சூடான பதிவுலகம்

இன்றய பதிவுலக்கத்தில் சில தலைப்புகளைத் தொட்டாலே போதும் ரெண்டு நாளுக்கு மொத்த பதிவர்களையும் சூடாக்கி சுகமாக குளிர்காயலாம். சும்மா, சாதாரணமாக திரியைக் கொளுத்திப் போட்டால் போதும் அது பாட்டுக்கு பின்னூட்டத்தில் சரஞ்சரமா வெடித்து தூசியைக் கிளப்பி எல்லோர் மேலும் வெறும் புழுதியைப் படியவைக்கலாம். சர்ச்சையின் முடிவில் எழுதியவரோ அல்லது எதிர்த்தவரோ துளியளவுக்கும் மாறியிருக்க மாட்டார்கள்,. என்பதுதான் அதன் தனிப்பெரும் சிறப்பு.

1) கடவுள் நம்பிக்கை சரியா? தவறா?

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம், இறை தொழல். மொழி தோன்றி எழுதப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதிகாரப்பூர்வமாகவே இருந்து வரும் கேள்வி! லெமூரியா கண்டத்திலிருந்து சிதறி ஓடும் போதும், பிடிமண்ணாக தான் போன பக்கத்திற்கெல்லாம் கொணர்ந்து ஏதேணும் ஒரு கடவுளுக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத கண்டமும் இல்லை, நாகரீகமும் இல்லை, மொழியும் இல்லை என்பதே உண்மை.


பல்லாயிரம் அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வாத, விவாதம் புரிந்தும் முடிவுக்கு வர முடியாமல் நீண்டு கொண்டே இருக்கும் அனகோண்டா தான் இந்த இறை நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு கிடைக்காத அற்புதம் ஒன்று இந்த நூற்றாண்டு மனிதனுக்கு கிடைத்துள்ளது. அது ”அறிவியல்”. எனும் தொலைநோக்கு கண்ணாடி.

வெறும் வாத, விவாத்தில் மட்டும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், அறிவியலைக் கொண்டு கடவுளை இருவருமே ஆராயலாமே. வாத, விவாத்தால் மட்டும் கடவுள் நம்பிக்கையை ஒரு சார்பாக மாற்ற முடியாது என்பது வரலாறு. அப்பன், பாட்டனின் தோளில்(அறிவியல்) வசதியாக உட்கார்ந்து கொண்டும் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது, அறிவார்ந்தவர்களுக்கு ஒரு வகையான தோல்வியே!!!

இருப்பாதக் கூறும்போதோ அல்லது இல்லை என்பதைக் கூறும்போதோ தவறான அல்லது கடுமையான ஒரு வார்த்தையைக் கூட புழங்கினாலும் சொல்ல வந்த கருத்தே பாழ்பட்டுவிடும். எதிர் தரப்பினரை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராக இருந்தால் பெருமளவில் பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் வாத, விவாத்தில் ஈடுபடாமல் இருப்பதே மற்றவர்களுக்கு நலம்.

அடுத்து, பதிவுலகத்தில் வாதிப்பவர்கள் இருவருமே ஒரே மொழி மற்றும் கலாச்சார சூழலிலிருந்து வந்தவர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. மேற்கோள்களும் நமது சூழலை ஒத்ததைக் கொண்டதாக இருப்பதும் முக்கியம். ரத்தமும், சதையும் தந்த அம்மாவிடம் பிணைப்பாக இருப்பதோடு மட்டுமில்லாது, அவர் அறிமுகப்படுத்திய சகோதர – சகோதரிகளிடமும் கடைசிவரை பாசமாக இருக்கும் நாம், இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்.
*******

இடுகையின் நீளம் கருதி, மற்ற தலைப்புகள் பின்வரும் இடுகைகளில் காணலாம்.

23 comments:

சி தயாளன் said...

??

பீர் | Peer said...

முதலில் 100 க்கு வாழ்த்து, முரு.

இந்த இடுகையை எதிர்பார்த்தேன்.

//அப்பன், பாட்டனின் தோளில்(அறிவியல்) வசதியாக உட்கார்ந்து கொண்டும் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது, அறிவார்ந்தவர்களுக்கு ஒரு வகையான தோல்வியே!!!//

!!!!!

நட்புடன் ஜமால் said...

100 க்கு வாழ்த்துகள்

மற்ற 99க்கும் பாராட்டுகள்.

----------------

எந்த ஒரு முடிவையும் முன்நிறுத்தி விவாதித்தால் ஒன்றும் தேராது ...

இராகவன் நைஜிரியா said...

100 வது இடுகைக்கு வாழ்த்துகள் தம்பி முரு.

சில விசயங்கள் விவாதிக்கலாம். முடிவு அறிய இயலாதது. விவாதம் நீண்டு கொண்டே இருக்குமே தவிர, முடிவு அறியப் படாத்தது.

உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் அது இல்லை.

அறிவிலி said...

ஒரே வெக்கையா இருக்கு.


100 க்கு வாழ்த்துகள்

கிருஷ்ண மூர்த்தி S said...

/சர்ச்சையின் முடிவில் எழுதியவரோ அல்லது எதிர்த்தவரோ துளியளவுக்கும் மாறியிருக்க மாட்டார்கள்,. என்பதுதான்/

இங்கே யாரும் மாற்றுவதற்காகவோ, மாறுவதர்காகவோ வரவில்லையே!பொழுதுபோக்கத் தானே பெரும்பாலும் வருகிறார்கள் என்ற நிலையில் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அப்பாவி முரு said...

// ’டொன்’ லீ said...
??//

வாங்க லீ

!!

*****************************

பீர் | Peer said...
முதலில் 100 க்கு வாழ்த்து, முரு.

இந்த இடுகையை எதிர்பார்த்தேன்.//

எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்...

********************************

// நட்புடன் ஜமால் said...

எந்த ஒரு முடிவையும் முன்நிறுத்தி விவாதித்தால் ஒன்றும் தேராது ...//

மாறுவதற்கு யாரும் தயாராக இல்லை, நானுட்பட...

********************************

// இராகவன் நைஜிரியா said...
100 வது இடுகைக்கு வாழ்த்துகள் தம்பி முரு.

சில விசயங்கள் விவாதிக்கலாம். முடிவு அறிய இயலாதது. விவாதம் நீண்டு கொண்டே இருக்குமே தவிர, முடிவு அறியப் படாத்தது.

உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் அது இல்லை.//

நன்றி அண்ணே...

*****************************

// அறிவிலி said...
ஒரே வெக்கையா இருக்கு//

சிம்லாவிலிருந்தவர்களுக்கு சிங்கை வெக்கையாகத்தானிக்கும்...

:)))

******************************

// கிருஷ்ணமூர்த்தி said...


இங்கே யாரும் மாற்றுவதற்காகவோ, மாறுவதர்காகவோ வரவில்லையே!பொழுதுபோக்கத் தானே பெரும்பாலும் வருகிறார்கள் என்ற நிலையில் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?//

சண்டையிடுபவரின் பொழுதுபோக்கு அடுத்தவரை மனவருத்தமடைய வைக்க்கக்கூடாது என்றே கேட்ட்கிறேன்.

நிஜமா நல்லவன் said...

100-வது இடுகைக்கு வாழ்த்துகள்!

நிஜமா நல்லவன் said...

/எந்த ஒரு முடிவையும் முன்நிறுத்தி விவாதித்தால் ஒன்றும் தேராது .../

ஜமால் அண்ணே...கவலைய விடுங்க...சைடுல இல்லைன்னா பின்னால நிறுத்தி ஏதாவது தேறுதான்னு பார்ப்போம்:)))

கிருஷ்ண மூர்த்தி S said...

/சண்டையிடுபவரின் பொழுதுபோக்கு அடுத்தவரை மனவருத்தமடைய வைக்க்கக்கூடாது என்றே கேட்ட்கிறேன்./

கேள்வியெல்லாம் சரிதான்! ஆனால் வாழ்க்கை கணிதப் பாடத்தில் கேட்கப்படும் வினா அல்ல! கணிதத்தில் தான் இரண்டும் இரண்டும் கூட்டினால் நான்கு என்ற ஒரே விடை வரும், நடைமுறைவாழ்க்கையில், அனுபவங்களில் அல்ல!

கிணற்றுத்தவளை கதையைக் கேட்டிருக்கிறீர்களா? தனக்குத் தெரிந்ததே முழு உலகம், அதுதான் சரி என்ற தன்முனைப்பு இருக்கிறதே, அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். ஈகோ தான் காரணம், அதனால் தான் இப்படி நடந்தது என்பது தெரிந்தபிறகும், அதை மாற்றிக் கொள்ள முடியாமல், அப்படியே பழக்கத்தின் அடிமைகளாகவே இருந்து விடுகிறோம் இல்லையா?

இங்கிருந்து தான் மானுடம் தன அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய அவசியம், பரிணாம வளர்ச்சி ஆரம்பிக்கிறது. மாற்றம் நிகழும்போது, அதை எதிர்த்து முரண்டுபிடிக்கிற சிறுபிள்ளைத்தனம் நம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது, என்ன அளவு தான் ஆளுக்கு ஆள் மாறுபடும், அவ்வளவுதான்!

அப்பாவி முரு said...

// நிஜமா நல்லவன் said...
/எந்த ஒரு முடிவையும் முன்நிறுத்தி விவாதித்தால் ஒன்றும் தேராது .../

ஜமால் அண்ணே...கவலைய விடுங்க...சைடுல இல்லைன்னா வ்நிறுத்தி ஏதாவது தேறுதான்னு பார்ப்போம்:)))//

நிஜமா நல்லவன், என்ன கும்மியா??

*********************************

// கிருஷ்ணமூர்த்தி said...
/சண்டையிடுபவரின் பொழுதுபோக்கு அடுத்தவரை மனவருத்தமடைய வைக்க்கக்கூடாது என்றே கேட்ட்கிறேன்./

கேள்வியெல்லாம் சரிதான்! ஆனால் வாழ்க்கை கணிதப் பாடத்தில் கேட்கப்படும் வினா அல்ல! கணிதத்தில் தான் இரண்டும் இரண்டும் கூட்டினால் நான்கு என்ற ஒரே விடை வரும், நடைமுறைவாழ்க்கையில், அனுபவங்களில் அல்ல!

கிணற்றுத்தவளை கதையைக் கேட்டிருக்கிறீர்களா? தனக்குத் தெரிந்ததே முழு உலகம், அதுதான் சரி என்ற தன்முனைப்பு இருக்கிறதே, அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். ஈகோ தான் காரணம், அதனால் தான் இப்படி நடந்தது என்பது தெரிந்தபிறகும், அதை மாற்றிக் கொள்ள முடியாமல், அப்படியே பழக்கத்தின் அடிமைகளாகவே இருந்து விடுகிறோம் இல்லையா?

இங்கிருந்து தான் மானுடம் தன அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய அவசியம், பரிணாம வளர்ச்சி ஆரம்பிக்கிறது. மாற்றம் நிகழும்போது, அதை எதிர்த்து முரண்டுபிடிக்கிற சிறுபிள்ளைத்தனம் நம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது, என்ன அளவு தான் ஆளுக்கு ஆள் மாறுபடும், அவ்வளவுதான்!//

கிருஷ்ன மூர்த்தி ஐய்யா,

என் கருத்தோடு ஒத்துப்போய் சொல்கிறீ்ர்கள் என நினைக்கிற்ன்?

இல்லை என்றால் விவதிக்கலாம்.

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் முரு.. இப்பதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு..

//இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்//

சகா ஒன்னு மட்டும் நிச்சயம். இயற்கைக்கு மாறான எந்த விதியும், காலாசாரமும் ஒரு நாள் உடைந்தே தீரும். உடன்கட்டை, ஒருவனுக்கு ஒருத்தி,ஆணுக்கு பெண் மட்டுமே போன்றவை உதாரணங்கள்.. காலம் மாறும். இப்போதைய சூழல் அடஹ்ற்கு ஒத்துவராது என்று சொல்லலாம். ஆனால் நாளையே அது மாறக்கூடும்..

கிருஷ்ண மூர்த்தி S said...

/என் கருத்தோடு ஒத்துப்போய் சொல்கிறீ்ர்கள் என நினைக்கிற்ன்?

இல்லை என்றால் விவதிக்கலாம்/

ஒத்துப்போவது, முரண்படுவது எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஒன்றின் ஆரம்பம் இன்னொன்றில் போய் முடியும் என்பது தெரிகிறவரை, இந்த விளையாட்டுத் தொடர்ந்துகொண்டே இருப்பது, இயற்கை!

அப்பாவி முரு said...

// கார்க்கி said...
வாழ்த்துகள் முரு.. இப்பதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.//


நன்றி சகா...

என்னோட எழுத்துக்கு நீங்களும் ஒரு காரணம் தான்.


//இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்//

சகா ஒன்னு மட்டும் நிச்சயம். இயற்கைக்கு மாறான எந்த விதியும், காலாசாரமும் ஒரு நாள் உடைந்தே தீரும்.

// உடன்கட்டை, ஒருவனுக்கு ஒருத்தி,ஆணுக்கு பெண் மட்டுமே போனெறவை உதாரணங்கள்.//

உடன்கட்டை ஏறுதலை ஒழித்ததை மறுத்து யாராலும் பேசமுடியாது.

ஆணுக்கு பெண் மட்டும் தானென்பது மாறீவருகிறது. என்ன நன்மை என பின்னர் வரும் சந்ததிக்குத்தான் வெளிச்சம்.

ஒருவனுக்கு ஒருத்தியை, மறுக்கிறீர்களா?

பலரோடு உறவால் வந்த வினை தான் பிறக்கும் முன்னரே நோயோடு பிறக்கும் அவலம்.

அனுபவத்திலும் பாடம்கற்ற வேண்டாமா?

KARTHIK said...

100 க்கு வாழ்த்துக்கள் தல!

பதிவைப்பற்றி!

தர்க்கம் புரிதல் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை!
அரிஸ்டாட்டில் காலத்திலேயே இதற்காக தனி மேடையே இருந்தது!

ஆரோக்கியமான உரையாடலில் பல விசயங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்!

அதனால் நான் நிறுத்தப்போவதில்லை!
என் பயணம் தொடரும்!

கார்க்கிபவா said...

//பலரோடு உறவால் வந்த வினை தான் பிறக்கும் முன்னரே நோயோடு பிறக்கும் அவலம்//

ஏன் ஒருவனுக்கு ஒருத்தி எனபதை உடலுறவாக மட்டும் நினைக்க வேண்டும்? நான் சொன்னது ஒரு நேரத்தில் ஒருத்தி என்பது ஓக்கே. துணையாக.. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து வேறொரு துணை தேடக் கூடாதா? அந்த அர்த்ததில் சொன்னேன்

சுந்தர் said...

இன்னும் பல நூறு இடுகைகள் இட வாழ்த்துக்கள் ! சொல்ல வந்த கருத்தை விட சொல்லும் விதம் தான் ஜெயிக்க உதவும் .

கோவி.கண்ணன் said...

100 க்கு வாழ்த்துகள் !

அறிவியலும் என்றுமே உள்ளது.

//இந்த நூற்றாண்டு மனிதனுக்கு கிடைத்துள்ளது. அது ”அறிவியல்”. எனும் தொலைநோக்கு கண்ணாடி.//

"சுழன்றும் ஏர் பின்னது உலகம்" என்பதில் உலகம் உருண்டை என்கிற அறிவியல் இல்லையா ?

இன்றைய அறிவியல் என்பது சென்ற நூற்றாண்டில் கண்டு கொண்ட மின்சாரம், பெட்ரோல் இவற்றின் பயன்பாடுகளின் நீட்சி.

அண்மைய நூற்றாண்டுகளில் நாள் காட்டி கண்டுபிடிக்கப் படவில்லை, அவை மிகவும் பழையது :)

cheena (சீனா) said...

அன்பின் முரு

முதலில் சதம் அடித்ததற்கு நல்வாழ்த்துகள்

ஆத்திகமும் நாத்திகமும் கூடப் பிறந்த சகோதரர்கள். சொத்துச் சண்டை வருமே தவிர - ஒன்றினால் மற்றொன்றிற்குப் பலன் நிச்சயம் உண்டு.

ஆத்திகர்கள் நாத்திகர்களாவதும் - நாத்திகர்கள் ஆத்திகர்களாவதும் சாதாரணம்.

ஆத்திகம் என்று ஒன்றிருக்கும் வரை நாத்திகம் மறையாது. காலம் காலமாகத் தொடரும்.

விவாதம் விவாதத்திற்கு மட்டுமே பயன்படும். வேறொன்றும் மிகப் பெரிய விளைவினை ஏற்படுத்தாது.

இரத்தம் - சதை - அம்மா - சகோதர சகோதரை அறிமுகம் - பாசப்பிணைப்பு - இது இந்தியா

இருபது வயதிற்கு மேல் நீ யாரோ நான் யாரோ - அயல் நாடுகள்

அருமையான இடுகையின் அழகான முடிவு.

நல்வாழ்த்துகள் முரு

cheena (சீனா) said...

மறுமொழிகள் தொடர்வதற்கான மறுமொழி இது

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சந்ருவின் பதிவில் சொன்னது இது, நான் அதற்குச் சொன்ன பதில் இங்கேயும் பொருந்துவதாக இருப்பதால் சிந்திப்பதற்காக:

"நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தில் அவன் இயற்கையை கண்டு தேவையில்லாமல் பயந்தான் என்பதை விட வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்!"

உண்மை! தேவையில்லாமல் பயந்தான் என்ற இடத்தில் புரியாததால் பயந்தான் என்று மாற்றிப் பாருங்கள், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கான விடை காணக் கிடைக்கும்.

இந்த எல்லையற்ற பிரபஞ்சத்திலே, நான் தனி இல்லை, தனித்து விடப் படவில்லை, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் என்னுடன் இடையறாத தொடர்பு இருக்கிறது என்பதை உணரத்தலைப்பட்ட நேரமே, பயமில்லாமல், புரிந்துகொள்ள ஆரம்பித்ததன் தொடக்கம்.

புரிந்துகொண்ட விதமே கூட அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்து தான் நின்றது.

ஒன்று, இதைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும், படைப்பிற்குள்ளும், வெளியிலும் பரந்து விரிந்திருக்க வேண்டும்! அதாவது நான் இருக்கிறேன் என்றால், என்னைப் பெற்ற தாயொருத்தி இருக்கிறாள், அவள் என்னுள்ளும் வெளியிலுமாக இருக்கிறாள் என்று சொல்வது, என்னிடமிருப்பதெல்லாம், அவளிடமிருந்து பெறப்பட்டதே, ஆனாலும் அவள் தனியாகவும் [வெளியிலும்] இருக்கிறாள் என்று உணர்வதைப் போலத் தான்.
உடனே ஒரு கேள்வி வரும், என்தாயை எனக்குத் தெரியுமே, நான் பார்த்திருக்கிறேனே என்று! இங்கும் கூட தெரிந்து கொள்ள முடியும், பார்க்க முடியும்!

இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சமே ஒரு விபத்து. இதில் எந்தத் திட்டமிடுதலோ, ஒழுங்கோ இல்லை. அதே மாதிரி உயிர் என்பது கூட ரசாயனச் சேர்க்கையில் ஏற்பட்ட ஒரு தற்செயலான விபத்து தான்! ஏதோ ஒரு கட்டத்தில் தன்னைத்தானே mutate இருகூறாகப் பிளந்து கொள்கிற தன்மையுடன் ஒரு செல் உருவாக்கி, வளர்ந்து, வளர்ந்து, மாற்றங்களை அடைந்து, பரிணாம வளர்ச்சியில், இப்போதுள்ள மனிதன் ஈறாக உருவாகியிருக்கிறது. சில அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, உயிர் தோன்றியதே தற்செயலான விபத்து என்று சொல்லும் போது, எல்லாம் ஒரு இயற்கையான தேர்வால் natural selection என்று இருக்கும்போது, அங்கே கடவுள் என்று ஒன்று இல்லை,அது படைப்பது, காப்பது அழிப்பதான வேலைகளைச் செய்வதாக நினைப்பதெல்லாம் சும்மா ஒரு புருடா என்ற ரீதியில் இந்த சிந்தனையோட்டம் போகும்.

இந்த இரண்டு முரண்பாடான சிந்தனைகளுமே கூட ஓரிடத்தில் சந்திக்க நேரிடும் போது,

"நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை" என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா?

அங்கே வந்து ஆதிசங்கரர் நிறுவியதாகச் சொல்லப் படும் அத்வைதக் கோட்பாடு "ப்ரஹ்ம சத்யா ஜகன் மித்யா-பிரம்மமே உண்மையானது காணுகின்ற தோற்றமெல்லாம் பொய்யானது" என்று ஒரு தரப்பும், "கண்டதே காட்சி, அது உண்மை! அதைப் படைத்ததாகச் சொல்லப் படும் கடவுள் மாயை" என்று அதையே உல்டா அடித்துச் சொல்கிற இன்னொரு தரப்பும் முட்டிக் கொண்டு நிற்கத் தான் செய்யும்! இது நேற்றும் நடந்தது, இன்றும் நிகழ்கிறது, நாளையும் நடக்கும்!

சரி, வாதம், எதிர்வாதம் என்று மட்டுமே இருந்தால் எப்படி, அதன் முடிவு என்ன, எங்கே என்று கேட்கிறீர்களா?

தொடர்ந்து பேசுவோம்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துகள்.

Thamira said...

நீங்கள் சொன்னது சரியென்றுதான் தோன்றுகிறது, இதில் விவாதிக்க என்ன இருக்கிர்ரது, ஹிஹி.. எப்பூடி?

அப்புறம் 100 வாழ்த்துகள்.!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB