தத்துப்பித்து நடையானாலும்,
குடுகுடு ஓட்டமானாலும்,
மொத்த எல்லையும்,
கொல்லை முதல் வாசல் மட்டுமே,
ஊர்வழி போகையில்
எனது கைபிடித்து நடக்க,
உறவுக்குள் நடக்குமொரு
பாசப்போட்டி,
படுக்கையிலேயே பலநாள்
சூச்சூ கழித்தாலும்,
முகம் சுழித்தாரில்லை.
அத்தைக்கு காய்ச்சலானாலும்,
அத்தைமகனுக்கு வயிற்றோட்டமானாலும்,
மருத்துவரிடம் போகும் முன்,
என் காலில்விழுந்து எங்க
குலசாமி, எங்களைக் காப்பாத்து,
என திருநீரு கேட்டார்கள்,
தாத்தா-ஆத்தா, அப்பா-அம்மா,
மாமா-அத்தையென மொத்த சொந்தத்தின்
பயணங்களிலும், பலகாரம் முதல்
புதுத்துணி வரை எனக்குத்தான்
முதல்மரியாதை.
சட்டைத்துணி போட்டிருந்தாலும்,
போடாவிட்டாலும், குளித்திருந்தாலும்-
சில நாள் குளிக்காமலே
இருந்தாலும், காண்பவரெல்லாம்
கொஞ்சாமல் போனதில்லை.
எல்லாம் என்னுடைய மூன்றாம்
வயதுவரை மட்டுமே, பின்னர்
உறவுகளின் நெருக்கம் குறைந்தது,
தாயின் அணைப்பும் குறைந்ததே!
அய்யகோ, எல்லாம் அள்ளி
அள்ளிக்கொடுத்தாய் இறைவா
எல்லாம் என்னுடைய
மூன்று வயதுவரை, வயது
வளர., வளர எல்லாம்
இருந்தும் எதுவும் இல்லாத
கண்கானா இடத்தில் வைத்தாய்,
எனக்குத்தான் ஆயிற்று,
வேண்டாம் என் குழந்தைக்கு,
அவனின் வளர்ச்சியை நிறுத்திவிடு
அவனின் மூன்றாம் வயதிலேயே!?
மிச்சர்கடை
4 weeks ago
7 comments:
\\படுக்கையிலேயே பலநாள்
சூச்சூ கழித்தாலும்,
முகம் சுழித்தாரில்லை\\
யதார்த்தம் ...
\\எல்லாம் என்னுடைய மூன்றாம்
வயதுவரை மட்டுமே, பின்னர்
உறவுகளின் நெருக்கம் குறைந்தது,
தாயின் அணைப்பும் குறைந்ததே!
\\
அருமையா சொல்லியிருக்கீங்க ...
///
எனக்குத்தான் ஆயிற்று,
வேண்டாம் என் குழந்தைக்கு,
அவனின் வளர்ச்சியை நிறுத்திவிடு
அவனின் மூன்றாம் வயதிலேயே!?
///
எல்லோரின் ஏக்கத்தையும் நாலு வரியில் சொல்லீட்டீங்க
எதார்த்தமான வரிகள்..:-)
கருத்துக்கு நன்றி
வந்ததற்கு முதலில் ஒரு பிரசெண்ட் போட்டுகிறேன்.
// எனக்குத்தான் ஆயிற்று,
வேண்டாம் என் குழந்தைக்கு,
அவனின் வளர்ச்சியை நிறுத்திவிடு
அவனின் மூன்றாம் வயதிலேயே!? //
எல்லோருடைய ஏக்கமும் அதுதானோ?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.