கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்.

நேற்று வலை சுற்றி வருகையில், சக பதிவர் ஒருவர் கவிஞர் தாமரையின் புதிய கவிதையை அடி பிறழாமல் எழுதியதுடன், அதற்கான மூலத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார்.

கவிதையின் தலைப்பைப் பார்த்ததும் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது, அதை புறம் தள்ளி கவிதையை தொடரத் தொடர கோபம் கண்களைத் தாண்டி தன் கொடூர முகத்தை வெளிக் காட்டத்தொடங்கியது. ஓர் இரவைக் கடந்துவிட்டாலும், கோபம் எனும் சாத்தான் தான் ஏறிய இடத்தைவிட்டு இறவில்லை. இன்னும் உள்ளெயே வைத்திருந்தால் ஆபத்து, கொட்டிவிடுகிறேன்.


ஏன் கவிஞர் தாமரைக்குத் தான் கொந்தளிக்கத் தெரியுமா? நானும் பிறந்தது அதே தமிழ் மரபுதான், பாலுண்டதும் அதே தமிழச்சியின் மார்புதான்.

கோபம் இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தும் நெஞ்சுரம் இருந்திருந்தால் கவிஞர் தாமரை, ஈழக்கொடுமைக்கான காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் இருக்கும் இனப்புல்லுருவிகளில் ஆரம்பித்து பல ஆசிய ஐரோப்பிய நாடுகளைத் தொட்டு வெளிவந்திருக்கும். ஆனால், தாமரை சொல்லிச் சபித்திருப்பதோ என் நாட்டின் பேரைச் சொல்லி!

தனிப்பகையோ, ராசதந்திரமோ குற்றம் புரிந்தது நான்கு பெரும் தலைகள் மட்டுமே. தலைமையின் மேல் குற்றமென்றால், கிழக்குக் கோடியில் இயற்கையைத் தவிர ஏதுமறியா வாழ்க்கை வாழும் அஸ்ஸாமியனும், மேற்கு கடைசியில் இந்து – முஸ்லீம் கலவரத்தில் கை கால் இழந்து பிச்சை புகும் குஜராத்தியனும், வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே வெடிகுண்டுகளுக்கு வாழ்கைப்பட்டிருக்கும் காஸ்மீரியனும், இயற்கை வளங்களை சுரண்டக்கொடுத்தும், சுண்டக்கொடுத்தும், இயல் – இசை – நாடகம் எனும் முத்தமிழை ஒருங்கே இணைத்து திரையில் பார்த்து சுகித்து, உணர்ச்சி வற்றிப்போய் வாழ்க்கையை ஓட்டும், எந்த கட்சி ஆட்சிக்கும் பாரபச்சமில்லாமல் வாழப்பழகிக்கொண்ட தமிழனுக்கும் சேர்த்தே தாமரையின் சாபம் என்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி சாபம்விட்டது எங்கள் தியாகத்தாய் மதிவதனியாக இருந்தால் கண்கள் கலங்க நெற்றி தரையில் பட கவிழ்ந்தே கிடந்திருப்போம். தனக்கு தெரிந்ததை, தனது தொழிலை மட்டும் கொண்டு, எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் ஆதரவை தெரிவித்துவிட்டு, இன்று தாமரை சாபமிடுவது சிறுபிள்ளைத் தன்மாகவே உள்ளது.

களம் கண்டு மாண்டவர்கள் ஒரு புறம், தாகத்தாலும், பட்டினியாலும் இறந்தவர்கள் மறுபுறமுமாக ஈடுகட்டமுடியாத இழப்புகளின் தழும்பை முழுதும் மறையவைக்க முடியாவிட்டாலும், மருந்திட்டு ஆறவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம், நமகுள் சண்டையிட்டுக் கொள்ளாமல் கடமையை செய்ய வேண்டிய நேரமிது.

மனைவியை இழந்த கணவனது துன்பத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தில்லை அவளின் சகோதரனின் துன்பம் என்பதையும் உணர வேண்டும் கவிஞர் தாமரை அவர்கள்.

உணர்ச்சி கொந்தளிப்பில் முட்டாள் தனமாக
உயிரைத் துறந்த முத்துக்குமாரைப் போல்,
உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,
என்பதே இந்த அப்பாவியின் ஆசை.பின்குறிப்பு:-
கவிஞர் தாமரை உபயோகப்படுத்திய, என் மக்களுக்கெதிரான வார்த்தைகளை எனது தளத்தில் வைக்க விரும்பவில்லை. தேவைப்படுவோர், இங்கே சென்று பார்க்கவும்.

.

51 comments:

வால்பையன் said...

யப்பா எம்புட்டு கோபம் வருது இந்த புள்ளைக்கி!

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை முரு

வெற்றி-[க்]-கதிரவன் said...

அந்தம்மா தமிழன்கிற முறைல ரொம்ப கோபமா எழுதிட்டாக...

நீங்க இந்தியன்கிற முறைல கோபமா எழுதிடிக மற்றபடி ரெண்டுக்கும் வித்தியாசம் இல்ல...

வெற்றி-[க்]-கதிரவன் said...

எனக்கு ஒரு சந்தேகம் ?

இது காமெடி பதிவா ? நாபாட்டுக்கும் சீரியஸா பின்னூட்டம் போட்டுட்டேன்...

பழமைபேசி said...

//பிளராமல் //

பிறழாமல்

kicha said...

பாண்டிய‌ ம‌ன்ன‌ன் செய்த‌ த‌வ‌றுக்கு, ம‌துரையை எரித்த‌ க‌ண்ண‌கியின் காப்பிய‌த்தை எப்ப‌டி ஏற்றுக் கொண்டோமோ, அப்ப‌டியே தாம‌ரையின் க‌விதையையும் ஏற்க‌வும்! தாம‌ரையின் க‌விதைத் த‌லைப்பே "க‌ண்ண‌கி ம‌ண்ணில் இருந்து க‌ருஞ்சாப‌ம்" என‌வே உங்க‌ள் கோப‌த்தில், நியாய‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

அப்பாவி முரு said...

// kicha said...
பாண்டிய‌ ம‌ன்ன‌ன் செய்த‌ த‌வ‌றுக்கு, ம‌துரையை எரித்த‌ க‌ண்ண‌கியின் காப்பிய‌த்தை எப்ப‌டி ஏற்றுக் கொண்டோமோ, அப்ப‌டியே தாம‌ரையின் க‌விதையையும் ஏற்க‌வும்!//

நியாயங்கள் எல்லா காலத்திலும் நிலையாக இருந்ததில்லை. அன்று மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி. ஆனால இன்றய வாழ்க்கைமுறை அவ்வாறில்லையே.
அரசின் இரும்புக்கரத்திற்கு அடிபணிந்தவர் பாதி, நடக்கும் நிகழ்வுகள் அறியாதவர் பலர். அவர்கள் எல்லாம் பலியாகத்தான் வேண்டுமா?

//தாம‌ரையின் க‌விதைத் த‌லைப்பே "க‌ண்ண‌கி ம‌ண்ணில் இருந்து க‌ருஞ்சாப‌ம்" என‌வே உங்க‌ள் கோப‌த்தில், நியாய‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை//

தாமரையின் சாபத்தில் வீடு, மாடு அழியச்சொல்லியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். வீட்டு தாயும், தமக்கையும் கற்பை இழக்கச்சொன்னால் ஏற்கமுடியுமா? இல்லை கோபப்படாமல் தான் இருக்க முடியுமா?

Jeyapalan said...

இதற்குக் கோபப் படுகிறிர்களே. யாருக்கு வலியிருக்கோ அவருக்குத் தெரியும் வேதனை. ஈழத் தமிழ் மக்களின் வேதனைக்கு யார் யாரெல்லாம் காரணமோ, தாமரையின் கண்ணில் காரணமாகத் தெரிந்தவர்களை அவர் சபித்தார். அதில் அவர் கோபம், அவரின் இயலாமை அவரின் கொதிப்பு குமுறல் கொந்தளிப்பு இன்னும் என்னென்ன உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் கொட்டித் திர்த்திருக்கிறார்.

தீப்பெட்டி said...

:((

லெமூரியன்... said...

முதலில் இந்திய என்பது ஒரு துணைகண்டம் என்று மனதிற் பதியவைத்துகொள்ளுங்கள்...நீங்கள் கஷ்மிரீகளுக்காக கவலைப்பட்டிருக்கலாம்....நாங்கள படவில்லை.....என் சக தமிழ் விவசாயீ பிற மாநிலம் கொடுக்கும் தண்ணீரின்றி தவித்து எலிக்கறி சாபிடும்போது நான் எப்படி குஜராத் சகோதரனைப் பற்றி கவலை கொள்ள முடியும்???...மலையாள அதிகாரிகளெல்லாம் சேர்ந்து இறையாண்மை என்ற பெயரில் என் தமிழ் சமூகத்தை சிதரடிக்கும்போதும் இன்றுவரை எதர்காக சாகிறோம் என்றுகூட தெரியாமல் செத்து போகும் என் தமிழக மீனவனுக்கு ஆதரவாக கஷ்மிரீகளும் குஜராதீகளும் வராத போது எங்களுக்கு மட்டும் எதற்கு இந்திய பற்றியும் இந்தியன் பற்றியும் வகுபெடுகிகீறீர்கள்.....முதலில் உங்கள் இந்திய சகோதரனிடம் போய் சொல்லுங்கள் சக சகோதரனுக்கு தண்ணிர் வேண்டுமென்று....

அப்பாவி முரு said...

// செயபால் said...
இதற்குக் கோபப் படுகிறிர்களே. யாருக்கு வலியிருக்கோ அவருக்குத் தெரியும் வேதனை. ஈழத் தமிழ் மக்களின் வேதனைக்கு யார் யாரெல்லாம் காரணமோ, தாமரையின் கண்ணில் காரணமாகத் தெரிந்தவர்களை அவர் சபித்தார். அதில் அவர் கோபம், அவரின் இயலாமை //

அவ்வ்ளோ பெரிய சினிமா வெளிச்சத்திலிருக்கும் தாமரைக்கே இயலாமை என்றால்,

அன்றாடக் கஞ்சிக்கே செத்துவிழும் என் நாட்டு அப்பாவி பொது மக்களின் நிலை???

யோசிங்க செயபால்.,

********************************

ramesh said...
முதலில் இந்திய என்பது ஒரு துணைகண்டம் என்று மனதிற் பதியவைத்துகொள்ளுங்கள்...நீங்கள் கஷ்மிரீகளுக்காக கவலைப்பட்டிருக்கலாம்....நாங்கள படவில்லை.....என் சக தமிழ் விவசாயீ பிற மாநிலம் கொடுக்கும் தண்ணீரின்றி தவித்து எலிக்கறி சாபிடும்போது நான் எப்படி குஜராத் சகோதரனைப் பற்றி கவலை கொள்ள முடியும்???...மலையாள அதிகாரிகளெல்லாம் சேர்ந்து இறையாண்மை என்ற பெயரில் என் தமிழ் சமூகத்தை சிதரடிக்கும்போதும் இன்றுவரை எதர்காக சாகிறோம் என்றுகூட தெரியாமல் செத்து போகும் என் தமிழக மீனவனுக்கு ஆதரவாக கஷ்மிரீகளும் குஜராதீகளும் வராத போது எங்களுக்கு மட்டும் எதற்கு இந்திய பற்றியும் இந்தியன் பற்றியும் வகுபெடுகிகீறீர்கள்.....முதலில் உங்கள் இந்திய சகோதரனிடம் போய் சொல்லுங்கள் சக சகோதரனுக்கு தண்ணிர் வேண்டுமென்று....

ஒரு தாலி அறுத்ததுக்கு, ஊர் தாலியை அறுத்த கட்சிதலைவியின் நடவடிக்கைக்கும்,

அதே தோணியின் சாபம் விடும் தாமரைக்கும் என்ன வித்தியாசம்?

இது தான் தமிழர் பண்பாடா?

ramalingam said...

கெடுக இவ்வுலகம் என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் சொல்லி இருக்கிறார். அவை சரி என்றால் தாமரையும் சரிதான். கலைஞரின் கண்ணகி செய்தது சரி என்றால், தாமரை செய்ததும் சரிதான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கருத்துக்கள்

லெமூரியன்... said...

பண்பாட்டை பற்றி பேச தமிழினம் என்று ஒன்று வேண்டுமே......அவ்வினத்தை வல்லாதிக்க இனங்கள் ஒன்று சேர்ந்து சிறுக சிறுக சிதறடிப்பதை காண சகிக்காமல் எழுந்த கோபத்தின் விளைவே ,சகோதரியின் கவிதையாய் வந்திருக்க வேண்டும்.

சக்திவேல் said...

தாமரையின் உணர்வுகள் இயல்பானது. தமிழர்கள் அல்லாத இந்தியர்கள், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை சந்தோஷமாக பார்க்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழர்களை அழிக்கத்துனைபோகிறார்கள். அவர்கள் வலிமையால் செய்வதை தாமரை சாபமாக செய்கிறார். வேறு என்ன செய்யமுடியும் பாவம் தமிழச்சியாய் பிறந்துவிட்ட அவரால். அவரது இந்த சாபக்கவிதை சரியானதே.
தலைவர் ஒரு சினிமாவில் சொல்லியிருப்பார், "பணக்காரர்கள் ஜெயிப்பதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்கும் ஆனால் ஏழைகள் நாங்கள் ஜெயிக்க ஒரேவழிதான், சீவிருவோம்"

எங்களுக்கு அதுகூட முடியாது, சாபம் விட்டுவிடுவோம்.

பழமைபேசி said...

//உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
//

அடுத்த தலைமுறைக்கு இதான் தமிழ்ப் பாடம்?!

ஒரு பெண், அடுத்த பெண்ணின் மீது காண்பிக்கும் பரிமானம் இதுதானா? இதுதான் தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு செய்யும் பெருமையா??

கிடையவே கிடையாது! எல்லாம் ஒரு வியாபார நுணுக்கம்யா.... no tension....

திறம் (strategy) மட்டுமே வெல்லும் காலம் இது... உணர்வு கொள், திறம் படை... உணர்ச்சியை அமிழ்த்து!!

Unknown said...

உங்க கண்டனங்களில் நானும் பங்கு கொள்கிறேன்...!!!

Anonymous said...

உண்மை அய்யா! தங்கள் கருத்தோடு 100% ஒத்து போகிறேன்! இந்தியா அழியக்கூடாது மிகச்சரியே தமிழ்நாடு தனிநாடாக பிரிந்து இந்தியாவை விட முன்னேறி இந்தியர்கள் வாயிலும் வயிற்றிலும் எரிய வேண்டும் அதுவே என் ஆசை! அது தொடர்பான பதிவு http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்/

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க அப்பாவி முரு இல்ல. அப்பாவி இந்தியன்.
போங்கய்யா நீங்களும் உங்க இந்திய இறையாண்மையும் , ஈரவெங்காயமும்.

நீங்களும் ஒன்னியும் செய்ய மாட்டீங்க. ஏதாச்சும் செய்யலாம்னு கிளம்புறவங்களையும் இப்டி இ.ஆ, ஈ.வெ ந்னு பேசி கலாய்பிங்க.

தாமரைக்கு பதிவெழுதுருங்கிளே, நானும் சொல்றேன் என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.

கிருஷ்ணா said...

தாமரை இட்ட சாபம் முற்றிலும் சரி என்று நான் வாதாட வரவில்லை நண்பர்களே! நம் இனத்திற்கு நேர்ந்த கொடுமையை அவருக்கு தெரிந்த பாஷையில் வசை பாடி தீர்த்துவிட்டார்.. காரணம் அவர் ஒரு கவிஞர்.

அதற்கு கண்டனம் கூறும் குணவான்களே.. வேறு என்னதான் செய்யலாம்.. தமிழனாக.. தெரிந்தால் 'தைரியமாக' அதைச் சொல்லுங்கள்!

பி.கு: சிறுத்தையின் கருத்துடன் நான் உடன் படுகிறேன்! இலங்கையில் போர் நடத்த இந்தியா துணை நின்ற அன்றே, தமிழர்கள் தனி நாடு கேட்டிருக்க வேண்டும்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முருகன் இதை, இந்த உணர்ச்சியை தவறென்று சொல்வதற்க்கில்லை.அவருடைய முறை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். அதுவும் போக இவர்கள் எல்லாம் சமயத்துக்கு தகுந்தாற்போல எதையாவது எழுதி பெயர் சம்பாதிப்பவர்கள்.இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு வாதாடுவதே அவர்களுக்கு வெற்றி என்று அர்த்தம். உண்மையில் இங்கே ஈழத்திற்காக கவலைப் படுபவர்கள் சதவிகிதம் Negligible. ஏனென்றால் எம் சக தமிழனுக்கு சொந்தப் பிரச்சினைகளுக்கு குறைவில்லை.

Jeyapalan said...

//அவ்வ்ளோ பெரிய சினிமா வெளிச்சத்திலிருக்கும் தாமரைக்கே இயலாமை என்றால், அன்றாடக் கஞ்சிக்கே செத்துவிழும் என் நாட்டு அப்பாவி பொது மக்களின் நிலை???//

அது சரி, அன்றாடம் கஞ்சிக்கே செத்து விழுகிறிர்களே, ஆனால் இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதி நிறுவனம் தர முடியாது என்று சொல்லும் கடனான $1.9 பில்லியனை இந்தியா தந்துதவும் என்று சொல்கிறதே. உங்கள் கஞ்சிப் பிரச்சினை இந்திய அன்னைக்குத் தெரியவில்லையா?

//யோசிங்க செயபால்.,//
இயலாமை, ஆற்றாமை என்ற உணர்வுகளின் வெளிப்பாடே இந்தச் சாபம். உங்களை நான் ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. தாமரையின் பக்கமிருக்கும் கருத்தைச் சொன்னேன் அவ்வளவே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

uma said...

//காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும்//

தோழர்

தமிழச்சி தாமரை அவர்கள் சரியாகத்தான் சாபமிட்டுகிறார்கள்.ஒரு மானகெட்ட நாட்டின் அசல் வித்து இல்லாத ஒரு இத்தாலிய வந்தேறி மக்கள் மா மன்றத்தின் அனுமதி இல்லாமல் என்னுடிய ரத்தங்களை சாகடிப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்கிறார் என்றால் அதற்க்கு பெயர் என்ன ?

யர்ர் அவர்? அப்படி ஒரு மானம் கெட்ட் நாட்டிற்க்கு சாபம் விடுவதில் தப்பு இல்லை தோழரே?

அவரின் சாபம் பலிக்கட்டும்.

காசிராஜன்
புதுசேரி

kicha said...

//நியாயங்கள் எல்லா காலத்திலும் நிலையாக இருந்ததில்லை. அன்று மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி. ஆனால இன்றய வாழ்க்கைமுறை அவ்வாறில்லையே.
அரசின் இரும்புக்கரத்திற்கு அடிபணிந்தவர் பாதி, நடக்கும் நிகழ்வுகள் அறியாதவர் பலர். அவர்கள் எல்லாம் பலியாகத்தான் வேண்டுமா?//

உண்மையில் அன்றைக்கும், இன்றைக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் ஒன்றும் இல்லை. அன்று ம‌ன்ன‌ருக்குப் பின்னால், இள‌வ‌ர‌ச‌ர். இன்றும் அதுவே. அன்று, ம‌ன்ன‌ர் எது செய்தாலும் புக‌ழ்ந்து பாட‌, புல‌வ‌ர்க‌ள். இன்று, ப‌திவ‌ர்க‌ளும், எழுத்தாள‌ர்க‌ளும். அன்று, ம‌ன்ன‌ர் "கொன்று வா" என்றால் செய்வ‌த‌ற்கு காவ‌லர்க‌ள். இன்றும், அதுவே!

//தாமரையின் சாபத்தில் வீடு, மாடு அழியச்சொல்லியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். வீட்டு தாயும், தமக்கையும் கற்பை இழக்கச்சொன்னால் ஏற்கமுடியுமா? இல்லை கோபப்படாமல் தான் இருக்க முடியுமா?//

தாம‌ரையும், ந‌ம் ச‌கோத‌ரி என்று நினையுங்க‌ள், உங்க‌ளுடைய‌ இந்த‌ கோப‌ம் இல்லாம‌ல் போய்விடும். ந‌ன்றி.

அப்பாவி முரு said...

// ஜோசப் பால்ராஜ் said...
நீங்க அப்பாவி முரு இல்ல. அப்பாவி இந்தியன்.

தாமரைக்கு பதிவெழுதுருங்கிளே, நானும் சொல்றேன் என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்//

இதுதான் நம் தலைமை சொல்லிக்குடுத்த, நடந்து காட்டிய பாடமா?
******************************

//கிருஷ்ணா said...
தாமரை இட்ட சாபம் முற்றிலும் சரி என்று நான் வாதாட வரவில்லை நண்பர்களே! நம் இனத்திற்கு நேர்ந்த கொடுமையை அவருக்கு தெரிந்த பாஷையில் வசை பாடி தீர்த்துவிட்டார்.. காரணம் அவர் ஒரு கவிஞர்.

அதற்கு கண்டனம் கூறும் குணவான்களே.. வேறு என்னதான் செய்யலாம்.. தமிழனாக.. தெரிந்தால் 'தைரியமாக' அதைச் சொல்லுங்கள்!//

தாமரையால் அவ்வளவுதான் செய்ய முடியும். இருப்பவர்களின் உணர்சியை தூண்ட மட்டும் தான் முடியும்

உணர்ச்சியால் மதியிழந்த கூட்டம் எங்கும் வெற்றி பெற்றதாய் வரலாறு இல்லை நண்பரே.

தாமரையின் வார்த்தைகள் தலைமையின் கொள்கைக்கு எதிராகவே நான் கருதுகிறேன்.

********************************

// ஸ்ரீதர் said...
முருகன் இதை, இந்த உணர்ச்சியை தவறென்று சொல்வதற்க்கில்லை.அவருடைய முறை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். அதுவும் போக இவர்கள் எல்லாம் சமயத்துக்கு தகுந்தாற்போல எதையாவது எழுதி பெயர் சம்பாதிப்பவர்கள்//


சரியான வார்த்தைகள் ஸ்ரீ...

*******************************

kicha said...


தாம‌ரையும், ந‌ம் ச‌கோத‌ரி என்று நினையுங்க‌ள், உங்க‌ளுடைய‌ இந்த‌ கோப‌ம் இல்லாம‌ல் போய்விடும். ந‌ன்றி.//

அப்படி நினைப்பதால் தான் எதிர் கருத்துகளை சொல்கிறேன்.

அப்பாவி முரு said...

// பழமைபேசி said...
//உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
//

அடுத்த தலைமுறைக்கு இதான் தமிழ்ப் பாடம்?!

ஒரு பெண், அடுத்த பெண்ணின் மீது காண்பிக்கும் பரிமானம் இதுதானா? இதுதான் தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு செய்யும் பெருமையா??

கிடையவே கிடையாது! எல்லாம் ஒரு வியாபார நுணுக்கம்யா.... no tension....

திறம் (strategy) மட்டுமே வெல்லும் காலம் இது... உணர்வு கொள், திறம் படை... உணர்ச்சியை அமிழ்த்து!!//


சரியாக என்னை புரிந்து கொண்டீர்கள் அண்ணா.,

ஆ.ஞானசேகரன் said...

//உணர்ச்சி கொந்தளிப்பில் முட்டாள் தனமாக
உயிரைத் துறந்த முத்துக்குமாரைப் போல்,
உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,
என்பதே இந்த அப்பாவியின் ஆசை.//

உங்கள் கோபமும் ஞாயமாகத்தான் இருக்கு முரு...

கோவி.கண்ணன் said...

ஒண்ணும் புரியல,

'தனிமனிதக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார் பாரதி, அதைப் புரட்சி என்கிறோம் ஆஹா, ஒஹோங்கிறோம்,

அந்த தனிமனிதன் ஒரு சோம்பேறியாகக் கூட இருக்கலாம், அவனுக்காக உலகத்தை அழிப்போம் என்று சொன்னால் அது முட்டாள்தனமானது தானே. பாரதியார் சோம்பேறிக்கு பரிந்து பேசவில்லை என்றாலும், ஒருத்தனுக்காக உலகத்தையே அழிப்போம் வாருங்கள் என்பது அறிவு பூர்வமானதா என்று யாரும் சிந்திப்பது இல்லை. நான் பாரதியாரை எதிர்க்கவில்லை. ஒரு கவிஞன் அவன் எது சொன்னாலும் வேதவாக்காக நினைக்கும் அளவுக்கு நான் முட்டாளும் இல்லை.

தமரை 'அழித்திடுவோம்' என்று சொல்லவில்லை, அழிந்து போகட்டும் என்று மட்டும் தான் சொன்னார்.

இதற்குப் பெயர் அறச் சீற்றம் என்பார்கள். உணர்ச்சி வசப்படுபவர்கள் புலம்பக் கூடாது என்று சொல்வது ஞாயம் இல்லை. அவரவரால் முடிந்தது தானே செய்ய முடியும். நேரடியாக ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியவில்லை என்றால், பலருக்கு உணர்வு ஏற்படுத்துவதும் கூட உங்களாலும் என்னாலும் முடியாது, ஒரு பிரபலம் செய்தால் அதன் ரீச் மிகுதி. தாமரையின் கவிதை ஒரு அறச்சீற்றம் தான்.

Unknown said...

Hi Muru,
I saw one of teh post from பழமைபேசி, states that சின்னாளப்பட்டி சிங்கம். Are you from Chinnapalatti, Near dindigul.
I dont find your mail id thats what i publish here..

Chand

மானுடம் said...

ஜயா அப்பாவி இச்சாபம் தனி ஒரு இந்திய தமிழச்சியின் சாபம் இல்லை. செல்அடி பட்டு 2 கைகளை இழந்த குழந்தையின் தாயின் குமுறல்,ஒரு வேளை சாப்பாட்டிற்கு காத்து நிற்கும் 5 வயது சிறுமியின் குமுறல் ,பெற்ரோறின் நிலமை தெரியாது துக்கு போட்ட பல்களைகழக மாணவியின் தாய் இட்ட சாபம், ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழச்சிகள் இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் சாபங்கள் தானப்பா...

Raju said...

இந்த கவிதையும் ஒரு வகையில பார்த்தா, கண்ணகி மாதிரியே "கடைத்தேங்காய எடுத்து, வழிப்புள்ளையாருக்கு உடைத்த கதைதான்"

அரசியல் கடையில் சூடாத்தான் நடக்குது ஈழ வியாபாரம்.

Raju said...

This is Just For follow-Up..

RVRPhoto said...

நல்ல தரமான விவாதம். தமிழச்சி தாமரையின் கோவம் முற்றிலும் நியாயமானது.

அடிமை நாட்டில் ஓர் தீவிரவாதி said...

உங்கள் நாடு என்று பேசுறிங்களே... நன் தமிழன் என்று சொல்லுறிங்கள்

அடிமை நாட்டில் ஓர் தீவிரவாதி said...

உங்கள் நாடு என்று பேசுறிங்களே... நன் தமிழன் என்று சொல்லுறிங்கள் india வந்து தான் எங்கள கொலை பண்ணினது அது உங்களுக்கு தெரியுமா கவிஞர் தாமரை சொன்னது சரி

அப்பாவி முரு said...

// chandra said...
Hi Muru,
I saw one of teh post from பழமைபேசி, states that சின்னாளப்பட்டி சிங்கம். Are you from Chinnapalatti, Near dindigul.
I dont find your mail id thats what i publish here..

Chand//

ஐய்யா சந்த்ரா.,

நான் அதே சின்னாளபட்டி தான், உங்கள் ஈமெயில் ஐ டியைத் தாருங்கள்

**********************************

மானுடம் said...
ஜயா அப்பாவி இச்சாபம் தனி ஒரு இந்திய தமிழச்சியின் சாபம் இல்லை. செல்அடி பட்டு 2 கைகளை இழந்த குழந்தையின் தாயின் குமுறல்,ஒரு வேளை சாப்பாட்டிற்கு காத்து நிற்கும் 5 வயது சிறுமியின் குமுறல் ,பெற்ரோறின் நிலமை தெரியாது துக்கு போட்ட பல்களைகழக மாணவியின் தாய் இட்ட சாபம், ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழச்சிகள் இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் சாபங்கள் தானப்பா...//

அய்யா மானுடம்.,

எந்த இழப்பிலிருக்கும் தாயும், அடுத்த பெண்ணின் கற்பு குழைந்து போகட்டும் என சாபம் இடமாட்டால். அப்படி இட்டால் அது தாயல்ல...

*********************************


piratheepan said...
நல்ல தரமான விவாதம். தமிழச்சி தாமரையின் கோவம் முற்றிலும் நியாயமானது.


நன்றி பிரதீபன்.,

தாமரையின் கோபத்தை குறை கூறவில்லை. ஆனால் அவர் இடும் சாப குறிப்புகளை ஒத்துக்கொள்ளவே முடியாது.

**********************************


அடிமை நாட்டில் ஓர் தீவிரவாதி said...
உங்கள் நாடு என்று பேசுறிங்களே... நன் தமிழன் என்று சொல்லுறிங்கள் india வந்து தான் எங்கள கொலை பண்ணினது அது உங்களுக்கு தெரியுமா கவிஞர் தாமரை சொன்னது சரி//

தப்பை யார் செய்திருந்தாலும் தண்டனை உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்.

அஹோரி said...

எனக்கென்னவோ அந்த இடளிக்கும், மூணு(?) பொண்டாட்டிகாரனுக்கும் விட்ட சாபமாகத்தான் தெரியுது.

நீங்க பீ பீ பீ பீ பீ பீ ல் ல் ல் ல் பன்ன வேண்டாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பின் முரு,
நீங்கள் கவிஞர் தாமரைக்குப் பதில் சொல்லத்தேவையில்லை.
தாமரை தனது கவிதையில்
ஒரு கிளிநொச்சி, ஒரு முல்லைத்தீவு தாய், மண்ணை வாரி இந்தியாவை நோக்கி எறியும் போது என்ன சொல்வாளோ அதைத் தான் உணர்ந்து சொல்லி இருக்கிறார். அந்தத் தாய்க்கு பதில் எழுதுங்கள். அதைப் பதிவிடுங்கள். அந்தத் தாய் ஏன் இந்தியாவைத் திட்டுகிறார் என்று பதிவிடுங்களேன்.
கவிஞர் தாமரை இந்தியாவில் இருந்து கொண்டு இந்தக் கவிதையில் இந்தியாவை திட்டுகிறார் என்று எண்ணி பதிவிட்டது போல் தெரிகிறது.

கிருஷ்ணா said...

//தாமரையால் அவ்வளவுதான் செய்ய முடியும். இருப்பவர்களின் உணர்சியை தூண்ட மட்டும் தான் முடியும்//

தோழரே.. பாரதி என்ன செய்தான்?? பாரதிதாசன் கவிஞனாக என்ன செய்தான்? அவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டி விடவில்லையா? உணர்ச்சிகளைத் தூண்டாவிட்டால் கவிதை கவிதையாக இராதே!

//உணர்ச்சியால் மதியிழந்த கூட்டம் எங்கும் வெற்றி பெற்றதாய் வரலாறு இல்லை நண்பரே.//

வரலாறு தெரியாத கூற்று! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், விடுதலைப் புலிகளை சாடுவது போல் இருக்கிறதே! விழுந்தவனுக்குத்தானே வலி தெரியும்.. சும்மா பார்ப்பவனுக்கு புரியுமா வேதனை?

//தாமரையின் வார்த்தைகள் தலைமையின் கொள்கைக்கு எதிராகவே நான் கருதுகிறேன்//

எந்த தலைமையின் கொள்கைக்கு? இத்தாலிப் பெண்ணிடம் தேசத்தையே அடகு வைத்த ஆற்றாமையின் விளைவு தானே இந்த போர்! ஒரு மனிதனை கொன்றதற்காக ஒட்டு மொத்த இனத்தையே அழிக்கத் துணிந்த உங்கள் தலைமையின் இறையாண்மை எங்கே? அந்த வீரத்தைப் பாகிஸ்தானிடம் காட்ட வேண்டியதுதானே?? நாடாளுமன்றம் வரை வந்து குண்டு வைக்கிறானே.. அங்கு மட்டும் வீரத்தைக் காட்ட ஆண்மையில்லையோ?!

ஓ.. மறந்து விட்டேன்.. இளிச்சவாயன் தமிழன் தானே! தமிழனை கொன்று குவித்தால்.. அதனை எதிர்த்து போர் வேண்டாம்.. ஒரு பா எழுதினாலே அடுத்த தமிழன் அதற்கு கண்டனம் தெரிவிப்பான் என்று உங்கள் தலைமைக்கு தெரியும்.. அதனால்தானே?!

தாக்கிய மிருகத்தை விட்டுவிட்டு, தவிக்கும் குழந்தையை சாடுவது என்ன ஞாயம்?

தாமரையின் கவிதையில் உணர்ச்சிவயப்பட்டு வரும் ஒரு சில உவமைகளை மட்டும் புரிந்துகொண்டு, அவர் சொல்ல வந்த கருத்தையே நிராகரிப்பது எப்படி தகும்?

//திறம் (strategy) மட்டுமே வெல்லும் காலம் இது... உணர்வு கொள், திறம் படை... உணர்ச்சியை அமிழ்த்து!!//

சரியாக என்னை புரிந்து கொண்டீர்கள் அண்ணா//

இருட்டில் இருக்கும் எதிர்காலத்துக்கு இருண்மைப் பண்பில் விளக்கம் தேவையா? சொல்ல வந்ததை தெஇளிவாகச் சொல்லாமல்.. திறம்.. உணர்வு கொள், என்று மேலோட்டமாகச் சொல்லி விட்டு கைத்தட்டு வாங்குவது மேடைப் பேச்சுக்கு ஒவ்வும்.. என்ன திறம் கொள்ள வேண்டும்.. எந்த உணர்வு கொள்ள/கொல்ல வேண்டும் என்பதை விளக்கமாய்ச் சொல்ல வேண்டாமா?

பிரபாகரனுக்கு தெரியாத திறமா?? முப்பது ஆண்டுகள் ஆட்டிப் படைக்கவில்லையா? கருணா போன்ற கருங்காலிகளாலும்.. சோனியா போன்ற ....களாலும் அந்த மாவீரனின் படை தோல்வி கண்டது.. இதில் எந்த திறத்தை பாராட்டுவது? பிரபாகரனின் திறமா?? கருணாவின் திறமா? யாரைப் பாராட்டுகிறீர்? தெளிவாகச் சொல்லுங்கள்.. தோழரே..

நாமக்கல் சிபி said...

http://manamumninavum.blogspot.com/2009/06/blog-post_23.html

வெத்து வேட்டு said...

//தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.//
why ltte was annihilated like this?

because of lot of mothers' curse
and people who support ltte will also end up like this...
Thamarai's curse is just pure frustration that now she cannot become "State Poet" of Tamil Eelam and no more payment for her "poetic" and other services :)
she has to look for local customers now...

மானுடம் said...
This comment has been removed by the author.
மானுடம் said...

அப்பாவி......
மோட்டார்சைக்கிலில் போகயில யாராவது குறுக்க வந்தாலேயே சாவுக்கிறாக்கி வேற எங்கயாவது விழுந்து சாக வேண்டியது தானே ஏன்டா என்ற கழுத்த அறுக்கிறாய் என்று திட்டுற காலம் இது .... தன்ர கண்முன்னால் துடிதுடித்துக்கொன்டு சாகும் மகனைப்பார்க்கும் எந்த பாசமுள்ள தாயும் இதயும் விட கேவலமாகத்தான் திட்டுவாப்பா...

Anonymous said...

நான் உங்கள் பக்கம் தான் முரு..

பழிக்கு பழி...ரத்தத்துக்கு ரத்தம் என்கிற போக்கில் இருக்கிறது அவரது சாபக் கவிதை.

நந்தா said...

நானும் தமிழன்தான். இந்தியன்தான். எனக்குக் கோபம் வரலை.

எவரொருவர் சகோதர சகோதரிகளின் அழிவைக் கண்டு தன்னால் முடிந்த எந்த ஒரு சிறு துருமபையும் அசைக்க மறுத்தவர்களாய், கேவலமாய் இறையாண்மை இன்னபிற கருமங்களை பேசிக் காலம் கழித்தார்களோ அவர்களுக்கு ஒருவேளை இந்தக் கவிதை அய்யய்யோ நம்மை சரியா கணிச்சு சாபம் கொடுத்திருக்காங்களேன்னு குற்ற உணர்ச்சியில் கோபம் வரலாம்.

இந்தியா என்று நீங்கள் எதை உணர்கிறீர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா என்றால் இத்தாலிக்காரியின் காங்கிரஸ்தான். இந்த காங்கிரஸ்தான் இந்தியா என்று சொல்லிக் கொண்டு ஐ.நாவில் எங்கள் சகோதர சகோதரிகளிற்கு எதிராய் வாக்களித்தது. அதே காங்கிரஸ் இந்தியாதான் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது இங்கே பல் குத்திக் கொண்டு அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தது. இவை இல்லாமல் இந்திய உளவுத்துறையின் கேவலமான கூட்டிக் கொடுக்கும் காரியத்தினை ஒத்த மறைமுக வேலைகள் வேறு.

இந்த காங்கிரஸ் இந்தியாதான் இது வரை 400 பேருக்கும் மேலான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட போது "கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்" என்ற வார்த்தைகள் அடங்கிய கேவலம் ஒரு சின்ன அறிக்கையினை கூட விடாமல் இருந்தது.

இந்த காங்கிரஸின் இந்தியாதான் தற்போது இங்கே இருக்கும் அகதிகளை நீங்கள் இனி ஒரு முறை இங்கே திரும்பி வரக் கூடாது என்று அழுத்தம் கொடுத்து ஏற்கனவே வேதனையில் உள்ள ஜீவன்களை இன்னமும் வாட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இது எல்லாவற்றிலும் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தன் சுயநலத்தை தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத சில அறிவுஜீவிகளின் பங்கும் பெரிய அளவில் இருக்கின்றது.

இதற்கெல்லாம் என்ன செய்து எங்கள் மனதை ஆற்றுவது. "என்ன இருந்தாலும் இவங்க பண்ணது தப்புதான்" என்று கையைக் கட்டிக் கொண்டு பதில் பேச சொல்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் கோபத்தை வரவழைக்கக் கூடிய காரணிகள் வேறு வேறாய் இருக்கின்றன. "யார் அந்த முத்துக் குமாரன்?" என்று கேட்ட காங்கிரஸ்காரனின் கேள்விகள் உங்களுக்கு சர்வ சாதாரணமாய், புறம் தள்ளக் கூடியதாய் தெரியலாம். எனக்கோ அல்லது இந்த உணர்வாளர்களுக்கோ தாமரையின் மீதான உங்களாது கண்டனம் ஒன்றுமில்லாததாய் புறம் தள்ளக் கூடியதாய் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை இப்போதாவது இவ்வளவு உக்கிரமான கோபத்தை காட்டினார்களே என்ற சந்தோசமே மனம் முழுதும் நிறைந்திருக்கிறது.

பி.கு: என்னுடைய பதிலில் காணப்படும் கோப உணர்வுகளும், வார்த்தைகளும் உங்களைக் குறித்தானது அல்ல. இவ்விஷயத்தில் இன்னமும் போலித்தனபாய் நடந்து கொள்ளும் பல மிருகங்களின் மீதானது.

http://blog.nandhaonline.com

Unknown said...

///அரசியல் கடையில் சூடாத்தான் நடக்குது ஈழ வியாபாரம்.///

என்னுடைய வார்த்தைகளை எனக்குத் தெரியாமல் திருடிய டக்ளஸ் அவர்களைக் கண்டிக்கிறேன்

Raju said...

/**என்னுடைய வார்த்தைகளை எனக்குத் தெரியாமல் திருடிய டக்ளஸ் அவர்களைக் கண்டிக்கிறேன்**/

என்னாடா இது வம்பாப் போச்சு..!
மிஸ்டர். குமாரசாமீ, நான் அந்த வார்த்தைய உங்க் பிளாக்குல படிக்கவே இல்லை.
நான் அப்படி எழுதியது "நண்பர் ச்சில்‍பீர்" அவர்களின் இந்த பதிவை படித்ததால் வந்த‌
தாக்கம்..மற்றபடி,நான் எழுதிய அந்த வார்த்தைகளுக்கும் உங்களுக்கும் என்னைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமும் இல்லை...!
நீங்கள் அப்படி ஒரு பதிவு எழுதியது கூட எனக்கு தெரியாது நண்பா...!
"நண்பர் ச்சில்‍பீர்" வேண்டுமானால் அவர்கள் என்னைக் கண்டிக்கலாம்.
நீங்கள் தேவையில்லாமல், என்னைக் கண்டிப்பதை நான் தாங்கிக் கொள்ள மாட்டேன்.

இதோ ச்சில்பீர் அவர்களின் பதிவிற்கிரிய லிங்க்.

http://jaihindpuram.blogspot.com/2009/04/blog-post_29.html

மெய்யை மட்டும் சொல்லுங்க.. குமாரசாமி.
:)

Unknown said...

கவிஞர் தாமரை தனது ஆற்றாமையை கொட்டி இருக்கிறார்,சாவு வீட்டின் ஓப்பாறிக்கு பொழிப்புரை எழுதக்கூடாது, ஆகையால் அவரின் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்து விவாதிப்பதில் அர்த்தமில்லை, அவர் தனது ஆற்றாமையை தனித்துக்கொண்டு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறேன்.

Cuddalore J. Shanthakumar said...

அன்பு சகோதர உன்னை பார்த்து கோபப் படுவதா இல்லை வெட்கி தலை குனிவதா.
ஒரு தமிழனாக உன்னால் இந்த கட்டுரை எப்படி எழுத முடிந்தது.உன்னால் இப்படி விமர்சனம் தான் செய்ய முடியவில்லை,செய்பவர்களை ஏன் இப்படி குத்தம் கண்டுபிடிகிறாய்.நீ ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள் நாம் திராவிடர்கள் அவர்கள் ஆரியர்கள். ஒரு கருத்தை ஆதரிக்காமல் இப்படி நம்மக்குள் வாக்கு வாதம் செய்வதால் தான் இன்னும் நம் இனத்துக்கு விடிவு கிடைக்காமல் இருக்கிறது.இன்றும் என்றும் நமக்கெல்லாம் ஒரே தேசிய தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் தான்.இன்னும் தமிழின தலைவர் என்று சொல்லி நம்மை எல்லாம் ஏமாற்றி கொண்டிருக்கும் கலைஞர் அவர்களை நம்பினால் நாளை தாய் தமிழகத்தையே இழக்கும் நிலை கண்டிப்பாக வரும்.தயவு கூர்ந்து இந்த கட்டுரையை நீக்குங்கள்,இன்ன உணர்வை வளர்க பாடுபடுங்கள்.ஒற்றுமையை இருப்போம் தமிழர்கேன்று ஒரு நாட்டை உருவாக்குவோம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

பீர் | Peer said...

முரு, சொந்த வேலை காரணமாக கொஞ்ச நாட்களாக வலை மேய வரவில்லை.

எதிர் கருத்துக்கள் பல வந்திருந்தாலும் நான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். தாய் நாட்டிற்கு சாபமிடுபவர்களை, துரோகம் செய்பவர்களை பாரபச்சமின்றி நாடு கடத்த வேண்டும் அது கவிஞரானாலும் கலைஞரானாலும்.
எங்கள் பணத்தில் சொகுசு வீட்டில் சுடு சோறு உண்ணும் உனக்கு தகுதியில்லை எங்கள் மக்களை சபிக்க. கவிஞருக்கு கவிதைதான் எழுதத்தான் தெரியுமாம்... பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாய் எழுதுவது சரி, எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத எம்மக்களுக்கு எதிராய் எழுதுவது எந்த விதத்தில் நியாயம் நண்பர்களே,

//ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!//


//தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!//


உனக்கு எங்கிருந்தாவது மினரல் வாட்டரும் பாஸ்மதியும் வந்துவிடும், வானம் பார்த்து நிற்கும் நாங்கள் எங்கு செல்ல?

//தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!//


//ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!//


குளிர் அறையில் கவிதை எழுதும் உனக்குத் தெரிய வாய்பில்லை, இதனால் எத்தனை தலைமுறை சோற்றுக்கில்லாமல் தவிக்கிறதென்று.

//உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!//


என்னத்த சொல்ல...

பத்தினி சாபம் பலிக்குமாமே? நல்ல வேளை உன் சாபம் எதுவும் பலிக்காதென்பது ஆறுதல்.

சக்திவேல் said...

நன்பா பீர்

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடியவைத்த‌
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்துசிதறிய டல்களோடு
சுடுகாடு மேடாக்கிய‌
பெண்களெல்லாம் படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடச்செய்த‌

கயவர்களை என்ன செய்வாய், சொல் நன்பா

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB