இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதும், யுத்தகளத்தில் சிக்கியுள்ள அப்பாவி தமிழரைக் காப்பாற்றுவதும் பற்றிய முடிவுகளை மாநில அரசு எடுக்கமுடியாது, மத்திய அரசு மட்டுமே எடுக்கமுடியும் என்று, மத்திய அரசின் தொங்குசதைகள் அறிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் “இலங்கை அரசை நாம் நிர்பந்திக்க முடியாது. அது எளிதான காரியம் அல்ல” என, பிரணாப் முகர்ஜி மிகத்தெளிவாக கைகளை சோப்பு போட்டு கழுவிய அன்றே, ”நேபாளத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படத்தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்” என நேபாளத்தில், இந்திய வெளியுறவுச்செயலர் சிவசங்கர் மேனன் அறிவித்ததைப் பார்த்தும் எதுவும் சொல்லாத நம் தமிழக அரசியல்வாதிகள்(கட்சி, கொள்கை வித்யாசமில்லாமல்) அனைவரும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு(பிச்சை) கேட்டு, உங்கள் வீடுதேடி வரும்போது, இலங்கை தமிழர் பிரச்சனையில் உதவாதது மட்டுமின்றி, அதைப்பற்றி பேசுவோர் மீது தே. பா சட்டம் பாயும் என்று அறிவித்து செயல்படுத்துபவர்களையும், இலங்கை இருக்க இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தவர்களையும் என்ன செய்யப் போகிறீர்கள்?
இலங்கை பிரச்சனையில் உதவாதவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் நின்று ஓட்டு கேட்டால்?
1) ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
2) ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
3) போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
கரண்ட்டே இல்லையானாலும், கலர் டி.வி., கொடுத்ததின் நன்றிக் கடனாக, அல்லது, தாத்தா தான் இவ்வளோ கொடுத்தாரு, அடுத்து ஆத்தாவை தேர்ந்தெடுத்தால் நிறைய கிடைக்கும் என்ற ஆசையிலோ ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
வேலை நிமித்தம் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருக்கிறேன் என்று சொல்லியோ, கிடைத்த ஒருநாள் விடுமுறையை கறியை வதக்கி திண்பதற்க்கு செலவழிப்பதற்க்காகவோ, தேர்தல் அன்று வன்முறை நடக்க வாய்புள்ளது என்று வானிலை அறிக்கையை படித்து பயப்பட்டதால் ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்.
போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
இலங்கைக்கும் – இந்தியாவிற்க்கும் இன்றய நிலையில் அரசியலில் என்ன உறவு?, எந்த வகையில் தொடர்பு? என்று தெளிவாகத் தெரிவிக்காத்தாலும், இலங்கைக்கு சென்றுவரும் தூதுவர் விமான நிலையத்தில் கொல்லைவாசல் வழியே தில்லி செல்வதன் மர்மம் புரியாத்தாலும், ஜனநாயகத்தில் எனது கடைசி மற்றும் முழு எதிர்ப்பைக் காட்ட தேர்தலில், போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
உங்கள் மனதிற்க்கு சரியென்று பட்டதிற்க்கு வாக்களியுங்கள்.
உதவி வேண்டுவோர்க்கு உதவ, நியாயத்திற்க்கு வாக்களியுங்கள்.
எனது ப்ளாக்கில் வலது மேல் மூலையில் வைக்கப்பட்டிடுக்கும் கருத்துகணிப்பில் உங்கள் கருத்தினை பதிவிடுக! நியாத்திற்க்கு வலுசேருங்கள்!
மிச்சர்கடை
4 weeks ago
6 comments:
49 -0 விற்கே என் ஆதரவு....
ஓட்டு போட்டுட்டேன் முரு!
முன்னெடுப்பு நன்று!!
இப்படியே போச்சு என்றால் கடைசியில் 49ஓ வின் பண்ணிடும் போலிருக்கு...
49 ஓ பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. திரு, ஞாநி அவர்கள் பதிவில் இதைப் பற்றி விவரமாக எழுதியுள்ளார்.
கட்டாயம் செல்லாத தாக்கணும்.
போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்
கண்டிப்பாக என் ஓட்டு 49O-விற்கில்லை. அது என் ஓட்டை பலவீனப்படுத்தும்.
மேலும் அனைவரும் ஓட்டு போடாமல் விட்டாலும் அரசியல்வாதிகள் கட்டாய ஓய்வு பெறப்போவதில்லை.
இருப்பதில் புது திருடனாய்ப்பார்த்து போடுவேன்
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.