ஆத்தீகனும் தேடுகிறார்,
நாத்தீகனும் தேடுகிறார்.
போற்றியும், திட்டியும்
சகஸ்ரநாமம் பாடுகிறார்.
உள்ளென்றும், இல்லென்றும்
உதவிகள் பல செய்கிறார்,
உள்ளென்றவர் இல்லெனவும்,
இல்லென்றவர் உள்ளெனவும்
உறுத்தலில்லாமல் மாறுகிறார்.
அங்குமில்லாமல், இங்குமில்லாமல்
நடுவில் அப்பாவியாக நின்றாதால்
இருவரும் பெற்ற பெரும்பேர்
எனக்கில்லாமல் போகுமோ?
உள்ளென்பதோ, இல்லென்பதோ
இன்றே தெரிந்தால்,
போற்றியோ, திட்டியோ
சகஸ்ரநாமம் பாட
நானும் தேடுகிறேன்
எங்கே கடவுள்?
மிச்சர்கடை
4 weeks ago
14 comments:
அங்குமில்லாமல், இங்குமில்லாமல்
நடுவில் அப்பாவியாக நின்றாதால்]]
நீங்களா :)
//அங்குமில்லாமல், இங்குமில்லாமல்
நடுவில் அப்பாவியாக நின்றாதால்
இருவரும் பெற்ற பெரும்பேர்
எனக்கில்லாமல் போகுமோ?
அதிலென்ன சந்தேகம்...
இடைத்தேர்தல மனசில வைச்சி எழுதறீங்களோ?
முரு நல்ல சிந்தனை. நாங்களும் தேடுகிறோம்.
//உள்ளென்றும், இல்லென்றும்
உதவிகள் பல செய்கிறார்,//
ஆமாம்தான......
//எங்கே கடவுள்?//
உங்க வீட்டுல கண்ணாடி இல்லையா?
:)
உங்களுக்கு தெரியாத கடவுளா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ் !
நட்புடன் ஜமால் said...
அங்குமில்லாமல், இங்குமில்லாமல்
நடுவில் அப்பாவியாக நின்றாதால்]]
நீங்களா :)//
இதென்ன கேள்வி????
**********************************
கதிர் - ஈரோடு said...
//அங்குமில்லாமல், இங்குமில்லாமல்
நடுவில் அப்பாவியாக நின்றாதால்
இருவரும் பெற்ற பெரும்பேர்
எனக்கில்லாமல் போகுமோ?
அதிலென்ன சந்தேகம்...
இடைத்தேர்தல மனசில வைச்சி எழுதறீங்களோ?//
இன்னும் கல்யாண ஆசை வரவில்லை!
**********************************
கும்மாச்சி said...
முரு நல்ல சிந்தனை. நாங்களும் தேடுகிறோம்.//
கண்டிட்டால் கூறவும்!!
*********************************
// பிரியமுடன்.........வசந்த் said...
//உள்ளென்றும், இல்லென்றும்
உதவிகள் பல செய்கிறார்,//
ஆமாம்தான......//
ஆமாமேதான்
******************************
// வால்பையன் said...
//எங்கே கடவுள்?//
உங்க வீட்டுல கண்ணாடி இல்லையா?//
என்னோட வீட்டில் நாலைந்து உள்ளது??
உங்கள்(வால்) வீட்டில்?
***********************************
// கோவி.கண்ணன் said...
:)
உங்களுக்கு தெரியாத கடவுளா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ் !//
நல்லா கொளுத்தி போடுங்கண்ணே,
பெரியாருக்கு வீரமணி குத்தகைதாரர் போல்,
கடவுளுக்கு நீயான்னு பிராண்டட்டும்!!!
//நானும் தேடுகிறேன்
எங்கே கடவுள்?//
கடவுளும் தேடுகிறார் உங்களைதான்.
//// வால்பையன் said...
//எங்கே கடவுள்?//
உங்க வீட்டுல கண்ணாடி இல்லையா?//
என்னோட வீட்டில் நாலைந்து உள்ளது??
உங்கள்(வால்) வீட்டில்?//
பாதரசம் போயிடுச்சாம்...
//உருத்தலில்லாமல் //
உறுத்தல்
//உள்ளென்பதோ, இல்லென்பதோ
இன்றே தெரிந்தால்,
போற்றியோ, திட்டியோ
சகஸ்ரநாமம் பாட
நானும் தேடுகிறேன்
எங்கே கடவுள்?//
பார்தீர்களானால் நான் கேட்டதாக சொல்லுங்கள் அப்பாவி முரு.
" எங்கே கடவுள்?"
முரு நீங்கதான் கடவுள்.
நானும் கடவுள்.
எல்லோருமே கடவுள்.
நல்ல கேள்வி முரு - தேடலாம் - வீட்டில் பல நேரம் நமக்குச் சொந்தமான பொருளைத் தேவையான நேரத்தில் தொலைத்து விட்டுத் தேடுகிறோம் இல்லையா - அது மாதிரித்தான். திடீரென எதிர்பாராத நேரத்தில் கண்ணில் படும்.
இருப்பதைத்தான் அனைவரும் தேடுகின்றனர். இல்லாததைத் தேட இயலாது.
நல்வாழ்த்துகள் முரு
கடவுள்....
குட்டி குழந்தையின் சிரிப்பி்லோ...ஏன்னென்றால்..நாம் அனைவரும் அந்த சிரிப்பில் சில நொடிகள்..மகிழ்ச்சிஅடைகிறோம்...
what i thought just i shared for that don't scold me saharaamam(1008 times is it?) because u said that u will scold for this much times......
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.