ரெண்டு டிக்கெட்டுக்கும் எல்லா லக்கேஜையும் சேர்த்தா ஐம்பத்தினாலு (20+7., 20+7) கிலோ வரலாம், ஆனா நம்மகிட்ட மூணு பேக்கயும் சேத்து மொத்தமே ஐம்பது கிலோதான் இருக்கு, ஆளுக்கொரு லேப்டாப் இருந்தாலும் அதை கணக்குல எடுத்துக்கமாட்டானுங்க, இப்பதான் முதல்தடவயா எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி பெட்டி கட்டிருக்கோம். சபாஷ்டா., இனிமேல் இதுமாதிரி தான் பெட்டி கட்டணும் என்று மனசுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டே, பகல் 11.30am சிங்கை (வழி சென்னை) விமானத்திற்க்கு காலை 9.00am மணிக்கே திருச்சி விமான நிலையத்துக்கு வந்துவிட சந்தோசம் இரட்டிப்பானது.
சிங்கை விமானத்தை பிடிக்க வந்தவர்களெல்லாம் விமான நிலைய வளாகத்தின் வெளிவாசலிலே நிற்க்கயில், உள்ளதான் காத்திருக்க சேர் போட்டிருக்க, எதுக்கு இப்பிடி வெளியவே நிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்தபடி முதல் ஆளாக நண்பனுடன் வளாகத்தின் உள்ளே சென்று நேர அட்டவணையினைப் பார்த்ததில் 10.30am க்கு கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு சோதனை நடந்துகொண்டிருப்பதை அறிந்ததும் காத்திருக்க ஆரம்பித்தேன். இன்னும் நேரமிருப்பதால் வளாகத்தை நோட்டமிட்டதில் தூரத்தில் விமானத்தில் என்ன, என்ன பொருள்களைக் கொண்டுவரக்கூடாது என்பவை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆகா., படமெடுத்து பதிவேற்றினால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் பயனளிக்குமே என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்ததை படமெடுத்த நேரத்தில் சிங்கை செல்லும் பயணிகளுக்கு அழைப்புவிடப்பட்டது.
மற்ற பயணிகளெல்லாம் வளாகத்தின் வெளியே இருந்ததால், முதல் ஆளாக வரிசைக்குவந்து ஸ்கேனிங் முடித்து போர்டிங் கவுண்டருக்கு போகும் முன் உயர்தர உடை(பேண்ட், சர்ட் + டை)யில் இருவர் எமது டிக்கெட்டினை வாங்கி சரிபார்த்துவிட்டு, பெட்டிகளையும் அதன் எடைகளைப் பற்றி விசாரித்தவர், “என்ன இப்பிடி கொண்டுவதிருக்கீங்க, உங்க ரெண்டுபேரோட டிக்கெட்டின் PNR நம்பர் வேற, வேற (அதாவது டிக்கெட் ஒரேநேரத்தில் எடுக்காமல், தனித்தனியாக எடுக்கப்பட்டது), அதனால் நீங்க ரெண்டுபேரும் லக்கேஜை சேர்த்துப் போடமுடியாது” என்றார், நான் தெனாவெட்டாக “என்கிட்ட மூணு பை மட்டும் தான் இருக்கு, என்னால தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, நான் அங்க பேசிக்கிறேன்” என தெனாவெட்டாக பேசிவிட்டு போர்டிங் கவுண்டருக்கு சென்றேன்.
போர்டிங் கவுண்டருக்கு போனவுடன் மூன்று பைகளையும் சேர்த்து எடைமேடையில் வைத்ததும் ஐம்பது கிலோ காண்பித்தது, போர்டிங் கவுண்டரில் இருந்த டை கட்டிய நண்பர் “உங்க டிக்கெட்டை தாங்க” என்றார், இரண்டு டிக்கெட்டுகளை எடுத்து கொடுத்ததும், இரண்டையும் மாற்றி, மாற்றி பார்த்தவர், “உங்க ரெண்டு டிக்கெட்களின் PNR நம்பர் வேற, வேற அதனால ரெண்டுபேரும் சேர்ந்து போர்டிங் போடமுடியாது, ரெண்டுபேரும் தனித்தனியாக போர்டிங் போடுங்க” என்றார். உடனே நான், “என்ன சார், ரெண்டு பேரும் சேர்ந்து போட்டாலும் சரி, தனித்தனியா போட்டாலும் சரி எங்களோட லக்கேஜ் ஃப்ளைட்டுக்குள்ள தானப் போகப்போகுது”, எனக்கேட்டதும், ”சார் எங்க ரூல்ஸ் படி, நீங்க தனித்தனியாத்தான் போர்டிங் போடணும், அதுமட்டுமில்ல, நீங்க 20+7., 20+7 கிலோவாகப் பிரிச்சு கொண்டுவாங்க, போர்டிங்க்கு இருபது கிலோவும், கேபினுக்கு ஏழு கிலோவும் எடுத்திட்டு போயிடுங்க” என்றார்.
உடனே நான், “சார், என்கிட்ட மொத்தம் ஐம்பது கிலோதான் இருக்கு, என்னால நீங்க சொன்ன மாதிரி பிரிக்கமுடியாது, அதுவுமில்லாம என்கிட்ட மூணு பேக் தான் இருக்கு” எனவும்,“சார், என்னால எதுவும் பண்ண முடியாது, நான் சொன்னமாதிரி பிரிச்சுட்டுவாங்க” என்று கடுமையாக கூறினார்.எனக்கு கோபம் வந்தது, “சார், உங்க மேனேஜர் எங்க இருக்கார், நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்றதும். “அவர்கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்லை, ஏன்னா போனவாரம் இதேமாதிரி தான் நடந்தப்ப, அவரும் லக்கேஜை பிரிச்சு கொண்டுவர சொல்லிட்டார், அதனால அவர்கிட்ட பேசி டையத்த வேஸ்ட் பண்ணாம, வெளிய போயி பேக் வாங்கி வெயிட்டை பிரிச்சுட்டு வாங்க” என்று முடித்தார். இனி பேசி பிரயோஜமில்லை என்று மிகத்தெளிவாகப் புரிந்துபோனது.
எல்லா பேக்கையும் எடுத்துக்கொண்டு வெளியே வரும் வழியில் ஸ்கேன் ஸ்டேசன் அருகில் ஒரு சின்ன இடத்தில் “கட்ட பை (Shoppers Bag), நைலான் கயிறு… விற்பதற்க்காகவே ஒரு கடை இருந்தது, என்னுடைய பிரச்சனையை சொன்னவுடன், கடையிலிருந்த ஆண்டி(Aunty), ஒரு கட்டை பை + ஒரு நைலான் கயிறு கொடுத்து 150 ரூபாய் வாங்கிவிட்டார். மிகப் பெரிய போராட்டத்திற்குப் பின் எங்களது எடையை, டை கட்டிய அதிகாரி கேட்டுக்கொண்ட மாதிரி 18+6., 18+6 கிலோவாக பிரித்தெடுத்துக்கொண்டு (கட்டை பையில் ஆறு கிலோவுக்கு எனது துணியினை வைத்து, நைலான் கயிற்றைக் கொண்டு கட்டி எடுத்துக்கொண்டேன்) மீண்டும் அதே அதிகாரியிடமே போர்டிங் போட்டேன், எல்லா எடையும் சரிபாத்துக்கொண்டவர், நைலான் கயிறு கட்டிய கட்டை பையில் ஒரு போர்டிங் டேக் மாட்டிவிட்டார்.
ஒருவழியாய் பிரச்சனை முடிந்தது என்று சலித்துபோய் கட்டைபையினை எடுத்து ஹேண்ட் லக்கேஜினை ஸ்கேன் மிசினுக்கு கொடுத்துவிட்டு, மறுபுறம் வந்த போது, ஒரு மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் அதிகாரி எனது கட்டைபையில் கட்டி இருந்த நைலான் கயிறினை அவிழ்த்துகொண்டிருந்தார், நான், “ஏன், எதுக்கு எடுக்குறீர்கள்?, எதும் பிரச்சனையா?” என கேட்டதும், ”கேபினுக்கு கயிறெல்லாம் எடுத்துப் போகக்கூடாது” என்றவர் எனது கயிறைக் குப்பைத்தொட்டியில் போட்டார். அதைப் பார்த்ததும் எனக்கு கடுமையாக கோபம் வந்தது. ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
விமான பயணம் முழுவதும், ஏன் இப்பிடி இருக்கிறார்கள்?, என யோசித்தும், விடையில்லை. பயணிகளுக்கு உதவி, பயணத்தை சுகப்படுத்ததான் அதிகாரிகளே ஒழிய, வெள்ளை காகித்தத்தில் கருப்பு மையில் அச்சிடப்பட்டுள்ளதை காப்பாற்ற அல்ல. மனிதனுக்குத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்க்காக மனிதன் இல்லை என்பதை எப்போது இவர்கள் உணரப் போகிறார்கள்,அந்த போர்டிங் கவுண்டரிலிருந்த டை கட்டிய அதிகாரி, மொத்த எடையையும் போர்டிங்கிளே போட்டிருக்கலாம், அனால் போடவில்லை, மற்றும் கட்டை பையில் டேக் மாட்டும் போதே, கயிறை உள்ளே எடுத்துப்போகக் கூடாதென என்னிடம் சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்லவில்லை.
இந்தியாவில் பிறந்த பலர், வெளிநாடுகளில் தங்கி மனிதனின் எல்லா வேலையையும் சுலபப்படுத்தும் வகையில் மென்பொருள்களை தயாரிப்பது முதல், அடிதட்டு வேலை வரை செய்து உலக மக்களுக்கு இன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால், விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட எடையை விட குறைவாக கொண்டுவந்த ஒரு இந்தியனுக்கு சட்ட(Rules)தைக் காரணம்காட்டி, ஒரு மணிநேரம் சுத்தில்விட்டதைத்தான் தாங்கமுடியவில்லை.
இப்பொழுது நான் கேட்கிறேன், “உலகத்தில் புத்திசாலி இனங்களில் ஒன்றான இந்தியர்களின் புத்திசாலித்தனம், இந்தியாவில்- இந்தியர்களுக்கு பயன்படவே, படாதா?”
8 comments:
:-)
உண்மைதான்...இப்ப பரவாயில்லை..3-4 வருடங்கள் முன் இத விட கேவலம்..
1. இந்தியரை கண்டால் அவர்களுக்கு எல்லாம் இளக்காரம். இவங்க எல்லாம் அங்க போய் என்னத்த புடுங்க போறாங்க அப்படின்னு நினைப்பு.
2. பொறாமை.. இவங்க வெளி நாடு போய் சம்பாதிக்கின்றார்களே என்ற பொறாமை.
3. வெள்ளைக்காரனை கண்டால் சலாம் போடும் அடிமை புத்தி.
ராகவன் அண்ணே.,
நீங்க சொன்ன காரணம் இங்க சரியான்னு எனக்குத் தெரியல,
ஆனா, அவுங்க ரூல்சை மட்டும் குருட்டுத் தனமா ஃபாலோ பண்ணுராங்கன்னு தான் தோணுது.
// muru கூறியது...
ஆனா, அவுங்க ரூல்சை மட்டும் குருட்டுத் தனமா ஃபாலோ பண்ணுராங்கன்னு தான் தோணுது. //
இந்த வேதனை நம்ம நாட்ல இருக்கும் போது மட்டும்தான். வேற செக்டார்ல பயணம் செய்யும் போது அவர்கள் நன்றாக அனுசரித்துப் போகின்றார்கள்.
இந்த விசயத்தில், எமிரேட்ஸ் கொஞ்சம் அனுசரனையாகத்தான் இருக்கின்றார்கள்.
நீங்க எந்த ஏர்லைன்ஸில் பயணம் செய்தீர்கள் என்று தெரியவில்லை.
ஆனால், என் அனுபவத்தில், inbound & outbound flights to India - போது மிக மட்டமாக மதிக்கப் படுகின்றோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்தியன் புத்திசாலியா? இதை யாரு கண்டு பிடிச்சா? சிங்கை விமான நிலையத்துக்குள் புகுந்ததும் இந்தியர்களுக்கான சோதனை பீடம் தான் முன்னுக்கு இருக்கும். ஏன்? பாவங்கள் வழி தெரியாமக் கஷ்டப் படக் கூடாதென்று தான். அப்புறம் வரிசையில நிக்க வைக்கவே கொஞ்சப் பேர் நிற்பார்கள். கேவலம் ஒழுங்கு படுத்த. அடுத்தது வியாபாரிகள். இந்தியாவின் மரியாதையைக் கொடி கட்டிப் பறக்க விடுபவர்கள். அவனவன் தங்கட விமான நிலையம் தான் உலகின் முதல் தரம் என்று காட்ட பாடு பட, இந்தப் பரதேசிகள் நடக்கும் முறை என்ன? அவங்க அட்டகாசம் தான் உங்க பிரச்சினைக்கு முக்கிய காரணி. நீங்க ஏறின ஏர் இண்டியா எக்ஸ்பிரசுக்கு அவ்வளவு தான் மரியாதை. இதே நீங்கள் வேறு சேவையைப் பயன் படுத்தினால் வித்தியாசமா இருந்திருக்கும். அது சரி நம்மாளுக புத்தியை வைச்சுக் கொண்டு ஏன் நாடு நாடா அலையணும்? அப்புறம் எவன் மதிப்பான்? உங்களுக்கே ஒரு வெள்ளைத் தோல்காரனைக் கண்டால் வரும் உணர்வு ஞாயிறுகளில் குட்டி இந்தியாவில் கூடும் சொந்தங்களைக் கண்டால் வருமா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.
உங்களுக்கே ஒரு வெள்ளைத் தோல்காரனைக் கண்டால் வரும் உணர்வு ஞாயிறுகளில் குட்டி இந்தியாவில் கூடும் சொந்தங்களைக் கண்டால் வருமா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.///
வாங்க புகழினி.,
உங்கள் பினூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்,
வெள்ளைத் தோல்காரனை(England People) பார்த்தால் எனக்கு கோவம் மட்டும் தான் வரும். எழுநூறு ஆண்டுகால முகலாயர் ஆட்ச்சியில் படாத துன்பங்கள், முன்நூறு ஆண்டுகால வெள்ளையன் ஆட்ச்சியில் நாம்(தமிழர்) அடைந்திருக்கிறோம். என்னுடைய ஆடையை மாற்றிவிட்டான், என்னுடைய உணவை மாற்றிவிட்டன், என்னுடைய வாழ்க்கை சக்கரத்தையே மாற்றிவிட்டான்.
என் தாய், தந்தையுடன் ஆடு-மாடு மேய்த்துக்கொண்டு விவசாயம் பார்த்துக் சந்தோசமாய் இருக்க வேண்டிய என்னை(எங்களை) அனாதயாய் அயல் நாட்டில் அலையவைத்தவன் வெள்ளையன்.
வேண்டாம் புகழினி,
வெள்ளையன் புகழ் என்னிடம் வேண்டாம்.
உங்களுக்கே ஒரு வெள்ளைத் தோல்காரனைக் கண்டால் வரும் உணர்வு ஞாயிறுகளில் குட்டி இந்தியாவில் கூடும் சொந்தங்களைக் கண்டால் வருமா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.///
வாங்க புகழினி.,
உங்கள் பினூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்,
வெள்ளைத் தோல்காரனை(England People) பார்த்தால் எனக்கு கோவம் மட்டும் தான் வரும். எழுநூறு ஆண்டுகால முகலாயர் ஆட்ச்சியில் படாத துன்பங்கள், முன்நூறு ஆண்டுகால வெள்ளையன் ஆட்ச்சியில் நாம்(தமிழர்) அடைந்திருக்கிறோம். என்னுடைய ஆடையை மாற்றிவிட்டான், என்னுடைய உணவை மாற்றிவிட்டன், என்னுடைய வாழ்க்கை சக்கரத்தையே மாற்றிவிட்டான்.
என் தாய், தந்தையுடன் ஆடு-மாடு மேய்த்துக்கொண்டு விவசாயம் பார்த்துக் சந்தோசமாய் இருக்க வேண்டிய என்னை(எங்களை) அனாதயாய் அயல் நாட்டில் அலையவைத்தவன் வெள்ளையன்.
வேண்டாம் புகழினி,
வெள்ளையன் புகழ் என்னிடம் வேண்டாம்.
//என் அனுபவத்தில், inbound & outbound flights to India - போது மிக மட்டமாக மதிக்கப் படுகின்றோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நம்மாட்களும் கொஞ்சம் இங்கிதத்தோட இருக்கப் பழகிக்கணும்.... நான் முதல் முதல் சிங்கப்பூர் வந்தப்ப, நம்ம ஆட்கள் அடிச்ச லூட்டிய இன்னும் என்னால மறக்க முடியலை....
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.