கொடைக்கு – கொடையா?

வரிசைக்கு ஐந்தான படுக்கை

வரிசையில் நேரெதிர் படுக்கையில்

கால்களுக்கு போர்த்தியிருந்த யுவதியும்,

காலாட்டிக்கொண்டிருந்த யுவனையும், தாண்டி

இன்னும் கொஞ்சநாளில் தள்ளாடப்போகும்

பாட்டியும் இடம் பிடித்திருந்தார்!மூவரும் நடக்கும் வேலையில்

முகம் கொடுக்காது,

பாட்டி புத்தகத்திற்கும்,

யுவன் கையடக்க இசை வட்டிற்கும்,

யுவதி கண்ணாடியில் அழகு முகத்தைப் பார்ப்பதிலும்

கவனத்தை பிடித்து வைத்திருந்தனர்.

பறக்கும் ரயிலில் பயணிப்பதாய் நினைப்போ, என்னவோ...முழுதும் படுக்காமல், சாய்ந்தேஆசுவாசமானேன்.

டக் டக் என்ற சத்தத்துடன்

அருகே வந்தவளுக்கு நாற்பதிருக்கலாம்.

'எல்லாம் தயார்,இடதா? வலதா?’

என்றவளிடம்,வலது வேண்டாம்,

’சோறு தின்ன வேண்டும்’என்றதும்,

க்ளுக் என்று சிரித்ததில்

பயம் பாதியாக குறைந்தது.இடது கையை பிடித்துக் கொண்டு,

‘Look at the other side’

என்ற கட்டளைக்குபணியாமல், அத்தையையே

பார்த்துக்கொண்டிருக்கும் போது,

தடியான குழலை

கண்ணிமைக்கும் கணத்தில்

கைநரம்பினுள் நுழைத்தாள்.


சுறுக்கென்ற சிறுவலிக்கு

முகம் சுளிக்கும் முன்,

பாவாடையான போர்வையை

விலக்கி யுவதி,

குட்டைப் பாவாடையில்

அன்னநடை பயின்றாள்.

வலி மறந்து, பார்வையால்

வாசல்வரை வழியனுப்பி

திரும்பியதிலொரு சந்தோச

ஊற்று உள்ளமெங்கும் பரவியது.

அதற்குள் கையெங்கும் பிளாஸ்திரி...


எத்தனை குழந்தைகள்,

அதில் எத்தனை பெண்?

என்ற எனது கேள்விக்கு,

’ஒரே பெண், வயது மூன்று’

என புன்முறுவலில் பதிலளித்ததும்

‘அப்போ, இன்னும் பதினைந்து வருடம்

காத்திருக்கணும், நாம் சொந்தமாக’

வார்த்தையைக் கேட்டதும்,

அடுத்த பிளாஸ்டர் வாயிக்குத்தான்

என்பதை கைநடிப்பில் காட்டவும்,

புன்னகை தான் முகங்களெங்கும் பரவியதே...
அடுத்த அவுட்பாஸ் பாட்டிக்கு...

அறுபது வயதிருக்கலாம்

ஆசை விடவில்லைபோலும்!.

எல்லாம் முடிந்து கைக்கட்டுகளை

பிரித்து வெளியேரும் போது

அத்தை மறக்காமல்

ஆளுக்கொரு பரிசு கொடுத்தது.

பிரித்துப் பார்த்தால்,

தங்கமாய் மின்னுது

‘Be positive(B+)’ பதக்கம்.கொடைக்கு கொடையா?

"குருதி கொடை”க்கு

பதக்கம் கொடையா?
கேள்வியெழுப்பாமல்,

பாட்டிவழி பாரில்

காபி மட்டும் குடித்து

மன நிறைவோடு

வீடு வந்து சேர்ந்தேன்.

15 comments:

நட்புடன் ஜமால் said...

மிக மிக அருமைப்பா

ஒரு மூச்சில் படித்து விட்டேன்

நல்ல விடயம்

வரிகள் அருமையோ அருமை.

vasu balaji said...

:) அழகாச் சொல்றீங்க முரு

வெற்றி-[க்]-கதிரவன் said...

சிங்கைல கொடுக்கபோனப்ப ரொம்ப நல்ல கவனிசிகிட்டாங்க ஆனா தமிழ்நாட்டுல அய்யோ :(

வால்பையன் said...

அண்ணே கடைசி வரைக்கும்!
ரயில் பயணம்னு தான் நினைச்சேன்!
கடைசியில் மருத்துவமனையை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!

ஆ.ஞானசேகரன் said...

அழகு... அருமை... பாராட்டுகள்

Raju said...

நல்லாருந்தது அண்ணே..!
நல்ல டைமிங்.

Raju said...

\\காலாட்டிக்கொண்டிருந்த யுவனையும்\\

அவருக்கு இருக்குற வசதிக்கு ஃப்ளைட்ல போலமில்ல..!
ஏன், ட்ரெயின்ல போறாப்ல...?

\\யுவன் கையடக்க இசை வட்டிற்கும்,\\

இங்கனக்குள்ளதான் மேட்ச் ஆகுது பாஸு..!
:)

ஈரோடு கதிர் said...

உயிர்காக்கும் தானம்

பழமைபேசி said...

கவிஞர் சின்னாளப்பட்டி வாழ்க, வளர்க!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்குறியேப்பா!!!!

அப்பாவி முரு said...

நன்றி அண்ணன்ஸ்...

Thamira said...

நல்ல ரசனையான பதிவு.

RAMYA said...

B+ Super!!

RAMYA said...

//
கேள்வியெழுப்பாமல்,
பாட்டிவழி பாரில்
காபி மட்டும் குடித்து
மன நிறைவோடு
வீடு வந்து சேர்ந்தேன்.
//


வரிகள் அருமை!

முழுவதும் ஜெட் வேகத்தில் சென்றது!

தீப்பெட்டி said...

சொல்லிய உத்தி மிகவும் அருமை...

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB