காலையிலையேவா...

`நாடோடிகள்` படம் ரிலீஸ் ஆகி ஒருவாரத்துக்கும் மேலாகி போச்சு., அம்ம வலையுலக பெரியாளுக எல்லாம் படத்தை, ஆஹா., ஓஹோன்னு நல்லபடியா எழுதியிருக்காங்களே, இந்த வார இறுதிய இந்தப் படத்தைப் பார்த்து சூப்பரா இல்லைன்னாலும் சுமாராவாச்சும் முடிச்சு வச்சிரலாம்ன்னு முடிவெடுத்து, கூட்டாளிகளுக்குத் தகவல் குடுத்தா, ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்றாய்ங்க.


எனக்கு வேலையிருக்குன்னு ரெண்டுபேரு சொல்ராய்ங்க, நான் சனிக்கிழமைக் காலையில(11 மணிக்கி) எந்திரிச்சதும் கோயிலுக்குத்தான் போவேன்னு ஒராளும், காலையிலயேவா....ன்னு ஒராளும் ஆளுக்கொன்னா பேசவும், சரிடா எல்லாத்துக்கும் பொதுவா ராத்திரி 9 மணி ஆட்டத்துக்கே போவோம்ன்னு முடிவெடுத்தாச்சு.


ஆனா, படம் நல்லா இருக்குன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சி போச்சு, அதனால கூட்டம் கும்மியடிக்கும். சாயந்திரம் சாவகாசமாப் போனால் டிக்கெட் கிடைக்காமக் கூடப் போயிரும். அதனால நாம் போயி ரிசர்வ் டிக்கெட் எடுத்துவாறேன்னு கிளம்பி தியேட்டர் இருக்குற மாலுக்குப் போனா,

மாலுக் கட்டிடத்தை இப்பதான் புதுசா எஸ்டென்ட் எல்லாம் பண்ணியிருக்காய்ங்க, அதனால் தியேட்டருக்குப் போற வழியில கடையெல்லாம் புதுசு, புதுசா...கலர்க் கலரா இருக்கு. வழியத் துலாவிகிட்டே போனா ஒரு எடத்துல கும்பலா ஆளுக வழிய மறிச்சி நிக்கிறாய்ங்க, அப்ப இது தாண்டா தியேட்டருன்னு முடிவெடுத்து நானும் நின்னுட்டேன்.






என்னடா காலையிலையே தியேட்டர் வாசல்ல கூட்டமா, அதுவும் சீன, மலாய் ஆளுகளுக்கு மத்தியில ஒரு வெள்ளக்கார தொரையும் கூட கூட்டத்துல முண்டியடிசிக்கிட்டு நிக்கிது.

ஆஹ்ஹா... தமிழ்ப் சினிமா உலகத்தரத்துக்கு உசந்திருச்சுப் போலிருக்கு, எல்லா பாசைப் பேசுற ஆளுகளும் வந்திருக்காய்ங்களேன்னு கூட்டத்துக்குப் பின்னாடி அமைதியா நின்னுகிட்டேன். நம்மாளுகளா இருந்தா தலைமேல ஏறிப் போயாச்சும் டிக்கெட்டை எடுத்திருவேன் (அப்பிடி இல்லைன்னா மருதைக்காரன்னு சொல்லிக்க முடியாதுல்ல). ஆனா அசலூரு ஆளுகளும் படம்பார்க்க வந்திருக்காய்ங்க அவுகளுக்கு மரியாதைக் குடுப்பமேன்னு தான் பின்னாடி நின்னுக்கிட்டேன்.


மணி காலையில 11 ஆகப்போகுது, உள்ள எல்லா லைட்டையும் போட்டுட்டாய்ங்க. கண்ணாடிக்கதது மெதுவாத் தொறக்கவும், எல்லா ஆளுகளும் திமுதிமுன்னு உள்ளாரக்க ஓடுராய்ங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு, ஏன்டா, சிங்கப்பூருல இருக்குற மனிசன் கூட சினிமான்னா நம்மூருப் போலவே வரிசையில நிக்காம கூட்டங்கூடி உள்ள ஓடுறாய்ங்களேன்னு பின்னாடி தள்ளி நின்னு அவிய்ங்க உள்ளப் போற அழகப் படம் பிடிச்சுக்கிட்டேன்.
எல்லாரும் உள்ளப் போனப் பின்னாடிதான் தெரிஞ்சது, நான் வந்தது சினிமாத் தியேட்டர் இல்ல, லைப்ரரின்னு.

காலையில 11 மணிக்குத்தான் லைப்ரரியைத் தொறப்பாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வாசல்ல காத்துக்கிடக்கு அப்புட்டு கூட்டமும். ஆனா, நானு சினிமா டிக்கெட் எடுக்குறதுக்காக கூட்டத்துப் பின்னாடி காத்துக்கிடந்தேன்....

14 comments:

அறிவிலி said...

எபபடியோ லைப்ரரிக்குள்ள நொழைஞ்சுட்டீங்க.

டிக்கட் வங்கிட்டீங்களா?

ஆ.ஞானசேகரன் said...

படம் எல்லாம் அப்படி இப்படி இருக்கே பாருங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

எப்படியெல்லாம் யோசித்து படம் எடுக்குறீங்க பாஸ்

வால்பையன் said...

லைப்ரேரிக்காக கியூ நிக்குதுன்னு அசால்டா சொல்றிங்க!

நம்ம ஊர்ல கூவி கூவி கூப்பிட்டாலும் எவனும் வர மாட்டிகிறேன்!

அது பொழக்கிற புள்ளைங்க!

priyamudanprabu said...

ஆஹ்ஹா... தமிழ்ப் சினிமா உலகத்தரத்துக்கு உசந்திருச்சுப் போலிருக்கு,

////////////////////////

ஹ ஹ ஹ

priyamudanprabu said...

யூசுன் நூலகம் இருக்கும் இடம் தெரியாதா??
நான் முன்பே சென்றுள்ளேன்
தியேட்டருக்கும் அதுக்கும் தூரமாச்சே??
ஏன் அங்கே போனீங்க???

சி தயாளன் said...

நூலகத்துக்கும், திரையரங்குக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு அந்நியன் பாணியில் தண்டனை தான் தரவேண்டும், இது பற்றி நம் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். எதற்கும் தண்டனைப் பணமாக 10 000 சிங்கை வெள்ளிகளை தயாராக வைத்திருக்கவும்..

பீர் | Peer said...

சரி, காத்திருந்தீங்களே அதுக்காகவாவது லைப்ரரிக்குள்ள போயி ஏதாவது வாசித்தீர்களா முரு?

வேடிக்கை மனிதன் said...

நீங்க உண்மையிலேயே அ(ட)ப்பாவிதாங்க

ரெட்மகி said...

hmm

அப்பாவி முரு said...

// அறிவிலி said...
எபபடியோ லைப்ரரிக்குள்ள நொழைஞ்சுட்டீங்க.

டிக்கட் வங்கிட்டீங்களா?//

மருதைக்காரய்ங்க என்னைக்கி சும்மா வந்திருக்காய்ங்க....

கேக்குறாங்கைய்யா...டீடெயிலு...

**********************************

ஆ.ஞானசேகரன் said...
படம் எல்லாம் அப்படி இப்படி இருக்கே பாருங்க நண்பா

செல் போனில் எடுக்கும் போது நேராகவும், பக்கவாட்டிலும் எடுத்தேன். அப்லோட் பண்ணும்போது அப்படியே ஏறிவிட்டது, எனக்கும் மாற்றத் தெரியவில்லை.

**********************************

வால்பையன் said...
லைப்ரேரிக்காக கியூ நிக்குதுன்னு அசால்டா சொல்றிங்க!

நம்ம ஊர்ல கூவி கூவி கூப்பிட்டாலும் எவனும் வர மாட்டிகிறேன்!

அது பொழக்கிற புள்ளைங்க//

கொஞ்ச்சூண்டு ஆளுக மட்டும் தான் இப்பிடி. அஜால் குஜால் ஆட்களும் அதிகம் தான்.

*******************************

// பிரியமுடன் பிரபு said...
யூசுன் நூலகம் இருக்கும் இடம் தெரியாதா??
நான் முன்பே சென்றுள்ளேன்
தியேட்டருக்கும் அதுக்கும் தூரமாச்சே??
ஏன் அங்கே போனீங்க???//

வழி தெரியாம் போயிட்டேங்க. யீசூன் தியேட்ட்ரில் நான் கடைசியாக் பர்த்தப் படம்`குருவி`. அதுக்கப்புறம் தான் கட்டிடத்தையே மாத்திட்டாங்களே!

***********************************

// ’டொன்’ லீ said...
நூலகத்துக்கும், திரையரங்குக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு அந்நியன் பாணியில் தண்டனை தான் தரவேண்டும், இது பற்றி நம் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். எதற்கும் தண்டனைப் பணமாக 10 000 சிங்கை வெள்ளிகளை தயாராக வைத்திருக்கவும்..//

டொன் லீ அண்ணே...

இங்க ச்ங்கமும்(வ.வா.ச) அபராதத்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு.

********************************


// பீர் | Peer said...
சரி, காத்திருந்தீங்களே அதுக்காகவாவது லைப்ரரிக்குள்ள போயி ஏதாவது வாசித்தீர்களா முரு?//

450 பக்கமிருக்கும் புத்தகத்தை எடுத்து வந்துள்ளேன்.

*********************************

// வேடிக்கை மனிதன் said...
நீங்க உண்மையிலேயே அ(ட)ப்பாவிதாங்க//

ஹி ஹி., நன்றிண்ணே...

*********************************

// ரெட்மகி said...
hmm//

இம்ம்ம்....

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

கமல் சார் இப்ப மூடு உங்களுக்கு சரியில்லையோ, கொஞ்சம் கல கலப்பா பதிவு போட்டுருக்கிங்க :)

வினோத் கெளதம் said...

சரி காமெடி போங்க..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB