வெள்ளிக்கிழமை

செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், வெய்யக்காலத்தில் மட்டும் நீண்டு நெடியதாகத் தானிருக்கும். சேவலில் குரலைக் கேட்டு சோம்பல் முறிக்கும் பட்சிகள் மெல்ல மெல்ல கீச்சுக் கீச்சுவாகி மெதுவாய் கரைதலாக மாறும் வேளையில், தலைக்கணமேறி நிற்கும் வாலிப மனம் சிறிதாய் விழிப்பைப் பெறும். காலையில் தான் கடன்கள், பிரம்மத்திற்கில்லை என சோம்பல் மெல்ல, மெல்ல தன்வசத்திற்கு மனதைத் திருப்ப, காதலின் பால் கூட்டிச் செல்லும்.

நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும். ஏங்கி நிற்கும் எண்ணமெல்லாம், தப்பிநிற்கும் வரிசையில் மூளையின் திரையைத் தொட்டுத் தொட்டுச் செல்லும். கண்ட காட்சிகளெல்லாம் கனவாக நினைவலைப் பெட்டியில் பாதுகாப்பாக
பதுக்கி வைக்கப்படும். பதுக்கப் பதுக்க சொர்கமாக தெரியும் கனவுகளெல்லாம் இதழில் புன்னகையாக வெளியேறி விடுமோ, என்னவோ.

காகத்தில் கரைதலுக்கு, தூக்கமில்லா கனவான்களின் நடையோசைக்கும் அசையாத மனம், அந்த சல்,சல்,சல் என்று தெளிக்கும் நீரின் ஓசைக்கு மட்டும் இசைந்தா கொடுக்கும். அசைந்தும் கொடுக்காது, இசந்தும் கொடுக்காத மனதை அடுத்துவரும் சர்,சர்,சர் எனும் பெருக்கும் ஒலியோசை மட்டும் சலனப்படுத்தத் தான் முடியுமா?

ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும். வெட்கமில்லாத அவனிடம், வெட்கமே இல்லாத கனவும் தன் காதலின் அடுத்த பாகத்தை காட்ட ஆரம்பிக்கும். மனமொன்றி காதற்காட்சியில் கனவைக் நினைவாக்கிக் கொள்கையில், நாசிவழி வரும் காற்று சவ்வூடுபரவலில் தகவலாய் மாறி மூளையை எட்டும் போதுதான் தெரியும், அது சாணத்தின் மணமென்று! கூரிய மூக்கை அழுத்தித் துடைத்து, விலகிய போர்வையை முழுக்கப் பொத்தி விட்டதைத் தொடும் போது, கண்ட இன்பத்தில் பாதியைக் காணோம்.

வேதாளத்திடம் சிக்கிய விக்கிரமாதித்யன் இன்புற்றானோ?, துன்புற்றானோ? எனக்கென்ன? கனவுகளில் சிக்கி உழலும் நான் கண்டதெல்லாம் இன்பம், இன்பம், இன்பம் என மனம் கொக்கரிக்கும் வேளையில் சுள்ளென்று சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.

என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் “வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.

அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________?(கோடிட்ட இடங்களை நிரப்புக)

24 comments:

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கவில்லை.. இருந்தாலும் என் இருப்பை இந்த வலைப்பக்கத்தில் நிறுத்திக் கொள்ள மீ த பர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அப்பாவி முரு said...

என்னை கொடுமை ராகவன் சார் இது?

மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை ஆனா நான் தான் பாஸ்ட்டுன்னு மட்டும் சொல்லீட்டு போறது மாதிர்யான கொடுமை வேற எங்காவது நடக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// என்னை கொடுமை ராகவன் சார் இது?

மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை ஆனா நான் தான் பாஸ்ட்டுன்னு மட்டும் சொல்லீட்டு போறது மாதிர்யான கொடுமை வேற எங்காவது நடக்குமா? //

வருவோமில்ல... கொஞ்ச பொறுமையா படிக்கணும். லன்ஞ்சுக்கு அப்புறமா பின்னூட்டம் தொடருவோமில்ல..

vasu balaji said...

/மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை/

அய்யோ. அப்போ இடுகையில் கண்ணைக் கசக்கின்னு போட்டது பொய்யா?

கோமியம்தான். இது தெரிச்சதுக்கே சுளிச்சிகிட்டு நிரப்ப சொன்னா எப்படி?

மனுசனுக்கு சுகம் எங்கல்லாம் இருக்கு பாருங்க:))

Rajeswari said...

அய்யோ கடவுளே..

தேவன் மாயம் said...

ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும்/

பின்னீட்டிங்க முரு!!

வால்பையன் said...

//செங்கொண்டைச் சேவல்//

எல்லா ஊர்லயும் செங்கொண்டை தான்!

இலக்கியவாதி ஆயிட்டா என்னாமா ப்ளீம் காட்றாங்கப்பா!

வால்பையன் said...

முதல் வரியை பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டேன்!
இது உண்மையிலேயே இலக்கியம் தான்!

வாசலில் தெளிப்பது கோமியம் அல்ல! சாணி கரைசல்!
ஆகா முகத்தில் பட்டது!...............

இராகவன் நைஜிரியா said...

// செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், //

அந்த கூவல் சத்தம் எல்லாம் காதில் விழுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// காகத்தில் கரைதலுக்கு //

காகத்தின் ???

இராகவன் நைஜிரியா said...

// சிறு நீர்த் துளி //

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...??

இராகவன் நைஜிரியா said...

// அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________? //

கேள்வி கேக்கிறத பாரு... என்னாதுன்னு தெரிஞ்சுடுச்சுல்ல... அப்படியே லூஸ்ல விட வேண்டியதானே..

பீர் | Peer said...

நவீன இலக்கியமா...

நல்லா இருக்குன்றத தவிர வேற என்ன சொல்லிட முடியும்.

Thamira said...

என்ன இப்பிடி ஆயிட்டீங்க.. அவ்வ்வ்.. கிளம்பிட்டாங்கையா.!

thiyaa said...

சூப்பராய் எழுதியுள்ளீர்கள்

தத்துபித்து said...

///நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும்.///

ippa purinchiduchuya....ummudaiya porvaiyin ragasiyam. (mmm enna purinchu enna , ungala pethavangalukku puriya mattenguthe)

தத்துபித்து said...

///வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.///

oh ithuku peruthan kalappu manama?
.

தத்துபித்து said...

///சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.

என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் ///

antha akkavin 2 vayathu paiyan madaiyai thiranthu vittu kondirunthana?.

அன்புடன் மலிக்கா said...

நல்லாத்தேன் எழுதியிருக்கீங்க..

அன்புடன் நான் said...

அந்த கோடிட்ட இடத்தில் வருவது.... மருத்துவ குணமுள்ள..மாட்டு ....................... நீங்க உள்வாங்கியிருந்தாலும் தவறில்லை.

அப்பாவி முரு said...

நன்றி அண்ணன்ஸ்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

அண்ணே வெள்ளிகிழமை தலைப்ப பாத்துட்டு நேத்து அப்படியே ஜகா வாங்கிட்டேன்,,,

இன்னைக்குதான் படிச்சேன் இந்த மாதரி எழுத்துனடைய உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல, நல்லாருக்கு, இன்னம் கொஞ்சம் அதிகமா போனிங்கன்னா நான் எழுதுரமாதறி வந்துடும் அப்பறம் அது பித்தனின் மொழியாகிடும், அப்பறம் யாருக்கும் புரியாது -:)

அதனால இதே மொழினடைல , மாசத்துக்கு ஒரு இடுகையாவது இனி இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ( லைட்டா அழகு குறையுற மாதரி தெரயுது, இன்னும் நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன் படுத்துமாறு சொல்லிகுறேன் )

பித்தனின் வாக்கு said...

காலை பொழுதின் அற்புத விடிதலை அழகாய் உரைக்கும் பாங்கு அருமை. புரண்டு படுத்து கனவு கண்டுகொண்டு இருந்தால் வாழ்க்கையும் புரண்டு விடும்.

சின்ன சந்தோகம் பாஸ், உங்களுக்கு ஒரு சிலர் மாதிரி வாயைத்திறந்து கொண்டு தூங்கும் பழக்கம் இல்லையே, தற்கொலைக்கு சானிக்கரசலை குடிப்பார்கள். நீங்க கனவுக்கு? ஒகே ஒகே முகத்தில் தான் பட்டது என்று நம்புகின்றேம்.

// வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு //
ஒரு வரியில் உங்கள் முழு சுயவிவரத்தையும் கொடுத்து உள்ளீர்கள் நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டிங் ஸ்டைலப் பார்த்தா இலக்கியவாதி ஆகுற மாதிரி தெரியுதே :))

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB