மனித உயிர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த உலகில் பிறவி எடுக்கிறது. அதன் பின்தான் அவனுக்கு இதுதான் உன் ஜாதி என்ற சின்ன வட்டத்திலிருந்து, இனம், மொழி, நாடு என்ற பெரிய, பெரிய வட்டங்கள் வரைந்தது மட்டுமில்லாது அதற்குள் அடைத்தும் வைக்கின்றோம். தானே தேடி எடுத்துக்கொள்ளாத இந்த அடையாளங்களைச் சொல்லிச் சொல்லி எத்தனை, எத்தனை கொடுமைகளை இந்த உலகம் செய்திருக்கிறது, செய்து கொண்டும் தானிருக்கிறது.
அறியாமைக்கும், மத மூடக் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனித குலம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை வரலாறுகளாகப் படித்து விசனப்பட்ட நாம், மீண்டும் அதே தவறுகளை வர்ணம் பூசிச் செய்யும் காலத்தில் தான் இருக்கிறோம். அன்று அரசன், இன்று அரசாங்கம். அவ்வளவே வித்தியாசம்!
நாகரீகம் வளர்ந்துதான் என்ன பயன்?, கலாச்சாரங்கள் கலந்துதான் என்ன பயன்? விஞ்ஞானம் வளர்ந்துதான் என்ன பயன்? தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துதான் என்ன பயன்?
மேலே சொன்னவைகளில் மனித குல முன்னேற்றத்திற்கு பயன்பாட்டில் இருப்பது அதிகபட்சம் ஐம்பது சதவீதம் மட்டுமே. மீதமிருக்கும் ஐம்பது சதவீதங்கள் ஆளும் வர்க்கத்தின் கடைசி நேர – அவசரகால முட்டாள் தனத்திற்கும் தான் பயன்படுகிறது.
ஆக்க சக்திகளில் பெரும்பாலும் அழிவு சக்த்திகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. இதற்கு எந்தத் தவறும் செய்யாத, எந்த கலகத்திலும் ஈடுபடாத அல்லது ஈடுபட முடியாத தனிமனிதனும் செயற்கை அடையாளங்களான ஜாதியின் பெயரைச் சொல்லியோ, இல்லை இனத்தின் பெயரை சொல்லியோ, இல்லை மொழியின் பெயரைச் சொல்லியோ ஒரே ஒரு அப்பாவி மனிதனைக் கூட நசுக்கினாலோ அல்லது அழித்தாலோ அது, நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.
மனிதனை மனிதன் அழிப்பதற்குத்தான் இந்த புற அடையாளங்களா? புற அடையாளங்களைக் கொண்டு மனிதனை எடை போடுவது குறைந்து, அக அடையாளங்களைக் கண்டுணரும் சக்தியை என்று நாகரீகமோ, விஞ்ஞானமோ எல்லோருக்கும் கொடுக்கிறதோ அதுதான் மனிதன் மனிதனாக வாழப்போகும் காலம்!
அந்தக் காலம் நம் தலைமுறைக்குள் வருமா?
.
10 comments:
//நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.//
Humans are social animals என்றுதான் அறிவியல் சொல்கிறது.
அடாடா me the first போடலியே !!!
//அக அடையாளங்களைக் கண்டுணரும் சக்தியை என்று நாகரீகமோ, விஞ்ஞானமோ எல்லோருக்கும் கொடுக்கிறதோ அதுதான் மனிதன் மனிதனாக வாழப்போகும் காலம்//
மனிதனின் முகம் காட்டுவதும் அகத்தின் அடையாளம் தானே..
சில நேரங்களில்
படத்தைப் பார்க்க சகிக்கலைங்க!!
நல்லதொரு பதிவு நண்பா
//உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.//
தம்பி இப்பதான் இதை கவனிச்சேன் !
நல்லா இருக்கே !
அக அடையாளம் காட்டுகிறோம் என்று சொல்லும் மதங்களில் வழி மறைமுக மாக நடைபெறுவது தான் புற அடையாளம் தேடிய கொலைகள்.
உலகம் எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது.
நல்லதொரு இடுகை தம்பி
//நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.//
Humans are social animals என்றுதான் அறிவியல் சொல்கிறது//
இன்னும் அனிமலாகவே இருக்கானேன்னுதான் வருத்தம் ஸ்ரீ...
*********************************
// பிரியமுடன்.........வசந்த் said...
மனிதனின் முகம் காட்டுவதும் அகத்தின் அடையாளம் தானே..
சில நேரங்களில்//
முகம் காட்டுவது என்னோட மன ஓட்டங்களைத் தான், ஆனால் எந்து ஜாதி, மதம், மொழி போன்ற அடையாளத்தால் என்னப் பிரிப்பதைப் பற்றிதான் எனது கவலை.
*********************************
// தேவன் மாயம் said...
படத்தைப் பார்க்க சகிக்கலைங்க!!//
என்ன காரணத்தினால் இந்த ஈழத்தமிழ் குழந்தைகளைக் கொன்னாங்க டாக்டர்?
**********************************
ஆ.ஞானசேகரன் said...
நல்லதொரு பதிவு நண்பா
நன்றிண்ணா..
***********************************
கோவி.கண்ணன் said...
//உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.//
தம்பி இப்பதான் இதை கவனிச்சேன் !
நல்லா இருக்கே !///
ஹி ஹி...
***********************************
// கோவி.கண்ணன் said...
அக அடையாளம் காட்டுகிறோம் என்று சொல்லும் மதங்களில் வழி மறைமுக மாக நடைபெறுவது தான் புற அடையாளம் தேடிய கொலைகள்.
உலகம் எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது.
நல்லதொரு இடுகை தம்பி//
நன்றிண்ணா...
/
அந்தக் காலம் நம் தலைமுறைக்குள் வருமா?
/
நிச்சயம் வராது என்றே தோன்றுகிறது ...
எதுக்கு அந்த போட்டோ!?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.