தமிழ் தாத்தா

என்பத்தியாறு வயதிலும்,
எத்துனை உழைப்பு! உன்னில்
எத்துனை சிந்தனை!, உன்
எழுத்திற்கும், சொல்லிற்கும்
எத்துனையாயிரம் அர்த்தங்கள்.


நெருப்பாற்றில் நீந்திய நாட்களையும்.,
பாம்புகள் நெளியும் பயணங்களையும்.,
வஞ்சகமும், சூழ்ச்சியும் காற்றாயிருந்த காலங்களையும்
நீ மறந்தாலும் வரலாறு மறக்காது.

இடிபோல் இறங்கிய நாளினில்,
ஏழாமிடமிருந்து,
உம்தனித் திறமையால்
அளப்பறியா ஆற்றலால்
முதலிடமேற்றாய்*.

உன்னால்தான்
இங்கு தமிழ் மணக்கிறது.
உன் உத்திரவால் தான்
அரசு இயந்திரமெங்கும் தமிழுள்ளது**.

நீ வாழும் காலத்தில்
நான் வாழ்வது எனக்கு பெருமை.
உன்மேல் பட்ட தென்றல்
என்மேல் படுவது எனது புண்ணியம்.

பொறுப்புகளை மகனிடத்தே
கொடுத்திருந்தாலும், நீயில்லா
உலகு கற்பனையிலும்
கொடூரமாகவே உள்ளது***.

தனித்தமிழ்
செந்தமிழாகியிருக்கும்
இன்னாளில், பாவாலர் பலரும்
உன்னை மறக்கலாம்,
உன்புகழை மறைக்கலாம்

உன்னால் வாழும் தமிழுக்காக
உன்னை இனி நானழைப்பேன்
என தாத்தாவென
இல்லை இல்லை
எங்கள் இரண்டாம் தமிழ் தாத்தாவெனவே.

வாழ்க நீ பல்லாண்டு.,
வாழிய உன் புகழ் பலநூறாண்டு
வாழ்க வாழ்க
லீ குவான் யூ-வே.,
வாழ்க நீ பல்லாண்டு.பின்குறிப்பு:-

* - 1965 ஆண்டு மலேசியா, சிங்கப்பூரை திடீரென தனிநாடாக பிரிந்து போக சொன்ன போது முழு பொறுப்புள்ள பிரதம மந்திரி ஆனார்.

** - தமிழ் சிங்கையின் ஆட்சிமொழியாக உள்ளது. இரண்டாவது மொழிப்பாடமாகவும் உள்ளது.

*** - இன்றய சிங்கபூரின் பிரதமர் லீ சியான் லூங், நமது தமிழ்தாத்தாவின் மகனாவார். தற்போதைய அரசாங்கத்தில் லீ குவான் யூ மதியுரை அமைச்சராக எல்லா பொறுப்புகளையும் பார்த்து வருகிறார்..

27 comments:

ஜோசப் பால்ராஜ் said...

கடைசி வரியப் படிச்சதும் தான் நிம்மதியா இருந்துச்சு.
நீங்க எழுதியிருக்க கவிதைக்கு முழுமையா பொருந்தக்கூடியவர் அவர்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முதல்ல யாரோன்னு நெனச்சுட்டேன்.

அப்பாவி முரு said...

ஜோசப்,

முதல்வரிகளை கொலைவெறியோடு படித்தது போல தெரிகிறதே???

வால்பையன் said...

கழகத்துல இணைஞ்சிட்டிங்களோன்னு நினைச்சிட்டேன்!

ஸாரி தல!

பீர் | Peer said...

முரு, யூ ஆர் த குரு.

கட்சிக்கு உங்கள மாதிரி ஆட்கள்தான் வேணும்.

Unknown said...

சுப்பர்......! நான் “அவரை”யல்லவா நினைத்துவிட்டேன்....! கலக்கீட்டீங்க போங்க..!!!

அகல்விளக்கு said...

கட்சில புதுப்பதவியோன்னு நினைச்சேன்...

கடைசி வரியப்படிச்சதும் தான் நிம்மதி.

அதுவரை நற நற நற நற நற....

இராகவன் நைஜிரியா said...

முதலில் படிக்க ஆரம்பிக்கும் போது .. இது ஒரு நையாண்டி கவிதை என்றுதான் நினைத்தேன்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... வாழ்த்துகள்

vasu balaji said...

இப்புடிய டரியலாக்குறது.இப்புடி நினைக்க வெச்சதே தப்பு. அவ்வ்வ்வ்

அப்பாவி முரு said...

//வால்பையன் said...
கழகத்துல இணைஞ்சிட்டிங்களோன்னு நினைச்சிட்டேன்!

ஸாரி தல!//

தப்பு ஒன்னுமில்லை, நாம ஆரம்பத்தில இருந்தே கலகம் தான்...

:)

*****************

//பீர் | Peer said...
முரு, யூ ஆர் த குரு.

கட்சிக்கு உங்கள மாதிரி ஆட்கள்தான் வேணும்.//

ஆமாங்க பீர், அதனால தான் கட்சியில் இருக்குறோம்.

****************************

//கதியால் said...
சுப்பர்......! நான் “அவரை”யல்லவா நினைத்துவிட்டேன்....! கலக்கீட்டீங்க போங்க..!!!//

அவரா? யார் அவர்?

பேரைச் சொல்லுங்கப்பா, பொருந்துதான்னு பார்க்கலாம்!!

அப்பாவி முரு said...

//அகல் விளக்கு said...
கட்சில புதுப்பதவியோன்னு நினைச்சேன்...

கடைசி வரியப்படிச்சதும் தான் நிம்மதி.

அதுவரை நற நற நற நற நற....//

ப்ளான் பண்ணி படிச்சா இப்படித்தான். எதையுமே பிளான் பண்ணாம படிக்கணும்!!(என்னைச் சொன்னேன்)

*************************

//இராகவன் நைஜிரியா said...
முதலில் படிக்க ஆரம்பிக்கும் போது .. இது ஒரு நையாண்டி கவிதை என்றுதான் நினைத்தேன்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... வாழ்த்துகள்//

அண்ணா, நையாண்டியெல்லாம் இல்லைண்ணா. உணையிலேயே, உணர்வுபூர்வமா எழுதுனது தான்.

****************************

//வானம்பாடிகள் said...
இப்புடிய டரியலாக்குறது.இப்புடி நினைக்க வெச்சதே தப்பு. அவ்வ்வ்வ்//

ஆக மொத்தம் எல்லாரும் எம்மேல கொலைவெறியான மாதிரி தெரியுதே???

அவ்வ்வ்வ்

ஆ.ஞானசேகரன் said...

அவரையும் இவரையும்.... சேர்த்து குழம்பிட்டேன்

அன்புடன் நான் said...

வாழ்க நீ பல்லாண்டு.,
வாழிய உன் புகழ் பலநூறாண்டு
வாழ்க வாழ்க
லீ குவான் யூ-வே.,
வாழ்க நீ பல்லாண்டு.//

இந்த‌ வ‌ரிக‌ளை ப‌டித்த‌ பின்பு தான்...என் இத‌ய‌ம் இய‌ல்பு நிலைக்கு வ‌ந்த‌து. மிக‌வும் ந‌ல்லா எழுதியிருக்கிங்க‌ வாழ்த்துக்க‌ள்.

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)
என்ன சொல்ல ?

அன்புடன்
சிங்கை நாதன்

hayyram said...

///வாழ்க நீ பல்லாண்டு.,
வாழிய உன் புகழ் பலநூறாண்டு
வாழ்க வாழ்க
லீ குவான் யூ-வே.,
வாழ்க நீ பல்லாண்டு///

ஆத்தாடி...ஒரு மானஸ்தன் மிஞ்சியிருக்காருன்னு நிம்மதியே இந்த கடைசி ரெண்டு வரிலதான் வந்திச்சுப்பா.

சி தயாளன் said...

கடைசி வரிகளைப் படித்த பின்பு தான் உங்களை நான் மன்னித்தேன்....:-)

இருந்தாலும் இப்படிப்பட்ட துதிபாடல்களை லீ குவாங் யூ மட்டுமல்ல, சிங்கையில் யாருமே எதிர்பார்த்து காரியமியற்றுவதில்லை..அதான் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் வித்தியாசம்

அறிவிலி said...

அவர் தமிழ் தாத்தா மட்டுமா???

நல்ல சிந்தனை. அருமை. :))))

அப்பாவி முரு said...

//ஆ.ஞானசேகரன் said...
அவரையும் இவரையும்.... சேர்த்து குழம்பிட்டேன்//

அவர், அவர்ன்னே சொல்றீங்களே, யார் அந்த அவர்?

*********************
//சி. கருணாகரசு said.

இந்த‌ வ‌ரிக‌ளை ப‌டித்த‌ பின்பு தான்...என் இத‌ய‌ம் இய‌ல்பு நிலைக்கு வ‌ந்த‌து. மிக‌வும் ந‌ல்லா எழுதியிருக்கிங்க‌ வாழ்த்துக்க‌ள்.//

அவ்வளவு கோவமா அவர் மேல்?

*************************

//hayyram said...


ஆத்தாடி...ஒரு மானஸ்தன் மிஞ்சியிருக்காருன்னு நிம்மதியே இந்த கடைசி ரெண்டு வரிலதான் வந்திச்சுப்பா.//

அண்ணே, ஆரம்பத்திலிருந்தே நான் மானஸ்தன் தான்!!

******************************

//’டொன்’ லீ said...
கடைசி வரிகளைப் படித்த பின்பு தான் உங்களை நான் மன்னித்தேன்....:-)

இருந்தாலும் இப்படிப்பட்ட துதிபாடல்களை லீ குவாங் யூ மட்டுமல்ல, சிங்கையில் யாருமே எதிர்பார்த்து காரியமியற்றுவதில்லை..அதான் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் வித்தியாசம்//

துதி பாடல்கள் இருந்த காலங்கள் தான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

துதி பாடல்கள் இல்லாத காலங்கள் இருண்ட காலமாக அறியப்படுகின்றது. அதனால், மறுக்க முடியாது :)

***************************

//அறிவிலி said...
அவர் தமிழ் தாத்தா மட்டுமா???

நல்ல சிந்தனை. அருமை. :))))//

நன்றி அண்ணா...

ஈ ரா said...

ரசித்தேன்

RAMYA said...

//
உன்னால்தான்
இங்கு தமிழ் மணக்கிறது.
உன் உத்திரவால் தான்
அரசு இயந்திரமெங்கும் தமிழுள்ளது**.
//

இந்த வரிகளில்தான் அனைவரும் ஏமாந்து போனார்களோ?

RAMYA said...

அருமையா சிந்திச்சி எழுதி இருக்கீங்க முரு!

நல்லா படிச்சு ரசிச்சேன் :)

ISR Selvakumar said...

Gooooooooooooooooooooooooood!

cheena (சீனா) said...

அன்பின் முரு

அழகான வாழ்த்துக் கவிதை - குறும்பு அதிகம் தான்

நல்வாழ்த்துகள் முரு

சத்ரியன் said...

//உன்னால் வாழும் தமிழுக்காக
உன்னை இனி நானழைப்பேன்
என தாத்தாவென
இல்லை இல்லை
எங்கள் இரண்டாம் தமிழ் தாத்தாவெனவே.//

முருகா,

சிறப்பான வரிகளாய் மிளிர்கிறது.

Thamira said...

இரண்டாம் அர்த்தத்துக்கு இடம் தராமல் தலைப்பிலேயே லீ குவானுக்கு இடம் தந்திருக்கலாம். இது போன்ற வாழ்த்துக்கவிதைகள் அவ்வாறே அமையும். தகுதிக்குரிய லீ குவான் யூவுக்கான பாராட்டு தனித்துவமானதாக அமைந்திருக்கவேண்டும். அதுவே நியாயம்.! (கலைஞரை தலைவராக ஏற்றுள்ளோரும் பலர் இருக்கிறோம்)

பழமைபேசி said...

நல்லா ’எழுதி’யிருக்கீங்க தம்பி!

பித்தனின் வாக்கு said...

உண்மையில் வெற்று கோஸங்களை வீட உங்களின் பாடல் அவருக்கும், சிங்கைத் தமிழர்களுக்கும்தான் பொருந்தும். நல்ல கவிதை முருகன். ஆமா நீங்க எப்ப திருந்தினிங்க?

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB