என்னுடைய நீண்ட நாள் ஆசையை தீர்ப்பதற்காக தமிழகத்தில் ஒரே மாமன்னன் ராஜா ராஜா சோழனின் அருந்தவர் புதல்வன், ராஜேந்திர சோழனின் தலைநகரம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலின் மறு பதிப்பான கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தேன். கோவிலை தரிசிப்பதற்கு முன் ராஜேந்திர சோழன் கட்டி வாழ்ந்த அரண்மனையை காண சென்று விசாரித்ததில் அதன் தற்ப்போதைய பெயரான மாளிகை மேடு - க்கு வழிகாட்டினார்கள். கண்டவற்றை புகை படத்தில் காண்க,
எழுத்தாளர்கள் , நடிகர்கள் என கலை சம்மந்தப் பட்டவர்கள் மட்டுமே ஆண்டுவரும் தமிழகத்தில், தமிழகத்தில் ஒரே ஒரு மாமன்னன் (ராஜா ராஜன்) மற்றும் அவனது மகன் வளர்த்த சிற்ப கலையின் எச்சம், கொள்ளை போனதின் மிச்சம் எப்படி பாதுகாக்கப் பட்டு வருகிறது என்று காணீர்.
இந்த தகவல் தொடர்பு யுகத்திலும், ஆயிரமாண்டு வரலாற்று கலை பாதுகாப்பாக? வைக்கப் பட்டிருப்பதை காணீர்.
வாழும் வள்ளல்களுக்கு வைக்கும் கட்-அவுட்டிற்கும,
வளர்மதி வயதுக்குவந்தற்கு அடிக்கும் போஸ்டர்க்கும்,
ஒரு சத வரி விதித்திருந்தாலே வரலாற்றை காக்கலாம்,
ஆனால் முடியாது,
ஏனெனில் நாமிருப்பது தமிழ்நாட்டில் !
மிச்சர்கடை
4 weeks ago
1 comments:
// ஆனால் முடியாது,
ஏனெனில் நாமிருப்பது தமிழ்நாட்டில் ! //
சரியாகச் சொன்னீர்கள்.
நாம் பழமையை போற்றுவோம் என்று மட்டும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.. ஆனால் அதை அழிப்பதற்கான வழிவகைகளை அருமையாகச் செய்து கொண்டு இருக்கின்றோம்.
வாழ்க தமிழ், வளர்க தமிழகம்
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.