வலை உலகம், ஒரு
மாய உலகமென்றே
இதுவரை நம்பியிருந்தேன்..
அறிவாளிகளும், அறிவாளிகளும்
வார்த்தை ஜாலங்களால்
விவாதித்து, களத்தை வெறுமனே
சூடாக்கும் இடமிதுவெனவே எண்ணியிருந்தேன்
நல்ல கருத்துகளுக்கு, கடும் எதிர்ப்பும்,
அஜல்-குஜால் கருத்துகளை
ரத்தின கம்பளத்தோடு வரவேற்கும்
உலகிதுவெனவே வெறுத்திருந்தேன்.
எல்லாம், நேற்றுவரை தான்.
எல்லாம் மாறிற்று. என்
எண்ணங்களும் மாறிற்று.
ஆங்கே ஒருவருக்கு ஆபத்து,
உதவி செய்வோம் வாருங்கள்
என்ற ஒற்றை வரிக்கு,
எத்தனை மடல்கள்?, எத்தனை இடுகைகள்?,
எத்தனை, எத்தனை உதவிக்கரங்கள்!?
உலகமுழுமைக்கும் தமிழில் பரப்பியதும்,
உடனடியாக கூட்டங்கள் நடத்தியதும்,
பணப்பரிவர்த்தனைகளின் விளக்கங்களும்,
இலக்கின் நிர்ணயமும்-நடப்பும்
என அத்தனையும் நடந்தது
ஓர் இரவும், ஓர் பகலுக்குள்.
நம்பிக்கைத் துளிர் விட்டதோடில்லாமல்
கிளை விட்டும் பரவுகிறது.
பரவுவது, பரப்பியதும்,
உதவியதும், உதவி கேட்பதும்
தமிழ் பதிவர்கள் தான்.
என் எண்ணத்தை மாற்றிய
தமிழ் பதிவர்களுக்கு,
நன்றி சொல்வதோடில்லாமல்
நானும் இணைந்தேன், உங்களோடு
என பெருமை கொள்கிறேன்.
உதவ விரும்புவோரின் தொடர்புக்கு:
சிங்கை செந்தில்நாதனுக்காக கூடிய பதிவர்கள் / நண்பர்கள் கூட்ட முடிவுகள்
பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent
.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
12 hours ago
16 comments:
சரியா சொல்லி இருக்கீங்க முரு!
கவலையான விடய நேரத்தில்
நேசக்கரங்கள்
நல்ல நட்புகள்.
---------------
இதே போன்று இன்னும் ஏதாவது ஆக்கப்பணிகளுக்கு உபயோகிக்கனும்.
---------------
அவருக்கான எமது பிரார்த்தனைகளும்
எழுதுவது ஒரு தொடர்ச்சிக்கு என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் நல்ல நட்புகளுக்குத் தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்.
அப்பாவி(கள்) நண்பர்களாக கிடைப்பது இங்கு தானே தம்பி !
:)
இணையம் அளப்பரியாதா நட்புகளை கொண்டிருக்கிறது!
மிக அழகாக சொல்லியிருக்கீன்றீர்கள் தம்பி முரு.
வலையுலக நட்பு மிக அழகானது. பாசம் பொழிய பலருண்டு.
உண்மை முரு .
எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!"
இத சொன்னவரு புதுகை அப்துல்லா அண்ணண். ( http://mmabdulla.blogspot.com/2009/01/blog-post_29.html )
இதுக்கு மேல நாம சொல்ல என்ன இருக்கு ? அதான் எல்லாத்தையும் அப்துல்லா அண்ணணே சொல்லிட்டாரே
உண்மை
செந்தில் நாதன் நலம் பெற பிரார்த்தனைகள்
உண்மை...
செந்தில் நாதன் நலம் பெற பிரார்த்தனைகள்
உண்மை!
எவ்வளவு கருத்து வேறுபாடுகளையும் மறந்து அனைவரும் ஒரே எண்ணம் கொண்டிருப்பது நெகிழ்ச்சியைத் தருகிற்து.
உண்மை!
நமது வாழ்த்துகளும், பிராத்தனைகளும் அண்ணனை குணப்படுத்த வேண்டும்.
நானும் இந்தத்தருணத்தில் பெருமையாக உணர்ந்தேன்.. சிங்கைநாதன் முழுநலத்துடன் திரும்பும்போதே மகிழ்ச்சியும் முழுமையடையும்.!
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.