தாத்தா--- சொல்ல மறந்த க(வி)தை...

என் வாழ்வில்
வரக்கூடாத துன்பம்
வந்ததே…


வராது என்றிருந்த
இருள் என்னை
சூழ்ந்தே…


அய்யகோ…
என் மனத்துயரை, யாரிடம்...
எப்படி வெளிப்படுத்துவேன்…


என் கையை கேட்டால்
கொடுத்திருப்பேன்…
என் கண்ணைக் கேட்டாலும்
கொடுத்திருப்பேன்…
ஆனால்


நீங்கள் கேட்டது,
மேடையாயிருந்தால் நான் வந்திருப்பேன்…
அரசியலாய் இருந்தால் இளயவனையோ…
முறன்-களமாயிருந்தால் மூத்தவனையாவது
முன்னிருத்திருப்பேனே...


அது
எனக்கும் தெரியாது…
என் மக்களுக்கும் தெரியாது…

தெரியாதது என் குற்றமா?
என் வழி குற்றமா…
அறவழி மட்டுமே என்
அண்ணணிடம் பயின்றேனே…
வந்ததடா ஆபத்து…


ஆனாலும் அசரமாட்டேன்..
போர் மேகத்திற்க்கும் மயங்கமாட்டேன்...
என்னையும், என்மக்களயும் ஈன்றுத்தவள் தான்,
என் தம்பிகளையும் ஈன்றுடுத்தாள்,


முன்களத்திற்க்கு அஞ்சாதவன்,
என் தம்பி
முன்களத்திற்க்கு அஞ்சாதவன்.


முன் நில்லடா தம்பி
உன் பின்....னால் நானிருக்கிறேன்,
என் மக்கள் இருக்கிறார்கள்.
என் இதயம் உன்னத்தான்
சுற்றிவரும்,


உன் நிலை கண்டு
என் மக்கள் குழைந்தாலும்,
அழுதாலும்,
கலங்காமல்
நானிருப்பேன்


களத்தை நீ பார்த்துக்கொள்,
மரணத்தை கண்டு
கவலை படதே தம்பி,
நானிருப்பேன் உனக்கு
இறங்கர்பா... பாட

(அரசனாக) நானிருந்தால் தான்,
நீ இறந்தாலும்,
உ(எ)ன் வரலாறு
காக்க முடியும்,
என்பதால் தான்
என் அரசை
காத்துக்கொண்டிருக்கிறேன்,
நான்
காத்துக்கொண்டிருக்கிறேன்.

---தமிழ் தாத்தா---

4 comments:

இராகவன் நைஜிரியா said...

ஒன்னுமே புரியல..

இந்த கவிதை எல்லாம் எனக்கு புரிவதில்லை..

எப்படி படிக்கிறது, புரிஞ்சிக்கிறதுன்னு சொல்லி கொடுங்களேன்..

muru said...

//இராகவன் நைஜிரியா கூறியது...

ஒன்னுமே புரியல..

இந்த கவிதை எல்லாம் எனக்கு புரிவதில்லை..

எப்படி படிக்கிறது, புரிஞ்சிக்கிறதுன்னு சொல்லி கொடுங்களேன்..//

வாங்கண்ணே, அதுக்கு சின்ன வயசுல காதலிச்சு தொல்வியாயிருக்கணும்,
அப்புறம் அரசியல் தெரியணும். ஹி...ஹி...

நட்புடன் ஜமால் said...

கவிதை அழகு நண்பா ...

நட்புடன் ஜமால் said...

காதல்ல தோல்வி

அப்படீன்னா என்னங்க ...

எனக்கு தெரிஞ்சி காதல் தோற்பதில்லை காதலர்களும் தோற்பதில்லை

தோல்வியென்று உரைப்பது காதல் ஆகாது

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB