எண்ண வித்யாசம்?


ஒரு கண்டத்திலிருந்து
கிளம்பிய கூட்டத்தில்
ஒருவன் அமெரிக்காவை கண்டான்,
ஒருவன் ஐஸ்லாந்தைக் கண்டான்,
ஒருவன் அம்புலியைக் கண்டான்.

ஒரு குண்டின் வெடிப்பிலிருந்து
கிளம்பிய ஆணிகளில்
ஒன்று எதிர் கமெண்டரின் காலைத்துளைத்து,
ஒன்று பள்ளிப் பேருந்தின் ஓட்டுனரைத் துளைத்தது,
ஒன்று குடும்பத் தலைவனைத் துளைத்தது.

திசைகள் வேறாயிணும்,
குறிகள் வேறாயிணும்,
வெற்றியும், வீழ்ச்சியும்
ஒன்றுக்கொன்று வேறுயில்லை.
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!

ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

இதில்
என்ன வித்தியாசம்?
எண்ண வித்தியாசம்!!

18 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???//

நைஸ்......கொஸ்டினுக்கு பதில் மட்டும் தெரியல

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

இதில்
என்ன வித்தியாசம்?
எண்ண வித்தியாசம்!!//

ஆமாம் ,இங்கு அப்படித்தான் இருக்கிறது. மகாநதி டயலாக் கிட்டத்தட்ட பொருந்தி வருதுல்ல?

கும்மாச்சி said...

முரு நல்ல கவிதை, நானும் காவிரி பிரச்சினைப் பற்றி ஒரு கவிதை போட்டுளேன் படிக்கவும்.

priyamudanprabu said...

//ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

இதில்
என்ன வித்தியாசம்?
எண்ண வித்தியாசம்!!//

என் மனசில் இருந்துச்சு , ஆனா கவிதியாக்க தோனல
அருமை நன்பரே

sakthi said...

ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

அருமை முரு

sakthi said...

திசைகள் வேறாயிணும்,
குறிகள் வேறாயிணும்,
வெற்றியும், வீழ்ச்சியும்
ஒன்றுக்கொன்று வேறுயில்லை.
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!


வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள்

பழமைபேசி said...

அபாரம்.... இது!

ஏய், தமிழ்ல தட்டுறதுக்கு உள்ள விட்டா, இந்த தம்பி மாதிரி இன்னும் நிறைய கவிஞருக தமிழுக்கு கிடைப்பாங்கங்றேன்.... ச்சும்மா, அதுல நொள்ளை, இதுல நொள்ளைண்ட்டு?!

அப்பாவி முரு said...

நன்றி பிரியமுடன்.........வசந்த்.,

நன்றி ஸ்ரீதர்.,

நன்றி கும்மாச்சி.,

நன்றி பிரியமுடன் பிரபு.,

நன்றி sakthi .,

நன்றி பழமைபேசி...

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு முரு..

எண்ணங்களில் வித்யாசம்தான்...

உங்கள் ராட் மாதவ் said...

அப்பாவின்னு சொல்லிக்கிட்டு பட்டய கிளப்புறீங்க. வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

என்ன / எண்ண

நல்லா உபயோகித்துள்ளீர்கள்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

Panamthin Alavuthaan Vithiyaasam -:)

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எல்லாம் பொருளாதார ஏற்ற தாழ்வுதான்...சொன்னது சரிதானா..?

வால்பையன் said...

அட!

Raju said...

:)

Template மாத்தி ஒரே கலக்கலா இருக்கு.

VIKNESHWARAN ADAKKALAM said...

கவிஞர் முரு அசத்துரிங்க...


உங்களின் வித்தியாசமான சிந்தனை மிக ஆழமாக இருக்கிறது...

கார்க்கிபவா said...

template ந்ல்லா இருக்குப்பா..

எண்ண வித்தியாசம்.. ம்ம்

க.பாலாசி said...

//வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???//

கண்டிப்பாக ஒப்பாது. ஏனென்றால்...

நிலத்தில் கால்வைப்பவன்,
நிலவில் கால்வைப்பவன். எத்தனை வேற்றுமைகள். எப்படி ஒப்பாகும்?

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB