என்னுடைய முந்தைய பதிவான வெளிநாட்டு இந்தியர்கள் எவ்வாறு வாக்களிப்பது? என்ற பதிவில் எனது சந்தேகத்தை கேட்டிருந்தேன்.
அதற்க்கு பின்னூட்டத்தில் நண்பர் குமார் அவர்கள் ஆதார சுட்டியுடன், தேர்தல் நாளன்று ஊரில் இல்லதவர்களும், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதை விளக்கினார்.
தபால் ஓட்டு என்பது அரசு வேலையாக் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே, வெளிநாட்டில் (சொந்த) வேலை செய்யும் இந்தியர்களுக்கு இல்லை.
சிறையில் இருக்கும் கைதி கூட வாக்களிக்கலாம், ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் வாக்களிக்க முடியாது என்பது அரசியல் விந்தை,
வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல்வாதிகள்,
மிச்சர்கடை
4 weeks ago
10 comments:
//
சிறையில் இருக்கும் கைதி கூட வாக்களிக்கலாம், ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் வாக்களிக்க முடியாது என்பது அரசியல் விந்தை //
திரை கடலோடியும் திரவியம் தேடு என்று சொல்லியுள்ளார்களே தவிர, திரவியம் தேடுவோர் ஓட்டு போடவேண்டும் என்று சொல்லவில்லையல்லவா.. அதனால் ஓட்டு போட முடியாது.
நாமதான் அதிகமா அந்நியசெலவாணி நாட்டுக்கு கொண்டுவாரோம், அப்படி இருக்கும்போது நமக்குதான் முதல் உரிமை தரனும்
அமெரிக்கா நாடாளுமன்ற தேர்தல்லேகூட வெளிநாட்டில்வாழும் அமெரிக்க குடிமகன்கள் ஓட்டுப்போடலம்
நமக்கும் தேர்தல் அன்னிக்கு ஒரு நாள் எல்லா ஏர்வேய்ஸும் ஃபிரீயா அப் அன்ட் டவுன் டிரிப் அடிச்சாங்கன்னா எல்லோரும் ஓட்டுப்போடலாம், அட்லீஸ்ட் தபால்மூலமாவது ஓட்டுப்போடலாம், இதன் மூலம் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்கலாம்
/திரை கடலோடியும் திரவியம் தேடு என்று சொல்லியுள்ளார்களே தவிர, திரவியம் தேடுவோர் ஓட்டு போடவேண்டும் என்று சொல்லவில்லையல்லவா.. அதனால் ஓட்டு போட முடியாது./
திரவியம் கொண்டு வருகிறீர்கள், ஆனால் வரிகள் சரியாக கட்டுகிறீர்களா?
ஏனெனில், VOTE- VOICE OF TAXPAYERS EVERY WHERE.
அண்ணே என்ன் செய்வது, தேர்தலன்று(புதன்கிழமை) இதப்பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு ஒழுங்கா வெலை செய்யலாம்.
அமெரிக்கா நாடாளுமன்ற தேர்தல்லேகூட வெளிநாட்டில்வாழும் அமெரிக்க குடிமகன்கள் ஓட்டுப்போடலம்//
வாங்க அபுஅஃப்ஸ்ர்,
அவர்கள் அந்த நாட்டில் பிறந்ததால் அவர்களின் தலைஎழுத்து அப்படி, நீங்கள் இந்த நாட்டில் பிறந்ததால் உங்கள் தலைஎழுத்து இப்பிடி.
(இஃகி, இது ரத்தகண்ணீர் படத்தில் எம். ஆர். ராதா பேசும் வசனம், இங்க சும்மா தான் போட்டேன்)
அட பாவி மக்கா!
இது வேறயா
நமெக்கலெல்லாம் T.V கொடுக்கலைல நாம ஓட்டு அவுகளுக்கு போட மாட்டோமுன்னு சதி பன்னிட்டாவோ
///
சிறையில் இருக்கும் கைதி கூட வாக்களிக்கலாம், ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் வாக்களிக்க முடியாது என்பது அரசியல் விந்தை,
///
அதுதானே.......
அட பாவி மக்கா!
இது வேறயா
நமெக்கலெல்லாம் T.V கொடுக்கலைல நாம ஓட்டு அவுகளுக்கு போட மாட்டோமுன்னு சதி பன்னிட்டாவோ//
அண்ணே, டீ.வீக்கெல்லாம் இல்லை, நீங்ககெல்லாம் விவரமானவங்க, அதனால தான்
///
சிறையில் இருக்கும் கைதி கூட வாக்களிக்கலாம், ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் வாக்களிக்க முடியாது என்பது அரசியல் விந்தை,
///
அதுதானே.......//
வாங்க பிரபு, என்ன செய்யலாம்?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.