நானே விஷ்ணு!!!


காற்றுபுகா கருவறையில்,
கவலையில்லா நீர்நிலையில்,
உருவைப் பெருக்கும்
உயிர் தேடலில்
மச்சமாக வாழ்ந்திருந்தேனே...


பூவறைத் தாண்டி,
பூகோளம் தீண்டும் வேள்வியில்
ஊடகங்கள் கடக்க
கூர்மமாகவே வந்தேனே...

அன்னையின் அமுதும்,
ஆழ் உறக்கமும் அன்றி
வேறறியா வேளையில்,
அமுதரும் கிண்ணச் சேற்றில்
வராகமாக புரண்டிருந்தேனே...

உலகறியும் ஆவலில்
உலகறியா பிள்ளை.
உள்ளும், வெளியுமில்லாமல்
சிறைபட்ட போது
நரசிம்மம் போலாகியிருந்தேனே…

தமிழ்கூறும் நல்லுலகில்
முதல் முதலாக
மூன்றடி இசைத்த போது
வாமனன் போலாகினேனே…


தந்தையின் அரவணைப்பில்
தொழில் கற்று
வளர்ந்ததில்
பரசுராமன் போலாகினேனே…


வாலைப் பருவம் தேடும்
காளைப் பருவம் எய்ததும்,
பொருள் தேடி வெளிவந்ததில்
இராமன் போலாகினேனே…

சொல்லில் மென்மை,
செயலில் மேன்மை,
அனுபவத்தின் தன்னம்பிக்கையால்
கிருஷ்ணன் போலாகினேனே…

அனுபவத்தின் தழும்புகளாலும்,
காதோரத்தின் நரைகளாலும்,
காலத்தின் கட்டாயத்தாலும்
பலராமன் போலாகுவேனே…

ரௌத்திர பழக்கமும்,
உலகியல் முடுக்கமும்
உள்ளத்தின் புழுக்கமும்
கூடி, வெடிக்கையில்
கல்கியும் நானே தானோ?

25 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

படத்தின் நடுவில் ஓம் என்று தமிழில் வந்திருக்கலாம். -:)

இராகவன் நைஜிரியா said...

வெரிகுட்... தம்பி

த்வம் விஷ்ணு:
த்வம் ஈஸ்வர:
த்வம் அக்னி
த்வம் வாயு
த்வம் சூர்ய:

எல்லாமே நாம்தான். எல்லாவிற்றிலும் நாம் இருக்கின்றோம், ஆனால் எதிலும் இருப்பதில்லை.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு

பித்தனின் வாக்கு said...

எப்படிங்க முருகன். ரொம்ப நல்லாருக்கு. நல்ல கற்பனையும், உண்மையான வாழ்க்கையும் இணைக்கப் பட்டுள்ளது. மிகவும் அருமை.

தத்துபித்து said...

kelambitangaiya kelambitanga.....

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்..

வால்பையன் said...

பத்து கேரக்டரும் நீங்களேவா!?

அப்பாவி முரு said...

//ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
படத்தின் நடுவில் ஓம் என்று தமிழில் வந்திருக்கலாம். -:)//

தேடினேன், இதான் கிடைச்சது...

//இராகவன் நைஜிரியா said...
வெரிகுட்... தம்பி

த்வம் விஷ்ணு:
த்வம் ஈஸ்வர:
த்வம் அக்னி
த்வம் வாயு
த்வம் சூர்ய:

எல்லாமே நாம்தான். எல்லாவிற்றிலும் நாம் இருக்கின்றோம், ஆனால் எதிலும் இருப்பதில்லை.//

உண்மைதான்ண்ணா...

அப்பாவி முரு said...

நன்றி ஆ.ஞானசேகரன்.,

நன்றி பித்தனின் வாக்கு.,

நன்றி தீப்பெட்டி.,

நன்றி தத்துபித்து.

அப்பாவி முரு said...

//வால்பையன் said...
பத்து கேரக்டரும் நீங்களேவா!?//

எனக்கு மட்டுமில்லை, இது எல்லாருக்கும் பொதுவான பத்து கேரக்டர் தான்.

ISR Selvakumar said...

மிக..மிக..மிக..நன்றாக இருக்கின்றது

VIKNESHWARAN ADAKKALAM said...

ஏன் இந்த கொலை வெறி...

கபிலன் said...

சூப்பர் : )

அன்புடன் நான் said...

அத்தனை அவதாரமாகவும்... எப்படி? வித்தியாசமாய்... அருமை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான கவிதை.
//வாழைப் பருவம்//
spelling சரியா? எனக்கு சந்தேகம் வந்தது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாலைப்பருவம் ????

பழமைபேசி said...

வாளைப்பருவம்!

பழமைபேசி said...

வாலைப் பருவம்:

வாலை¹ vālai
, n. < bālā. 1. Girl who has not attained the age of puberty; பாலப்பருவத்திலுள்ள இருதுவாகாத பருவம்

அப்பாவி முரு said...

//r.selvakkumar said...
மிக..மிக..மிக..நன்றாக இருக்கின்றது//

நன்றி செல்வா அண்ணா...


//VIKNESHWARAN said...
ஏன் இந்த கொலை வெறி...//

பயப்பட வேண்டாம் விக்கி, கூடிய சீக்கிரம் காதல்வெறி ஆகிடும்... :)

//கபிலன் said...
சூப்பர் : )//

நன்றி கபிலன்..

//சி. கருணாகரசு said...
அத்தனை அவதாரமாகவும்... எப்படி? வித்தியாசமாய்... அருமை.//

நன்றி கருணாகரசு...

//ஸ்ரீ said...
வாலைப்பருவம் ????//

ஆமாம் ஸ்ரீ, வாலை பருவம் தான் சரி. மாற்றிவிட்டேன்...


//பழமைபேசி said...
வாலைப் பருவம்:

வாலை¹ vālai
, n. < bālā. 1. Girl who has not attained the age of puberty; பாலப்பருவத்திலுள்ள இருதுவாகாத பருவம்//

நன்றி மணியண்ணா...

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

Anonymous said...

இந்தக் கவிதை உங்களுடையதாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

நீ நான் சிவம் :)

எம்.எம்.அப்துல்லா said...

நீ நான் சிவம் :)

அப்பாவி முரு said...

//இந்தக் கவிதை உங்களுடையதாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

நீ நான் சிவம் :)//

மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை பதிவேற்றினேன் என சந்தேகமா...

நான்., நானே எழுதியதுதான்.

மன்னரே ஒப்புக்கொண்டார்., உமக்கென்ன வந்தது?

(:))

Thamira said...

ஓகே ரகம்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB