குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?


வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல பழக்கமிருக்கும்!?, அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.


இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் (A REAL HERO), சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய்சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?


அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா” (ஒசந்த அதிகாரி ) என்பது தெரிகிறது.


தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.


தற்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?


இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வு சுத்தமா இல்லை. என்ன தான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது.


மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.


அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்? அடுத்த கேள்வி,


இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?


அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.


ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான “challenging job, thrilling life” எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.


அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.


தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.


இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கணும்.அடுத்த முக்கிய கேள்வி,


மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?


நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார்,


ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?


உண்மையா?

15 comments:

ஈரோடு கதிர் said...

உண்மை

நட்புடன் ஜமால் said...

மீள் பதிவா ... முன்பு படித்த ஞாபகம் இல்லை.

சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட உண்மை

தமிழன் said...

உண்மை என்னை பொறுத்தவரை இந்தியா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலை மாறாது

வால்பையன் said...

//தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது //

ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!
நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்!

கோவி.கண்ணன் said...

//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //

:)

யாருக்கு ஆதாயம் இருக்கோ அவங்க தானே உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வில் அந்த உணர்வு குன்றாமல் இருப்பாங்க. தெற்கில் மாநிலங்கள் இருப்பதே கொஞ்ச நாட்களாகத்தான் வட இந்திய அரசியல் வாதிகளுக்குத் தெரியும்.

பொன் மாலை பொழுது said...

உண்மைதான். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் (தமிழக கட்சிகளின் கூட்டோடு ) அவைகள் மிக முக்கியமான தருணங்களில் வாய் மூடிக்கொள்வது வழக்கம். "பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அரசு எதுவும் செய்ய இயலாது! என்று ஒதுங்கி விடுவது வழக்கம். மிக முக்கிய வாழ்வாதாரமான நதிநீர் பகிர்வு என்ற கொள்கை இன்று சீண்டுவாரில்லாமல் போனதற்கு காரணமே அந்த மிக முக்கிய பிரச்சனைகளை தள்ளிக்கொண்டு போய் நீதிமன்றத்தில் அடைத்து விட்டதால் பாதிக்கப்பட்ட மாநில மக்களால் எதுவும் செய்ய இயலாத நிலை . அதோடன்றி பிற மாநிலங்களும் இதே போன்ற அணுகு முறைகளை பின்பற்றுவதால் நிலை இன்னமும் மோசம்தான். பிரமாநிலதவரை வன்முறை மூலம் விரட்டி அடிப்பதும் வெறுப்பை உமிழும் ஜாதி இன தலைவர்களும் பணம் பண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாநிலத்திளிருந்த் மின்சாரமும் பிற பொருட்களும் பகிர்ந்து கொள்வது மட்டும் எவ்வித வெட்கமும் இன்றி சட்டப்படி நடக்கும். இப்படி தனக்கு என்றால் மட்டும் தேசீயமும் மற்றவர்களுக்கு என்றால் தான் தன மாநிலமும் மட்டுமே என்றால் எப்படி ஒருமைப்பாடு உண்டாகும். இதுதான் இப்படி என்றால் வெளியுறவுத்துறை நிலை இன்னமும் கேவலம். வெளியுறவு துறை என்றால் மந்திரிகளும் "மெத்த படித்த " அதிகாருகளும் இங்லாந்து,அமெரிக்கா அல்லது யுரோப் என்று "வளைய " வருவார்கள் அண்டை நாட்டின் உறவு பற்றி கவளி படமாட்டார்கள். அதனால் தான் இன்று வங்க தேசமும். இலங்கையும் நம்மை சீண்டி பார்க்கின்றன. உளுத்துப்போன "பஞ்ச சீல கொள்கை" யை வைத்துக்கொண்டு இன்னமும் எத்தனை காலம்தான் கழிப்பார்கள்?
இவைகளை சொல்லுவதால் நான் ஏதோ தனி நாடு கேட்கும் கும்பலை சேர்ந்தவன் என்று என்ன வேண்டாம். தனி நாடு என்றால் நிலைமை இன்னமும் மகா கேவலமாக்கிவிட்டுருக்கும் என்பதையும் புரிந்தவன் தான்.

கோவி.கண்ணன் said...

//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //

பெரியாரும் திராவிடக் கட்சிகளும் கெடுத்துவிட்டதா ? அப்படியும் சொல்ல முடியாது, அவங்க தமிழ்நாட்டுக்குள்ளே தானே, ஆந்திரா கர்நாடகா, கேரளா இவங்களும் தெற்கு தானே? அப்ப மேலே நான் போட்ட பின்னூட்டத்தைப் பொறுத்தி பாருங்க :)

सुREஷ் कुMAர் said...

ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

தினேஷ் said...

//
ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!
நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்//

ரிப்பீட்டு .. இப்போ கல்விலாம் ஒரு பிசினஸ்பா அப்புறம் எங்க தேசியமாது கீசியமாது..

அப்பாவி முரு said...

//கதிர் said...
உண்மை//

ஆமாம் கதிர் அவர்களே...

*********************************************

//நட்புடன் ஜமால் said...
மீள் பதிவா ... முன்பு படித்த ஞாபகம் இல்லை.

சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட உண்மை//

ஆமாம் ஜமால் மீள்பதிவு தான்,

***************************************************

//தமிழன் said...
உண்மை என்னை பொறுத்தவரை இந்தியா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலை மாறாது//

கொள்கை மாற்றத்துடன், கொள்ளைக் கூட்டங்களையும் துரத்துவதும் முக்கியம்

*********************************************

//வால்பையன் said...
//தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது //

ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!
நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்!//

பத்தாவது பரிச்சையில் நேசனல் இண்டக்கிரேசன் அப்பிடின்னு ஒரு எஸ்ஸே எழுதுன்னா பத்து மார்க். அப்ப அடிச்சது.

*************************************************

//கோவி.கண்ணன் said...
//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //

:)

யாருக்கு ஆதாயம் இருக்கோ அவங்க தானே உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வில் அந்த உணர்வு குன்றாமல் இருப்பாங்க. தெற்கில் மாநிலங்கள் இருப்பதே கொஞ்ச நாட்களாகத்தான் வட இந்திய அரசியல் வாதிகளுக்குத் தெரியும்.//

அதென்னவோ எதிர்ப்பு குணம் இருந்தவரை வளர்ந்துவந்த தமிழகம், இனி என்னவாகும்?

அப்பாவி முரு said...

// கக்கு - மாணிக்கம் said...

தனி நாடு என்றால் நிலைமை இன்னமும் மகா கேவலமாக்கிவிட்டுருக்கும் என்பதையும் புரிந்தவன் தான்.//

மாணிக்கம் நீங்கள் சொன்னது நுற்றுக்கு நூறு சரி.

***********************************************

// கோவி.கண்ணன் said...

பெரியாரும் திராவிடக் கட்சிகளும் கெடுத்துவிட்டதா ? //

பெரியாரான்னு தெரியலை ஆனா திராவிட கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டுதான்.

***********************************************

// सुREஷ் कुMAர் said...
ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்//

இதோ வந்துட்டேன்

***********************************************
// சூரியன் said... //

வாங்க சூரியன்.

தீப்பெட்டி said...

தேசிய உணர்வு குறைந்து விட்டது உண்மையாக இருக்கலாம்..

நாமக்கு மொழி தாண்டிய சிந்தனைகளை தரும் சமூகச்சூழல் இல்லை..

அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு போர்வையில் தேசியத்தை தப்பிதமாய் பார்க்க காரணமாகிறார்கள்..

தேசியம் பற்றி இந்தி பேசும் மாநில மக்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு, மற்ற மொழி பேசும் மக்களுக்கு இருக்குமென எதிர்பார்க்க முடியாது..

Joe said...

some issue with google transliteration... sorry abt the comment in English.

IMHO, south indians are as patriotic as north indians.
We all love this country, we would like to see it grow, we are also angry at corrupt politicians / officials are not letting it grow at the rate it should.

I hope it will be a nation worth living, for all its citizens, after a few decades.

Nationalism is irrelevant these days, if you see what I mean.

லெமூரியன்... said...

நல்ல பதிவு....சுதந்திரம் பெற்ற போது முக்கால்வாசி தமிழர்களுக்கு தமிழ்நாட்டை தாண்டி என்ன இருக்கிறது என்று கூட தெரியாது....மேலும் புராதான காலத்தில் இருந்து வெள்ளைக்காரன் வரும் வரை எந்த மன்னராலும் இந்திய என்றழைக்கப் பெரும் இந்த பகுதியை முழுமையாக கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்த சரித்திரம் கிடையாது ......மேலும் பல இனங்கள் ஒன்றாக வாழ்வதே ஒரு ஆச்சிரியம்தான்......இதில் தேசிய பற்றேன்பதை கிரிகெட் போட்டிகளிலும் கார்கில் போரிலும் மட்டுமே காண முடியும்....தற்போது தனி நாடாகி வேற்றோர் நாட்டிடன் அடிமையாய் இருப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமே இருக்கலாம் என்ற எண்ணமே இங்குள்ளவர்களை யோசிக்க வைக்கிறது....ஆனால் இதை வெகு நாள் எதிர்ப்பார்க்க முடியும் என்று தோன்றவில்லை......எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்வதைப் பொறுத்தே தேசிய உணர்வும் பொங்கும் அல்லது வீழும்...!

ஊர்சுற்றி said...

தேசிய உணர்வு நிச்சயமாய் குறைந்துதான் போயிருக்கிறது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB