பிரபாகரனைக் கொன்னது சரி தானா?

சொந்த ஊருக்கு டைட் செட்யூலில் லீவுக்கு வந்திருக்கும் போதும், இந்திய, இலங்கை பிரச்சனையைப் பார்த்து மனசு மட்டும் அப்பப்ப நொந்து போயிருது. வந்தன்னிக்கே பார்லிமெண்ட் எலெக்சன் ரிசல்டைக் கேட்டதும் கொஞ்சம் ஷாக் தான். இருக்காதே பின்னே, இலங்கையில இன அழிப்பு நடந்துக்கிட்டு இருக்கு, அங்க இருக்குற அரசாங்கமே மக்கள் மேல ஊருல - உலகத்துல தடைப் பண்ணுன கெமிக்கல் பாமை போட்டு கெமிக்கல் அலிக்கு அடுத்த எடத்தை நம்ம ராசபக்சே அண்ணாச்சி எடுத்துகிட்டு இருக்காரு, நம்ம நாட்டுல ஆளுங்கட்சிகளோ `நாங்கல்லாம் ஆயுதமெல்லாம் தரலைன்னு` சொல்லுது, தாத்தாவோ உடநிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை அரைநாளிலேயே முடிச்சிக்கிட்டாரு. அம்மா சொல்லுறதெல்லாம் சும்மான்னு விவரமில்லாதவன் மொதக்கொண்டு எல்லாத்துக்கும் தெரியும்!

இருக்குற கடைசி நம்பிக்கை மக்களோட ஓட்டுப் போடுற `கை` மட்டும் தான். இது தான் ஈழத்துல இருக்கிறவங்களுக்கு நல்ல வழியைக் காட்டப் போகுதுன்னு காத்துக்கிட்டு இருந்தா, எல்லாமே நிராசையாப் போச்சு. மக்கள் `கை`யை மேல தூக்கிவிட்ட உடனே, அங்க இலங்கையில இயக்கத்தோட கடைசி மூச்சையும் கரெக்ட்டா நசுக்கிப்புட்டாங்க. எல்லாமே சொல்லிவச்ச மாதிரி நடக்குது. கேட்டா `இல்லவே இல்லைன்னு மஞ்சள் துண்டைப் போட்டு தாண்டுவாய்ங்க`. அதனால கேக்குறதுல புரயோசனமே இல்லை.

ஏதோ, நம்ம தாத்தாவோட புண்ணியத்துல, `பிரபாகரன் உயிரோடவோ இல்லை பிணமாகவோ கிடைத்தால், அலெக்சாண்டர் – போரஸை நடத்தியபடி நடத்த வேண்டும்`ன்னு கேட்டுக்கிட்டதால, பிரபாகரன் பொணத்தை ஏதோ மரியாதையா காமிக்கிராய்ங்க. தாத்தா மட்டும் கேக்கலைன்னா `அம்மனமாக்கி அவமானப்படுத்திருப்பாய்ங்க`. இதுல இருந்தே தாத்தாவோட கணிப்புக்கு - வாய்ஸ்க்கு, ராசபக்சே கிட்ட எவ்வ்ளோ ரியாக்சன்னு நமக்கு புரிஞ்சிருக்கும்!?எல்லாம் தான் முடிஞ்சி போச்சே, காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்ட மக்கள்கிட்ட பிரபாகரனை கொன்னதாச்சு தெரியுமான்னு கேக்கலாமுன்னு ஊருக்குள்ள ஒரு ரவுண்டு விட்டு பாக்குறப்ப, மீசைய முறுக்குனபடி வெறப்பா நம்ம சொந்தக்கார பெருசு டீக்கடையில ஒக்காந்து இருக்கிறதப் பாத்ததும், நமக்கொரு டீய ஆடர் பண்ணிட்டு, `என்னா பெருசு நல்லா இருக்கியா?, டியெம்கே கூட்டணி செயிச்சிருச்சு போலிருக்கு` ன்னு கேட்டதும்,


பாக்கனுமே அழகை!?, வாயெல்லாம் பல்லாவுல்ல இருந்துச்சு, `ஆமாமா, எங்கிட்டோ வேலை செஞ்சாங்க, செயிச்சாங்க`ன்னுச்சு பெருசு. `எது, எலெக்சனுக்கு மொதனா ராத்திரி ஏழுமணிக்கு கரண்டை ஆப்பண்ணிட்டு வீட்டு, வீட்டுக்கு நல்ல சப்ளையாமே அதா?` எனக் கேட்டதும், `ஆமா, எல்லா வீட்டையும் பாத்துட்டாங்கல்ல` என சந்தோசமாக சொன்ன பெருசுக்கிட்ட,


அது இருக்கட்டும் பெருசு, இலங்கையில பிரபாகரனைக் கொன்னுட்டாங்க தெரியுமா? அதுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆளுகதான் காரணமுன்னு தெரியுமா?` எனக் கேட்டதும், கொஞ்சம் உக்கிரமாக `மாப்ள, கட்சித் தலைவன்னா – தேர்தல் தோல்விக்கி கவலைப்படக்கூடாது, அதே மாதிரி துப்பாக்கி தூக்கி சண்டை போடுறவனா இருந்தா- - சாவுக்கு தயங்கக்கூடாது` என சொல்லிய பெருசு மூச்சு விடாமல்


`இப்ப எல்டிடியே எடுத்துக்க நம்ம அமைதிப் படை போனப்ப, அவுங்கட்ட இருந்த பெரிய ஆயுதம் கொரிலா தாக்குதல், அந்த கொரில்லா தாக்குதலைத் தாங்க முடியாம செத்த இந்திய ராணுவத்துக்காரனுங்க எத்தனைன்னு தெரியுமா? இது எல்டிடியி மூலமா இந்தியாவுக்கு வந்த மொத அவமானம்,

`அடுத்து கரும்புலிகள்ன்னு வச்சுக்கிட்டு தற்கொலையை பெரிய ஆயுதமாக்குனாங்க. அதைவச்சு ஒரு முன்னாள் இந்திய பிரதமரை, பிரச்சனைக்காகவோ – காசுக்காகவோ தமிழ்நாட்டுல வச்சுக் கொன்னா தமிழ்நாட்டுக்காரய்ங்களுக்கு சிக்கலேன்னு கூட யோசிக்காமலேயே கொன்னாங்க. எல்டிடியி ஆளுக தமிழ்நாட்டைப் பத்தி கவலைப்படாதப்ப, நாம தமிழ்நாட்டு ஆளுக மட்டும் ஏன் அவுகளைப் பத்தி கவலைப்படணும்?


அடுத்து உலகத்துல எங்கயிமே இல்லாத ஆசாரமா, பிளைட்டு வச்சி சண்டை போடுற மொத போராட்டக் கூட்டம் இவங்கதான். பிளைட்ட வச்சு இலங்கையில என்ன வேணும்ன்னா செய்யட்டும், ஆனா இந்தியா கவருமெண்டு மேல ஏதாச்சும் கோவம் வந்துச்சுன்னு பிளைட்ட வச்சி கல்பாக்கத்திலோ – கூடங்குளத்திலோ வந்து குணடைப் போட்டா தமிழ்நாட்டோட கதி என்னாகிறது? ஏற்கனவே தமிழ் மக்களைப் பத்தி கவலைப்படாம தமிழ்நாட்டுல வச்சி பெரிய சோலி பாத்தவங்கதானே?அதனால கூட்டிகழிச்சி பாத்தா, ராசிவ் காந்தியைக் கொன்னதுக்கு பலிவாங்குறாங்களோ – இல்லையோ, கவருமெண்ட விட அதிக பலமான போராட்ட கூட்டத்தை கடனை வாங்கியாச்சும் கொல்றதுதான் சரி. அதைத்தான் இலங்கை செஞ்சிருக்கு, அந்த வகையில பிரபாகரனைக் கொன்னது சரிதான்!` என பெரிசு முடித்ததும், எனக்கு மயக்கமே வந்தது.


`காசைக் கொடுத்தவிய்ங்க மக்கள் மனச எப்பிடியெல்லாம் திரிச்சி வச்சிருக்காய்ங்க`

கடைசியாக கிடைத்த போட்டோ

12 comments:

தீப்பெட்டி said...

:(

பதிவு எப்படி இருந்தாலும் தலைப்பை மாற்றினால் நல்லது நண்பரே...

:(

பழமைபேசி said...
This comment has been removed by the author.
Babu said...

யாருய்யா அது? தலைப்பை மாத்து.
எரியிற வூட்ல புடுங்கின மட்டும் லாபம்ங்கற மாதிரி இப்போ கூட ஹிட் சேர்த்து விளம்பரம் தேடறியா?
உணர்வுகளைக் காயப்படுத்தாதீர்.
ஒரு தமிழன்

Babu said...

யாருய்யா அது? தலைப்பை மாத்து.
எரியிற வூட்ல புடுங்கின மட்டும் லாபம்ங்கற மாதிரி இப்போ கூட ஹிட் சேர்த்து விளம்பரம் தேடறியா?
உணர்வுகளைக் காயப்படுத்தாதீர்.
ஒரு தமிழன்

தத்துபித்து said...

Yovvvvvvv ithu perusu sonnatha illai perusu mathiri nee sonnataha?

ஜோசப் பால்ராஜ் said...

பலரும் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல் தலைப்பு பலரையும் கடும் கோபத்தில் இங்கு வரவைப்பது உண்மை.
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள் முரு.

நான் இலங்கைத் தமிழன் said...

இந்தியா இராணுவம் ஈழத்தில் எம் மக்கள் 6000 பேரை படுகொலை செய்து ஆயிரகணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை என்ன சொல்கிறாய். எம் தலைவர் எமது விடுதலைக்காக போராடுவது பல தறுதலை(வர்)களுக்கே தெரியாதபோது உன்னைப்போல் நேற்று முளைத்த காளான்களுக்கு எப்படி தெரியும். நீ தமிழ் இனத்துக்கு குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு நல்லது செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை ஒரு மயிரையும் புடுங்காமல் இரு அது போதும்.

karunanithy said...

thank u for your writing but the headline not good velka thamil eelam vaalka thamilar valamudan.

அப்பாவி முரு said...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே!!

தமிழர் படு பாடுகளுக்கு மத்தியில் ஹிட்ஸ்க்காக நான் இதை எழுதவில்லை.

தலைப்பையும் மாற்றிவிட்டேன்,

அடுத்து உண்மையில் இணையத்தை பயன்படுத்துவோர் மத்தியில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னை தெரிகிறது. மற்றபடி மக்கள் மத்தியில் அழகிரிக்கு உள்துறை அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற கேள்வி மட்டுமே உள்ளது.

என்னோட ஊரிலிருந்து நாகர்கோவில் வரையிலான எனது பயணத்தில் நான் சந்தித்த மக்களின் கருத்து மட்டுமே.

நான் யார்? என்னுடைய கருத்து என்ன என்பது என்னை தொடர்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

பதிவை எழுதியவன் கடைசியில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் படத்தை வெளியிட்டதேலேயே உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

அப்பாவி முரு said...

இணையதொடர்பிர்க்கு வருவது குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்பதாலேயே தாமதமான பதில்.

நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவேண்டும்.

நசரேயன் said...

:((((

ரஜினி ரசிகன் said...

அருமை! அருமை! உங்களின் பதிலடி சூப்பர்!!!! உங்கழனி கற்பனை அதைவிட சூப்பர்!!!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB