நானும் எனக்குத் தெரிந்தவர்களிடன் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறேன், ஆனால் கிடைத்த பதிலோ தெரியவில்லையே, அது ரொம்ப கஷ்ட்டமுன்னு நினைக்கிறேன், எதுக்கும் இந்திய தூதரகத்துல போய் கேட்டுப்பாரு, சரி, தூதரகத்துல போய் வாக்களிக்கனும்ன்னா, அன்னைக்கி லீவு போட்டு போவையா நீ? என குழப்பமான பதில்கள் அல்லது நம்மை மிரட்டும் விததில் எதிர் கேள்விகள் மட்டுமே வருகிறது.
சரி எதுக்கும் தூதரகத்தில் போய் சந்தேகத்தை நிவர்த்திக்கலாமென்றால், சிங்கையிலிருக்கும் இந்திய தூதரகத்தில் வரவேற்ப்பாளரே இல்லை. சரி ஏதாவது ஒரு கவுண்டரிலிருப்பவரை போய் கேட்க்கலாமென்று போய் கேட்டால், “ஃக்யூ எடுத்தீங்களா?, இது பெர்த் செர்டிஃபிகேட் தர்ர கவுண்டர், உங்க சந்தேகத்தை வேற யாருட்டயாவது கேளுங்க” என்ற பதில்-(கெஸ்டீன் பாஸ்) தான் கிடைக்கிறது. அதீத பரபரப்பான தூதரகத்தில் அடுத்த கவுண்டர் அக்காவிடமும் கேட்டு ”(கெஸ்டீன் பாஸ்) கொட்டு” வாங்க பயமாக உள்ளது.
தேர்தல் கமிஷன் வெப் சைட்டில் பார்க்கலாமென்று தேடினாலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கம் ஏதும் இல்லை. சரி, அதிகாரிக்கு (Tamilnadu, Chief Election Officer) மெயில் எழுதி வாரமாகிவிட்டது. இன்னும் பதில் இல்லை.
49ஓ – வைப் பற்றி தெளிவாக எழுதினாரே நமது ஞானி, அவரிடமாவது கேட்க்கலாமென்று அவறுடைய gnani.net –ல் மனிதன் பதில்களுக்கு, எனது கேள்வியை அனுப்பி நாட்களாயிற்று. அவரிடமும் இதுவரை பதிலில்லை.
நண்பன் வினோத் கொஞ்சம் விவரமானவனாச்சே, அவனிடம் கேட்டாவது சந்தேகத்தை தெளிவுபடுத்தலாம் என்று, சிதம்பரத்திலிருக்கும் நண்பருக்கு அலைபேசியில் அலைத்து கேட்டால், “அது கொஞ்சம் கஷ்ட்டமாச்சே, நீ அங்க எம்பஸில போய் உன்னோட ஊரு, உன்னோட வாக்காளர் அட்டை, உன்னோட பூத் எல்லாம் தெளிவாச் சொல்லி பதிந்தால், அவர்கள் உன்னோட ஊருல அதை செக் பண்ணி, எலெக்சன் அன்னைக்கி உனக்கு வாக்கு சீட்டை அனுப்பி வைப்பாங்க, எம்பஸில வச்சு நீ ஓட்டுப் போட்டு, அதை உடனே உங்க ஊருக்கு அனுப்பி வைப்பாங்க. ஓட்டு எண்ணுறதுக்கு முன்னாடி, உன்னோட ஓட்டு கிடைக்கணும். கிடைச்சாத்தான் உன் ஓட்டையும் சேத்து எண்ணுவாங்க. எதுக்கும் அங்க எம்பஸில போய் கேளு” என முடித்துக் கொண்டான். என்னது மீண்டும் எம்பஸியா? எங்க போய் யாருகிட்ட கேக்குறது. நம்மளைத்தவிர மத்த எல்லாரும் பிஸியாவில்ல இருப்பாங்க இல்லை காட்டிக்குவாங்க!
அதனால் திறந்த வலையில் இருக்கும் உங்கட்ட கேக்கிறேன், யாராவது விளக்கம் சொல்லுங்க.

வெளிநாட்டில் இருகும் இந்திய பிரஜை எவ்வாறு வரும் நாடாளுமன்ற தேர்தலில், வெளிநாட்டில் இருந்தபடியே வாக்களிப்பது?
அவரே, 49ஓ-க்கு வாக்களிக்க வேண்டுமானால், எவ்வாறு வாக்களிப்பது?
விளக்கத்தை பின்னூட்டமாக இட்டாலும் சரி, தனி பதிவாக எழுதினாலும் சரி. எனக்கு விளக்குங்களேன் ப்ளீஸ்!
23 comments:
இதை பற்றி நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன்
தெரிந்தால் பகிர்ந்து கொள்வோம்.
இதை பற்றி நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன்
தெரிந்தால் பகிர்ந்து கொள்வோம்.
வாங்க ஜமால் அண்ணே,
நான் கேட்டவர்களுக்கு எல்லாம் சரியான பதில் தெரியவில்லை.
ஆனால் தெரியவேண்டும்.
காத்திருப்போம்
ரொம்ப சிம்பிள்...
லீவு போடுங்க...
ப்ளைட் பிடிங்க..
ஊருக்கு போங்க...
ஓட்டு போடுங்க..
திரும்பவும் ப்ளைட் பிடிங்க..
வேலையில் சேர்ந்துடுங்க...
இந்தியன் எம்பசி .. எவ்வளவு பிசியான எம்பசி.. அங்க போய் கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லிடுவாங்களா... இன்னும் அப்பாவியாவே இருக்கியே தம்பி.
உன்னை நினைச்சுத்தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த தம்பி இவ்வளவு அப்பாவியா இருக்கே, இந்த உலகத்தில எப்படி பொழைக்கப் போவுது அப்படின்னு..
ரொம்ப சிம்பிள்...
லீவு போடுங்க...
ப்ளைட் பிடிங்க..
ஊருக்கு போங்க...
ஓட்டு போடுங்க..
திரும்பவும் ப்ளைட் பிடிங்க..
வேலையில் சேர்ந்துடுங்க...
இந்தியன் எம்பசி .. எவ்வளவு பிசியான எம்பசி.. அங்க போய் கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லிடுவாங்களா... இன்னும் அப்பாவியாவே இருக்கியே தம்பி.
உன்னை நினைச்சுத்தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த தம்பி இவ்வளவு அப்பாவியா இருக்கே, இந்த உலகத்தில எப்படி பொழைக்கப் போவுது அப்படின்னு..//
அண்ணே வாங்க,
ரொம்ப கேவலமா இருக்கும், எம்பசிக்கு போனால்,காலையில் தலைவாசல் திறக்கும் முன் எப்படியும் நூறு முதல் நூற்றி ஐம்பது பேர் வரிசையில ரோட்டில் நிற்க்க வேண்டும். ரோட்டுல காரில் போறவங்க எல்லாம் பாத்து சிரிச்சிட்டு போவாங்க.
ப்ளைட்டை பிடிச்சு ஊருக்கு போய் ஓட்டு போடவா?
எனக்கேதுண்ணே அம்புட்டு வசதி, நானொரு அப்பிராணி வீட்டு பிள்ளைண்ணே.
// muru கூறியது...
அடுத்து என்னண்ணே,
ப்ளைட்டை பிடிச்சு ஊருக்கு போய் ஓட்டு போடவா?
எனக்கேதுண்ணே அம்புட்டு வசதி, நானொரு அப்பிராணி வீட்டு பிள்ளைண்ணே.//
ஒரு ஓட்டுக்கு ஒரு ப்ளைட் டிக்கெட் கொடுக்க சொல்லப்பு
// muru கூறியது...
அடுத்து என்னண்ணே,
ப்ளைட்டை பிடிச்சு ஊருக்கு போய் ஓட்டு போடவா?
எனக்கேதுண்ணே அம்புட்டு வசதி, நானொரு அப்பிராணி வீட்டு பிள்ளைண்ணே.//
ஒரு ஓட்டுக்கு ஒரு ப்ளைட் டிக்கெட் கொடுக்க சொல்லப்பு//
அண்ணே நல்ல யோசனை, எங்க ஊருகூட திருமங்கலத்துக்கு பத்து கிலோமீட்டெர் தான்
அண்ணன் அஞ்சா நெஞ்சன் கூட ரொம்ப நல்லத் தெரியும்
முருகேசன்...இந்திய தூதரகத்தில் போய் கேட்கிறது....”முட்டையில் மயிர் முடுங்கிற” கதை...
பேசாமல் இராகவன் சொன்னாற் போல் ஊருக்கு போய் வாக்களிச்சிட்டு வாங்கோ...
இல்லையென்றால் யாருக்காவது காசை கொடுத்த நல்ல கள்ள ஓட்டா போடுவீங்கோ....
:-)
not vote for other country indians its better idea
தம்பி முரு இதைப்பாருங்க,
According to Section 19 of the R. P. Act, 1950, only a person who is ordinarily resident in a constituency is entitled to be registered in the electoral roll of that constituency.
புரியுதா?
According to Section 19 of the R. P. Act, 1950, only a person who is ordinarily resident in a constituency is entitled to be registered in the electoral roll of that constituency.
புரியுதா?//
வாங்க பெயரில்லாதவரே,
இது ஓட்டு போட முடியாதுன்னுல சொல்லுது, இதை எங்கிருந்து எடுத்தீர்கள்?
ஆமாம் அதேதான்,
ஒருவர் தனது சொந்த ஊரை விட்டு இந்தியாவிற்குள் உள்ள வேறு ஒரு ஊரில் சென்று
அந்த ஊரிலேயே தங்கி வேலை பார்த்தால் கூட
அவர் தனது சொந்த ஊரில் வாக்குரிமையை
இழந்து விடுகிறார்,
அவர் எந்த ஊரில் தங்கி உள்ளாரோ
அந்த ஊரில்தான் அவர் வாக்குரிமை பெற முடியுமாம்,
உதாரணம் சென்னை.
டெல்லி இப்படி.
வெளி நாட்டில் தங்கி வேலை பார்க்கும்
நபர்களில்
இந்திய அரசுப் பணிகளில்
உள்ளவர்கள் மட்டுமே
தங்கள் வாக்குகளைத் தபாலில்
பதிவு செய்ய இயலும்.

ரேசன் கார்டை மாத்தினால் தான் அவ்வாறு வரும் என நினைக்கிறேன்
நான் என்னோட அட்ரஸை மாத்தலையே
ரொம்ப யோசிக்காதீங்க, இந்த லிங்க் பாருங்க,
http://www.indian-elections.com/electionfaqs/electoral-rolls.html
இந்த சுட்டியில்
6, 7
கேள்விகள் விடைகள் பாருங்கள்
உங்களூக்கு
உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரொம்ப யோசிக்காதீங்க, இந்த லிங்க் பாருங்க,
http://www.indian-elections.com/electionfaqs/electoral-rolls.html
இந்த சுட்டியில்
6, 7
கேள்விகள் விடைகள் பாருங்கள்
உங்களூக்கு
உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.//
அட ஆமா,
இனி நான் அரசியல் பேசப்போவ்து இல்லை,
ஏன்னா? என்னால ஓட்டு போட முடியாதுன்னா நான் ஏன் அரசியல் பேசனும்
//அட ஆமா,
இனி நான் அரசியல் பேசப்போவ்து இல்லை,
ஏன்னா? என்னால ஓட்டு போட முடியாதுன்னா நான் ஏன் அரசியல் பேசனும்/
அதுக்காக கவலைபபட வேண்டாம் ஒன்றும் கவலைப் படாதீங்க, உங்க வாக்கை நம்ம உடன்பிற்ப்புகள வச்சு
பதிவு பண்ணிடலாம்
சரியா?
பதிவு பண்ணிடலாம்
சரியா?//
விடமாட்டேன்
என் ஓட்டு சும்மா போக விடமாட்டேன்
எனக்கு ஏதாவது கொடுத்தா
விட்டுக்கொடுக்கலாம்
//விடமாட்டேன்
என் ஓட்டு சும்மா போக விடமாட்டேன்
எனக்கு ஏதாவது கொடுத்தா
விட்டுக்கொடுக்கலாம்//
அப்புறம் ப்ளாக் எழுதி
யாரையும் குறை சொல்லக் கூடாது
யாரையும் குறை சொல்லக் கூடாது//
இல்லை நண்பா,எனக்கு புத்தி வந்துவிட்டது.
இனி அரசியல் பதிவுகள், குறிப்பாய் வெளிநாட்டில் பாதுக்கப்பாய் உட்கார்ந்து கொண்டு, தாத்தா வாழ்க, அம்மா வாழ்க, ஐய்யா வாழ்க என பதிவுகள் எழுதமாட்டேன்,
குறிப்பாய் எனக்கான விடை கிடைத்துவிட்டது, நண்பர் குமாருக்கு சிறப்பு நன்றி.
நமக்கு ஓட்டு இல்லையா???!!!
நமக்கு ஓட்டு இல்லையா???!!!//
அதிர்ச்சியெல்லாம் ஆகக்கூடாது...
நமக்கு ஓட்டு இல்லையா???!!!//
அதிர்ச்சியெல்லாம் ஆகக்கூடாது...
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.