மாப்புள்ள நீயெல்லாம் குதி(டி)க்காத.,


வழக்கம் போல் காலை ஏழு மணிக்கெல்லாம் தயாராகி, நண்பரின் வீட்டுக்குப் போகும் எண்ணத்துடன்,
தெருமுக்கு டீ கடையை( முன்னொரு காலத்தில் நான் டாப் அடிக்கும் இடம், பல பஞ்சாயத்துகளில் வேண்டியவை ரகசியமாய் தீர்த்தும், வேண்டாதவை பெரிதாக்கப்படுமிடம்) கடந்து செல்கையில், ஏதோ வித்யாசமாய் பட்டது. நிதானமாய் பார்த்தும் யாரென்றுத் தெரியவில்லை. நெருங்கிப் பார்த்ததும் தான் தெரிந்தது, இது நம்ம ”கட்டை கணேசன்” மாமா.

ஆள் கொஞ்சம் தடித்திருக்கிறார், வலது கை கொஞ்சம் மடங்கி இருந்தது, இடது கையிலும், கால் முட்டிகளிலும் பல தழும்புகள், முகத்தில் வாய் சிறிது கோணியுள்ளது, மற்றும் பக்கத்தில் கைத்தடி. என்ன மாமா எப்படி இருக்கீங்க, எப்படி இப்படியாச்சு? என்றது. ”ஏய், மாப்புள்ள…, நீ… நீயா? ஒக்காலி(லி Or ழி?) அதயா…ளமே தெரியல, நீ…நீ எப்பிடி இருக்க?” என்று ஆர்வத்துடன் எதிர் கேள்வி கேட்டார். ”நான் நல்லா இருக்கேன் மாமா, நீங்க எப்படி, இப்பிடி ஆனீங்க?” என மீண்டும் கேட்க்கவும், பக்கத்திலிருந்தவர்,

”மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு நா காலையில நாழுமணிக்கி ஆத்தூர் டேம்முல மீன் பிடிக்க வண்டியில போயி, டேம்க்குள்ள விழுந்ததுல மூணுமாச கோமா, ஒரு வருச ஆஸ்பத்திரில இருந்து நாழு, அஞ்சு லச்ச ரூபா செலவழிச்சதுனால ஆள் பொழச்சு வீடுவந்தான், ஆன, கூடப் போன குவேந்திரன்(அவரோட மச்சான்) ஸ்பாட்லயே காலி. இப்பத்தான் கொஞ்சம், கொஞ்சம் நடமாட்டமா வெளியவர்ரான்” என்று முடித்தார். கேட்டதுக்கே தலை சுத்திது…

”மாப்புள்ள, எப்படியோ தப்பிசுத்தேன். மாப்பிள்ள, நீ நல்லா இதுக்கணும், நீயல்லாம் தண்ணி குதிக்காத(குடிக்காத), அதனாலதா நா இப்பதியாயித்தேன். அதனால நீயெல்லாம் குதிக்காம நல்லா இருக்கணும்”, என்றார். பேசும்போது ட-எல்லாம் த-வாகத்தான் வருகிறது, மூளையில் அடிப்பட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பேச்சில் அது எதிரொலிக்கிறது.

அவரிடமிருந்து விடைப்பெற்று வந்த பின்னும், அவரைப் பற்றிய நினைவுகள் பல சுற்றி வந்தது. நல்லா இருந்த காலத்தில், ஆள் பயங்கர சேட்டை. தப்பிதவறி அவரிடம் சிக்கிவிட்டால் அவ்வளவு தான், சாயும் வரை ஊறுகாய் தான்.


ஒரு முறை நம்ம ஏரியாவுக்குள் ஒரு சாவு, ஏரியாவே களைகட்டியிறுந்தது. சாவுக்கு தப்பு அடிப்பவர்கள், அவர்களின் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கையில், அதிலிருவரை கூப்பிட்டு, ஆளுக்கொரு பாக்கெட் சாராயம் + பத்து ரூபாய் கொடுத்து, குடித்ததும், இப்ப நான் சொல்லுறத அப்படியே தப்புல அடிக்கணுமென்று, “சஞ்சணக்கும், சஞ்சணக்கும், சண்ஞ்” என்றார். தப்படிக்கையில் இப்படித்தான் சப்தம் வரும். எனவே தப்படிப்பவர்கள் சந்தோசமாய் அடித்துக் காட்டயில், இல்ல, இல்ல சத்தம் சரியாவல்ல, நான்சொன்ன மாதிரி அடி, சரியாவல்ல, நான்சொன்ன மாதிரி அடியென்றே நாள் முழுக்க இழுத்து, அந்த இருவரை கதறவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. இன்று அவரால் அவர் நினைத்ததை உச்சரிப்பு சுத்தமாகப் பேச முடியவில்லை.

மற்றொரு முறை, காலைக் காட்சியாக ஜாக்கி ஜான் படம் பார்க்க உள்ளூர் தியேட்டருக்குப் போயிருக்கையில் பக்கத்து சீட்டாளுடன் ஏதோ சண்டை. நம்ம மாமா முதலில் அடிக்கவும், எதிரி கராத்தே ஸ்டைலில் ஸ்டெப் வத்து அடித்துவிட்டான், நம்மாளுக்கு அவமானமாபோயிற்று. உடனே, பாதிபடத்தில் வெளியே வந்த மாமா, நேராக தோட்டத்துப் பக்கம் போய் கருவேல மரத்தில் நேரான அஞ்சடிக் குச்சியை வெட்டியெடுத்து கைபிடிக்குமிடத்தில் மட்டும் முள்ளில்லாமல் சீவிக் கொண்டு, உடனே, படம் விடுவதற்க்கு முன் தியேட்டர் வாசலுக்கு வந்து விட்டார். மாமாவை அடித்தது + ஜாக்கி ஜான் படம்பார்த்த முறுக்கில் வெளியே வந்தவனை, முள்ளுக்குச்சியில் வாங்கு-வாங்கு என்று வாங்கிவிட்டார். கராத்தே தெரிஞ்சவன் கையைத்தூக்கி விட்டுவிட கேட்ட பின்னும் விளாசிவிட்டார், பல வீச்சுகளுக்குப் பின் உடம்பெல்லாம் ரத்தம் ஒழுகுவதைப் பார்த்த பின்னர் தான் சந்தோசத்தில் அவனை விட்டார். ஆனால் இன்று, நாற்பதுக்குள் நடப்பதற்க்கே கையில் தடி எடுக்க வேண்டியிருக்கிறது.

முன்னொரு காலத்தில், திடீரென தோட்டம்காட்டில், கிடாவெட்டு விசேசங்களில் ஆடு-கோழியடித்து பலே, பலே சமையலுடன் பார்ட்டி நடக்குமிடத்துக்கு நான் போனால், என்னைப் பிடித்துக் கொண்டு ”மாப்புள்ள நீயெல்லாம் தண்ணியடிக்கக் கூடாது. மாமா(எங்கப்பாவை) ரொம்ப நல்லவரு, அதுபோல நீயும் நல்ல பேரெடுக்கணும், அதனால நீ எப்பயும் தண்ணியடிக்கக் கூடாது”. என்பவர் உடனே சத்தம் கம்மியாக ”நீயும் குடிச்சா அப்புறம் எங்களுக்குப் பத்தாதில்ல” என்று கூறி சப்த்தமாக சிரிப்பார். இன்றும் ”மாப்புள்ள நீயெல்லாம் எப்பவும் குதிக்கக் கூதாது, நாலாம் குதிச்சதுனால தான் இப்பதியாயித்தேன்” ஏனெனில் அவர் தப்பு செய்த போதெல்லாம் குடித்திருந்தார். இன்று குடிக்கவில்லை கிட்டத்தட்ட அதே வசனம், ஆனால் அதில் அனுபவங்கள், காயங்களாக உடம்பெல்லாம் ஏறி உட்கார்ந்திருக்கிறது. நமக்கு மது வேண்டாமே!


பின்குறிப்பு:-

மூத்த மகன் குடிபோதையில் விழுந்து கிடக்கும் போதும், நமக்கெல்லாம் ஊத்திக் கொடுக்கும் தமிழ் தாத்தாவை, தயவுசெய்து உதாரணமாகப் பார்க்காமல்,

குடிபோதையால், விபத்தில் சொந்தத்தை இழந்து, மருத்துவ செலவுக்காக் சொத்தை இழந்து, இன்று நம்மிடம் இருக்கும் இவரை, குடிப்பழக்கத்தின் கேட்டிற்க்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள பழகவேண்டும். பழகினால் நாடும், வீடும் தன்னாலே நலமாகும்.

10 comments:

கார்க்கிபவா said...

ம்ம்.. நல்லதுதான் சொல்றீங்க..

இராகவன் நைஜிரியா said...

Me the first?

அப்பாவி முரு said...

///கார்க்கி கூறியது...
ம்ம்.. நல்லதுதான் சொல்றீங்க..//

வாங்க கார்க்கி,
நல்லது தான் சொல்றீங்க...

ஏன், இந்த இழுவை..

அப்பாவி முரு said...

/// இராகவன் நைஜிரியா கூறியது...
Me the first?///

இல்லைண்ணா,

ஜஸ்ட் மிஸ்...
பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்.

இராகவன் நைஜிரியா said...

கார்த்தால கணினி திறந்த உடன் டேஷ்போர்டில் உங்க பதிவுதான் முதலாவதாக இருந்தது.. சரி நாம தான் பர்ஸ்ட் அப்படின்னு நெனெச்சேன்...

சரி என்ன இப்ப, மாத்திக்க வேண்டியதுதான்


Me the Second?

Anonymous said...

ச்ச ... இன்ன நைனா... அவரோட நிலைமை படா கலீஜு பா.. ஒரே பீலிங்கா பூடுச்சு... இரு அண்ணாத்த ஒரு குவார்ட்டர் கவுத்துகினு வரேன்.

இராகவன் நைஜிரியா said...

// இன்று குடிக்கவில்லை கிட்டத்தட்ட அதே வசனம், ஆனால் அதில் அனுபவங்கள், காயங்களாக உடம்பெல்லாம் ஏறி உட்கார்ந்திருக்கிறது. நமக்கு மது வேண்டாமே! //

சரியாகச் சொன்னீர்கள் ...

மது வேண்டாம், அது குடிப்பவனையும் அழிக்கும், அவன் குடும்பத்தையும் அழிக்கும்

கார்க்கிபவா said...

யூத்ஃபுல் விகடனில் குட்ப்ளாகல் இதுக்கு சுட்டி கொடுத்து இருக்காங்க.. வாழ்த்துகள் சகா

priyamudanprabu said...

ம்ம்.. நல்லதுதான் சொல்றீங்க..

priyamudanprabu said...

இங்கே வந்து பாருங்க

............

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

http://priyamudan-prabu.blogspot.com/2009/02/blog-post_23.html

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB