சித்திரம் பேசுதடி...


முன்னொரு காலத்தில், இருங்க, இருங்க ரொம்பப் பின்னாடி போயிராதீங்க, மார்ச் 2006 போல நடந்த சுவாரசியமான சம்பவம். சிங்கையில 1000பேர் வேலைசெய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. மொத மொத வந்தன்னிக்கி எப்பிடி இருந்தோமோ, அப்பிடியே இருந்தோம். போரடிக்க ஆரம்பிச்சுருச்சு. வாழ்க்கையில இன்னும் முன்னேறனுங்கிற வேட்கை கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு, சூடு தாங்க முடியாமல் பார்ட் டைம் கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சோம்.



ஏப்ரல் மாசம் கோர்ஸ் முடிந்து, மூன்று நாட்களுக்கு பரிச்சை. முதல் நாள் தியரி. சூஸ் த பெஸ்ட் ஆன்சரிலிருந்து, ரைட் த ஆன்ஸர் வித் சர்க்யூட் டைகிரம், பத்து மார்க் கேள்வி வரை மூணு மணிநேரம் எழுத வேண்டிய பரிச்சை. படிக்கணும், பாசாகணும். படிக்கணும், பாசாகணும்ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லித் திரிந்தாலும், படிக்க நேரமே கிடைக்கலை.


ஏன்னா, எப்பவாவது பிக்கப் ஆகி சக்கை போடு போடும் செமிகண்டக்டர்(வேஃபர்) பிஸினஸ், அந்த ஜனவரி – மார்ச் குவாட்டரில் படு பயங்கர ஆர்டர். காலை எட்டு மணிக்கு உள்ளே போனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் வேலை பார்த்தே ஆகணும். வேலை பார்த்துக்கிட்டு இருக்கப்பவே சூப்பர்வைசரிலிருந்து, என்ஜினியர், புரொடெக்சன் இன்சார்ஜ், டிபார்மெண்ட் மேனேஜர் வரை யாரவது புரொடெக்சன் ஸ்டேடஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களையும் எண்டெர்டெயின் பண்ணி குஷியாக்கிட்டே இருக்கணும்.


இந்த லச்சணத்துல இன்னும் இருபது நாள்ல பரிச்சை, எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல! படிக்கணும், ஆனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் முடியலை. ஆனா, வேற வழி இல்லை, அதுக்கப்புறமாச்சும் ஒக்காந்து படிக்கணும். மூணு பேரா சேந்து குரூப்பா படிக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிச படிப்பிலேயே எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல வர்ர எலெக்ட்ரானெல்லாம் சாதா கண்ணுக்கேத் தெரிய ஆரம்பிச்சுடும். இதை இதோட விடக்கூடாது, புரோட்டானையும், நியூட்ரானையும் பாத்திட்டு தான் தூங்கணும்ன்னு ஒரு வெறி,


ஆனாலும் வேட்கை தான் கொழுந்துவிட்டு எறியுதே, அதனால ராத்திரி 11.15க்கு வந்ததும், மசாலாப் பால் போட்டு குடிச்சோம்ன்னா அடுத்த ஒரு மணிநேரத்துக்கு தூக்கம் வராது, எப்பிடி வரும்?. மஞ்சள், மிளகு, சக்கரைப் போட்டு கலந்த மசாலாப்பால் வயித்துக்குள்ள எறியுறது, வேட்கையா மாறி புத்தியில இருக்கும்.


புத்தகத்தை எடுத்து பிரிச்சு பத்து நிமிசம் ஒழுங்காப் போகும், அப்ப நம்ம தத்துபித்து மெதுவா சன் டி.வி –யைப் போடுவாரு, ஏன்னா, ராத்த்ரி 11.30க்கு அவங்க ஊர் பொண்ணு ஹேமா, சன் மியூசிக்கில் காம்பயரிங் பண்ணும் லைவ் புரோகிராம் வந்துடும். சவுண்டு கம்மியா வச்சு பாத்துக்கிட்டே படிக்கலாம்னு நினைச்சால், அடுத்த பத்து நிமிசம் நல்லாத்தானிருக்கும், பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறதுக்கு.


அப்ப புரோகிராம் பாத்துக்கிட்டு இருக்கிற எங்களுக்கு ஒரு திடீர் பரபரப்பு வந்திடும். நாங்க எதிர்ப் பார்த்த அந்தப் பாட்டு வந்திட்டா, உடனே போனெடுத்து நம்ம நண்பருக்கெல்லாம் போன் பண்ணி சொல்லணும், “மாமா பாட்டு வன்ந்திடுச்சு”, “மச்சான் நம்ம பாட்டு போட்டுட்டாணுங்க”, “சித்தப்பா, இன்னேரமே தூங்கி அசிங்கப்படுத்துறீயே, நம்ம பாட்டு போட்டுட்டாங்க பாத்துட்டு தூங்கு” ன்னு, கூட வேலை செய்யும் எல்லா தமிழ் நண்பர்களுக்கும் போன் பண்ணி எழுப்பிவிட வேண்டியது, பாடம் படிக்கிற எங்களது கடமை ஆக்கிட்டாங்க நம்ம நண்பர்கள்.


ஊருல இருக்குற ஆளுகளையெல்லாம் நாங்க எழுப்பிவிட்டா, எங்க வீட்டுல தூங்குற மத்த மூணுபேரை, அவிய்ங்க போனடிச்சு எழுப்பி விட்டுருவாங்க. நாம் நேர எழுப்பினா, மூஞ்சியக் உர்ருன்னு காமிச்சிறக் கூடாதுன்னு அடுத்தாளை வச்சி எழுப்பிவிடுறது!. எப்பூடி!!!


அடுத்த வந்த நாளுலயெல்லாம் பசங்களுக்கு போன் அடிச்சா லைன் கிடைக்காம பிஸி டோன் கேக்கும், அப்பிடின்னா, வேற யாரோ போனடிச்சு சொல்லுறாங்கன்னு அர்த்தம். எப்பிடியோ, எங்க கம்பெனியில வேலை செஞ்ச 40 தமிழ் பசங்களுக்கும் போன் போட்டு எழுப்பி அந்த குறிப்பிட்ட பாட்டை பார்க்க வைக்கிறத ஒரு பொழுது போக்காகவே செஞ்சோம்.


அடுத்த நாள் டீ பிரேக் டைமில் பாக்கும் போது ஹேமாவை பத்தி பேசிட்டு அந்தப் பாட்டைப் பத்தி பேசுறதுக்குத்தான் நேரமிருக்கும். அதுவே தனி எனர்ஜி குடுக்கும், ஏன்னா? அந்தப் பாட்டும், அதுல் வரும் மியூசிக்கும், வரிகளும், குறிப்பா அதுல ஆடும் அந்தப் பிள்ளையோட ஆட்டமும் ஒரே குஷியா எனெர்ஜிடிக்கா இருக்கும்ல.


சரி, சரி அப்பிடி எந்த பாட்டடா பாத்தீங்கன்னு கேக்குறது, கடல் தாண்டியும் கேக்குது, அந்தப் பாட்டு “சித்திரம் பேசுதடி” படத்தில் வரும் வாழமீனுக்கும், விலங்கு மீனுக்கும்’ பாட்டுதான், (நல்ல பாட்டுல்ல!!!)


நண்பர் கார்க்கிக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். என்ன சகா இருந்திச்சா?

10 comments:

அறிவிலி said...

அதெல்லாம் சரி, பரிட்சை என்ன ஆச்சு?

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் பரிச்சைக்கு படிச்சிங்க

ஈரோடு கதிர் said...

கானா உலகநாதன் ரசிகர் மன்றத்தலைவர் அப்பாவி வாழ்க‌

(மாளவிகா!!!!????)

பீர் | Peer said...

மாளவிகா ஆட்டம் நல்லா இருக்கும்ல, முரு?

தேவன் மாயம் said...

பரிட்சை அவுட்டா!இஃகி இஃகி இஃகி!!

அப்பாவி முரு said...

விடிய, விடிய முழிச்சிருந்தும் படிக்க முடியாட்டியும், பரிச்சையில் பிட்டடிச்சாச்சும் பாசாயிருவோமில்ல!!!

வால்பையன் said...

//குவாட்டரில்//

இது மட்டும் தான் என் கண்ணுக்கு பளிச்சின்னு தெரியுது!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சன் மியூசிக்கில் காம்பயரிங் பண்ணும் லைவ் புரோகிராம் வந்துடும்//

சிங்கைல சன் மியூசிக் வருதா ?

VIKNESHWARAN ADAKKALAM said...

எனகும் ஹேமாவை பிடிக்கும்... நல்லா சிரிப்பாங்க... :))

அன்புடன் அருணா said...

ஆஹா ...இப்பிடில்லாம் பரீட்சைக்குப் படிக்கலாமா????

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB