வட்டத்துக்குள் பெண்!?

கோலத்தில் பெண் அழகு., பெண்ணுக்கு
இந்த கோலம் தான் அழகு.

அன்பெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
பாசமெனும் வட்டமே அழகு.,

இரக்கமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
இயறக்கையின் இந்த வட்டமே அழகு.,

கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,

காதலெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
கணவனுடன் காதல் எனும் வட்டமே அழகு.,

செல்வமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குழந்தைச் செல்வ வட்டமே அழகு.,

தாய்மையெனும் வட்டம் அழகு., பெண்ணை
அம்மா என அழைப்பதே அழகு.,

குடும்பமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குதூகலம் தருமிந்த வட்டமே அழகு.,

பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!

- அப்பாவி முரு

(நேற்று இந்தக்கோலத்தை வாசலில்போடும்போது பெண்ணுருவத்தைமட்டும் முதலில் போட்டுவண்ணப்பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்துவிடுவார்களோ என பெண்ணைச்சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகாபோல! இந்தக்கோடு அதாவது பெண்வட்டம்பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்.) ---ஷைலஜா

அழகான கோலம் போட்டது மட்டுமில்லாமல், அதில் கருவெடுத்து, வட்டத்துக்குள் பெண் கவிதை படைத்த அக்கா ஷைலஜா அவர்கள், கவிதை எழுதியது மட்டுமில்லாமல் அடுத்து மூன்று ஆணகளையும் இதே தலைப்பில் கவிதை தொடர் எழுத அழைத்ததின் பாதிப்பாய் தொடர் என்னிடமும் வந்தது.

என்னால் முடிந்த்ததை, எனக்கு சரியென் பட்டதை எழுதியிருக்கிறேன்.

முதல் வட்டம் - ஷைலஜா அக்கா

இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா

மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh

நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி

ஐந்தாம் வளையம் கோர்ப்பவர் - அப்பாவி முரு,

அடுத்த வளையம் கோர்க்க நான் அழைப்பது - நான் தகுதியானவனா?

என ஒரே கவிதை மட்டும் எழுதி பதிவேற்றிவிட்டு, ஒதுங்கி நம்மை வேடிக்கை மட்டும் பார்க்கும் எனது நண்பர் சரவணனை எனக்கடுத்து தொடர் பதிவு சங்கிலிக்கு ஒரு வளையம் கோர்க்க அழைக்கிறேன்.

28 comments:

Rajeswari said...

me the first

நட்புடன் ஜமால் said...

மொத்தமும் அழகு

Rajeswari said...

பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!
- அப்பாவி முரு//

உண்மையான கருதுக்கள்..சூப்பர்

அப்பாவி முரு said...

வாங்க ராஜேஸ்வரி.,
வாங்க ஜமால்.,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

அப்பாவி முரு said...

Suresh said...
அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)/

வாங்க சுரேஷ்.,

புது வருகை. வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும், ஓட்டுக்கும் நன்றி.

இராகவன் நைஜிரியா said...

வந்தற்கு ப்ரசண்ட் போட்டாச்சு.

தமிழிஷில் ஓட்டும் போட்டாச்சு...

கவிதையை படிச்சாச்சு..

பின்னூட்டமும் போட்டாச்சு..

தொடர் சங்கிலி பதிவில் நம்ம பேர் இல்ல அப்படின்றத பாத்து சந்தோஷமும் பட்டாச்சு..

அப்பாடா.. வுடு ஜூட்.

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா said...
வந்தற்கு ப்ரசண்ட் போட்டாச்சு.

தமிழிஷில் ஓட்டும் போட்டாச்சு...

கவிதையை படிச்சாச்சு..

பின்னூட்டமும் போட்டாச்சு..

தொடர் சங்கிலி பதிவில் நம்ம பேர் இல்ல அப்படின்றத பாத்து சந்தோஷமும் பட்டாச்சு..

அப்பாடா.. வுடு ஜூட்.//

ரொம்ப சந்தோசப்படாதிங்கண்ணே,
அடுத்து எழுதுறவர் என்னோட உயிர் நண்பர், நான் சொன்னா...

ஷைலஜா said...

]]]இறக்கமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
இயறக்கையின் ]]]

முரு! இரக்கம் என்று சொல்லவந்தீங்களா இல்ல இறக்கம்தானா

]]]கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,
]]]]
>>>>>>>

உள்குத்தா:):) கொஞ்சிகொஞ்சிப்பேசினா தானே மதி மயங்கும்:):)

]]]பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!
- ]]]

>>>>>
சபாஷ்! பெண்கல்வியை இங்க சிறப்பா சொல்லிட்டீங்க தம்பி...

பெண் அறிவு வளர பாரதி விரும்பினான். இப்போ இந்தக்கவிதையில் நீங்களும் கடைசில சொல்லி முடிச்சது இருக்கே அட அட! கலக்கல்ஸ்! நிறைய எழுதுங்க...பாடப்பாட ராகம்..செதுக்க செதுக்க சிற்பம்.
எழுத எழுத கவிதை!

வாழ்த்துகளும் நன்றிகளும்
ஷைலஜா

//]]]கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,
]]]]
>>>>>>>

உள்குத்தா:):) கொஞ்சிகொஞ்சிப்பேசினா தானே மதி மயங்கும்:):)//

வாங்க ஷைலஜா அக்கா.,
சத்தியமா உள்குத்தெல்லாம் இல்லை. சின்ன வயசுல பக்கத்துவீட்டு பிள்ளைகளோட விளையாடும்போது, நாம ஏதாவது தப்பு பண்ணி அடிவாங்கி அழும்போது, பக்கத்துவீட்டு அக்காதான் நம்மளை கொஞ்சியே சமாதானம் பண்ணுவாங்க,

சத்தியமா அதுதான்.

அப்பாவி முரு said...

//]]]பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!
- ]]]

>>>>>
சபாஷ்! பெண்கல்வியை இங்க சிறப்பா சொல்லிட்டீங்க தம்பி...

பெண் அறிவு வளர பாரதி விரும்பினான். இப்போ இந்தக்கவிதையில் நீங்களும் கடைசில சொல்லி முடிச்சது இருக்கே அட அட! கலக்கல்ஸ்!//

ரொம்ப நன்றி அக்கா.,

பெண்களுக்கு சுய அறிவு வேணும்னு நினைச்சேன் அவ்வளவுதான்.

அப்பாவி முரு said...

//நிறைய எழுதுங்க...பாடப்பாட ராகம்..செதுக்க செதுக்க சிற்பம்.
எழுத எழுத கவிதை!

வாழ்த்துகளும் நன்றிகளும்
ஷைலஜா//

நன்றி அக்கா!!!

:-0 ))

பழமைபேசி said...

அக்கா அவர்கள் முந்திகிட்டாங்களே?

வாழ்த்துகளும் நன்றியும்!

அழகாத்தான் கோர்வையாக் கோர்க்குறீங்க தம்பீ!!

அண்ணன யாராவது வளையத்துல சிக்க வையுங்களேன்!!!

அப்பாவி முரு said...

// பழமைபேசி said...
அக்கா அவர்கள் முந்திகிட்டாங்களே?

வாழ்த்துகளும் நன்றியும்!

அழகாத்தான் கோர்வையாக் கோர்க்குறீங்க தம்பீ!!

அண்ணன யாராவது வளையத்துல சிக்க வையுங்களேன்!!!//

வசிஸ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம்!

காப்பற்ற முயற்ச்சிக்கிறேன்.

RAMYA said...

//
கோலத்தில் பெண் அழகு., பெண்ணுக்கு
இந்த கோலம் தான் அழகு.

அன்பெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
பாசமெனும் வட்டமே அழகு.,

இரக்கமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
இயறக்கையின் இந்த வட்டமே அழகு.,
//

அழகுகள் அனைத்தையும் ஒரு சேர அழகாய் சொல்லி இருக்கீங்க.

இயற்கை, இறக்கம்,அன்பு, பாசம் எல்லாமே அழகுதான்.

உங்கள் கருத்துக்களின் கோர்வை ஒரு தனி அழகு தான்!!

RAMYA said...

//
கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,

காதலெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
கணவனுடன் காதல் எனும் வட்டமே அழகு.,

செல்வமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குழந்தைச் செல்வ வட்டமே அழகு.,

தாய்மையெனும் வட்டம் அழகு., பெண்ணை
அம்மா என அழைப்பதே அழகு.,
//

இவை அனைத்துமே ஒரு வட்டத்துக்குள் இருந்தால் அழகு என்பதை சொல்லாமல் சொல்லிய வட்டங்களின் வடிவமைப்பு !!

RAMYA said...

//
குடும்பமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
குதூகலம் தருமிந்த வட்டமே அழகு.,

பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!!
//

அருமை அருமை !!

இதற்கு மேல் ஒரு பெண்ணின் உயர்வுக்கு வேறே என்ன தேவை??

அறிவு வட்டம் சரியாச் சொன்னீங்க முரு.

Mahesh said...

ஆஹா... நல்லாவே இருக்கு கவிதை... மணியார் சரியான ஆளத்தான் கோத்து விட்டுருக்காரு.

அப்பாவி முரு said...

// RAMYA said...

இவை அனைத்துமே ஒரு வட்டத்துக்குள் இருந்தால் அழகு என்பதை சொல்லாமல் சொல்லிய வட்டங்களின் வடிவமைப்பு !!//

வாங்க ரம்யா.,

கருத்துகளுக்கு நன்றி.

அப்பாவி முரு said...

// Mahesh said...
ஆஹா... நல்லாவே இருக்கு கவிதை... மணியார் சரியான ஆளத்தான் கோத்து விட்டுருக்காரு//

வாங்க மகேஸ் அண்ணே.,

மணியண்ணன் (சரியாக படிக்கவும்., மணிவண்ணன் இல்லை) என்ன சாதாராணமான ஆளா?!

:-0)))

தேவன் மாயம் said...

பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!! ////

கவிதை அழகோ அழகு!!

அப்பாவி முரு said...

//thevanmayam said...
பெண்ணுக்கு, சமூகம்பல வட்டங்கள் வரைந்தாலும்,
வளையமிட்டு அழகு பார்த்தாலும்(?)., பெண்ணே
உமக்கு நீயே வரையும் அறிவு வட்டம் தான், உண்மையில் அழகு!! ////

கவிதை அழகோ அழகு!!//

நன்றி தேவன்மயம்!

அ.மு.செய்யது said...

//கொஞ்சலனும் வட்டம் அழகு., பெண்கள்
கொஞ்சியே தம்பிகளை வட்டம் சேர்ப்பதே அழகு.,//

ஆஹா..இது அழகு.

அ.மு.செய்யது said...

லெக் செஞ்சுரி.......நம்ம தான் போல..25

அ.மு.செய்யது said...

//தாய்மையெனும் வட்டம் அழகு., பெண்ணை
அம்மா என அழைப்பதே அழகு.,//

எல்லா பெண்களையும் எப்படி அம்மா என்றழைப்பது ??

அம்மா என்ற ஓருயிருக்கு எப்படி நிகர் இருக்க முடியும் ?

அ.மு.செய்யது said...

கோல‌மும் அத‌ற்கு வ‌ண்ண‌மிட்ட க‌விதையும் அழ‌கு.

க‌ல‌க்க‌ல்ஸ் முரு !!!!

ஆமா மெய்யாலுமே இந்த கோலம் நீங்க தான் போட்டீங்களா ?

அ.மு.செய்யது said...

//ஷைலஜா said...
]]]இறக்கமெனும் வட்டம் அழகு., பெண்ணுக்கு
இயறக்கையின் ]]]

முரு! இரக்கம் என்று சொல்லவந்தீங்களா இல்ல இறக்கம்தானா
//

இவ்ளோ இறக்கம் போதுமா ??

அப்பாவி முரு said...

//அ.மு.செய்யது said...
//தாய்மையெனும் வட்டம் அழகு., பெண்ணை
அம்மா என அழைப்பதே அழகு.,//

எல்லா பெண்களையும் எப்படி அம்மா என்றழைப்பது ??

அம்மா என்ற ஓருயிருக்கு எப்படி நிகர் இருக்க முடியும் ?//

வாங்க செய்யது.,

எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்ததில்லையா?, மனைவியத்தவிர மற்ற எல்லோரையும், அம்மா, தங்கச்சி என்றே அழைப்பார்.

பெற்ற தாய்க்கு ஈடில்லை என்றாலும், அம்மா என மற்றவர்யும் அழைப்பதில் தப்பில்லையே!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

©2009 அப்பாவி | by TNB