முரண்

வாரமுழுவதும் மதுரையில் தனியார் பைனான்ஸ் கன்சல்டண்டிங் கம்பெனியில் வேலை செய்து, இரண்டு பஸ் மாறி வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்திரன் தெருவுக்குள் நுழைந்ததும், மற்ற தெரு நாய்களை குரைத்து வீதியை விட்டு விரட்டிக் கொண்டிருந்த கருப்பன் ஓடிவந்து சந்திரனிடம் குழைந்தது. பேருக்கு ஏத்தபடி, உடம்பு முழுக்க, முழுக்க கருப்பு மட்டுமே. அதை குட்டியிலிருந்து வளர்த்து வருவது சந்திரன் தான். சில நேரம் சந்திரனின் அப்பாவின் அதட்டலுக்கு கூட அடங்காத கருப்பன், சந்திரனின் ஒரு சிறு விசிலுக்கு அடங்கிவிடும். பின்னே, புதன், ஞாயிற்று கிழமைகளில் தனி எலும்பு வாங்கி வேகவைத்து கொடுப்பவனாச்சே. சந்திரன் வேலைக்கு போனதிலிருந்து தான் எலும்பு ஞாயற்றுகிழமை மட்டுமே என்றாகிப் போச்சு.


கருப்பனை திண்ணையில் உட்கார உத்தரவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டுக்குள் நுழைந்தது வராண்டாவை தாண்டி முற்றத்துக்கு வருவதற்குள் “கீ…கீ…சந்திரா, சந்திரா…” என பேரைச் செல்லமாகக் கூப்பிட அம்மா, அப்பாவுக்கு அடுத்து உரிமையுள்ள மூன்றாவது ஜீவன் செல்லி(கிளி) தான். அடுப்படியிலிருந்து அம்மா எட்டிப்பார்த்து, “வா சந்த்ரா, சமைச்சுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறு அப்பா வந்ததும் சாப்பிடலாம்” என்று பதிலுக்கு காத்திராமல் அடுப்படிக்குள் போய்விட்டார்.




தோள்பையினை முற்றத்து திட்டில் வைத்துவிட்ட, வேகவேகமாக படுக்கை அறை வாசலில் இருக்கும் புஜ்ஜி(முயல்) கூண்டைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற, “ஏம்மா, கருப்பன், புஜ்ஜி இருக்குற இடத்தை சுத்தம் பண்ணல?” என வீதிக்கு கேக்குமளவுக்கு கத்தினான். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா, “டேய், தேனிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு, இப்ப தான்டா வந்தோம். வந்ததும் உங்கப்பா பசிக்குதுன்னு சொன்னார். அதான் சமைக்கிறேன். அதை முடிச்சிட்டு சுத்தம் பண்ணுவேன்டா. அதுக்கு ஏன், இப்பிடி கத்துற” என பதிலுக்கு ஏற்ற இறக்கத்தோடு பேசி முடித்து மீண்டும் சமையலை கவனிக்கப் போய்விட்டார்.

”ஆமா, சாப்பாடு ரொம்ப முக்கியம் பாரு. பசின்னா, கடையில வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்பிடி அழுக்கா விட்டு, விட்டு தான் ரெண்டு முயல் செத்துப் போச்சு. உன்னையப் போய் பாத்துக்க சொன்னேன் பாரு” என கத்திவிட்டு, பேண்டை கழட்டாமல், மேலே மடக்கிவிட்டு அதிரடியாக புஜ்ஜியின் இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

”டேய், நீ ஏன்டா செய்யுற, கொஞ்சம் பொறு நான் பாத்துக்கிறேன்” என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், புஜ்ஜி, , கருப்பன், செல்லி இருக்கும் இடம் மற்றும் கூண்டுகளை சுத்தம் செய்து எல்லா இடங்களிலும் டெட்டால் தெளித்த பின்னரே, கைப்பிடி சுவரின் மேலிருந்த தோள்பையை எடுத்து துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனான் சந்திரன்.

”சந்திரன் வந்துட்டானா?” எனக்கேட்ட அப்பாவிடம், அம்மா நடந்ததைச் சொல்வது குளியலறைக்குள் தெளிவாக கேட்டது.
அவரும், “சீக்கிரம் வந்துருவான்னு தெரிஞ்சிருந்தா, நான் கூட சுத்தம் பண்ணியிருப்பேன்” எனச் சொல்வதும் தெளிவாக கேட்டது. ஆனாலும் மனசு அடங்கவில்லை.

ஞாயிறு முழுவதும் வெறுப்பாகவே கழியவே, இருட்ட ஆரம்பித்ததும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் ”காலையில சீக்கிரம் வேலைக்குப் போகணும், அதனால இப்ப கிளம்புறேன்” என சொல்லிவிட்டு மதுரைக்கு கிளம்பிவிட்டான். அவன் கோவமாகவே இருப்பது தெரிந்ததும் அம்மாவும் “சரி பார்த்து போயிட்டு வா” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இரண்டு பஸ் ஸாண்டு மாறி, மூன்று பஸ் மாறி வியர்வையும், களைப்புமாக வேலையிடத்துக்கு பக்கத்தில் ஒரு உடன்வேலை செய்யும் நால்வருடன் பங்கிட்டுக் கொள்ளும் தனி வீட்டுக்குள் நுழைந்ததும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன், “என்ன, மாமா ராத்திரியே வந்துட்ட” எனக்கேட்ட ஒருவனிடம், ”காலையில கொஞ்சம் வேலையிருக்கு” எனமட்டும் சொல்லிவிட்டு, குளித்து களைப்பை விரட்டுவதற்காக குளியலறைக்குள் போய் இருபது நிமிடம் கழித்து வெளியே வந்த சந்திரன் மெதுவாக நால்வருக்கு அருகில் வந்து நிதானமாக,

“யேன், டாய்லெட்டை நாந்தான் கழுவனுமா, நீங்கள்ளாம் கழுவமாட்டீங்களா?, அடுத்து நீங்க கழுவலேன்னா, பரவாயில்லை ரெண்டு மாசமானாலும் அப்படியே இருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டு விருட்டென அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்,

.

17 comments:

நட்புடன் ஜமால் said...

அதுக்காக இப்படியா ...

vasu balaji said...

இருக்காங்கங்க இப்படியும்.

நட்புடன் ஜமால் said...

அதுவும் சரிதான் ...

அறிவிலி said...

பேச்சிலர்ஸ் எல்லாம் சேந்து இருக்கறதுனால ஏற்பட்ட பாதிப்போ?????

வால்பையன் said...

முயல் ஆய் போனாத்தான் ரொம்ப நாறும் போல!

மனிதனுக்கு ரெண்டு மாசம் வரை தாங்குமென்றால் விட்டுட வேண்டியது தானே தல!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாயிருக்கிறது.எல்லோருக்குள்ளும் இதைப் போல நிறைய முரண்கள் உண்டு.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் முரண்தான்

பீர் | Peer said...

இங்கும்.. கழிவறையை துப்புரவு செய்ய, வேறு ஒருவனை காசுக்கு வைத்திருக்கிறோம்.. முரண் :(

இராகவன் நைஜிரியா said...

முரண் - சொல்லியவிதம் மிக அழகு...

ப்ரியமுடன் வசந்த் said...

முன்னுக்கும் பின்னுக்கும் கூட முரண்
ஹ ஹ ஹா,,,,,

அப்பாவி முரு said...

நன்றி நட்புடன் ஜமால்.,

மீ த பஸ்டு, ஆரம்பமாகுதா?

நன்றி வானம்பாடிகள்

//இருக்காங்கங்க இப்படியும்.//

ஆமாம், இப்படியும் இருக்காங்க...

நன்றி அறிவிலி

//பேச்சிலர்ஸ் எல்லாம் சேந்து இருக்கறதுனால ஏற்பட்ட பாதிப்போ?????//

பேமிலியாலையும் பல பாதிப்பு உண்டு...

நன்றி வால்பையன்

//முயல் ஆய் போனாத்தான் ரொம்ப நாறும் போல!//

ரொம்ப நாறும்..

நன்றி ஸ்ரீ

//நன்றாயிருக்கிறது.எல்லோருக்குள்ளும் இதைப் போல நிறைய முரண்கள் உண்டு.//

நமக்குத்தான்(நீங்க + நான்) தெரியுமே...

நன்றி ஆ.ஞானசேகரன்

//ம்ம்ம் முரண்தான்//

ஆமாண்ணா...

நன்றி பீர் | Peer


//இங்கும்.. கழிவறையை துப்புரவு செய்ய, வேறு ஒருவனை காசுக்கு வைத்திருக்கிறோம்.. முரண் :(//

ஒத்துக்கொண்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

நன்றி இராகவன் நைஜிரியா

//முரண் - சொல்லியவிதம் மிக அழகு...//

நன்றிண்ணா...

நன்றி பிரியமுடன்...வசந்த்

//முன்னுக்கும் பின்னுக்கும் கூட முரண்
ஹ ஹ ஹா,,,,,//

முன்னுக்கும், பின்னுக்கும் டபுள் மீனிங்கா?, வசந்த்...

ஈரோடு கதிர் said...

சரியான முரண்தான்

தத்துபித்து said...

enna kodumainga sir.....

பித்தனின் வாக்கு said...

ஆகா பிராணிகளிடம் காட்டும் அன்பு நன்றாக உள்ளது. ஆனாலும் நம் பயன்படுத்தும் கழிவறையை நாம்தான் சுத்தம் செய்யவேண்டும். எங்க வீட்டுல நான் தான் வீடு மற்றும் கழிவறைக் கிளினர். கதை மிகவும் அருமை.

Rajeswari said...

samaya santharpathirkku yerppa kolgaikalai maatrikkollum unmaiyaana kathai.

nandraai irunthathu..

பழமைபேசி said...

கழிவறையை காற்றோட்டமாக இருக்கும்படி திறந்தே வைக்கப்படும்.நான் அறையை பாவித்துவிட்டு அதன் கதவு திறந்து வைத்தபடி வந்திருக்க, மறுகணம் பார்த்தால், மூடப்பட்டு இருக்கும். இப்படியாக திறந்தபடி, மூடியபடி என கன்ணாமூச்சி ஒர்ரிரு மாதங்கள் சென்றது... இறுதியில் முரண் வெடித்து கைகலப்பு வரி செல்லாமல், வாக்கு வாதத்திலேயே நின்றது.

பின்னர், திறந்து வைப்பதால் காற்றோட்டம் இருக்கும். திறந்து வைத்திருக்காதபடி இருக்குமானால், உள்ளே இருக்கும் தூய்மையானது கேள்விக்குறி என்றே பொருள்!

ஆகவே தூய்மை அவசியமாகிறது. அதனால் சுகாதாரம் மேம்படும். இப்படியெல்லாம் பக்குவமாய்ச் சொல்லி முரண் துடைத்தெறியப்பட்டது யாருடன்? இல்லாளுடன்!

ஊடகன் said...

//கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!//


உங்களுடைய பதிவை படித்தேன், புதுமையாக, அருமையாக உள்ளது.........
ஆனால் உங்களின் துணை தலைப்பை என்னால் ஏற்று கொள்ள முடியாது. ஏனெனில் நீங்கள் சொன்ன அனைவருமே எதோ கருத்தை சொன்னதால் தான் இன்று நீங்கள் அவரை குரிபிடுருகீர்கள்....... நீங்கள் சொல்லும் கருத்தை நூறு பேர் படித்தால் ஒருவனவாது திருந்துவான்......... இன்று பெரியாரை ஏற்று கொண்டோர் எவ்ளோ பேர் உள்ளனர். அதே போல் தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர்........ இது என்னுடைய கருத்து.......

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB