தீபாவளி இன் மலேய்சியா!!!
நான் எப்பவும் தீபாவளியைப் பெரிதாக கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. அது ஏனோ தெரியலை சின்ன வயசுல இருந்தே அது அப்படித்தான். புது ட்ரெஸ் கண்டிப்பா போட்டிடுவேன், இல்லையானா வழியில் கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னோட தீபாவளி எல்லாம் பெரும்பாலும் நண்பர்கள்...நண்பர்கள்...நண்பர்கள் தான்.


இங்க சிங்கப்பூர் வந்து இது ஆறாவது தீபாவளி. அதில் இது இரண்டாவது மறக்க முடியாத தீபாவளி. முதல் தீபாவளி எதுன்னா? என்னோட சிங்கையில் ரெண்டாவது தீபாவளி(2005) தான் அந்த முதல் தீபாவளி. நடுத்தரமான சம்பளத்தில் வந்து, கூடுதல் வேலை பெரும்பாலும் இல்லாது, வீட்டு வாடகை, சாப்பாடு, மின் - தண்ணீர் கட்டணம், கணிணி - கேபிள் இணைப்பு கட்டணத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் சற்று மேலேயே செலவாகும். கைச் செலவிற்கு கட்டாயம் கொஞ்சம் வேண்டும். திடிரென வரும் உல்லாச பயணம், கூட்டங்களுக்கு (உடன் பணியாற்றும் சீன, மலேய அத்தை, மாமா, பிகர்களுடன்) என கொஞ்சம் போக மிக, மிக சொச்சமே ஊருக்கு அனுப்பிய பொன்னான காலகட்டம் அது.

அப்போதைய தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது என அறை நண்பர்களுடன் முடிவெடுத்து(எடுத்து தான் ஆகணும், ஏன்னா? ஒரு முழுவாரம் தீபாவளிக்கு கம்பேனி ஷட் டவுன்) (கார்க்கிக்கும் ஞாபகம் இருக்கலாம்) கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். எப்படி தெரியுமா? தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை முஸ்தபா பேரங்காடிக்குப் போய் முன்னூறு சிங்கை வெள்ளிக்கு சிறப்பு உணவு பதார்த்தங்களுக்கான மூலப் பொருள்களின் தீபாவளி பர்சேஸ். எல்லாம் கட்டிக் கொண்டு கடைவாசலில் டேக்ஸி பிடித்து, “அங்கிள் பிளீஸ் ஒபென் த ட்ரன்க் டோர். ஐ நீட் டூ லோட் மை திங்ஸ்” எனக் கூறவும், டிரைவிங் சீட்டில் இருந்தபடியே கதவை திறந்துவிட்ட அங்கிள் வந்து பார்க்குமுன்னே எல்லாப் பைகளையும் லோட் பண்ணீட்டோம்.

வண்டியை பூன்லேக்கு செலுத்தச் சொன்னது, அங்கிளும் படுலாவகமாக கூட்டத்திலிருந்து இருபது நிமிடத்தில் வெளியேறி பெருவிரைவுச் சாலையைத் தொட்டு கூச்சமே இல்லாமல் 110 கிமீ வேகத்தில் வண்டியைச் செலுத்தினார். நாங்கள் மூன்று பேரும் கை, கால்களுக்கு வேலையில்லாத போது வாய்க்கு வேலை என தமிழரின் அறிய, அறிய கண்டுபிடிப்பின் படி உரை”ஆடி” க் கொண்டிருந்த வேலையில் அங்கிள் வண்டியை வேகமாக ஓரங்கட்டினார்.


“அங்கிள், வாட் ஹேப்பண்ட்?” என நம் தத்துபித்து கேட்க, “110 கிமீ வேகத்துல வந்தா? டி.பி ஓரங்கட்டியிருப்பாரு” என அடுத்த நண்பர் சொன்னது, நாங்கள் நகைத்தோம். ஆனால், அங்கிள் பதிலேதும் கூறாமல் வாகனத்தின் நான்கு டயர்களையும் சிறு கல்லை வைத்து தட்டிப்பார்த்தவர், திடீரென எங்களிடம் வந்து “ஹவ் மெனி கிலோஸ் யூ லோடேட் பிகைண்ட்?” எனக்க் கேட்டார். நான் உடனே “மே பி 50 – 60 கேஜி ஒன்லி அங்கிள்” எனவும், “ஓ, தட்ஸ் ஒய், ஐ ஃபீல் வேவி” எனச் சொல்லிவிட்டு வண்டியை செலுத்த ஆரம்பிதார். “உடனே, தத்துபித்து, “நல்ல வேளை, உள்ள அரிசியே ஐம்பது கிலோ இருக்குன்னு சொல்லை, சொல்லியிருந்தா, இடையிலேயே இறக்கிவிட்டிருப்பாரு” என தமிழில் சொல்லவும் எல்லோரும் சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.

தீபாவளிக்கு முந்தையநாள் மாலையிலேயே அடுப்பை பத்தவைத்தாயிற்று. முறுக்கு - மூணு கிலோ, சுழியம் – ரெண்டு கிலோ தத்துபித்துவின் பொறுப்பு. தனியாக ஒரு பர்னர் அவருக்கு, யாரும் தொந்தரவு படுத்தக்கூடாது, அதான் அவரின் கண்டிசன். அடுத்து, குளொப் ஜாமுன் மீடியம் சைஸ் – 150 உருண்டைகள் வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட நண்பரின் (வெள்ளாடு, பலியாடு எனவெல்லாம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர் என் நண்பர்) மிக்சர் மூணுகிலோ கடையில் வாங்கியாயிற்று, அவசரத் தேவைக்கு கடைக்குப் போய்வர இரண்டுபேர், இரவு சாப்பாடு மற்றும் தேவையான பானங்களை கவனித்துக் கொள்ள இரண்டுபேர், மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழுபொறுப்பும் அடியேனுடையது.


முறுக்கை எப்படியோ முடித்து, சுழியத்திற்கான ஈரமாவை வைத்து அதிகாலை ரெண்டுமணி வரை ஏதோ செய்து கொண்டிருந்த தத்துபித்துவை, அன்பாக, அரவணைப்பாக வாயில் வந்தபடி வசைபாடி பின், “என்னடா, உன் பிரச்சனை?” என கேட்டதும், ”இல்லை, மாவு ரொம்ப ஈரமா இருக்கு, காஞ்ச மாவும் மிச்சம் இல்லை, என்ன செய்யுறதுன்னு தெரியலை” என்றதும்,
வீட்டில் இருந்த ஏழு பேரும் இடைவெளியில்லாமல் திட்டினோம். பின், சமையல்கலை நிபுணர்களான நாங்கள் ஆறுபேரும் சேர்ந்து, ஆனது ஆச்சு ஈரம் குறையுமளவுக்கு மட்டும் கடலைமாவைச் சேர்த்து சுழியத்தை சுட்டுடலாம் என்ற கூட்டு அறிக்கையின் படி சுழியத்தை சுத்தமாக முடித்தோம். கிட்டத்தட்ட மொத்தம் 200 துண்டங்கள், 20 நாட்கள் கழித்து போய் சேர்ந்த இடம்....., சரி வேண்டாம் விடுங்கள் படித்தால் தத்துபித்துவின் மனம் புண்படும்.அடுத்தநாள் அதிகாலையில் ஒன்பது மணிக்கு எழுந்து எண்ணைக் குளியல் எடுத்து புத்தாடைகள் அணிந்து அனைவருமாக சேர்ந்து அருகிலிருக்கும் ஜுராங் ஈஸ்ட் முருகன் கோவிலில் பன்னிரெண்டு மணிக்கு ஆலய பிரவேசம், தரிசனம் முடித்து வீடு திரும்பி காலைப் பசியாற இட்லி சுட்டு உண்டோம். கொடூர பசியில் ஆளுக்கு 10 – 15 இட்லிவரை உண்ண, இட்லி சுட்டு, சுட்டு கைவலி கண்ட கிருத்துவ நண்பர் இதற்காகவே இந்து மதத்திற்கு தாவிவிடப்போவதாக எச்சரிக்கை விட(இந்து பண்டிகையின் போது கோவிலுக்கு போகும் நேரம் மட்டும் சமையல் கிருத்துவ நண்பர்களுடையது, அதே போல் கிருத்துவ பண்டிகைகளில் சமையல் இந்து நண்பர்களுடையது), காலைச் சாப்பாடான இட்லியை மதியம் இரண்டு மணிக்கு உண்டு களித்தோம்.

அன்று இரவுதான் சிறப்பு. ஆம், எங்களின் கம்பெனியில் உடன் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்தம் இருபது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து. சமையல் தடல்புடலாக நடந்த்து, தத்துபித்துவின் தலைமையில். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார சாப்பாடு. பெரும்பாலானோர், சாப்பிட்ட பின் தான் சாப்பிட்டோம். எல்லோருக்கும் ஒரு சுழியம் மட்டும் கட்டாயம். அதான் பழிவாங்கள்.

சாப்பாடு முடிந்ததும், ஏறியதெல்லாம் இறங்க, குத்தாட்டம் ஆடவேண்டும் என்பது எங்கள் அணியின் சர்வதேச சட்டம். அதனால் வந்திருந்தவர்கள் எல்லோரையும் ஆட அழைக்க, பலர் மறுக்க, அவர்களை வற்புறுத்தாமல் சிலர் மட்டும் ஆட ஆரம்பித்து, சூடேற ஏற ஆடாத ஆட்களையெல்லாம் உள்ளே இழுத்துப் போட்டு சூரியன் சரத்குமார் மாதிரியாவது ஆடவைத்து அனுப்பிக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி இரண்டுமுறை அழைத்தது.

வீட்டின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் போய் கதவைத் திறந்தால், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

சீருடையில் போலீஸ், ரெண்டு பேர் வாசலிலும், ரெண்டு பேர் லிஃப்டின் அருகிலும் நின்றிருந்தனர். அதிலொருவர், “ப்ளீஸ் டோண்ட் மேக் நாய்ஸ், யுவர் நெய்பர்ஸ் ஆர் கம்ப்ளைனிங். அண்ட் த டைம் ஆல்சோ 1 ஏ.ம்” என்றது. “இல்லீங்க, ஏட்டைய்யா, தீபாவளி கொண்டாட்டம். இங்கதான் பட்டாசு வெடிக்கக்கூடாதே, அதான் பேசிக்...கிட்டு இருந்தோம், இதோ, இதோ இப்ப படுத்திருவோம். நீங்க போய் வாங்க” என ஆங்கிலத்தில் சொன்னதும். “யெஸ், ப்ளீஸ் ஷட் ஆஃப் எவ்ரிதிங். அண்ட் கிவ் எனி ஒன் ஆஃப் யுவர் ஐ.சி” என்றதும், வேறென்ன செய்ய குடும்ப மூத்த உறுப்பினர் என்ற வகையில், எனது ஐ.சியை எடுத்து கொடுத்ததும், ஏட்டைய்யா, அதை குறிப்பெடுத்துக் கொண்டு திரும்ப கொடுத்துவிட்டார்(இதுவரை ஏழுமுறை, எனது ஐ.சி ஏட்டய்யாக்களிடம் குறிப்புக்காக போய் வந்திருக்கிறது).

அப்புறம் என்ன, நண்பர்களில் பலர் அதிரடியாக அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நாங்கள் அடுப்பை.. ச்சீ..சீ இல்லை விளக்குகளை அணைத்து படுத்துவிட்டோம்.

டிஸ்கி:-

1) என்னாடா, தீபாவளி இன் மலேய்சியான்னு போட்டுட்டு, பழைய கதையைச் சொல்ற? என கேட்பவர்களுக்கு.

இதன் தொடர்சியாக அடுத்த இடுகையில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தீபாவளி இன் மலேய்சியா வருகிறது.

2) அந்த 2005 தீபாவளியின் போது எடுத்த புகைப்படங்கள் மிகச்சிறப்பாக எங்களிடம் இருக்கிறது.(அனைவரும், சட்டையில்லாமல் குத்தவைத்தபடி(போலீஸ் ஸ்டேசன் ஸ்டைலில்) இருக்கும் படம் மிகபிரசித்தி பெற்றது)

ஆனால், சுயநலன் கருதி படம் வெளியிடவில்லை.

3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை ஸ்ரீ அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்.

13 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்ல கருத்துக்கள், நல்ல கொண்ட்டாம். ஆனாலும் சத்தத்தை தவிர்த்துருக்கலாம். காவல் நிலையத்தில் 10 பேருடன் வாண்ட்டட் பேட்டுருந்ததே அது உங்க படம்தான, சரி சரி.

இராகவன் நைஜிரியா said...

அப்பாவி முருவின் வலைப்பூவில் என் இருப்பை பதிவு செய்து கொள்ள இந்த பின்னூட்டம்.

தீபாவளி போனசாக தமிழ் மணம், தமிழிஷ், இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு.

இராகவன் நைஜிரியா said...

// அது ஏனோ தெரியலை சின்ன வயசுல இருந்தே அது அப்படித்தான்.//

சின்ன வயசு தெரியலை சரி..... இப்பத்தான் பெரியவரா ஆகியாச்சு இல்ல.. இப்ப கூடவாத் தெரியலை

vasu balaji said...

/3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை ஸ்ரீ அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்./

ஓஓ. இதானா அது. :))

ஆ.ஞானசேகரன் said...

//3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை ஸ்ரீ அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்.//

நல்ல அனுபவம்தான்

அன்புடன் நான் said...

நல்லாத்தான் இருக்கு தீபவளி கொண்டாட்டம். இது போல என் நண்பனின் பிறந்த நாளன்று ஆடி... கீழ் வீட்டு காரரிடம் வாங்கி கட்டிக்கொண்டது நினைவுக்கு வந்தது.( அவரு நல்லவரு காவல் துறைக்கு புகாரளிக்க வில்லை)

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்ம்... பேச்சிலர் வாழ்க்கை.... அதெல்லாம் ஒரு காலம்..

சி தயாளன் said...

:-) நாங்கள் இப்படி ஏதாவது ஒன்றுகூடலை மாலை 6 மணிக்கு வைத்தாலே கீழ் வீட்டு பஞ்சாபி மாமி கொம்ளையின் பண்ணுவா...உங்களுக்கு தைரியம் தான் இரவு 1 மணி வரைக்கும் குத்தாட்டம் போட....:-)

cheena (சீனா) said...

adadaaa - arumaiyaanja theepaavali - Read the post and enjoyed - Keep it up

thiyaa said...

நல்ல கொண்டாட்டம் போலத்தான் கிடக்குது

முகவை மைந்தன் said...

சிறப்பா வந்துருக்கு. ஏன்யா இப்படி கூட்டுறீங்க :-))

பழமைபேசி said...

ஆகா ஆகா

Thamira said...

ஹிஹி..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB