ஊருக்குள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு இருந்தாலும், சில பல பலமான எதிர்பார்ப்புகளும் இருந்தது. போட்டில் (Duty Free 1 lr Bottle) எதிர்பாத்தவர்களிடம், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நாம் நடத்திய பிரசங்கத்தில், போட்டில் கேட்டவர்கள் எல்லாம் அப்பீட்டேய். ஆனால் ஒருவர் மட்டும் நகரவில்லை, தப்பிக்கமுடியாதோ என்ற பயத்தில் நெருங்கி விசாரிக்கவும், அண்ணன் ‘ஒரு 1000 டாலர் நோட்டை ரயில்வே லைனில் கண்டெடுத்ததாகவும், அதை மாற்றித்தர வேண்டும்’ என புதுவகையான வேண்டுகோளை வைத்தார். அப்பாடா சின்ன பிரச்சனை தான் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில், “நோட்டை காமிங்க” என்றதும்,
மடியில் கவனமாய் மடித்துவைத்திருந்த 1000 WON நோட்டினை எடுத்துக் கொடுத்தார். பார்த்ததும் அது அமெரிக்க டாலர் அல்ல என்பது புரிந்தது, ஆனால் திருப்பித் திருப்பி பார்த்தும் அது எந்த நாட்டின் பணம் என்பது தெரியவில்லை, ஏனெனில் நாட்டின் பெயரை ஆங்கிலத்தில் போடவில்லை. “அண்ணே இது எந்த நாட்டு பணம்-ன்னு தெரியலை, அதனால் இதோட மதிப்பும் தெரியலை, ரெண்டு நாள்ல நான் உங்களுக்கு விவரம் சொல்லுறேன்” என்றதும், “பாத்து நல்லதாச் சொல்லு, கொஞ்சம் காசு வந்துச்சுன்னா வீட்டை ரிப்பேர் பண்ணிரலாம்முன்னு நினைக்கிறேன்”, என்றார்.
எதிர்பார்ப்பு பலமாய் இருப்பதை உணர்ந்ததும், நான் கொஞ்சம் சுதாரிப்பானேன். “அண்ணே, இந்த பணத்துல இருக்குற படத்தைப் பாத்தா சைனீஸ் ஆளு மாதிரி தெரியுது, ஆனா நாட்டோட பேரை இங்லீஸ்ல போடலை, நீங்க ரொம்ப எதிர்பார்க்காதிங்க, எதுக்கும் இதை மாத்தினா நம்மூரு காசுக்கு எம்புட்டு வரும்முன்னு நான் நாளைக்கே கம்பியூட்டர்ல( இணையத்தில்) பாத்து சொல்லீர்றேன்”, என்றதும்
”சரி தம்பி, எவ்வளவு வரும்முன்னு என்கிட்ட தனியாச் சொல்லு, வேறாளு இருக்கப்ப சொல்லாத, இதை வேறயாருக்கும் தெரியாத மாதிரி தான் நா வைச்சிருக்கேன், அப்பிடியே நீ ஊருக்குப்(சிங்கை) போயிதான் மாத்தனும்னாக் கூட உங்கப்பாட்ட மட்டும் சொல்லு, வேறாளுகட்ட சொல்லீறாத, உன்னையத்தான் நா நம்பியிருக்கேன்.” என ரகசியமாய் சொன்னார்.
ஆஹ்ஹா... ஆளு ரொம்ப வெவரமாத்தான் இருக்காரு, என நோட்டினை வாங்கி பர்ஸில் பத்திரமாய் வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டதும், நேரே ப்ரொசிங் சென்டருக்குப் போய் முதல் வேலையாய் 1000 WON க்கு இந்திய ரூபாயில் மதிப்பென்ன என்று தேடியதில் அதிர்ச்சியடைதது நானும் தான்.
அண்ணன் பலமாக வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரே, நாம் அதன் உண்மையான மதிப்பைச் சொன்னால் நம்மை நம்புவாரா? இடையில் நாம் ஏதோ ஆட்டையப் போடுவதாக நினைக்கமாட்டாரா, என்ன செய்வது என்ற குழப்பதிலேயே அடுத்ததாக வேறெதுவும் பார்க்கத் தோணாமல் இணையத்தை விட்டு வெளியேறிவிட்டேன்.
அண்ணனை முதலில் பார்த்து, அவரின் பணத்தை முதலில் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். காலை பத்து மணிக்கு நணபனின் வீட்டுக்கு பால் ஊற்ற வருவார். அங்கேயே மடக்கி கையில் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவுடன், நண்பனின் வீட்டுக்குப் போய் பால் ஊற்ற வரும் அண்ணனுக்கு காத்திருந்து, பத்தே காலுக்கு வந்த அண்ணன் தனியாக அதன் மதிப்பை சொன்னதும்
“என்னது, 1000 WON –க்கு இந்திய ரூபாயில் மதிப்பு வெரும் 32 ரூபாய் மட்டுமா?!” என அதிர்ச்சியானவரிடம், ”ஆமண்ணே, இதை வைச்சு வீட்டை ரிப்பேர் பண்ணுற நினைப்பை விட்டுட்டு, சீக்கிறம் வந்து பால் ஊத்தி நல்லா பொழைக்கிற வழியைப் பாருங்க” என அவரின் கையில் அந்த நோட்டை கொடுத்துவிட்டேன்.
ஆனால் 1000 WON –க்கு 32 ரூபாய் மட்டுமே என்பதால் அவரடைந்த ஏமாற்றத்தை அவரின் முகத்திலே அப்பட்டமாய் பிரதிபலித்தது. அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்?
9 comments:
annani nanum seoul pogum pothu asangthu poitan taxi karan 92,000 ketan ha ha nan angae latchathula than polangunan he he :-)
nanum oru post potu irukan pidithal vote podunga
தம்பி இது மீள் பதிவு மாதிரி தெரிகின்றதே...
தம்பி இது மீள் பதிவு மாதிரி தெரிகின்றதே.../
எல்லோரும் பாருங்க எங்க ராகவன் அண்ணனுக்கு மைண்ட் ரீடிங் பவர் வந்திருச்சு.,
சூதானம்... சூதானம்.
// muru கூறியது...
///இராகவன் நைஜிரியா கூறியது...
தம்பி இது மீள் பதிவு மாதிரி தெரிகின்றதே.../
எல்லோரும் பாருங்க எங்க ராகவன் அண்ணனுக்கு மைண்ட் ரீடிங் பவர் வந்திருச்சு.,
சூதானம்... சூதானம். //
சூதானம் ... அர்த்தம் புரியவில்லை தம்பி...
// muru கூறியது...
///இராகவன் நைஜிரியா கூறியது...
தம்பி இது மீள் பதிவு மாதிரி தெரிகின்றதே.../
எல்லோரும் பாருங்க எங்க ராகவன் அண்ணனுக்கு மைண்ட் ரீடிங் பவர் வந்திருச்சு.,
சூதானம்... சூதானம். //
சூதானம் ... அர்த்தம் புரியவில்லை தம்பி...///
சூதானம்(மதுரை தமிழ்) - கவனம்-
ன்னு அர்த்தம் அண்ணே,
பாவங்க அவரு.
(காரணம் சீனாக்காரன் நீங்க இல்ல இருந்தாலும்)மனக்கோட்டைய இடிச்சு தரைமட்டம் ஆக்கிட்டீங்களே :).
//
“பாத்து நல்லதாச் சொல்லு, கொஞ்சம் காசு வந்துச்சுன்னா வீட்டை ரிப்பேர் பண்ணிரலாம்முன்னு நினைக்கிறேன்”
//
நல்ல amount தேரிச்சுன்னா நம்பளையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லலாம்னு பார்த்தா, கடைசிய்லே இவ்வளவுதானா முரு?? அசாத்திய நம்பிக்கை அவருக்கு.
//
ஆனால் 1000 WON –க்கு 32 ரூபாய் மட்டுமே என்பதால் அவரடைந்த ஏமாற்றத்தை அவரின் முகத்திலே அப்பட்டமாய் பிரதிபலித்தது. அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்?
//
பாவம் எவ்வளவு ஏமாற்றம் இல்லை??
யாருமே ஒன்றும் செய்ய முடியாது.
இந்த எதிர்பார்ப்பு பார்ப்பு அவரின் அறியாமையை காட்டுகின்றது.
நாட்டு நோட்டுன்னே தெரியாமல் வீட்டு வேலை எல்லாம் செய்ய கனவு காணுகின்றார்.
பாருங்க, அதுதான் அங்கே கொடுமை.
பதிவும் படிச்ச மாதிரி ஆச்சு...பதிலும் சொன்ன மாதிரி ஆச்சு....340
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.