புளி காய்ச்சல்

புளி என்றால் உயிரெனக்கு,

முன்னொரு காலத்தில்

புளி என்றால் உயிரெனக்கு,



சாம்பாரிலும் புளி,

காலை சாதத்திலும் புளி,

மாங்காவிலும் புளி,

மத்திய தயிரும் புளி,



புளி, புளி என்றிருந்த

என்வாழ்வில் வந்ததோர் புயல்

கூடுதல் புளி குடுபத்திர்காகாது, என

என்வனவாசத்தின் பலனை,

என் ஆசை தேன்கூட்டை,

நான் கட்டிய கோட்டையை,

கலைத்தான் மத்திய வைத்தியன்.



வைத்தியன் கொடுத்தது கசப்பு

மருந்தெனினும்,காலப் போக்கில்

உடலுக்கு நல்ல சொகுசை தான் தருகிறது !



பழுத்தப் புளி மட்டுமா இனிக்கும்?

புளி இல்லாத என் வாழ்வும்,

எனக்கு இனிக்கத்தான் செய்கிறது.




முல்லை வீழ்ந்ததும்,

கிள்ளை வீழ்ந்ததும்,

மந்தமான என் காதுகளில்

மெதுவாகத்தான் விழுகிறது.



பெண்ணை கற்பழிப்பதும்,

பிணத்தை புணர்வதும்,

பார்வை மங்கிய என்கண்களில்

மந்தமாய் தான் தெரிகிறது.



வயதாவதும் கூட வசதியாய் தான் இருக்கிறது...

யாருக்கும், எந்த கேள்விக்கும் பதிலளிக்கத் தேவையில்லாததால்,

எனக்கு வயதாவதும் கூட வசதியாய் தான் இருக்கிறது...


-தமிழ் தாத்தா

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

Anonymous said...

புலி-புளின்னு யாரயோ வாருரது பொல தெரியுதே...

நட்புடன் ஜமால் said...

வேதனையான விடயங்கள் ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்! அருமை!! எழுதுங்கள்!!!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB