கோபம் வரத்தான் செய்யும்!

வாடகைக்கு வீடு தேடும்போது., வீட்டுக்காரன் கேட்ட வாடகையை விட சிறிது அதிகமாக கொடுத்து வாடகைக்கு வீடெடுத்தவன் – சொல்லும் போதும்,

அவசரத்திற்க்கான கடைசி நேர தொடர் வண்டி பயணத்தில், முன்பதிவற்றவர்களுக்கான பெட்டியில், முதல் ஆளாக ஏறி (அல்லது சுமைதூக்கும் தொழிலாளிக்கு கொடுத்த கையூட்டின் பலன்) பொதி வைக்கும் பலகையில் உரிமையோடு கால் நீட்டி படுத்துக்கொள்பவன் – சொல்லும் போதும்,

நிரந்தரமான குண்டு, குழியுடைய சாலையின் வலதுபக்கம் முழுவதும் வாய்பிளந்து கிடக்கையில், எதிர்வரிசையில் வண்டியோட்டி வந்து, சாலையின் வலப்புறத்தில்(நமது இடப்புற பாதி(தை)யில்) நாம் வருவதற்கு முன் அதிரடியாக புகுந்து வெளியேறியவன் – சொல்லும் போதும்,

மாநகராட்சி முதல், கிராம நிர்வாக அலுவலகம் வரை, மின்சார துறை முதல், வேலைவாய்ப்பு அலுவலகம் வரை, வரிசையிலிருக்கும் மக்களைத் தாண்டி, உள்ளே புகுந்து காரியம் நிறைவேற்றி வெளியேறும் கரை வேட்டி கட்டிய நரிகள் – சொல்லும் போதும்,

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆளும் கூட்டணியிலிருந்து பதவிகளின் முழூ……. (எழுத்து பிழை அல்ல) பலாபலனையும் ஒட்டுண்ணியாய் உறிஞ்சி கொழுத்து, கடைசி நேரத்தில் சப்பையான காரணங்களை கூறி எதிர் கூட்டணிக்கு தாவுபவன் – சொல்லும் போதும்,

இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,
இந்த மாதிரியான ஆட்கள் அந்த கேவலமான வேலையை செய்தது மட்டுமல்லாது, வரிசையிலிருந்தும், வாக்களித்தும் ஏமாந்த அப்பாவியிடம் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என, கேலிபேசும் போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் தான் வருகிறது.

ஆடு, மாடு, மனிதன், குரங்கு, சிங்கம், புலி, கழுகு, பன்னி, மலைப்பாம்பு என வெவ்வேறு வகை குணங்கொண்ட எல்லாவகை உயிரினமும் ஒட்டுமொத்தமாய் கூடி கும்மியடித்த அடர்ந்த கானகத்தில் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” - “தனியா சிக்குனா வயித்தில் கிடக்கும்” என்ற வாசகங்கள். அங்கே வாழத்தான் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியான தற்பாதுகாப்பு குணாதிசயம் வேண்டும். இல்லையெனில் அடுத்த இனத்தின் பசிக்கு மட்டுமல்லாது, சில நேரங்களில் தன் இனத்தின் பசிக்கும் – ருசியாகி, மண்டையோடாக காலமெல்லாம் பல் இளித்து கிடக்க, கடவது தான்.


ஆனால், புவியில் வாழ்ந்த அநேக உயிர்களில் சிலவற்றை அடியோடும், சிலவற்றை வேரடி மண்ணோடும் அழித்துவிட்டோம். இனி மீதமிருப்பது மனிதன் மட்டுமே என்றிருந்த வேளையில், இல்லை இல்லை நாங்கெல்லாம் மனிதன், மனிதன், மனிதன், மனிதன் என எங்களுக்குள் பல வேற்றுமைகள் உண்டு என்றும்,

உடன் விளையாட மிருங்களற்ற சூழ்நிலையில், திறமையை வளர்க்கவும், உயிர் வாழும் தகுதியை இழக்காமலிருக்கவும், மனிதர்களுக்குள்ளே பல விசித்திரங்ளைப் புகுத்தியது மட்டுமல்லாது, சந்ததியை கூட மதிக்காத வினோதங்களை அமல்படுத்துகிறவனும் கூட, அலுக்காமல் சொல்லும் வார்த்தையாகிப் போனது இந்த வாசகம்.


அன்னையிடம் உடலைப் பெற்று, காட்டில் வாழும் ஆண்சிங்கம், புலி, காட்டெருமை, பன்னி, நரி போன்றவற்றிடம் குணத்தைப் பெற்று, நாட்டுக்குள்ளே - காட்டை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது, சராசரி மனிதனிடம் கூசாமல் கூறும் வெறிநாய்களே, எச்சத்தின் மிச்சத்தை உண்ணும் நரிகளே, உங்களுக்குத் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என்ற பழமொழி,


எங்களிடம் அமல்படுத்த முனைந்தால், இனி உங்களின் நிலை?

33 comments:

நிஜமா நல்லவன் said...

First?

சி தயாளன் said...

ரொம்ப வெந்து நொந்து போயிருக்கிறியள் போல..

நிஜமா நல்லவன் said...

தகுதியுள்ள பதிவு!

நிஜமா நல்லவன் said...

/’டொன்’ லீ said...

ரொம்ப வெந்து நொந்து போயிருக்கிறியள் போல../

தெரிந்து கொண்டே கேக்கலாமா?

நட்புடன் ஜமால் said...

\\இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,
\\

இது நெத்தியடி

(எருமைக்கு உறைக்காதே)

நிஜமா நல்லவன் said...

முரு ரொம்ப நன்றி....அங்க சொன்னதுக்கு இங்க சொல்லிக்கிறேன்..:)

வால்பையன் said...

டென்ஷனாவாதிங்க பாஸ்!
இந்த உலகத்துல எல்லாமே தகுதி தான்!

வாழ்வது கூட!

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

\\இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,
\\

இது நெத்தியடி

(எருமைக்கு உறைக்காதே)/

என்னோட பதிவில் இருந்து சூடான கம்பி எடுத்துக்குங்க ஜமால்....உறைக்கும்...:)

அப்பாவி முரு said...

பின்னூட்டத்தோட பின்னூட்டமா,

தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்தில்

வாக்களியுங்கள்.

பழமைபேசி said...

// தமிழ்மணத்தில்//

வாங்க கண்ணா, வாங்க!

அப்பாவி முரு said...

வாங்க நிஜமா நல்லவன்.,

வாங்க ’டொன்’ லீ.,

வாங்க நட்புடன் ஜமால்.,

வாங்க வால்பையன்.,

வாங்க பழமைபேசி.,

வருகைக்கு நன்றி

RAMYA said...

இப்போ உள்ளேன் அப்புறம் பதிவை படிச்சுட்டு!!

இராகவன் நைஜிரியா said...

அரசியல் என்பதே வியாபாரமாக்கிய பச்சோந்திகள், மரத்துக்கு மரம் குரங்கு தாவுவது மாதிரி தாவிகிட்டு இருக்காங்க.

இதுல வாய் சவடால் வேற நாங்க எங்க இருக்கமோ அந்த கட்சிதான் ஜெயிக்கும் என்று.

அவ்வளவு பேசறவங்க, தைரியமா, தனியா நின்னுப் பார்க்கணும். அதுக்கு தைரியம் இல்ல.

கேட்டால் அரசியல்.. சாக்கடையாக்கி வச்சு இருக்காங்க

இராகவன் நைஜிரியா said...

// "தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்." //

தப்பு... தப்பு...

தாவ தெரிஞ்சவை தப்பி பிழைக்கும்...

இராகவன் நைஜிரியா said...

// ஆடு, மாடு, மனிதன், குரங்கு, சிங்கம், புலி, கழுகு, பன்னி, மலைப்பாம்பு என வெவ்வேறு வகை குணங்கொண்ட எல்லாவகை உயிரினமும் ஒட்டுமொத்தமாய் கூடி கும்மியடித்த அடர்ந்த கானகத்தில் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” - //

வனத்தில் கூட வாழ்ந்துவிடலாம்.. ஆனால் இந்த பச்சோந்திகளுடன் வாழ்வது ரொம்ப கொடுமைங்க..

அப்பாவி முரு said...

வாங்க ரம்யா.,

வாங்க ராகவன் அண்ணா.,

கருத்துக்கு நன்றி.,

sakthi said...

hey appavi really gud

sakthi said...

இராகவன் நைஜிரியா said...

அரசியல் என்பதே வியாபாரமாக்கிய பச்சோந்திகள், மரத்துக்கு மரம் குரங்கு தாவுவது மாதிரி தாவிகிட்டு இருக்காங்க.

இதுல வாய் சவடால் வேற நாங்க எங்க இருக்கமோ அந்த கட்சிதான் ஜெயிக்கும் என்று.

அவ்வளவு பேசறவங்க, தைரியமா, தனியா நின்னுப் பார்க்கணும். அதுக்கு தைரியம் இல்ல.

கேட்டால் அரசியல்.. சாக்கடையாக்கி வச்சு இருக்காங்க

aama pa

அ.மு.செய்யது said...

தாறு மாறு தல..

அனல் பறக்கிறது பதிவில்..ப்ளோ நல்லா இருக்கு !!!!

அ.மு.செய்யது said...

Survival of the fittest !!!!


டார்வினின் சித்தாந்தம் எதற்கெல்லாம் உபயோகப்படுகிறது என்பதை நினைக்கும் போது கோபம் வருவது நியாயமே..

அ.மு.செய்யது said...

//அன்னையிடம் உடலைப் பெற்று, காட்டில் வாழும் ஆண்சிங்கம், புலி, காட்டெருமை, பன்னி, நரி போன்றவற்றிடம் குணத்தைப் பெற்று, நாட்டுக்குள்ளே - காட்டை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது, சராசரி மனிதனிடம் கூசாமல் கூறும் வெறிநாய்களே, எச்சத்தின் மிச்சத்தை உண்ணும் நரிகளே, உங்களுக்குத் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என்ற பழமொழி,//

கொலைவெறி கருத்துகள்...

இனிமேல் அப்பாவி முரு என்ற பேரை, கெஸட்டில் "தீப்பொறி முரு" என்ற மாற்றியமைத்துக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!
தீப்பொறி முரு !!!!!!

அ.மு.செய்யது said...

//நிஜமா நல்லவன் said...
தகுதியுள்ள பதிவு!
//

எம்பிளாயின்மென்ட் எக்ஸ்சேன்ஜ் ல‌ ப‌திஞ்சிட்டு வ‌ந்தீங்க‌ளா ?

அப்பாவி முரு said...

வாங்க சக்தி.,

வாங்க அ.மு.செய்யது.,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

என்னது தீப்பொறி முருவா???


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

தீப்பொறி ஆறுமுகத்தை வாயிலயே வெட்டுனாங்களே மறந்திடுச்சா?

பொழப்பே வாயவச்சுதான் ஓடுது, நம்மாள முடியாதுப்பா!!!!

நான் அப்பாவி முருவாகவே இருக்கேன்.

Rajeswari said...

எழுத்துக்களில் உண்மையும் கோபமும் தெரிகிரது..ஆனா என்ன பண்ரது

//வால்பையன் said...
டென்ஷனாவாதிங்க பாஸ்!
இந்த உலகத்துல எல்லாமே தகுதி தான்!

வாழ்வது கூட//
வழிமொழிகிரேன்

Prabhu said...

நல்லா சொன்னீங்க! அப்ப ஒண்ணு செய்யுங்க! இந்த தடவை தேர்தல்ல வச்சு அவங்கள குத்துங்க எஜமான் குத்துங்க!

நண்பன் . said...

நிஜமா நல்லவன் said...
First?


nanpa nee than first

RAMYA said...

பல உணர்ச்சிகளின் கூட்டுத்தொகை தான் இந்த பதிவுன் உங்கள் கருத்து என்று நான் நினைக்கின்றேன்.

உங்களின் உள்ளக்குமுறல்கள் புரிகின்றது.

ஆனால் நமக்கு என்றுமே விடியல்தான் கேள்விக்குறியாக தெரிகின்றது.

அரசியல் மட்டும் அல்ல எதிலுமே யதார்த்தம் இல்லை.

அடுத்தவர்களின் நன்மைகள் பெரிதுபடுத்துவதில்லை

மக்களின் தேவைகள் முக்கியமானவர்களுக்கு தேவை இல்லாமல் போய் விடுகின்றன.

தேவைகளின் அவசியங்களை கூறிக்கொண்டே போனால் முடிவு என்பதே இருக்காது முரு.

Anonymous said...

நீங்க சொன்னதுல அந்த ரயில்வே சீட்டில் கால் நீட்டி தூங்குவது மற்றும் குண்டு குழி ரோடு மேட்டர் நெத்தி அடி போங்க...

Anonymous said...

அருமையான பதிவு... வோட்டு போட்டுட்டேன்...

அப்பாவி முரு said...

வாங்க Rajeswari

@@@@@@@@@@@@@@@@@@@@

வாங்க pappu said...
நல்லா சொன்னீங்க! அப்ப ஒண்ணு செய்யுங்க! இந்த தடவை தேர்தல்ல வச்சு அவங்கள குத்துங்க எஜமான் குத்துங்க!

ஆனா நான் வெளிநாட்டில் இருக்கிறேன், இந்தியாவில் இருப்பவர்கள் தான் குத்தணும்.

############################

வாங்க நண்பன் .,

############################

வாங்க RAMYA said...
பல உணர்ச்சிகளின் கூட்டுத்தொகை தான் இந்த பதிவுன் உங்கள் கருத்து என்று நான் நினைக்கின்றேன்.

உங்களின் உள்ளக்குமுறல்கள் புரிகின்றது.

ஆனால் நமக்கு என்றுமே விடியல்தான் கேள்விக்குறியாக தெரிகின்றது.

அரசியல் மட்டும் அல்ல எதிலுமே யதார்த்தம் இல்லை.

அடுத்தவர்களின் நன்மைகள் பெரிதுபடுத்துவதில்லை

மக்களின் தேவைகள் முக்கியமானவர்களுக்கு தேவை இல்லாமல் போய் விடுகின்றன.

தேவைகளின் அவசியங்களை கூறிக்கொண்டே போனால் முடிவு என்பதே இருக்காது முரு.//

அதுக்காக சொல்லாம இருக்க முடியுமாங்க ரம்யா?

############################

வாங்க Sriram said...
நீங்க சொன்னதுல அந்த ரயில்வே சீட்டில் கால் நீட்டி தூங்குவது மற்றும் குண்டு குழி ரோடு மேட்டர் நெத்தி அடி போங்க...

நன்றி ஸ்ரீராம்.,

வேடிக்கை மனிதன் said...

தகுதி உள்ளவை தப்பிப்பிழைத்தால்
பரவாயில்லை
தப்பிப்பிழைத்தவை எல்லாம் தகுதி உள்ளவை என்று சொல்லிக்கும் போதுதான் வலிக்கிறது

Suresh said...

Appavi murugu konja nalla unga pathivai padichituu varaen miga arumayai eluthuringa.. thodranthu elunthunga.. apprum time kidacha namma blog a parunga... follower ayachu

Suresh said...

\\இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,
\\
அருமை முருகு :-)

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB