அண்ணன் பாலாவுக்கு ஒரு திறந்த கடிதம், மற்றும் அன்பே சிவம் – நான் கடவுள் சிறு ஒப்பீடு.






இதுவரை சினிமா பற்றிய பதிவு எழுதக்கூடாது என்றிருந்தேன், எல்லாம் நான் கடவுள் திரைப்படம் பார்த்தவரையில் தான். எழுதினாலும், நிச்சயம் படத்தின் கதையைப் பற்றி விமர்சனம் எழுதமாட்டேன். அப்படியே எழுதினாலும் நான் ரசித்த, எனக்கு மிக மிக பிடித்தப் படங்களைப் பற்றி பாராட்டி எனது சந்தோசத்தை வெளிப்படுத்துவேனே ஒழிய, தோழ்விப் படங்களையோ, சுமாரான படங்களை பற்றி எழுதி நிலவரத்தை – கலவரமாக்க மாட்டேன். ஏனெனில் அது தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் – நாயகி என தொடங்கி திரையரங்கில் டிக்கெட் கிழிப்பவர் வரை பலரின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமென்ற அக்கறை நம்மை விட அவர்களுக்குத் தான் மிக அதிகமாக இருக்க வேண்டும். இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியின் பதிலை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நான் கடவுள் – பாலாவிடம் என்ன எதிர்பார்த்து போனோமோ, அது கிடைத்தது. என்ன வழக்கம் போல் கொஞ்சம் Hevy Doss. உடம்பும், மனதும் அதை ஏற்றுக்கொள்ள சிறிது நேரமல்ல, சில நாட்களே ஆகும். அது தான் பாலா என்றாகி விட்டது.

பாலா அண்ணே, அந்த காவல் நிலைய M. G. R., சிவாஜி, ரஜினி, நயன் காட்சியில், நயனின் ஆட்டம் ”டிட்டோ”., அடுத்து அந்த ஏட்டய்யா சொல்வது எந்த ஹீரோவை?, அது போன்ற அடையாளத்துடன் நாலைந்து பேர் தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக அவர்களாகவே சொல்லித்திரிகிறார்களே அதில் யாரவர்?




ஆனாலும், பாலா அண்ணே நீங்க கல்லை இனம்பிரிச்சு பல சிலை செஞ்சவர்., உங்க வாயால அவங்களை திட்டாதிங்க. அது உங்களுக்குத்தான் சிறுமை, விட்டுடுங்க அவுங்களை மக்கள் பாத்துக்குவாங்க. –அப்பாவியின் வெளிமனது.


அடுத்துண்ணே, உங்க வீட்டுக்கு இல்ல, இல்ல உங்க படத்துக்கு வந்தா, ஏதோ எழவு வீட்டுக்கு போன பீலிங் வந்திருதுண்ணே. காரியமெல்லாம் முடிஞ்சு வந்தாலும் ரெண்டு நாளக்கி யாருக்கிட்டயும் பேச முடியல, அப்புறம் எங்கிட்டு சிரிக்கிறது?. இந்த மாதிரி படங்களும் வரணும்னாலும், நீங்க மட்டும் தொடர்ந்து இப்பிடி படமா தர்ரப்ப., உங்க வீட்டுக்கு வர்ரதுணாலே, ஏதோ எழவுனா மட்டுந்தா வர்ர மாதிரி ஆயிப்போச்சு. எழவுக்கு மட்டுமே போறது எங்களுக்கே கஷ்ட்டமா இருக்குண்ணே.

அடுத்தவிய்ங்க எல்லொரும், அதுலயும் பெரிய, பெரிய ஆளுக கூட பிரமாண்டம், காமடி, பொம்பள, பாட்டு, யீரோ சும்மா கையை காலை ஆட்டிக்கிட்டு இருக்குறப்ப ஆடத்தெரிஞ்ச கூட்டமும் அதே மாதிரி கையை காலை ஆட்டுற மாதிரி டான்ஸுன்னு மசாலா மணக்க, மணக்க பிரியாணியாப் போட்டுகிட்டு இருக்குறாங்க. ஆனா, நீங்க மட்டும் எழவு வீட்டுல, அடுத்தநா செத்தவனைக் கும்பிட்டு குடிக்கிற உப்பில்லாத காணைகஞ்சியும் – சுட்ட வரமொளகாவை மட்டும் தான் எங்களுக்குத் தர்ரீங்க.

எங்களுக்கு பிரியாணியெல்லாம் வேண்டாமிண்ணே, உங்களுக்கு ரொம்ப நல்லா காமெடி வரும்கிறது எங்க எல்லொருக்கும் நால்லாத் தெரியும், அதுகூட யதார்த்ததை லைட்டா கலந்து (குறிப்பு:- கெவி டோஸ் உடம்புக்கு கெடுதி), ஒரு தடவயாச்சும் கல்யாண சாப்பாடு போடுங்ண்ணே. நாக்கெல்லாம் செத்துப் போச்சு, ஒரு சாம்பார் சாதத்தையாச்சும் உங்களிடம்(பாலாவிடம்) எதிர்பார்க்கும் –அப்பாவியின் உள்மனசு.





அன்பே சிவம் – நான் கடவுள் ஒப்பீடு

அன்பே சிவம்:-

இந்த படத்துல கமல், உடல் ஊனமுறவரா வந்து, உடம்பு நல்லா இருக்கவுங்களுக்கு கூட எல்லோரும் நல்லா இருக்கணும் என்கிற உயந்த எண்ணத்தால் அவரால முடிந்த எல்லா உதவியும் செய்து எல்லோரையும் வாழவைத்து, அடுத்தவுங்களுக்கு உதவி செய்ய மனசு இருந்தால் “நானும் கடவுள்”- தான் என்பார்.

நான் கடவுள்:-

உடம்பு நல்லா இருக்குற அகோரி, உடல் ஊனத்தால வாழ கஷ்ட்டப் படுறவங்களை கொடூர கொலை செய்து அவர்களின் துன்பத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறதால “நான் கடவுள்” என்கிறார்.


நம்ம இந்து மதத்தில், ஏற்கனவே முப்பத்தி முக்கோடி கடவுள்கள் இருக்கயில, மேலும் நம்மிடையே புதிதாய் வந்துள்ள இந்த இரு, “நானும் கடவுள் (அன்பே சிவம்) – நான் கடவுள் (நான் கடவுள்)” கடவுள்களில் எந்த கடவுள், நல்ல கடவுள் – நாணயமான கடவுள் – இன்றய நிலையில் நமக்கெல்லாம் தேவயான கடவுள் என்று சிந்தித்து, ஒரு நல்ல கடவுளை தேர்ந்தெடுத்து எல்லோரும் நலமாக வாழ, வாழ்த்துவதால் “நானும் கடவுள்” தான். உண்மைதானே!?

9 comments:

Senthil said...

Excellent Post

Me the firstu?


Senthil, bahrain

Anonymous said...

இரு கடவுள்களின் ஒப்பீடு அருமை நண்பா...

சி தயாளன் said...

வித்தியாசமான ஒப்பீடல் :-)

Unknown said...

கடவுள் என்பது கட + உள், தன்னை தானே உணர்ந்து கொள்தலே "கடவுள்"
-இதில் நீயும் கடவுள் தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் கடவுள் ஆர்யாவை விட அன்பே சிவம் கமல் எவ்வளவோ மேல்.. நன்றாக எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

படம் பார்த்த பிறகு நானும் உங்களை போல அன்பே சிவம் படத்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன், அருமையான பதிவு, வாழ்துகள். கலக்கிடீங்க.

Anonymous said...

YOUR COMPARISION B/W THE FILMS UTTERS THE MATTER OF THE TWO. AND YOUR DECISION TO DECIDE WHICH ONE SUIT FOR US IS SIMPLY SUPERB....

priyamudanprabu said...

//
அது போன்ற அடையாளத்துடன் நாலைந்து பேர் தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக அவர்களாகவே சொல்லித்திரிகிறார்களே அதில் யாரவர்?
///


என்க்கென்னவோ தனுசுனு தோனுது
ஹ ஹ் ஹ

priyamudanprabu said...

எல்லோரும் நலமாக வாழ, வாழ்த்துவதால் “நானும் கடவுள்” தான். உண்மைதானே!?

///

ஆமாம்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB