காக்கை நேசம்

சோறைப் பங்கிடும் போது
பொங்கிடும் நேசம்,

பீரைப் பங்கிடும் போது
குறைகிறதே நேசம்!?
சிகரெட்டைப் பங்கிடும் போது
பரவிடும் நேசம்,

நான் பார்க்கும் பெண்ணையே, அவனும் பார்க்கும் போது
குறைகிறதே நேசம்!?
கையிலிருக்கும் காசெல்லாம் கொடுத்து பஸ்ஸேத்திவிடும் போது
கலங்கிடும் நேசம்,
கொடுத்த காசைக் கேட்கும்போது
கலங்கிடுதே நேசம்!?
சாதனை புரிந்தான் என் நண்பன் என
மார்தட்டும் நேசம்,

சீரழிந்த பழைய நண்பனைக் கண்டதும்
ஒளிந்திடுதே நேசம்!?
காக்கையும், குருவியும் என் ஜாதி
என்றிடும் நேசம்,
தன் ஜாதிப் பெண்ணைக் காதலித்தால்
அரிவாள் எடுக்கிறதே நேசம்!?
பச்சை வரிகள் மட்டுமே நான்,
என்றிடுமே என் நேசம்.,

சிவப்பு வரிகள் என் நண்பர்களாக் கூடாது
என்றிடுமே என் நேசம்!!!
என் இதயத்தில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்,

நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!

14 comments:

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்!

சி தயாளன் said...

கலக்கல்....:-)))

கொஞ்சம் paragraph format செய்து விடுங்கள்..அழகாக இருக்கும்..:-)

ஆ.ஞானசேகரன் said...

//என் இதயத்தில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்,

நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!//

உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி பிரியமுடன்.........வசந்த்

நன்றி பழமைபேசி

நன்றி ’டொன்’ லீ

நன்றி ஆ.ஞானசேகரன்

Unknown said...

ரொம்ப பாதிக்கப்பட்டீங்களோ....! புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!!

Raju said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......!

ஈரோடு கதிர் said...

கொஞ்சம் உண்மை சொன்னதற்கு பாராட்டுக்கள்

வாழ்த்துக்களும்

வால்பையன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்!

வேடிக்கை மனிதன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

நல்லத்தான் யோசிக்கிராய்ங்கப்பா.

க. தங்கமணி பிரபு said...

நேசம்.... நாசம்!
பிண்ணீட்டீங்க!!

priyamudanprabu said...

கையிலிருக்கும் காசெல்லாம் கொடுத்து பஸ்ஸேத்திவிடும் போது
கலங்கிடும் நேசம்,
கொடுத்த காசைக் கேட்கும்போது
கலங்கிடுதே நேசம்!?
////


இப்படி அப்பாவியா இருக்கியே!!!!

நல்லாயிருக்கு
நண்பர்கள் தின வாழ்த்துகள்!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB